மூன்றே வாரத்தில் முப்பது கிலோ குறைப்பது எப்படி

(ஒரு எளிய ப்ரூவன் மெத்தடாலஜி)


முதலில் எப்படியும் குறைத்தே தீருவது என்ற உங்கள் முடிவு சரியானதுதானா? மனப்பூர்வமாக விரும்பி இந்த முடிவை எடுத்திருக்கிறீர்களா என்று ஆற அமர யோசனை செய்து தீர்மானம் செய்யுங்கள்! குறைத்தே தீருவது என்ற முடிவுக்கு வந்திருக்கிறீர்கள் எனில் சபாஷ்!

முதலில் இரண்டு கிலோ அரிசி எடுத்து (பச்சரிசியாக இருத்தல் மிக்க நலம்) தண்ணீரில் நன்கு அலசவும்! பின்னர் கொதிநீரில் உலையிலிட்டு பொங்கல் பதமாக பொங்கி வரும் வரை அடுப்பில் வைக்கவும்! பிறகு பொங்கல் பதத்தில் இருக்கும் சாதத்தை அருகில் உள்ள கோவிலுக்கு எடுத்துச் சென்று நைவேத்யம் செய்து வணங்கிவிட்டு கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக விநியோகித்து விடவும்! இப்படியே சனி ஞாயிறு தவிர மீதம் வாரம் ஐந்து நாட்கள் என மூன்று வாரங்கள் தொடர்ந்து செய்து வர உங்கள் வீட்டில் அரிசியின் அளவு முப்பது கிலோ குறைந்திருப்பதை கண்கூடாகக் காணலாம்!




















அதான் தலைப்புலயே சொல்லியாச்சுல்ல!
வெளிவராத ரகசியத் தகவல்கள்னு!

இன்னும் என்ன தேடிகிட்டிருக்கீங்க! பிச்சிப்பிடுவேன் பிச்சி!
இன்று காலைலேர்ந்து தமிழ்மணம் முகப்புப் பக்கம் அப்டேட் ஆகாம அப்படியே இருக்கே!
அடடே!
ஆச்சரியக்குறி!
வலைப்பூ திற பின்னூட்டம் வரட்டும்

பாலநித்யபாரதியானந்தா

பா.க.ச பப்ளிகேஷன்ஸ்

தமிழ்ப் பதிவுகளை வெறுமனே வாசித்துவிட்டு மட்டும் செல்லும் வாசகர்களுக்காக! தாங்களே ஒரு வலைப்பூ திறந்து தங்களின் எண்ணங்களை/கருத்துக்களை எழுதித் தொலைத்து வாசகர்களின் பின்னூட்டக்களுக்காக மாடுரேஷன் வாயிலைத் திறந்து வைப்பது எப்படி என்று ஒவ்வொரு அடியாக எளிமையாக பாமரனுக்கும் வி(வெ!?)ளங்கும் வண்ணம் கரம்பிடித்து விளக்குகிறார் நமது பாலநித்யபாரதியானந்தா!

சராசரி வலைப்பதிவராகத் தம் வாழ்க்கையைத் தொடங்கி, இலக்கியம், சமூகம், முற்போக்கு என்று பலதரப்பட்ட கோணங்களில் தமது சீரியஸான அழுத்தமான ஆணித்தரமான கருத்துக்களைப் பதிவு செய்ததன் மூலம் மிகக் குறுகிய காலத்திலேயே பிரபல காமெடி பீஸாகிப்போனவர்..மன்னிக்க காமெடிப் பதிவர் என்ற உயர்ந்த நிலையை எட்டியவர் பாலநித்யபாரதியானந்தா!


டேய்..டேய்..சொன்னாக் கேளுங்கடா...!
11:51 PM | Author: நாமக்கல் சிபி
"டேய்..டேய்..சொன்னாக் கேளுங்கடா...! சிடில இப்படியெல்லாம் காப்பி பண்ணக் கூடாது!"

இமேஜ் : முத்தமிழ்செல்வன்
கருத்து: நாமக்கல் சிபி
மாமா பிக்கோத்து அவார்டு
12:28 AM | Author: நாமக்கல் சிபி
எச்சரிக்கை: இது ஒரு சீரியஸ் பதிவு

