எச்சரிக்கை: இது ஒரு சீரியஸ் பதிவு
பதிவுலகுல "சார் என்னைய கிள்ளிட்டான், திட்டிட்டான் என் பேர்ல கமெண்டு போடுறான்," என்ற கம்ப்ளெயிண்டெல்லாம் போயி இனிமே "சார் இவன் அவார்டு கொடுத்துட்டான், சார் அவன் என் அவார்டை வாங்க மாட்டேங்குறான், வாங்குன அவார்டை அடுத்தவனுக்கு குடுக்க மாட்டேங்குறான்" னெல்லாம் கம்ப்ளெயிண்ட் வரப் போகுதுன்னு பலரும் பீதியடையும் அளவுக்கு இந்த அவார்டோ ஃபோபியா பரவிகிட்டிருக்குன்னு நம்பத்தகாத வட்டாரங்கள் சொன்னபடியாலும் ஏற்கனவே பாசமிகு அண்ணன் மாதவராஜ் அவர்கள் இதுபற்றி விருதும் தர்மசங்கடமும் என்ற தலைப்பில் பதிவிட்டிருந்த படியாலும், அவரது இடுகைக்கு தொடர் வினையாக(எதிர் வினை அல்ல)
இந்த மாதிரி விருதுகளை எதிர்கொளவது எப்படின்னு கொஞ்சம் யோசிச்சி எனக்கு தோன்றிய சில டிப்ஸ்களை இங்கே கொடுத்திருக்கிறேன்!
விருதுகளில் இருந்து எஸ் ஆக சில டிப்ஸ்கள்!
--------------------------------------------------------
1. உங்க பிளாக் டெம்ப்ளேட்ல எங்கெல்லாம் காலி இடம் இருக்கோ அங்கயெல்லாம் ஏதாச்சும் இமேஜ் போட்டு நிரப்பிக்கோங்க!
(இதுக்கு மேல எந்த விருதை மாட்டவும் உங்க பிளாக்ல இடம் இல்லைன்னு அர்த்தம்)
2. ஒன்றுஅல்லது ரெண்டு ர்விட்ஜெட் மட்டும் டெக்ஸ்ட் உடனுக்குடன் மாத்திக்கிற வசதியோட வெச்சிக்கணும்! எந்த விருது என்ன பேர்ல கெளம்புதோ உடனே அந்த பேரை அங்கே எழுதி வெச்சிக்கலாம்!
(ஏற்கனவே அந்த விருது உங்களுக்கு வந்துடுச்சுன்னு அர்த்தம்)
3. சைட் பார்ல ஒரு எக்ஸெல் ஷீட் போட்டு நீங்களே ஒரு பட்டியலை நிரப்பி வையுங்க! அதுல எந்தெந்த விருதுக்கான பதிவு போடணும் என்கிற ஷெட்யூலை அடுத்த மூணு வருஷத்துக்கு தேதி போட்டு நிரப்பி வெச்சிடுங்க! ரொம்ப நாள் காத்துக்கிட்டிருக்கணும் நீங்க பதிவு போடன்னு உங்களுக்கு விருது கொடுக்க வரவர் தெறிச்சி ஓடிடுவார்!
4. இது கொஞ்சம் வன்முறை மாதிரி தெரிஞ்சாலும் ஈஸியா ரீச் ஆகுது! http://evandavirudhukoduppavan.blogspot.com ஒரு பிளாக் ஆரம்பிச்சி (வேற ஐடி யூஸ் பண்னுங்க) விருது கொடுக்கும் பிரபல பதிவர்களை கன்னா பின்னான்னு திட்டி ரெண்டு பதிவு போட்டுட்டு அந்த ஐடிலயே போயி விருது பதிவு போடுறவங்களுக்கெல்லாம் பின்னூட்டம் போட்டுடுங்க!
