அக்டோபர் 2 ம் தேதி முதல் பொது இடங்களில் புகை பிடிப்பதைத் தடை செய்யும் சட்டத்தை அமலுக்குக் கொண்டு வந்ததன் மூலம் போலீஸாருக்கு எதிர்பார்க்காத அளவுக்கு தீபாவளி போனஸ் வழங்கிய மத்திய அமைச்சர் அன்புமணி அவர்களுக்கு போலீஸார் நன்றி தெரிவித்துள்ளனர்! ஸ்பாட் ஃபைன் மூலம் புகை பிடித்தவர், புகை பிடிப்பவர் நின்றிருந்த இடத்திற்கு சொந்தக் காரர்(பொறம்போக்கு நிலமென்றால் யாருக்கு அபராதம்),அவருக்கு வத்திப் பெட்டி கொடுத்தவர், பற்ற வைக்க வசதியாக தள்ளி நின்றவர் என அனைவருக்கும் அபராதம் விதிக்க இச்சட்டம் வகை செய்வதால் இந்த முறை வழக்குப் பதிவு செய்யாமல் எச்சரித்து அனுப்பும் வகையில் கிடைக்கும் அபராதத்தொகை மட்டுமே நாளொன்றுக்கு ஒரு போலீஸ் காரருக்கு ரூ 2500க்கு மேல் கிடைக்கும் என்று சமூக நல ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
போலீஸ்காரர்கள் பிடித்து கையிலிருக்கும் பணம் காலியாகிவிடக் கூடும் என்ற பீதியால் தம் அடிக்கும் பழக்கம் உடைய பலரும் டீக்கடைகளில் தம் அடிப்பதைத் தவிர்த்து வருகிறார்கள்.
இதனால் வழக்கமாக நடக்கக்கூடிய டீ வியாபாரமும் பாதிக்கப் பட்டுள்ளது. கூடிய விரைவில் பொது இடங்களில் டீக்குடிப்பதற்கும் தடை வரக்கூடும் என்ற புரளி கிளம்பியதை அடுத்து டீக்கடைக் காரர்கள் பாயிலரில் இருந்த நெருப்பை எடுத்து தங்கள் வயிற்றில் கட்டிக் கொண்டுள்ளதாக நமது சிறப்பு நிருபர் தெரிவித்தார்!
- டுபாக்கூர் தினசரி!
குசும்பு
|
This entry was posted on 1:07 PM and is filed under
குசும்பு
. You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
57 பின்னூட்டங்கள்:
சாமி.. எனக்கு ஒரு உம்ம தெரிஞ்சாகனும்.. போலிஸ்காரங்க இனிமே பொது இடத்துல தம்மடிக்கவே மாட்டாங்களா???
//போலிஸ்காரங்க இனிமே பொது இடத்துல தம்மடிக்கவே மாட்டாங்களா???
//
இது குசும்புதானே!
போலீஸ்காரவகளுக்கும் பொது சனத்துக்கும் வித்தியாசம் இல்லையா என்ன?
போலீஸ்காரங்க பொது இடத்துல அடிச்சா பொது சனமும் அடிக்க முடியுமா? பொதுசனத்தை கண்ட்ரோல் பண்ணுறதுதான் சட்டமே! அதுக்குத்தான் போலீஸ்! அதுக்காக அவுகளும் சட்டத்தை ஃபாலோ பண்ணன்னுமா என்ன?
பார் கூட போது இடம்தானே! (அங்கயும் புகை பிடிக்கக் கூடாதுன்னு சொல்றாங்களே) அப்போ பொது இடத்துல(பார்லே) தண்ணி மட்டும் அடிக்கலாமா? அவங்களுக்கும் ஸ்பாட்டு பைனு போட்டா நல்லா இருக்கும்!
அதுக்காக அவுகளும் சட்டத்தை ஃபாலோ பண்ணன்னுமா என்ன?
பொது இடங்களில் வாந்தி எடுக்கக் கூடாது என்ற சட்டம் எப்போ அமலுக்கு வரும்?
பொது இடத்துல வாந்தி எடுத்தா அது அடுத்தவங்க சுகாதாரதுக்கு கெடுதல்தானே!