பதிவுலகுல "சார் என்னைய கிள்ளிட்டான், திட்டிட்டான் என் பேர்ல கமெண்டு போடுறான்," என்ற கம்ப்ளெயிண்டெல்லாம் போயி இனிமே "சார் இவன் அவார்டு கொடுத்துட்டான், சார் அவன் என் அவார்டை வாங்க மாட்டேங்குறான், வாங்குன அவார்டை அடுத்தவனுக்கு குடுக்க மாட்டேங்குறான்" னெல்லாம் கம்ப்ளெயிண்ட் வரப் போகுதுன்னு பலரும் பீதியடையும் அளவுக்கு இந்த அவார்டோ ஃபோபியா பரவிகிட்டிருக்குன்னு நம்பத்தகாத வட்டாரங்கள் சொன்னபடியாலும் ஏற்கனவே பாசமிகு அண்ணன் மாதவராஜ் அவர்கள் இதுபற்றி விருதும் தர்மசங்கடமும் என்ற தலைப்பில் பதிவிட்டிருந்த படியாலும், அவரது இடுகைக்கு தொடர் வினையாக(எதிர் வினை அல்ல)

இந்த மாதிரி விருதுகளை எதிர்கொளவது எப்படின்னு கொஞ்சம் யோசிச்சி எனக்கு தோன்றிய சில டிப்ஸ்களை இங்கே கொடுத்திருக்கிறேன்!

விருதுகளில் இருந்து எஸ் ஆக சில டிப்ஸ்கள்!
--------------------------------------------------------

1. உங்க பிளாக் டெம்ப்ளேட்ல எங்கெல்லாம் காலி இடம் இருக்கோ அங்கயெல்லாம் ஏதாச்சும் இமேஜ் போட்டு நிரப்பிக்கோங்க!
(இதுக்கு மேல எந்த விருதை மாட்டவும் உங்க பிளாக்ல இடம் இல்லைன்னு அர்த்தம்)

2. ஒன்றுஅல்லது ரெண்டு ர்விட்ஜெட் மட்டும் டெக்ஸ்ட் உடனுக்குடன் மாத்திக்கிற வசதியோட வெச்சிக்கணும்! எந்த விருது என்ன பேர்ல கெளம்புதோ உடனே அந்த பேரை அங்கே எழுதி வெச்சிக்கலாம்!
(ஏற்கனவே அந்த விருது உங்களுக்கு வந்துடுச்சுன்னு அர்த்தம்)

3. சைட் பார்ல ஒரு எக்ஸெல் ஷீட் போட்டு நீங்களே ஒரு பட்டியலை நிரப்பி வையுங்க! அதுல எந்தெந்த விருதுக்கான பதிவு போடணும் என்கிற ஷெட்யூலை அடுத்த மூணு வருஷத்துக்கு தேதி போட்டு நிரப்பி வெச்சிடுங்க! ரொம்ப நாள் காத்துக்கிட்டிருக்கணும் நீங்க பதிவு போடன்னு உங்களுக்கு விருது கொடுக்க வரவர் தெறிச்சி ஓடிடுவார்!

4. இது கொஞ்சம் வன்முறை மாதிரி தெரிஞ்சாலும் ஈஸியா ரீச் ஆகுது! http://evandavirudhukoduppavan.blogspot.com ஒரு பிளாக் ஆரம்பிச்சி (வேற ஐடி யூஸ் பண்னுங்க) விருது கொடுக்கும் பிரபல பதிவர்களை கன்னா பின்னான்னு திட்டி ரெண்டு பதிவு போட்டுட்டு அந்த ஐடிலயே போயி விருது பதிவு போடுறவங்களுக்கெல்லாம் பின்னூட்டம் போட்டுடுங்க!


(இதுல இந்த பேர்லயே ரெண்டு மூணு போலியும் கெளம்பக் கூடும், உஷார். எதுக்கும் எலிக்குட்டி, பெருச்சாளி எல்லாத்தையும் கையோட எடுத்துக்குங்க, இதைப் பத்தி தெரியாதவங்க டோண்டு சார்கிட்டே டியூஷன் போகலாம்! எவ்வளவு நேரம் இதற்காகச் செலவழிக்கிறாரோ அதற்கு தனியா சார்ஜ் பண்ணுவார். அந்த எழவுக்கு நான் இன்னும் அஞ்சாறு விருதுப் பதிவே எழுதிடலாம்னு உங்களுக்குத் தோன்றினால் வெல் அண்ட் ஹேப்பி)

5. உடனடியா எதிர் கோஷ்டி விருது கொடுப்பவன் என்ற பெயரில் http://virudhukoduppavan.blogspot.com னு ஒண்ணு ரெஜிஸ்டர் பண்ணி உங்களுக்கு அட்வைஸ் மழை பொழியக் கூடும், இதே யூ.ஆர்.எல்லை நீங்களே ரெஜிஸ்டர் பண்ணி வெச்சிட்டா பிம்பிளிக்கி பிளாப்பி, மாமா பிக்கோத்துன்னு அவங்களுக்கு நாம பழிப்பு காட்டலாம்!

