ஜவ்வரிசி போண்டா - லக்கியார்
பஜ்ஜி - மாயவரத்தார்
முறுக்கு - நாமக்கல் சிபி
வெந்நீர் - பூங்குழலி
தோசை - இம்சை அரசன்
அப்பளம் - பொன்ஸ்
ஆப்பம் - கோ.வி.கண்ணன்
மசாலா ஆம்லேட் - யெஸ்.பாலபாரதி
தயிர் செய்வது எப்படி - சந்தனமுல்லை
முட்டை அவிப்பது எப்படி - வந்தியத்தேவன்
பழையது
ஆட்டுக் கறிக் குழம்பு - நாமக்கல் சிபி
முட்டைக்கோஸ் ஓட்ஸ் உப்புமா - கோ.இராகவன்
கொத்ஸு பரோட்டா - இலவசக் கொத்தனார்
வீட்டுக் குறிப்புகள்
புள்ளி வைப்பது எப்படி - திரு
கோழிக் குஞ்சுக்கு பதில் சொல்வது எப்படி - நாடோடி
பொதுவானவை
பால் பேரிங்குகள் ஏன்? எதற்கு? எப்படி? - பெனாத்தலார்
நூடுல்ஸாவது எப்படி - ஜொள்ளுப்பாண்டி
சோறு சாப்பிடுவது எப்படி - நாடோடி
தர்ம அடி போடுவது எப்படி - ராமச்சந்திரன்உஷா
தர்ம அடி வாங்குவது எப்படி - சந்தோஷ்
*பா.க.ச வில் சேருவது எப்படி - We The People
முக்கியமானவை
வெட்டியாய்ப் பொழுதைக் கழிப்பது எப்படி - சந்தோஷ்
எப்பிடிங்கள்ள இருந்து தப்பிக்கறது எப்பிடி - அரை பிளேடு
*New பதிவே எழுதாமல் இருப்பது எப்படி - சேதுக்கரசி
மேலும் குறிப்புகளை இன்ஸ்டிடியூட்டில் பதிவு செய்யவிரும்புவோர் தங்கள் பதிவுகளின் சுட்டியை பின்னூட்டமிடவும்.
- லக்கிலுக்,
பிரின்ஸிபால்.
த.ம.இ.கே.டெ.


முறுக்கு மாவினை ஒரு பங்கு வெள்ளை உளுத்தம்பருப்புக்கு, நான்கு பங்கு பச்சரிசி என்ற கணக்கில் எடுத்துக் கொண்டு, கீழே கொடுக்கப்பட்டுள்ள முறையில் தயாரித்து வைத்துக் கொள்ளவும். தேவையான போது, தேவையான அளவு எடுத்துப் பயன்படுத்தலாம். இந்த மாவையே சீடை செய்யவும் பயன்படுத்தலாம்.
தேவையானப் பொருட்கள்
முறுக்கு மாவு - 2 கப்
பெருங்காயத் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - 3/4 தேக்கரண்டி
டால்டா - கால் கப்
எள்ளு - 3/4 தேக்கரண்டி
தண்ணீர் - ஒரு கப்


முறுக்கு மாவு தயாரிக்க: ஒரு கிலோ பச்சரிசிக்கு கால் கிலோ வெள்ளை உளுத்தம்பருப்பு என்ற கணக்கில் எடுத்துக் கொள்ளவும். உளுத்தம் பருப்பை வாணலியில் பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். பச்சரிசியை கழுவி காயவைத்துக் கொள்ளவும். பச்சரிசியுடன் உளுத்தம் பருப்பு சேர்த்து மிஷினில் கொடுத்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

முறுக்கு மாவுடன் பெருங்காயத் தூள், உப்பு, எள்ளு சேர்த்து கலந்து கொண்டு, பின்னர் உருக்கிய டால்டாவை ஊற்றி கட்டியில்லாமல் பிசையவும்.பிறகு ஒரு கப் தண்ணீரை சிறிது சிறிதாக கையில் ஊற்றி, மாவில் தெளித்து பிசையவும். வெறும் தண்ணீரைவிட இளஞ்சூடான வெந்நீர் ஊற்றி பிசையவும்.