வாந்தி எடுத்த நிலத்தோட சொந்தக் காரங்களுக்கும் அபராதம் விதிக்கணும்! (இடம் கொடுத்திருக்காருல்ல)
அதே மாதிரி பொது இடங்களில் சிறுநீர் கழிப்பதை தடுக்க சட்டம் ஏதாச்சும் உண்டா? எங்க ஏரியாவுலே ஒரு சந்துக்குள்ளே சிறுநீர் கழிச்சே அந்த சந்துக்கு மூத்திரச் சந்துன்னு பேர் வந்துடுச்சு!
போலிஸ் ரொம்ப வறுமையில் உள்ளது அதனால் சில சலுகைகள் வழங்க படுகிறது அதை அரசியலாக்க வேண்டாம்...!!!
:)
( :) :)))))))இது போன பின்னுட்டத்தில் மிஸ்ஸாயிட்டு )
//போலிஸ் ரொம்ப வறுமையில் உள்ளது அதனால் சில சலுகைகள் வழங்க படுகிறது அதை அரசியலாக்க வேண்டாம்...!!!
//
ஏன்! எல்லாரும் ஹெல்மட் போட ஆரம்பிச்சிட்டாங்களா என்ன?
ஐயா,
எதுக்கு அடுத்தாலும் போலீஸ் காரன் தலையை உருட்டலைனா உங்களுக்கு தூக்கமே வராதா? மந்திரிக சட்டம் போட்டாங்க, அதை நிலை நாட்ட வேண்டிய பொறுப்பு போலீஸுக்கு இல்லைனா பின்ன யாருக்குத்தான் இருக்கு?
ஆமா, இன்னொரு விஷயம் சொல்லுங்களேன், எது பொது இடம்னு அன்புமணி சொன்னாரா? அவர் சொல்லாத வரைக்கும் போலீஸ் சொல்லறதெல்லாம் பொது எடந்தேங்!!!!!!
//ஆமா, இன்னொரு விஷயம் சொல்லுங்களேன், எது பொது இடம்னு அன்புமணி சொன்னாரா? அவர் சொல்லாத வரைக்கும் போலீஸ் சொல்லறதெல்லாம் பொது எடந்தேங்!!!!!!//
அவரு சொல்லிட்டா மட்டும் நம்ம ஆளுக போலீஸ் கார்கிட்டே சட்டம் பேச முடியுமா என்ன?
இச் சட்டம் நிச்சயம் வரவேற்கபட வேண்டியதே...!!!
இதில் உள்ள குறைபாடுகளை நீக்க முயற்சி செய்ய வேண்டும்
(நீங்க சிகிரெட் பிடிப்பதை நிறுத்திட்டிங்க தானே..:) :) )
//எதுக்கு அடுத்தாலும் போலீஸ் காரன் தலையை உருட்டலைனா உங்களுக்கு தூக்கமே வராதா? மந்திரிக சட்டம் போட்டாங்க, அதை நிலை நாட்ட வேண்டிய பொறுப்பு போலீஸுக்கு இல்லைனா பின்ன யாருக்குத்தான் இருக்கு?//
பின்ன என்னங்க? தும்பை விட்டுட்டு வாலைப் பிடிப்பானேன்!
பேசாம முதல்ல சிகரெட் உற்பத்தியை நிறுத்திட்டு பேக்டரிகளையெல்லாம் மூடச் சொல்லி ஆர்டர் போடலாமே!
இருக்கும் ஸ்டாக் வரை வித்து தீர்த்துட்டா பிறகு யாருமே புகை பிடிக்க மாடாங்களே!
அதை விட்டுட்டு அவங்க பாட்டுக்கும் தயாரிச்சி தயாரிச்சி கடைல வெச்சி விப்பாங்களாம்! யாரும் வாங்கக் கூடாதாம் வாங்கினாலும் தீப்பெட்டி தரக் கூடாதாம்! தந்தாலும் புகைபிடிச்சா போலீஸ் காரங்க வந்து பிடிச்சிக்குவாங்களாம்!
//(நீங்க சிகிரெட் பிடிப்பதை நிறுத்திட்டிங்க தானே..:) :) )//
எடக்கு முடக்கா கேள்வி கேக்கும் மின்னுது மின்னல் என்கிற அனானி அன்பரை வன்மையாகக் கண்டிக்கிறோம்!