6. விருது கொடுப்பவர் உங்களுக்கு பின்னூட்டம் மூலமாவோ அல்லது தனிமடல்லயோ தெரியப் படுத்தக் கூடும்! எத்தனை முறை அழைத்தாலும்
"என்ன விருந்தா! எங்கே? எப்போ? நாங்க ஒரு 70 பேர் வருவோம்! நான் வெஜ் + டிரிங்க்ஸ் இருந்தாகணும் ஆனா எதிர் விருந்தெல்லாம் தர மாட்டோம்"னு சொல்லி அத்தனை முறைக்கும் காது கேக்காத மாதிரியே ரிப்ளை போடுங்க! விருது கொடுப்பவர் ஜென்மத்துக்கும் விருதை நினைக்க மாட்டார்! விருந்தையும் சேர்த்துதான்!

7. இவையெல்லாத்தையும் தாண்டி உங்களுக்கு விருதுக்கான அழைப்பு ஏதாச்சும் வருதுன்னு வையிங்க! நம்மகிட்ட இருப்பதிலேயே பெரிய பிரம்மாஸ்திரம் ஒண்ணு இருக்கு! அதை கடைசியா கையில எடுங்க! "எனக்கு விருது கொடுப்பதை நான் ஏற்றுக் கொண்டு மேலும் தொடர வேண்டுமென்றால் உண்மைத் தமிழன் அண்ணாச்சியின் 10 பதிவுகளை உடனடியாக வாசித்துவிட்டு அவரது அக்கப்போர் ச்சே புனிதப் போர் என்ற குறும்படத்தையும் 5 முறை பார்த்து விட்டு உண்மைத்தமிழனிடம் அக்னாலெட்ஜ்மெண்ட் வாங்கி வரவேண்டுமென்று ஒரு விட்ஜெட் போட்டு உங்கள் பிளாக் டெம்ப்ளேட்டில் ஒட்டி வையுங்கள்!


பின் குறிப்பு: சிரித்ததால் வயிறு புண்ணாகிப் போனவர்கள் அணுக

1. VSK
2. டாக்டர் புருனோ
3. டெல்ஃபின் விக்டொரியா

இதே மாதிரி தொடர் பதிவுகளில் இருந்தும் தப்பிக்க ஏழு எளிய வழிகள்.....நாளை!
இப்ப சமீபத்திய வரவான ஆப்பு என்கிற அப்புராணி(!?)கிட்டேர்ந்து தப்பிக்க புதுப்பதிவர்களுக்கு பின்னூட்டமே போட்டுத் தொலைச்சிடலாம்னு முடிவு பண்ணி இருக்கீங்களா! சபாஷ்! சரியான முடிவைத்தான் எடுத்து இருக்கீங்கன்னு அர்த்தம்!

சரி! பின்னூட்டம் போடலாம்னு முடிவு பண்ணியாச்சு! பதிவையெல்லாம் படிக்கணும்னா என்ன? நாமதான் மூத்த பதிவர்களாச்சே! புதுப்பதிவர்கள் எழுதுற இடுகையெல்லாம் படிச்சா நம்ம் கௌரதை என்னாவுறது! (ஒரு குசும்புக்காகத்தான்) அபபடியே புதுப்பதிவை எழுதிட்டாலும் அது நாம ஆரம்ப காலத்துல போட்ட மொக்கைகளுக்கு ஈடாகத்தான் இருக்கும்! நானே என்னோட முதல் இடுகைக்கு பின்னூட்டம் போட்டா எப்படி இருக்கும்னு நினைச்சி பார்த்தா எனக்கே சிரிப்பு வருது! நானே என் பதிவுக்கு பின்னூட்டம் போட்டுக்கலை! பின்ன அடுத்தவங்க வந்து போடுவாங்கன்னு எதிர்பார்த்தா சரியா? ஒரு வருஷம் கழிச்சிதான் அந்த இடுகைக்கெல்லாம் பின்னூட்டம் வந்தது! அதுலயும் நாலே நாலுதான்! அதுல உருப்படியானது 3! இன்னொன்னு என்னன்னு புரியலைன்னாலும் அந்த பின்னூட்டத்தையும் போட்ட புண்ணியவானும் வருத்தப் படக் கூடாதுன்னு அப்படியே வெச்சிருக்கேன்!