(இதுல இந்த பேர்லயே ரெண்டு மூணு போலியும் கெளம்பக் கூடும், உஷார். எதுக்கும் எலிக்குட்டி, பெருச்சாளி எல்லாத்தையும் கையோட எடுத்துக்குங்க, இதைப் பத்தி தெரியாதவங்க டோண்டு சார்கிட்டே டியூஷன் போகலாம்! எவ்வளவு நேரம் இதற்காகச் செலவழிக்கிறாரோ அதற்கு தனியா சார்ஜ் பண்ணுவார். அந்த எழவுக்கு நான் இன்னும் அஞ்சாறு விருதுப் பதிவே எழுதிடலாம்னு உங்களுக்குத் தோன்றினால் வெல் அண்ட் ஹேப்பி)
5. உடனடியா எதிர் கோஷ்டி விருது கொடுப்பவன் என்ற பெயரில் http://virudhukoduppavan.blogspot.com னு ஒண்ணு ரெஜிஸ்டர் பண்ணி உங்களுக்கு அட்வைஸ் மழை பொழியக் கூடும், இதே யூ.ஆர்.எல்லை நீங்களே ரெஜிஸ்டர் பண்ணி வெச்சிட்டா பிம்பிளிக்கி பிளாப்பி, மாமா பிக்கோத்துன்னு அவங்களுக்கு நாம பழிப்பு காட்டலாம்!
6. விருது கொடுப்பவர் உங்களுக்கு பின்னூட்டம் மூலமாவோ அல்லது தனிமடல்லயோ தெரியப் படுத்தக் கூடும்! எத்தனை முறை அழைத்தாலும்
"என்ன விருந்தா! எங்கே? எப்போ? நாங்க ஒரு 70 பேர் வருவோம்! நான் வெஜ் + டிரிங்க்ஸ் இருந்தாகணும் ஆனா எதிர் விருந்தெல்லாம் தர மாட்டோம்"னு சொல்லி அத்தனை முறைக்கும் காது கேக்காத மாதிரியே ரிப்ளை போடுங்க! விருது கொடுப்பவர் ஜென்மத்துக்கும் விருதை நினைக்க மாட்டார்! விருந்தையும் சேர்த்துதான்!
7. இவையெல்லாத்தையும் தாண்டி உங்களுக்கு விருதுக்கான அழைப்பு ஏதாச்சும் வருதுன்னு வையிங்க! நம்மகிட்ட இருப்பதிலேயே பெரிய பிரம்மாஸ்திரம் ஒண்ணு இருக்கு! அதை கடைசியா கையில எடுங்க! "எனக்கு விருது கொடுப்பதை நான் ஏற்றுக் கொண்டு மேலும் தொடர வேண்டுமென்றால் உண்மைத் தமிழன் அண்ணாச்சியின் 10 பதிவுகளை உடனடியாக வாசித்துவிட்டு அவரது அக்கப்போர் ச்சே புனிதப் போர் என்ற குறும்படத்தையும் 5 முறை பார்த்து விட்டு உண்மைத்தமிழனிடம் அக்னாலெட்ஜ்மெண்ட் வாங்கி வரவேண்டுமென்று ஒரு விட்ஜெட் போட்டு உங்கள் பிளாக் டெம்ப்ளேட்டில் ஒட்டி வையுங்கள்!
பின் குறிப்பு: சிரித்ததால் வயிறு புண்ணாகிப் போனவர்கள் அணுக
1. VSK
2. டாக்டர் புருனோ
3. டெல்ஃபின் விக்டொரியா
இதே மாதிரி தொடர் பதிவுகளில் இருந்தும் தப்பிக்க ஏழு எளிய வழிகள்.....நாளை!
37 பின்னூட்டங்கள்:
ஊக்கூம்! டாக்டர்களை பத்தி சொன்னா மாத்திரம் போதுமா???
அடுத்து அழைப்பவர்கள் , மருந்து மாத்திரை,உமக்கு என்ன தண்டனை எல்லாம் சொல்ல வேண்டாமா???
ஹி ஹி.... :)
:)))))))
அண்ணோவ்....!! கலக்கிபோட்டீங்கோ....!! நெம்ப சூப்பர்......!! சும்மா ...
இந்த அவார்ட்....... அந்த அவார்டுன்னு.... கலர் .. கலரா..... உடுறாங்கப்பா........!!!!!
ஆஹா! ஒரு நாளைக்கு எத்துனை ப்லாக் ஆரம்பம் செய்வீங்க ...
[[
இதே மாதிரி தொடர் பதிவுகளில் இருந்தும் தப்பிக்க ஏழு எளிய வழிகள்.....நாளை!]]
ஆவலுடன் ...