//இச் சட்டம் நிச்சயம் வரவேற்கபட வேண்டியதே...!!!
//
ஐயா மின்னல்! நான் சொல்லி இருக்குற மாதிரி சட்டம் போட்டால் எல்லார்க்கும் நல்லதுதானே!
சரி, போலீஸ் காரர் கிட்ட நீங்க சட்டம் பேச வேண்டாம். அப்புறம் இந்த தொல்லையை ஒழிக்க என்னதான் பண்றது?
சட்டம் கொண்டு வரலைனா இவரு நாட்டுக்காக என்ன செஞ்சாருன்னு கேக்கறீங்க, சட்டம் கொண்டு வந்தா, போலீஸுக்சு தீபாவளி பரிசுங்கறீங்க!!!!!!!
போஸ்ட் கம்பத்திற்கு அருகில் ஒதுங்குவதையும் விரைவில் தடை செய்ய சட்டம் கொண்டு வரப்படுன் என்று ஏஜென்ஸி செய்திகள் தெரிவிக்கின்றன.
சாமிகளா! யாருங்கய்யா நீங்களெல்லாம்! நிஜப் பேர்லயே வந்து குமுறங்கய்யா!
சிகரெட் உற்பத்தியை நிறுத்துனா, இத்தனி பேருக்கு வேலை போயிடுச்சேன்னு குதிப்பீங்க,
நீங்க மொதல்ல சிகரெட் குடிக்கறத நிறுத்துங்க, அந்த கம்பனியெல்லாம் அதா தானா நின்னு போயிடும்.
சிபி ஐயா,
நான் நிஜ பேர்ல தான் குமுறிகிட்டிருக்கிறேன்.
//சிபி ஐயா,
நான் நிஜ பேர்ல தான் குமுறிகிட்டிருக்கிறேன்.//
ஐயா! நான் உங்களைச் சொல்லலை!
விளங்கினவன், விளங்காதவன், யோசிப்பவன்.. இப்படி குமுறுகிறவர்களைச் சொன்னேன்!
:)
//நீங்க மொதல்ல சிகரெட் குடிக்கறத நிறுத்துங்க, அந்த கம்பனியெல்லாம் அதா தானா நின்னு போயிடும்.
//
கரெக்ட்தான்! குடிப்பவர்கள் நிறுத்தினாலே போதும்! டிமாண்ட் குறைஞ்சி உற்பத்தி தானா நிக்கும்!
அப்போதான் மக்கள்கிட்டயும் நல்ல பேரு! கம்பெனியை மூடச் சொல்லலை! அதனால கட்சி நிதிக்கும் பாதகம் வராது!
//நீங்க மொதல்ல சிகரெட் குடிக்கறத நிறுத்துங்க, அந்த கம்பனியெல்லாம் அதா தானா நின்னு போயிடும்.
//
கரெக்ட்தான்! குடிப்பவர்கள் நிறுத்தினாலே போதும்! டிமாண்ட் குறைஞ்சி உற்பத்தி தானா நிக்கும்!
அப்போதான் மக்கள்கிட்டயும் நல்ல பேரு! கம்பெனியை மூடச் சொல்லலை! அதனால கட்சி நிதிக்கும் பாதகம் வராது!
//போஸ்ட் கம்பத்திற்கு அருகில் ஒதுங்குவதையும் விரைவில் தடை செய்ய சட்டம் கொண்டு வரப்படுன் என்று ஏஜென்ஸி செய்திகள் தெரிவிக்கின்றன.
//
:) நடந்தாலும் நடக்கும்! சொல்றதுக்கில்லே!
ஆனா பப்ளிக் டாய்லெட் மட்டும் பஸ் ஸ்டாண்டுல மட்டும்தான் இருக்கும்!
யோசிப்பவன் said...
//இச் சட்டம் நிச்சயம் வரவேற்கபட வேண்டியதே...!!!
//
ஐயா மின்னல்! நான் சொல்லி இருக்குற மாதிரி சட்டம் போட்டால் எல்லார்க்கும் நல்லதுதானே!