ஆஹா! எதையோ சொல்ல வந்து சுய் விளம்பர இடுகையா முடிஞ்சிடும் போல இருக்கே! எங்கே விட்டேன்! புதுப்பதிவர்களின் இடுகைக்கெல்லாம் பின்னூட்டம் போடணும்னு முடிவு பண்ணியாச்சு! ஆனா நேரமும் இல்லை! அதனால எதாச்சும் பின்னூட்ட டெம்ப்ளேட்ஸ் இருந்தா காப்பி பண்ணி போட வசதியா இருக்கும்ல என்று ஏங்குபவர்களாக்கால என் பதிவுலக அனுபவத்தை இந்த டெம்ப்ளேட் பின்னூட்டங்களை வழங்குறேன்! (இலவசம்தான்! ராயல்டி அனுப்பியே ஆகணும்னு அடம்பிடிச்சா தனிமடல் இடுங்க! அக்கவுண்ட் நம்பர் தரேன்)

1. மீ த ஃபர்ஸ்ட்டு! ( இது பழைய பதிவர்களுக்கும் போடலாம்)

2. உங்கள் வலைத்தளத்திற்கு இதுதான் முதல் வரவு! இப்போதைக்கு அட்டெண்டன்ஸ் மட்டும் போட்டுக்கிறேன்!

3. அடடே! வருக! வருக!

4. வாங்க வாங்க!

5. வலைப்பதிவுலகம் உங்களை அன்புடன் வரவேற்கிறது!

6. ஐ! புதுப்பதிவரா நீங்க! வாவ்! எல்லாப் பதிவும் அருமை!
(நான் இன்னும் எழுதவே ஆரம்பிக்கலைடா வெண்ணெய் பதில் வராத மாதிரி இடுகைகளின் எண்ணிக்கையையும் கவனத்தில் கொள்ளவும்)

7. நல்ல பல பதிவுகளை இடுமாறு கேட்டுக் கொள்கிறேன்!
(நீயெல்லாம் எழுத வரலைன்னு எவன் அழுதான் என்றெல்லாம் அனர்த்தமாக புரிந்து கொள்ள மாட்டார்கள், ஏன்னா அவங்கதான் புதுப்பதிவர் ஆயிற்றே)

8.தொடர்ந்து எழுதுங்கள்! ஆவலாக காத்திருக்கிறேன்!
(எல்லாம் என் தலையெழுத்து..ன்னு அர்த்தம் இதுக்கு)

9. இந்தாங்க பிடிங்க என் முதல் பின்னூட்டத்தையும் ஒரு + குத்தும்!
(அவருக்கு பரிந்துரைன்னா என்னன்னே தெரிஞ்சிருக்காது! நாமதான் அறிமுகப்படுத்தணும்! இல்லாட்டி சக்திவேல் அண்ணாச்சியின் பதினாறு நாட்கள் உங்கள் இடுகைகள் அழிந்துவிடும் சாபத்திற்காளாவீர்கள்)

10. இந்த ____________(குறிப்பிட்ட பதிவர் பெயர்) பதிவர்தான் உங்களை அறிமுகப்படுத்தினார்! மிக நேர்த்தியாக இருக்கிறது - டெம்ப்ப்ளேட்டைச் சொல்லவில்லைகிகிகி!

இன்னும் நிறைய எழுத முடியும்! இருப்பினும் மீதி டெம்ப்ளேட் பின்னூட்டங்களைத் தொடர்ந்து எழுத நம்ம தம்பி குசும்பனை வரவேற்கிறேன்!

(ஐ! இதையே ஒரு தொடராவும் மாத்தியாச்சு)
தமிழ்மண வாசகர்கள் என்ன இளிச்ச வாயர்களா?, பின்ன என்னங்க ஆளாளுக்கு ஒரு போஸ்ட் போடுவாங்களாம்! தமிழ்மணம், தமிழிஷ் னு இருக்குற எல்லா திரட்டியிலும் லிங்க் கொடுத்துடுவாங்களாம்/அனுப்பிடுவாங்களாம்! படிக்குறவங்க மாங்கு மாங்குன்னு பின்னூட்டம் போட்டுட்டு மறுக்கா ஓட்டு வேற குத்துவாங்களாம்!

சண்டை மட்டும் பப்ளிக்கா நடக்குமாம்! அப்பாலிககா இவங்களுக்குள்ளே தனிமடல்/தொலைபேசி ன்னு ரகசியமா பேச்சு வார்த்தை நடத்துவாங்கலாம்! அப்புறம் எல்லா போஸ்டையும் தூக்கிடுவாங்களாம்!

இல்லை தெரியாமத்தான் கேக்குறேன்! படிக்குறவங்க என்ன வேலை வெட்டி இல்லாம காது குடைஞ்சிகிட்டு உக்காந்து இருக்கோம்னு நினைச்சிகிட்டிருக்கீங்களா! எங்களுக்கு ஆயிரத்தெட்டு மொக்கை வேலையெல்லாம் விட்டுபுட்டு அங்கயும், இங்கயுமா லிங்கை தேடி தேடி படிச்சி பின்னூட்டம் போட்டுகிட்டு அதுக்கெல்லாம் என்ன பதில் வந்துதுன்னு படிக்க காத்துகிட்டிருப்போம்!