இந்த பதிவுக்காகவே ஒரு விருதை ஏறபாடு பண்ணி உங்களுக்கு தரணும்.
ரத்த வெறி !!!
நீ ஏரியாவாண்ட வராமயா போயிடுவ ?? அப்பாலிக்கா பாத்துக்கறேன்.
ஒன்னு ஒன்னு ரெண்டு
விருது கொடுக்கறவன்லாம் இல்ல என் ஃபிரண்டு.
நீ ரொம்ப ஒழுங்கா!
:)))))
சிபி ரொம்ப குசும்பு உங்களுக்கு .....
எனக்கு யாருமே விருது குடுக்கலையேனு ஒரே ஃபிலிங்கா இருக்கு தல
மாமா பிக்கோத்து அவார்டு
//
இந்த அவார்ட் விட்ஜெட் ஒன்னு ரெடி பண்ணி குடுங்க தள
மாரனேரி.காம் அடுத்த பதிவு ஒரே நேரத்தில் பல பெயர்களில் பல வலைப்பூக்களில் எழுதுவது எப்படி... வெகு விரைவில் வெளியாக உள்ளது. படிக்க தவறாதீர்கள்.
இந்த விருதில் எனக்குப் பிடித்தது அதன் M.L.M கான்சப்ட்டே.
ஜோசப் பால்ராஜ் said...
மாரனேரி.காம் அடுத்த பதிவு ஒரே நேரத்தில் பல பெயர்களில் பல வலைப்பூக்களில் எழுதுவது எப்படி
மாரநேரி.காம் அப்படினு ஒரு பதிவர் இருக்கிறார் அந்த பிலாக்கும் சிபியோடதானா ?
:)
//அதை கடைசியா கையில எடுங்க! "எனக்கு விருது கொடுப்பதை நான் ஏற்றுக் கொண்டு மேலும் தொடர வேண்டுமென்றால் உண்மைத் தமிழன் அண்ணாச்சியின் 10 பதிவுகளை உடனடியாக வாசித்துவிட்டு அவரது அக்கப்போர் ச்சே புனிதப் போர் என்ற குறும்படத்தையும் 5 முறை பார்த்து விட்டு உண்மைத்தமிழனிடம் அக்னாலெட்ஜ்மெண்ட் வாங்கி வரவேண்டுமென்று ஒரு விட்ஜெட் போட்டு உங்கள் பிளாக் டெம்ப்ளேட்டில் ஒட்டி வையுங்கள்!//
பாவம் அண்ணாச்சி அவர விட்டுடுங்க
//உண்மைத் தமிழன் அண்ணாச்சியின் 10 பதிவுகளை உடனடியாக வாசித்துவிட்டு அவரது அக்கப்போர் ச்சே புனிதப் போர் என்ற குறும்படத்தையும் 5 முறை பார்த்து விட்டு//
உங்கள் மீது கொலை முயற்சி வழக்குப் போடலாமென இருக்கிறேன்.

போலீஸ் என்னைத் தேடி வருவதற்குள் நான் அந்த குறும்படத்தைப் பார்த்துவிடுவேன்!
(சயனைடு குப்பி இங்க கிடைக்காது)
//அண்ணாச்சியின் 10 பதிவுகளை உடனடியாக வாசித்துவிட்டு அவரது அக்கப்போர் ச்சே புனிதப் போர் என்ற குறும்படத்தையும் 5 முறை பார்த்து விட்டு உண்மைத்தமிழனிடம் //
வெளிநாட்டு தண்டனை மாதிரி இருக்கு, இறந்தவரை பத்து முறை தூக்கு அதன் பிறகு 210 வருடம் ஆயுள் என்பது போல் இருக்கு:)))
:)))
//ஒரு விட்ஜெட் போட்டு உங்கள் பிளாக் டெம்ப்ளேட்டில் ஒட்டி வையுங்கள்//
done ;-)
கலக்கல்! :)
அடப்பாவி..!
உனக்கெல்லாம் முருகன் தக்கத் தண்டனை தருவான்..!!!
முருகா.. நீயே நடக்குறதை பாரு..!
[[[புருனோ Bruno said...