//
நல்லது தான் அதே சமயம் ஒவ்வொரு மனிதனுக்கும் சுய விருப்பு வெருப்பு உண்டு யாரையும் கட்டாய படுத்த முடியாது. அதனால குடிக்க விருப்பம் உள்ளவங்க வீட்டுல குடி அடுத்தவங்களுக்கு தொந்தரவு பண்ணாதேனு சொல்லுறாங்க
விற்பனையும் குறையும் தானே
ஒரேயடியா கம்பெனிய நிறுத்த சட்ட சிக்கல் மற்றும் வேலையிழப்பு பிரச்சனை வரும் கொஞ்சம் கொஞ்சமா அரசு மாற்று வழியை காட்டவேண்டும்
ஐயா! நான் உங்களைச் சொல்லலை!
விளங்கினவன், விளங்காதவன், யோசிப்பவன்.. இப்படி குமுறுகிறவர்களைச் சொன்னேன்!
:)
//
என் பெயரை விட்டுடிங்க :)
//ஒரேயடியா கம்பெனிய நிறுத்த சட்ட சிக்கல் மற்றும் வேலையிழப்பு பிரச்சனை வரும் கொஞ்சம் கொஞ்சமா அரசு மாற்று வழியை காட்டவேண்டும்
//
ஒருத்தர் எல்லார்க்கும் நல்லவனாவே இருக்க முடியாது!
புகையிலை ஒழிப்புன்னா அதுல ஸ்ட்ராங்கா இருந்துதான் ஆகணும்!
அம்மா ஆட்சில லாட்டரி சீட்டை தடை பண்ணலையா! அந்த தொழிலை நம்பி இருந்தவங்க இப்ப வேற வழியைப் பாத்துக்கலை!
அதை நம்பி இருப்பவர்கள் பிழைப்பு போயிடுமேன்னு நினைச்சி லாட்டரி சீட்டை வியாபாரம் மட்டும் பண்ணலாம். ஆனா யாரும் வாங்கக் கூடாதுன்னா சட்டம் போட்டாங்க!
வழ வழா கொழ கொழான்னு பேசாமா வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டா இருக்கணும்!
முதல்ல இந்த சட்டத்துல "எது பொது இடம்" என்கிற குழப்பமே இன்னும் தீரலை!
//என் பெயரை விட்டுடிங்க :)// உம்மைத் தெரியுமய்யா! நீரெல்லாம் அனானி லிஸ்ட்ல வர மாட்டீரு!
//சட்ட சிக்கல்//
சட்டம் போடுறவங்களுக்கே சட்ட சிக்கலா? என்ன கொடுமை மின்னல் இது!
மந்திரிமார்கள் மனசு வெச்சா என்ன வேணும்னாலும் சட்டம் இயற்றலாம்!
//மந்திரிமார்கள் மனசு வெச்சா என்ன வேணும்னாலும் சட்டம் இயற்றலாம்!//
இயற்றுங்களேன்! அடுத்த தேர்தலப்போ தேர்தல் நிதின்னு வந்து நிக்கிறப்போ இருக்குது ஆப்பு!
சட்டம் போடுறவங்களுக்கே சட்ட சிக்கலா? என்ன கொடுமை மின்னல் இது!