ஒரே நிமிஷத்துல எல்லா போஸ்டையும் தூக்கிடுவீங்க! சரி தூக்குறதுதான் தூக்குறீங்க! தமிழ்மணத்துக்கு ஒரு மெயில் அனுப்பி அங்க லிஸ்ட் பண்ணுறதையும் தூக்கச் சொல்லலாம்ல! அவங்கவங்க பிளாக்லலருந்து தூக்கிட்டா போதுமா?


அட்லீஸ்ட்! இந்த பதிவு ஒருவேளை நீக்கம் செய்யப்படவும் வாய்ப்பிருக்கிறதுன்னு ஒரு பின் குறிப்பாவது போடலாம்! மண்ணைய பிச்சிகிட்டு பின்னூட்டம் போடுறவங்களாவது எப்படியாச்சும் தூக்கத்தான போறாங்க! எதுக்கு மெனக்கெட்டு புன்னூட்டம்லாம் போட்டுகிட்டுன்னு பேசாமயாவது இருப்பாங்கல்ல!

நீக்குன பதிவுகளை திரட்டிகளும் தொடர்ந்து பட்டியல்ல காட்டிகிட்டு இருக்கு!
புதுசா வரவங்களும் அதை கிளிக் பண்ணி பார்த்தா அங்க அந்த பதிவே இல்லைன்னு எரர் மெசேஜ் வேற வரும்! இப்படியே தினமும் ரெண்டு போஸ்ட் பார்த்தா படிக்கிறவங்களுக்கு தமிழ்மணத்துல எதை கிளிக் பண்ணினா கண்டிப்பா நீக்கப்படாத போஸ்ட் இருக்கும்னு குழப்பம் வராது? இதன்மூலமா திரட்டிகள் மேல இருக்குற நம்பகத்தன்மைக்கும் ஆப்பு வெச்ச மாதிரில்ல ஆகுது?


இப்ப சீரியஸ்(!?) மெசேஜ்

போட்ட அரை மணி நேரத்துல நீக்கிடலாம்னு தோணுதே! அந்த பாழாப்போன போஸ்டை பப்ளிஷ் பண்ணுறதுக்கு முன்னாடி ஒரு அஞ்சு நிமிஷம் யோசிக்கலாம்ல! அட! அந்த பதிவுல போடுற விஷயத்தை சம்மந்தப்பட்ட ஆளுங்களுக்கு மட்டும் தனிமடல் அனுப்பி சண்டையெல்லாம் போட்டு கடைசியில சுமுகமா முடிச்சிக்கலாம்ல!

பப்ளிக்கா பல பதிவுகளை போட்டு ஏன் எல்லாரையும் எரிச்சலூட்டுறீங்க! அல்லது திரட்டிகளுக்காவது அனுப்பாம இருங்க! புண்ணியமா போகும்!

பல்வேறு ஊடகங்கள் இப்பதான் தமிழ் வலைப்பதிவுகளை தொடர்ந்து பார்த்துகிட்டு இருக்காங்க! அவங்க முன்னாடி நம்மை நாமே தரம் தாழ்த்திக்கலாமா? கொஞ்சம் யோசிச்சி சொல்லுங்க!

பின்குறிப்பு:

இந்த பதிவை எக்காரணம் கொண்டும் நீக்க மாட்டேன் என்ற உறுதிமொழியுடன் தமிழ்மணம் கருவிப்பட்டையிலிருக்கும் அனுப்பு பொத்தானை அழுத்துகிறேன்!

------------------------------------------------------------------------------------------------

பிடிச்சிருந்தா : பாஸிடிவ் குத்து
பிடிக்கலைன்னா: கும்மாங்குத்து
லக்கிலுக் (எ) யுவகிருஷ்ணா "உங்களில் யார் அடுத்த நயன்தாரா?" ன்னு போஸ்ட் போட்டார்!

நம்ம வகுப்பறை வாத்தியார் "உங்களில் யார் அடுத்த யுவ கிருஷ்ணா?" ன்னு ஒரு பதிவைப் போட்டுட்டார்!

உடனே நான் "உங்களில் யார் அடுத்த வகுப்பறை வாத்தியார்?"னு ஒரு போஸ்டைப் போட்டு கண்டினியூ பண்ணுவேன்னு தானே நினைக்கிறீங்க!

பிச்சிப்பிடுவேன் பிச்சி! இப்படியே போனா இதையே ஒரு தொடராக்கிடுவீங்க போல கீதே! இதுக்கு மேல யாராச்சும் இதை கண்டினியூ பண்ணினீங்ககாட்டி வெக்குக்குங்க! அப்புறம் மெர்சலாயிடுவீங்க! ஒரே பேஜாரா பூடும்! ஷுகுரா சொல்லிட்டேன்! அக்காங்க்!
போட்டிகள் : ஒரு சிறப்புப் போட்டி
1:35 PM | Author: நாமக்கல் சிபி
இந்த வருஷம் ஆரம்பிச்சதிலேர்ந்தே ஒரே போட்டி மயமா இருக்கு! தினம் தினம் தமிழ்மணத்தைத் திறந்தா போட்டி என்ற வார்த்தை முகப்புப் பக்கத்துல ஒரு இடத்துலயாவது இல்லாம இருக்கிறதே இல்லை! அந்த அளவுக்குப் போட்டிகள்!

