என்ன கொடுமை சார் இது?
2:12 PM | Author: நாமக்கல் சிபி
தினத்தந்தி வெள்ளி மலர் (20/03/2008) பேப்பர்லே

"17 வருடங்கள் ஆகியும் வீடு கட்டி முடிக்க வில்லைன்னு, என்ன பண்ணனும்"னு ஒருத்தர் கேள்வி கேக்குறார்!

அப்படி பண்ணு, இதை மாத்து அதை மாத்து ன்னு ஒரு வாஸ்து நிபுணரும் பதில் சொல்றாரு!

என்ன கொடுமைங்க சார் இது!

முதல்ல இன்ஜினியரை மாத்துங்க சார்!
ஐயஹோ!

பதிவுலக பிபிஓ (50 சீட்டர்) உண்மைத் தமிழனுக்கு மனக்கஷ்டமாம்! என்ன செய்வேன்! என்ன செய்வேன்!

இங்க பாருங்க அவரே பின்னூட்டத்துல சொல்லி இருக்காரு!

//மனசு வேற மேட்டர்ல வருத்தமா இருக்கு..//
பதிவை வேற சின்னதா(!?) எழுதியிருக்காரு! உடம்புக்கும் ஏதோ முடியலை போல! (டேட்டா எண்ட்ரி ஆப்பரேட்டர்ஸ் லீவுல போயிட்டாங்களோ?)

மக்கா! வாங்க! எல்லோரும் போயி கிச்சு கிச்சு மூட்டி சிரிக்க வைச்சி அவரோட கஷ்டத்தைப் போக்குவோம்!

(உண்மைத் தமிழன் அண்ணே! பேசின படி எவ்ளோ ஹிட் வருதோ அதுக்கேத்த கமிஷன் ரொக்கமா இங்க வந்துடணும்)
அரை கால் சட்டை (Half-Trowser)
10:02 PM | Author: நாமக்கல் சிபி

நீ ஆண், நீ இப்படித்தான் இருக்கவேண்டும் என்று சொல்லி சொல்லி ரொம்பவும் கட்டுப்பாட்டோடு வளர்த்தார்கள். உடை இப்படித்தன் இருக்க வேண்டும். இப்படித்தான் பேசவேண்டும், பார்க்கவேண்டும், நடக்கவேண்டும், சிரிக்கவேண்டும் என்று ஒவ்வொன்றும் சொல்லிக்கொடுப்பார்கள். எதையுமே என் இஷ்டத்திற்கு செய்ததாக நினைவில்லை. வீட்டில் நான் செய்வது தவறு என்று நினைத்தால் போதும் அப்படியே விட்டு விடமாட்டார்கள், திட்டி திட்டி திட்டி, அடித்தும் கூட மாற்றுவார்கள். சத்தம் போட்டு சிரிக்கவே கூடாது.. அதுவும் அப்பா இருக்கும் போது சத்தமே வரக்கூடாது. பூமி அதிராமல் மெதுவாக நடக்கவேண்டும், ஈசிச்சேரில் படுத்து கிடக்கும் அப்ப கண் விழித்து விடுவார். அவர் தூங்கும் நேரங்களில் தான் நான் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொண்டேன்.

இதை எல்லாம் விட கொடுமை, அதிகாலை 4 மணிக்கு "தம்பீ" என்று ஒன்று அல்லது இரண்டு முறை என் தலை அருகே வந்து மெதுவாக அழைப்பார்கள், எழுந்துவிட வேண்டும். அதுவும் சத்தமே வரக்கூடாது , அப்பா எழுந்து விடக்கூடாதாம். இரண்டு முறைக்கு மேல் கூப்பிட்டும் நான் எழவில்லை என்றால், தட்டி எழுப்பி சத்தம் வராமல் இருக்க ஒரு விரலை வாயின் மேல் வைத்து காட்டி...என்னை வெளியில் அழைத்து சென்று அதிகாலையிலே அர்ச்சனை கிடைக்கும் அதுவும் ஆண் எப்படி இருக்கவேண்டும் என்ற அறிவுரை வழங்கப்படும்.. "ஆமா நீ ஏன் இப்படி ராத்திரியில நீயும் ஏன்ச்சி என்னையும் எழுப்பி உயிரை வாங்கற..என்ன தூங்க விடேன்.." என்று சொல்லுவேன்.. ஆனா வீட்டில் ஏன் என்னை எழுப்புகிறார்கள் என்பதற்கு திரும்பவும் ஒரு லக்சர் கொடுப்பார்கள்.. அவங்க லக்சரை கேட்பதற்கு பதில் 4 மணி என்ன 2 மணிக்கு கூட எழுந்து வேலை செய்யலாம் என்று தோன்றும். கடைசி பையனாக பிறக்கக்கூடாதுடா சாமி.. என்று அடிக்கடி வேண்டிக்கொள்ளுவேன்.

