வழக்கமானதொரு வார இறுதிக்கு முந்தின வெள்ளிக்கிழமையின் காலைப் பொழுதாகத்தான் இன்றும் தொடங்கியது. கால் மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து சலித்துப் போய் இரண்டு ஷேர் ஆட்டோக்கள் பிடித்து அலுவலகம் வந்து சேர்ந்தேன். ரூ 22 காலி.
அலுவலகப் பணிகளை பிரித்து கொடுத்துவிட்டு, நண்பர் ஜே.கேவுடன் இன்றைய பணிகளைப் பற்றி விவாதித்து விளக்கிக் கூறிய பின் அவரும் தமது பணியைத் தொடங்கினார்.
மதிய உணவு வேளையில்தான் எனக்கு மட்டும் கொண்டு வந்தேன் என்பது உரைத்தது. பிறகு ஜேகேவிற்கும் மதிய உணவை வரவழைத்து இருவரும் சேர்ந்து மதிய உணவை முடித்தோம்!
அவ்வப்போது ஆன் லைனில் பிளாக் நண்பர்களும் கொஞ்சம் சேட்டிக் கொண்டிருந்தேன்!
இன்றும் சென்னையில் இருந்து கும்பகோணம் நோக்கி சென்றுகொண்டிருந்த பேருந்து ஒன்று தாம்பரம் அருகே விபத்துக்குள்ளானது குறித்து எங்கள் அலுவலக செக்யூரிட்டி ஒருவர் தெரிவித்தார்!
-------------------------------------------------------------------------------- டி.எஸ்.ஏ எனப்படும் டிரைக்ட் சேல்ஸ் ஏஜெண்ட் மூலமாக பி.எஸ்.என்.எல் லைனிற்கு 17ம் தேதி விண்ணப்பித்திருந்தேன். பி.எஸ்.என்.எல் லோகோ அச்சிடப் பட்டிருந்த ஒரு தற்காலிக ரசீது மட்டுமே கொடுத்திருந்தனர். புகைப்படம் மற்றும் முகவரிச் சான்றின் நகல்(குடும்ப அட்டை) ஆகியவற்றுடன் ரூ 500 (ரொக்கம்) கொடுத்து விண்ணப்பித்திருந்தேன்!
எங்கள் அலுவலகம் இருக்கும் தெருவிற்கே மாருதி வேனில் வந்து, பேனர்களுடன் புக்கிங்க் செய்து கொண்டிருந்தனர். பி.எஸ்.என்.எல் அலுவலம் செல்ல சோம்பல் பட்டதால் வந்திருக்கும்போதே விண்ணப்பித்துவிடலாம் என்று உடனடியாக விண்ணப்பித்துவிட்டேன்!
திடீரென நேற்று மதியம் ஒரு சந்தேகம் எழுந்து தொலைத்தது! வந்தவர்கள் உண்மையிலேயே பி.எஸ்.என்.எல்லின் அங்கீகரிக்கப்பட்ட சேல்ஸ் ஏஜெண்ட்டா அல்லது ஃபிராடா என்று. பெயர்/தொ.பே எண் கூட வாங்கி வைத்துக் கொள்ளவில்லை. அல்லது விண்ணப்பத்தின் நகலையாவது வாங்கி வைத்திருக்கலாம்! இனி இதுபோல் பொறுப்பில்லாமல் இருந்துவிடக் கூடாது என்று மனதில் திட்டவட்டமாக குறித்து வைத்துக் கொண்டேன்!
இன்று மதியம் எனது தங்கமணியிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது, தொலைபேசிக் கருவியை வீட்டிற்கு கொண்டுவந்து கொடுத்துவிட்டார்கள். இணைப்பும் செய்தாயிற்று. நமது தொலைபேசி எண்ணை நாளை மாலை அறிவிப்பார்கள் என்று கூற "அப்பாடா ஏமாறவில்லை" என்று நிம்மதி அடைந்தேன்!
--------------------------------------------------------------------------------------------- வழக்கம் போல - தொடரும்
பின் குறிப்பு : பின் எனப்படுவது ஊக்கு என்று பாமரத் தமிழர்களால் அழைக்கப் படும் ஒரு சிறிய உபகரணம் ஆகும். பெண்களுக்கு சிலசமயம் (சில்மிஷங்களில் இருந்து தப்பிக்க) ஆயுதமாகவும் உபயோகப் படுகிறது. சேஃப்டி பின் என்று படித்த பெண்மணிகளால் அழைக்கப் படுகிறது.
அலுமினியத்தால் வேறு உருவத்தில் தயாரிக்கப் பட்டு ஸ்டேப்லர்களில் பயன்படுத்தப் படுவதும் பின் என்றே அழைக்கப் படுகிறது.
டிஸ்கி : தமிழ்மணத்தின் சமீபத்திய அறிவிப்புக்கும், மேற்கண்ட படத்திற்கும் யாதொரு தொடர்பும் இல்லை!
தட்டில் எடுத்த வைத்த ரவா தோசையின் முறுகல் கூட இளகிவிடுகிறது இந்தக் காவியத்தைப் படித்தவர்களின் கண்ணீர் கண்டு!
தொட்டுக் கொள்ள வைத்த தேங்காய்ச்சட்டினியோ சட்டி நிறைந்து வெளியே எட்டிப் பார்க்கிறது! கவிதைக்கு செறிவு சேர்க்க திருகலான வார்த்தைகளைத் தேடும் நீ உப்புப் போட மறந்துவிட்டாயே கவிதாயிணி அக்கா என்று கதறுகிறது!
எது எப்படியோ ராவா அடையுடன் ஊறுகாயும் அருமையான சேர்க்கைதான் என்று ஆஃப் பாயில் போடுமுன் அளவளாவும் அண்ணன்மார்கள்!
அடக் கடவுளே! திரும்பவுமா என்று அங்கலாய்க்கும் வாடிக்கையான தமிழ்மண வலைப் பதிவர்கள்!