பிளாக்குட் போட்டி, உரையாடல் போட்டி, இப்ப ரீசண்டா வந்திருக்குற உயிரோடை போட்டி, etc.etc..

போட்டிக்கு எழுதுற கதைகளைப் படிச்சி முடிக்கவே நமக்கு தாவு தீருது! இதுல நாம வேற எந்தப் போட்டில கலந்துக்குறது, எதை விடுறது தவிச்சிப் போயி கிடக்குற என்னை மாதிரி சுறுசுறுப்பான(!?) பதிவர்களுக்காக (மட்டுமே) இந்த சிறப்புப் போட்டி!

உங்க மூளையைக் கசக்க வேண்டாம், ரூம் போட்டு யோசிக்க வேண்டாம்.
இந்த போட்டியின் ஸ்பெஷாலிட்டியே ரொம்ப சிம்பிளா எண்ட்ரி கொடுக்க வேண்டியதுதான்!
நடுவர்களுக்கும் அத்தனை கஷ்டமான வேலை இல்லை! படிச்சி விமர்சனமெல்லாம் எழுதி, திருத்தி மார்க் போட்ட வேண்டியதில்லை!
(பாவம்! நீங்களும் எத்தனை கதைதான் படிச்சி தாவு தீருவீங்க...)

இந்த போட்டியைப் பத்தி:

ஒண்னுமில்லைங்க! இந்தப் போட்டியில கலந்துக்காம இருக்கணும்! அதான் போட்டியே!

.
.
.
.
.
.
.
என்னாது பரிசு என்னவா? கொமட்டுலயே குத்திப்புடுவேன் குத்தி..!

-------------------------------------------------------------------------------------

(ஐயா திரட்டிகளே, போட்டி நடத்தும் நிர்வாகிகளே...! ஐபிஎல், ஐசிசி, டெஸ்ட் மேட்ச், ஒன் டே, 20/20 எல்லாம் ஒரே நேரத்துல வெச்சா எப்படி பிளேயர்ஸ் களைச்சி போயிடுவாங்களோ அதே மாதிரி

எக்கச் சக்க போட்டிகள்(குறிப்பா சிறுகதைகளுக்கு மட்டுமே நிறைய), அதுவுமிலலாம ஏகப்பட்ட தொடர்கள்(டெஸ்ட் மேட்ச்)?

பதிவர்களைப் பார்த்தா பாவமா இல்லையா உங்களுக்கு?
போளி 09/02/09
9:28 AM | Author: நாமக்கல் சிபி
எல்லாரும் அவியல், ஆனியன், ஊத்தப்பம், தேங்கா மாங்கா பட்டாணி சுண்டல், பிரியாணி, குஸ்கா..இன்னமும் என்னென்னமோ பேர்ல எழுத ஆரம்பிச்சிட்டாங்க!

நானும் யோசிச்சிப் பார்த்தேன்!

போளி - இந்த டைட்டில் எப்பவுமே சூடா இருக்கும்!

அதனால இனிமே நானும் "போளி" என்ற தலைப்புல வாராவாரம் எழுதப் போறேன்!

கிகிகி!
திரும்பிப் பார்க்கிறேன் 2008
11:17 AM | Author: நாமக்கல் சிபி

இந்தப் பதிவை பெரும்பாலும் எல்லாப் பதிவர்களும் போட்டுட்டாங்க!
இருந்தாலும் நம்ம பங்குக்கு ஒண்ணு!
சத்தியமா 2008ல எடுத்ததுதான் இந்த ஃபோட்டோ! கொல்லி மலைல!
பின் குறிப்பு:
ஆண்டு இறுதிக் கும்மி : அனானி அன்பர்களுக்காக இந்தப் பதிவு அர்ப்பணம்!
ஸ்டார்ட் மீசிக்! என்ஜாய் த நியூ இயர்!
தமிழ்மணம் விருதுகள் 2008க்கு இடுகைகளைப் பரிந்துரைக்க ஆரம்பிச்சாச்சு!