உடைக்கு வருகிறேன். அரைப்டவுசர் என்பது முழுங்காலுக்கு கீழ் இருக்கும் படி அளவு வைத்து தைப்பார்கள். "ஆத்தா எல்லாரும் அழகா முட்டி வரை போட்டு இருக்காங்க எனக்கு மட்டும் முக்கா டவுசர் தைத்து தரீங்க.. எனக்கு பிடிக்கலை " என்பேன்." "முட்டிக்கு கீழ் தான் டவுசர் போட வேண்டும். ஆசிரியர் கிட்ட வேணும்னா நான் வந்து பேசறேன்..அடம் பிடிக்காத இதை பழகிக்கோ..." என்பார்கள். ஆனா எனக்கு டவுசர் முட்டிக்கு மேல் போட்டுக்கொள்ள ரொம்ப ஆசையாக இருக்கும். போடுபவர்களை பார்க்க பார்க்க பொறாமையாக இருக்கும். தாத்தா மாதிரி பெரியதாகத் தான் தைத்து கொடுப்பார்கள் எப்போதும்.

கூடைப்பந்தாட்டக் குழுவில் இருக்கும் போது கந்தம்பாளையத்திற்கு ஒரு முறை அழைத்து சென்றார்கள், குட்டி டவுசர் போட்டால் தான் தடுக்காமல் விளையாட முடியும், ஆனால் என்னிடம் இல்லை, நண்பன் ஒருவனிடம் கேட்டு நீலக்கலர் குட்டி டவுசர் வாங்கி வைத்துக்கொண்டேன். குறிப்பாக இந்த குட்டி டவுசர் போடுகிறேன் என்று தெரிந்தால் விளையாடவே அனுப்ப மாட்டார்கள். மீசை அரும்பாத பையன் என்பதால் வெளியூர் அனுப்ப எல்லாம் வழியே இல்லை. வீட்டில் யாருக்கும் தெரியாது. தாத்தாவிற்கும் அப்பாவிற்கும் நான் கூடைப்பந்து ஆடுவது தெரிந்தாலும் இப்படி டவுசர் போட்டு ஆடுகிறேன் என்று தெரியவே தெரியாது. வெளியூர் என்றால் விடமாட்டார்கள். ஆத்தாவிடம் மட்டும் ப்ர்மிஷன் வாங்கிவிட்டேன்..அப்பாவிற்கும், தாத்தாவிற்கு தெரியாமல் ஆத்தா பார்த்துக்கொள்வார்கள். எப்படியும் இரவு்க்குள் திரும்பி வந்துவிடலாம்.

வாங்கி வைத்திருந்த டவுசர்
கந்தம்பாளையத்தில் நாங்கள் தங்க அனுமதித்த பள்ளியில் சென்று மாற்றினேன். எனக்கு ரொம்பவும் பிடித்துபோனது. "எவ்வளவு அழகாக இருக்கு ஏன் போட விடுவதில்லை..ஒரே ஆதங்கம் எனக்கு" விளையாட்டில் இருந்த கவனத்தை விட அந்த நீல நிற டவுசர் மீது அதிக கவனம் இருந்தது. நண்பர்கள் அனைவரிடமும் போய்"ஏய் டவுசர் நல்லா இருக்கா" என்று கேட்டு அசடு வழிந்தது இப்பவும் நினைத்தால் சிரிப்பாக இருக்கிறது.

அவர்கள் வீட்டில் எல்லாம் எங்கள் வீட்டை போல் கட்டுப்பாடு இல்லை. அதனால் நான் இப்படி கேட்பதை அல்ப விஷயமாக பார்த்தார்கள். எனக்குமே அது தெரிந்திருந்தாலும் ஆர்வக் கோளாரு என்ன செய்வது :) சின்ன பிள்ளைதானே.. :)

ஆனால் இந்த கொடுமை எல்லாம் இப்பவும் தொடருகிறது. நான் என்ன உடை போட வேண்டும், எப்படி இருக்க வேண்டும் என்பதை என் மனைவி கூட பரவாயில்லை என்று சொல்லுவேன் என் மாப்பி ரங்கா முடிவு செய்கிறான். என் இஷ்டம் போல இருக்க நேரம் ஆகாது ஆனால் எனக்கு எந்த உடை நன்றாக இருக்கிறது என்று நான் உணர்வதை விட, என்னை சுற்றி இருப்பவர்கள் பார்த்து எபப்டி இருக்கிறேன் எது எனக்கு அழகாக இருக்கிறது என்று சொல்லும் போது அப்படி விட்டுவிடத்தான் நினைக்கிறேன். அடம் அதிகம் பிடிப்பதில்லை என்றாலும் "என்னை வேஸ்டி கட்ட விடுவதில்லை, போட விடுவதில்லை, மீசை வைக்கவோ, தாடி வைக்கவோ விடுவதில்லை, இந்த வீட்டில் எனக்கு சுதந்திரம் இல்லை.. " என்று சொல்லி சொல்லிக்காட்டி கொண்டே இருக்கிறேன்.
--------

மேற்கண்ட பதிவுக்கும் இந்த சுட்டிக்கும் தொடர்பு இல்லை.

http://kavithavinpaarvaiyil.blogspot.com/2009/03/half-skirt.html