//
இங்க சட்ட சிக்கல்னு சொன்னது
கம்பெனி வைக்க அரசே பர்மிசன் தந்து விட்டு இப்ப இல்லைனு சொன்னா கம்பெனியோட பொருளாதாரம் பாதிக்கும்
கோர்டுக்கு போவாங்க இன்னும்
சரி, பொது இடத்துல உச்சா போகக் கூடாது. ரொம்ப கரெக்டா சொன்னீங்க, அதுக்குன்னு அரசாங்கம் உச்சா ரூம் கட்டித்தரனும்னு சொன்னீங்க, நல்ல கருத்து. இப்பல்லாம் உச்சா ரூம் கட்ட வேண்டாங்க, அதுக்குன்னே நடமாடும் உச்சா ரூமே கிடைக்குதே, அதை வாங்கி பொது இடத்தில வைக்கிறதுனால நிறைய வசதிகள் உள்ளது, தண்ணி நிறைச்சு வைச்சுட்டா போதும். அத சுத்தம் பண்றதுக்கு ஒப்பந்த அடிப்படையில் நிறைய கம்பனிங்க ரெடியா இருக்காங்க. இதுல நிறைய பராமரிப்பு செலவும் மிச்சமாகும். நிரந்தர தண்ணி பைப் கனக்ஷன் எல்லாம் தேவையில்லை, அதே போல பாதாள சாக்கடையில எல்லாம் க்ழிவு வெளியேற கனெக்ஷன் குடுக்க வேண்டியதில்லை, அன்புமணி ஐய்யாவுக்கு சொல்லுவோமா
அண்ணே! எனக்கு அவசரமா மூச்சா போனும் போய்ட்டு வர்ரேன்
//இங்க சட்ட சிக்கல்னு சொன்னது
கம்பெனி வைக்க அரசே பர்மிசன் தந்து விட்டு இப்ப இல்லைனு சொன்னா கம்பெனியோட பொருளாதாரம் பாதிக்கும்//
:))
சுகாதாரத் துறை அமைச்சரா மட்டும் அவரு யோசிக்கட்டும்! ஏன் நிதித்துறை (பொருளாதாரம்) பத்தி கவலைப் படணும்!
ஒருத்தர் சிகரெட் குடிக்கிறதால அவரு மட்டும் இல்லாம பல பேரு பாதிக்கப் படுறாங்க இல்லையா!
அப்போ ஒரு கம்பெனியோட பொருளாதாரம் முக்கியமா? பல பேருடைய சுகாதாரம் முக்கியமா?
//அதை வாங்கி பொது இடத்தில வைக்கிறதுனால நிறைய வசதிகள் உள்ளது, தண்ணி நிறைச்சு வைச்சுட்டா போதும். அத சுத்தம் பண்றதுக்கு ஒப்பந்த அடிப்படையில் நிறைய கம்பனிங்க ரெடியா இருக்காங்க. இதுல நிறைய பராமரிப்பு செலவும் மிச்சமாகும். நிரந்தர தண்ணி பைப் கனக்ஷன் எல்லாம் தேவையில்லை, அதே போல பாதாள சாக்கடையில எல்லாம் க்ழிவு வெளியேற கனெக்ஷன் குடுக்க வேண்டியதில்லை, அன்புமணி ஐய்யாவுக்கு சொல்லுவோமா
//
நல்ல ஐடியா! இதைக் கண்டிப்பா அவர்கிட்டே சொல்லலாம்!
////இங்க சட்ட சிக்கல்னு சொன்னது
கம்பெனி வைக்க அரசே பர்மிசன் தந்து விட்டு இப்ப இல்லைனு சொன்னா கம்பெனியோட பொருளாதாரம் பாதிக்கும்//
//
மின்னல்! அம்மாவால சமாளிக்க முடிஞ்ச சட்டச் சிக்கல் அன்புமணி ஐயாவால முடியாதா என்ன?
//அண்ணே! எனக்கு அவசரமா மூச்சா போனும் போய்ட்டு வர்ரேன்//
ஆகட்டும்! ஆகட்டும்! இதுக்கெல்லாமா பர்மிஷன் கேப்பாங்க!
என்ன எதுக்கெடுத்தாலும் "அம்மா" புகழ் பாடுறீங்க,
ஒரு கம்பெனியோட பொருளாதாரம் முக்கியமா? பல பேருடைய சுகாதாரம் முக்கியமா?
//
ம்ம்ம்ம்.....
:)
R.Benjamin Ponnaih said...
என்ன எதுக்கெடுத்தாலும் "அம்மா" புகழ் பாடுறீங்க,
//
இல்லைங்க எங்க தளபதி ஹமாம் எப்பவுமே :)
//என்ன எதுக்கெடுத்தாலும் "அம்மா" புகழ் பாடுறீங்க,//
:) ஆஹா! கெளம்பீட்டாங்கைய்யா! கெளம்பீட்டாங்கைய்யா!
அம்மாவாலயே முடியும்போது அன்புமணி ஐயாவால இதைவிடவும் 10 மடங்கு கண்டிப்பா செய்ய முடியும்னு சொன்னேன்!