இந்த நேரத்துல பதிவர்கள் எல்லோருடைய ஆலோசனைகளையும், கோரிக்கைகளையும் கவனமா பரிசீலிச்சு தமிழ்மணம் நிர்வாகம் ஆவன செய்யும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையோட


"நானே அனபோஸ்டா (போட்டியின்றி) ஜெயிச்சதா அறிவிச்சிடுங்களேன், இந்த போட்டி/ தேர்வு எல்லாம் எதுக்குங்க" ன்னு தமிழ்மணம் அறிவிப்புகள் பதிவுலே பின்னூட்டம் போட்டுட்டேன்!

ஆக தமிழ்மணம் நிர்வாகம் இதையும் பரிசீலிச்சி என்னையே வெற்றி பெற்றவராக அறிவித்து விடுவார்கள் என்று நம்புகிறேன்!

வகுப்பறை வாத்தியாரின் நல்லாசி மற்றும் ஏனைய சக பதிவர்களின் நல்லாதரவோடு

தமிழ்மணம் விருதுகள் 2008 ஐ பெறுகிற நான் தமிழ்மணம் நிர்வாகத்திற்கும் சக பதிவுலக அன்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்!

(எனது வெற்றி குறித்துக் கொண்டாட பதிவுலக அன்பர்கள் யாரும் கட் அவுட்கள், பேனர்கள், அலங்கார வளைவுகள், ஆரவார ஊர்வலங்கள் என்று ஆடம்பரமாகக் கொண்டாட வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். நம்ம கொண்டாட்டதை அமைதியான முறையில் சிம்பிளா எங்காவது டாஸ்மாக்கில் வைத்துக் கொள்ளலாம்)
இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், பாடல்கள் மற்றும் இன்னபிற என்று எதுவும் தேவை இல்லை!

வருங்காலப் பதிவர்களுக்கு நாமதான சொல்லித் தரணும்!

பிற்சேர்க்கை:

இப்போ தமிழ்மணத்துலே இதுதான் ஹாட் டாபிக்காமே! அதான் மறுபடியும் ஹிஹி!

சமீபத்தில் பின்னூட்ட மட்டுறுத்தல் செய்யப்படாத பெரும்பாலான பதிவுகளில் பின் வரும் பின்னூட்டம் (பதிவுக்கு எவ்விதத்திலும் தொடர்பே இல்லாமல், குறைந்த பட்சம் மொக்கைப் பின்னூட்ட வகையிலும் சேராமல்) போடப் பட்டு வருகிறது!

இதனால் பின்னூட்ட மட்டுறுத்தல் செய்யாத பதிவர்கள் உடனடியாக பின்னூட்ட மட்டுறுத்தலை செயலாக்கி விடுமாறு கேட்டுக் கொல்லப் படுகிறார்கள்!

ஐயா! ஆர்.கே.சதீஷ் குமார், அனைவரும் படிக்கும் வண்ணம் தாங்கள் சொல்ல வந்த கருத்தை ஒரே இடத்தில் இட்டிருக்கிறேன்! மற்றவர்களைப் போலவே தாங்களும் இங்கே வந்து படித்து(மட்டும்) கொள்ளலாம்!


நல்ல பதிவு..வாழ்த்துக்கள் ....
ஓம் ...என்ற மலக்கட்டை
கழிய வைத்தால்
உடலில் உள்ள வாதைஎல்லாம்
ஓடிபோச்சு
தாம் ...என்ற சிறுநீரை
தெளிய வைத்தால்
சடத்திலுள்ள ரோகமெல்லாம் தணிந்து போச்சு
கூம் ...என்ற உமிழ் நீரை
முறிய வைத்தால் கூட்டிலுள்ள பகைஎல்லாம் குலைந்து போச்சு
கோ ....வென்ற இவை மூன்றும்
களங்கம் அற்றால்
கொல்ல வந்த காலனையும் வெல்லலாமே ...!
-ஈஸ்வரன் மெய் ஞான நாடி ....பாடல்
அக்டோபர் 2 ம் தேதி முதல் பொது இடங்களில் புகை பிடிப்பதைத் தடை செய்யும் சட்டத்தை அமலுக்குக் கொண்டு வந்ததன் மூலம் போலீஸாருக்கு எதிர்பார்க்காத அளவுக்கு தீபாவளி போனஸ் வழங்கிய மத்திய அமைச்சர் அன்புமணி அவர்களுக்கு போலீஸார் நன்றி தெரிவித்துள்ளனர்! ஸ்பாட் ஃபைன் மூலம் புகை பிடித்தவர், புகை பிடிப்பவர் நின்றிருந்த இடத்திற்கு சொந்தக் காரர்(பொறம்போக்கு நிலமென்றால் யாருக்கு அபராதம்),அவருக்கு வத்திப் பெட்டி கொடுத்தவர், பற்ற வைக்க வசதியாக தள்ளி நின்றவர் என அனைவருக்கும் அபராதம் விதிக்க இச்சட்டம் வகை செய்வதால் இந்த முறை வழக்குப் பதிவு செய்யாமல் எச்சரித்து அனுப்பும் வகையில் கிடைக்கும் அபராதத்தொகை மட்டுமே நாளொன்றுக்கு ஒரு போலீஸ் காரருக்கு ரூ 2500க்கு மேல் கிடைக்கும் என்று சமூக நல ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