//அதை கடைசியா கையில எடுங்க! "எனக்கு விருது கொடுப்பதை நான் ஏற்றுக் கொண்டு மேலும் தொடர வேண்டுமென்றால் உண்மைத் தமிழன் அண்ணாச்சியின் 10 பதிவுகளை உடனடியாக வாசித்துவிட்டு அவரது அக்கப்போர் ச்சே புனிதப் போர் என்ற குறும்படத்தையும் 5 முறை பார்த்து விட்டு உண்மைத்தமிழனிடம் அக்னாலெட்ஜ்மெண்ட் வாங்கி வரவேண்டுமென்று ஒரு விட்ஜெட் போட்டு உங்கள் பிளாக் டெம்ப்ளேட்டில் ஒட்டி வையுங்கள்!//
பாவம் அண்ணாச்சி அவர விட்டுடுங்க..]]]
டாக்டர் நீங்கதான் என்னுடைய ஒரே நண்பர்.. ஒத்துக்குறேன்..
இந்தப் பய புள்ளைகளைப் பத்தி இப்பவாவது தெரிஞ்சுக்குங்க..
ஒரு தடவை குனிஞ்சீங்கன்னா அவ்ளோதான்..! தலைக்கு மேல தாவிக்கிட்டே இருப்பானுக..!
நீங்களாவது என்னை மாதிரி ஏமாந்துறாம பொழைச்சுக்குங்க..!
[[[வடகரை வேலன் said...
//உண்மைத் தமிழன் அண்ணாச்சியின் 10 பதிவுகளை உடனடியாக வாசித்துவிட்டு அவரது அக்கப்போர் ச்சே புனிதப் போர் என்ற குறும்படத்தையும் 5 முறை பார்த்து விட்டு//
உங்கள் மீது கொலை முயற்சி வழக்குப் போடலாமென இருக்கிறேன்.]]]
உங்கள் இருவர் மீதும் மானநஷ்ட வழக்குத் தொடரப் போகிறேன்..!
[[[குசும்பன் said...
//அண்ணாச்சியின் 10 பதிவுகளை உடனடியாக வாசித்துவிட்டு அவரது அக்கப்போர் ச்சே புனிதப் போர் என்ற குறும்படத்தையும் 5 முறை பார்த்து விட்டு உண்மைத்தமிழனிடம் //
வெளிநாட்டு தண்டனை மாதிரி இருக்கு, இறந்தவரை பத்து முறை தூக்கு அதன் பிறகு 210 வருடம் ஆயுள் என்பது போல் இருக்கு:)))]]]
மவனே லஞ்சம் கொடுத்தாச்சும் உன் மேல கொலை முயற்சி வழக்குப் போடுறேண்டா..!
எந்த ஊர்ல இருந்துக்கிட்டு எந்த ஊர்ல இருக்குறவனை பார்த்து நக்கல் பண்றே..!
[[[சென்ஷி said...
கலக்கல்! :)]]]
கலக்கலா..?
அடங்கொப்பூரானே.. புரூட்டஸ் ஆயிட்டியே ராசா..!
//உண்மைத் தமிழன் அண்ணாச்சியின் 10 பதிவுகளை உடனடியாக வாசித்துவிட்டு//
அடங்கொய்யால! அந்த ஆளு பேரை வாசிக்கவே எங்களுக்கு 10 நாள் ஆயிடும்! இதுல 10 பதிவை வேற படிக்கணுமா!
நீ விருதே வாங்கிக்க வேணாம் சாமி (ஆணியே புடுங்க வேணாம்)
கிளம்பிட்டாங்கப்பா :)
முதல் பாயிண்ட் நான் ரொம்ப நாளா கடை பிடிக்கிறது!
நல்லாத்தான் காலாய்க்குறீங்க :-)
சிரிச்சி சிரிச்சி முடியல....:))))))
புரையேறிப்போச்சு.
சிபி அண்ணே.... நானும் விருது வாங்காதோர் சங்கத்தில சேர்ந்துக்கிறேன்.
டேய் - எவண்டா விருது கொடுப்பவன்! நீங்கள் விருது கொடுப்பதெல்லாம் உங்களை போல உதவா கரைகளுக்குதானேடா டுபுக்கு.
மேல் விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் -> http://dai-evandavirudhukoduppavan.blogspot.com/2009/08/blog-post.html

How is it? எந்தா சாரே சரிதானே?