//இல்லைங்க எங்க தளபதி ஹமாம் எப்பவுமே :)//
:)) இது வேறயா!
இல்லைங்க எங்க தளபதி ஹமாம் எப்பவுமே :)
//
இங்கு ஹமாம் என்பது சோப் விளம்பரத்தை குறிக்கும்
(அரபி மொழி தெரிந்தவர்கள் அர்த்தம் சொல்லவேண்டாம்)
வாழ்க அம்மா!
வீழ்க திம்மிகள்!
///மின்னுது மின்னல் said...
இல்லைங்க எங்க தளபதி ஹமாம் எப்பவுமே :)
//
இங்கு ஹமாம் என்பது சோப் விளம்பரத்தை குறிக்கும்
(அரபி மொழி தெரிந்தவர்கள் அர்த்தம் சொல்லவேண்டாம்)///
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
//(அரபி மொழி தெரிந்தவர்கள் அர்த்தம் சொல்லவேண்டாம்)//
கண்டே பிடிக்க முடியாதாக்கும்!
:)
இப்ப ஹமாம் தான் பிரச்சினயா? இல்லை புகைப் பிடிப்பது பிரச்சினையா? இல்லை இரண்டில் ஒன்று கலக்கும் போது பிரச்சினையா? ஏன்னா சிலருக்கு அங்க போகும் போது அது இருந்தா தான் அது வரும் என்று அந்தாராணய மந்திரத்தில் சொல்லி இருக்கு
47
48
49
50
நாமக்கல் சிபி said...
//(அரபி மொழி தெரிந்தவர்கள் அர்த்தம் சொல்லவேண்டாம்)//
கண்டே பிடிக்க முடியாதாக்கும்!
:)
//
யாரும் சிண்டு முடிஞ்சுட கூடாதில்லை அதுக்கு தான் :)
//எச்சரித்து அனுப்பும் வகையில் கிடைக்கும் அபராதத்தொகை மட்டுமே நாளொன்றுக்கு ஒரு போலீஸ் காரருக்கு ரூ 2500க்கு மேல் கிடைக்கும் என்று சமூக நல ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
போலீஸ்காரர்கள் பிடித்து கையிலிருக்கும் பணம் காலியாகிவிடக் கூடும் என்ற பீதியால் தம் அடிக்கும் பழக்கம் உடைய பலரும் டீக்கடைகளில் தம் அடிப்பதைத் தவிர்த்து வருகிறார்கள்.//
ஓய்,
ஸ்பாட் ஃபைன் எவ்வளவு கொடுத்தீர், Sorry கட்டினீர்?
தமிழ் பிரியன் said...
46 47 48 49 50
//
என்னய்யா இது ரொம்ப நாளா 50 போடலையே இன்னைக்காவது போடலாம்னு நினைத்தால்....
:(
/// மின்னுது மின்னல் said...
தமிழ் பிரியன் said...
46 47 48 49 50
//
என்னய்யா இது ரொம்ப நாளா 50 போடலையே இன்னைக்காவது போடலாம்னு நினைத்தால்....
:(///
நீங்களும் 60,61...70,71, 90,91..99,100 ந்னு எண்ணி விட வேண்டியது தானே?... ;)))
ஓய்,
ஸ்பாட் ஃபைன் எவ்வளவு கொடுத்தீர், Sorry கட்டினீர்?
//
இதுக்கு பதில் சொன்னா புகை பிடிக்க மாட்டேன்னு போட்ட பதிவு பொய்யா போயிடும்
சோ நோ கமாண்ட்ஸ் :)
தமிழ் பிரியன் said...
இப்ப ஹமாம் தான் பிரச்சினயா? இல்லை புகைப் பிடிப்பது பிரச்சினையா? இல்லை இரண்டில் ஒன்று கலக்கும் போது பிரச்சினையா? ஏன்னா சிலருக்கு அங்க போகும் போது அது இருந்தா தான் அது வரும் என்று அந்தாராணய மந்திரத்தில் சொல்லி இருக்கு
//
இதுக்கு நேரடியாவே ஹமாமுக்கு அர்த்தம் சொல்லியிருக்கலாம் :)
ரெடி ஸ்டார்ட்
56
:)
58
:)