போலீஸ்காரர்கள் பிடித்து கையிலிருக்கும் பணம் காலியாகிவிடக் கூடும் என்ற பீதியால் தம் அடிக்கும் பழக்கம் உடைய பலரும் டீக்கடைகளில் தம் அடிப்பதைத் தவிர்த்து வருகிறார்கள்.
இதனால் வழக்கமாக நடக்கக்கூடிய டீ வியாபாரமும் பாதிக்கப் பட்டுள்ளது. கூடிய விரைவில் பொது இடங்களில் டீக்குடிப்பதற்கும் தடை வரக்கூடும் என்ற புரளி கிளம்பியதை அடுத்து டீக்கடைக் காரர்கள் பாயிலரில் இருந்த நெருப்பை எடுத்து தங்கள் வயிற்றில் கட்டிக் கொண்டுள்ளதாக நமது சிறப்பு நிருபர் தெரிவித்தார்!

- டுபாக்கூர் தினசரி!
விஜய்காந்த் - வடிவேலு மோதல்
10:56 PM | Author: நாமக்கல் சிபி

டிஸ்கி1:

மேற்கண்ட ஒளிப்படக் காட்சிக்கும் (முழுக் காட்சியைப் பார்க்கவும்) இப்பதிவின் தலைப்பிற்கும் யாதொரு தொடர்பும் இல்லை!

டிஸ்கி2:

எவ்விதத்திலேனும் ஏதேனும் தொடர்பு இருப்பதாகத் தாங்களாகவே எவரேனும் ஊகித்துக் கொண்டால் அதற்கு நான் பொறுப்பு அல்ல.

டிஸ்கி3:

இதற்கு மேலும் நான்தான் பொறுப்பு என்று எவரேனும் எண்ணித் தொலைத்தால் பிச்சிப்பிடுவேன் பிச்சி!

இப்ப இருக்குற நிலைமைல அவனவன் குண்டு போட்டுட்டாங்கன்னு கவலைப் பட்டுகிட்டு இருக்கான். இவரு வீட்டு மேல கல்லு போட்டதுதான் ஒரு விஷயமாம்!

காப்பிரைட்டெட் போஸ்ட்
10:17 PM | Author: நாமக்கல் சிபி
பின் குறிப்பு : பின் எனப்படுவது ஊக்கு என்று பாமரத் தமிழர்களால் அழைக்கப் படும் ஒரு சிறிய உபகரணம் ஆகும். பெண்களுக்கு சிலசமயம் (சில்மிஷங்களில் இருந்து தப்பிக்க) ஆயுதமாகவும் உபயோகப் படுகிறது. சேஃப்டி பின் என்று படித்த பெண்மணிகளால் அழைக்கப் படுகிறது.

அலுமினியத்தால் வேறு உருவத்தில் தயாரிக்கப் பட்டு ஸ்டேப்லர்களில் பயன்படுத்தப் படுவதும் பின் என்றே அழைக்கப் படுகிறது.

டிஸ்கி : தமிழ்மணத்தின் சமீபத்திய அறிவிப்புக்கும், மேற்கண்ட படத்திற்கும் யாதொரு தொடர்பும் இல்லை!

Computer Archetecture
அழுவாச்சி காவியமும் ரவா தோசையும்
9:10 PM | Author: நாமக்கல் சிபி




தட்டில் எடுத்த
வைத்த ரவா தோசையின்
முறுகல் கூட
இளகிவிடுகிறது
இந்தக் காவியத்தைப்
படித்தவர்களின்
கண்ணீர் கண்டு!

தொட்டுக் கொள்ள
வைத்த தேங்காய்ச்சட்டினியோ
சட்டி நிறைந்து
வெளியே
எட்டிப் பார்க்கிறது!
கவிதைக்கு செறிவு சேர்க்க
திருகலான வார்த்தைகளைத்
தேடும் நீ
உப்புப் போட மறந்துவிட்டாயே
கவிதாயிணி அக்கா
என்று கதறுகிறது!

எது எப்படியோ
ராவா அடையுடன்
ஊறுகாயும்
அருமையான சேர்க்கைதான்
என்று
ஆஃப் பாயில் போடுமுன்
அளவளாவும்
அண்ணன்மார்கள்!

அடக் கடவுளே!
திரும்பவுமா
என்று
அங்கலாய்க்கும்
வாடிக்கையான
தமிழ்மண
வலைப் பதிவர்கள்!