கம்பு
புன்செய் தானியங்களுள், பயன்பாட்டின் அடிப்படையில் கேழ்வரகிற்கு இணையான தானியம் கம்பு. 'கம்பம் புல், கம்பரிசி, புல், புல்லு' என்றும் இதைக் குறிப்பிடுவர். தவசம் என்னும் சொல் பொதுவாகத் தானியத்தைக் குறிக்கும். ஆயினும், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களின் கரிசல் பகுதியில் தவசம் என்பது கம்புத் தானியத்தையே குறிக்கிறது. அரிசி என்னும் சொல் இன்று நெல் அரிசியை மட்டும் குறிப்பதுபோல் தவசம் என்னும் சொல்லும் கம்புத் தானியத்தை மட்டும் குறிப்பதாக மாறியுள்ளதோ எனக் கருத இடம் உள்ளது. கல்வெட்டுகளில் தவசம், தவசப் பொதி என்று குறிப்பிடப்படுவது பொதுவாகத் தானியத்தையா அல்லது கம்புத் தானியத்தையா என்பதும் ஆய்விற்குரியது.
நீண்ட கதிர்களைக் கொண்ட கம்புப் பயிரிலிருந்து தானியத்தைப் பிரித்தெடுத்த பின்னும் அதை அப்படியே பயன்படுத்துவதில்லை. அதை உரலில் இட்டு இடித்துப் பயன்படுத்துவர். இதை இடிக்கும்போது தனியான மணம் தோன்றும். இடித்த கம்பரிசியைச் சோறாக்கி அதை உருண்டைகளாகப் பிடித்து நீராகாரம், மோர், தண்ணீர் இவற்றுள் ஒன்றில் போட்டுவிடுவர். அது மிதக்கும். தேவைப்படும்போது ஓர் உருண்டையை எடுத்து மோரிலோ நீரிலோ கரைத்து உப்பிட்டுக் குடித்துவிடுவர். கம்பங்கஞ்சிக்குப் பச்சை மிளகாய், வெங்காயம், பொரித்த கருவாடு ஆகியனவற்றுள் ஒன்று தொடுகறியாக அமையும்
கம்மங்கூழ், தாகத்தையும் பசியையும் ஒரு சேர அடக்கும் தன்மையது.
கம்புச் சோறு சாப்பிடும்போது பருப்புக் குழம்பு, கருவாட்டுக் குழம்பு ஆகியன பொருத்தமான துணை. சிலர் கருப்புக் கட்டியைத் துணைக்கு அழைத்துக்கொள்வதும் உண்டு. அரிசிச் சோற்றுக்குத் தயிர் அல்லது மோர்விட்டுப் பிசைந்து உண்பதுபோல், கம்மஞ்சோற்றுக்கும் தயிர் அல்லது மோர்விட்டுப் பிசைந்து உண்பதுண்டு. இன்று புழக்கத்தில் உள்ள ஒட்டுக் கம்பை இடித்து வேகவைக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் நாட்டுக் கம்பைப்போல் இதற்குக் கொம்மை கிடையாது. மணிகளாகவே கிடைத்துவிடும். இதனால் குற்றும் வேலை மிச்சம். ஆயினும் நாட்டுக் கம்பிற்குரிய தனித்த மணம் ஒட்டுக் கம்புச் சோற்றிலும் கஞ்சியிலும் கிடையாது.
இதற்கும் மணி அண்ணன் அவர்களின் பிரியாணி : குறுந்தகவல் என்ற பதிவிற்கும் யாதொரு தொடர்பும் இல்லை என்று நான் சத்தியம் செய்தாலும் நம்புவதற்கு ஆள் இல்லை.
நன்றி : காலச் சுவடு
மக்கா,
சங்கத்துல கொஞ்ச(!?) நாளா போஸ்ட் எதுவும் போடாம இருக்கிறேன் என்பது வாஸ்தவம்தான். அதுக்காக இப்படி மெயில் அனுப்புறதெல்லாம் ரொம்ப ஓவர் சொல்லிட்டேன்! ஆமா!
அன்புள்ள நாமக்கல் சிபி,
தங்களை வருகிற ஆகஸ்ட் 2007 மாதத்திற்கான வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் "அட்லாஸ் வாலிபராக" அழைக்க விழைகிறோம்.
தயை கூர்ந்து தங்கள் வசதியை உடன் தெரியப் படுத்தவும்.
அன்புடன்,
ஒரு சங்கத்து சிங்கம்
சங்கத்துல கொஞ்ச(!?) நாளா போஸ்ட் எதுவும் போடாம இருக்கிறேன் என்பது வாஸ்தவம்தான். அதுக்காக இப்படி மெயில் அனுப்புறதெல்லாம் ரொம்ப ஓவர் சொல்லிட்டேன்! ஆமா!
அன்புள்ள நாமக்கல் சிபி,
தங்களை வருகிற ஆகஸ்ட் 2007 மாதத்திற்கான வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் "அட்லாஸ் வாலிபராக" அழைக்க விழைகிறோம்.
தயை கூர்ந்து தங்கள் வசதியை உடன் தெரியப் படுத்தவும்.
அன்புடன்,
ஒரு சங்கத்து சிங்கம்

வாத்தியார் மீதுள்ள அளவற்ற அன்பாலும், பாடங்களின் மீதுள்ள அதீத ஆர்வத்தின் காரணமாகவும் முன் வரிசை இருக்கைகளில் இடம்பிடிக்க மாணவர்களுக்கிடையே எழுந்த சண்டை வகுப்புக் கலவரமாக மாறியது. அதை உடனடியாக கண்டு கலவரத்தை அடக்க எவ்வித நடவடிக்கையும் நடவடிக்கை எடுக்காமல் தொடர்ந்து பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியரை பள்ளி நிர்வாகம் வலை வீசித் தேடி வருகிறது.
பபா தூயா அவர்களின் மொக்கை என்றால் என்ன? என்ற சந்தேகத்திற்கு விளக்கம் கொடுக்கவே இந்தப் பதிவு!

தூயா! இப்ப வெளங்கி இருக்கும்ணு நினைக்கிறேன். மொக்கை என்றால் என்னவென்று!

தூயா! இப்ப வெளங்கி இருக்கும்ணு நினைக்கிறேன். மொக்கை என்றால் என்னவென்று!
செந்தழலார் வாழ்க! :)
இதோ இன்னொரு மொக்கைப் பதிவு
மாயி அண்ணன் வந்திருக்காக! மாப்பிள்ளை மொக்கைச் சாமி வந்திருக்காக! மற்றும் நம் உறவினரெல்லாம் வந்திருக்காக! வாம்மா மின்னல்!
மாயி அண்ணன் வந்திருக்காக! மாப்பிள்ளை மொக்கைச் சாமி வந்திருக்காக! மற்றும் நம் உறவினரெல்லாம் வந்திருக்காக! வாம்மா மின்னல்!