மாவின் பதம் மிகவும் தளர்வாக

பிசைந்த மாவை முறுக்கு அச்சில் கொள்ளும் அளவுக்கு வைத்து தட்டில் அல்லது பேப்பரில் பிழிந்து வைத்துக் கொள்ளவும்.

நம்பினார் கெடுவதில்லை என்று நாமக்கல்லாரை நம்பிய
ஜொள்ளுப் பாண்டிக்கும் இப்பதிவிற்கும் யாதொரு தொடர்பும் இல்லை.

நம்ம ஹரிஹரன் அவர்களோட உலகத்துல ஆமை புகுந்த வீடு ஏன் விளங்காதுன்னு சான்றோர்கள் சொன்ன விளக்கத்தை அதாவது கல்லாமை, அறியாமை, முயலாமை, இல்லாமைம் இயலாமை, பொறாமை போன்ற ஆமைகளைச் சுட்டிக் காட்டி கூறியிருந்தனர்.
இந்த காலத்து பசங்களுக்கும் பிடிபடற மாதிரி ஒரு ஈசியான லாஜிக்கலான விளக்கம் எனக்கும் தோன்றியது. அதைத்தான் இங்கே சொல்கிறேன்.
(காமெடி, கீமெடியெல்லாம் இல்லை).
அதாவது நம்ம வீடுகளில் பாம்பு, பூரான், தேள் போன்றவற்றை பார்த்தால் நாம் என்ன செய்வோம். உடனடியாக அடித்துக் கொள்வோம்/கொல்வோம். அல்லது குறைந்தபட்சம் வீட்டை விட்டு வெளியேற்றவாவது செய்வோம். அதுவும் படு வேகமாக. அவை உள்ளே நுழையும்போது பார்த்தாலே கூட உடனடியாக கம்பு எங்கே இருக்கிறது என்று தேடிச் செல்வோம்.
அப்படியிருக்க வெகு மெதுவாக நகரும் இந்த ஆமையானது வீட்டிற்குள் வரும் வரை விரட்டாமல் வீட்டினுள் அனுமதிக்கின்றனர் என்றால் அவ்வீட்டிலோர் எப்பேர்ப்பட்ட சோம்பேறிகளாயிருப்பர். சோம்பேறிகள் நிறைந்த வீடு எப்படி இருக்கும். உழைப்பு இருக்காது. உழைப்பு இல்லாத வீட்டில் என்ன செல்வம் இருக்கும்? ஒன்றும் இருக்காது. அதாவது சோம்பேறிகள் நிறைத வீடோ, சமுதாயமோ ஒன்றுக்கும் உதவாமல் விளங்காமல்தான் போகும்.
கடந்த இரு வாரங்களுக்கு முன்பு சென்னைப் பட்டிணத்தின் முக்கிய நிர்வாகியான குழந்தை யெஸ்.பாலபாரதி அவர்கள் இன்று(நவம்பர் 19, 2006) சென்னையில் ஒரு வலைப்பதிவர் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அனைவருக்கும் அழைப்பு விடுத்திருந்தார் என்பது அனைவரும் அறிந்ததே!
அதன்படியே இன்று மாலையில் சந்திப்பு நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில்
சந்திப்பு முடியும் முன்னரே வலையுலகின் மாலைமலர் என்று அழைக்கப்படும் இட்லிவடையாரின் வலைப்பூவில் இன்றைய சந்திப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியிடப்பட்டது தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இப்புகைப்படம் வெளியான செய்தி அறிந்தவுடன் சென்னைப்பட்டிணத்தின் நிர்வாகிகளுள் ஒருவரை தொடர்பு கொண்டு விசாரித்தபோது "அதற்குள் புகைப்படம் வெளியாகிவிட்டதா" என்று அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் முக்கிய நிர்வாகியான குழந்தை யெஸ்.பாலபாரதி அவர்கள் தொலைபேசி மூலம் நமக்கு அளித்த பேட்டியில்
"எப்படி இப்புகைப்படங்கள் வெளியாயின என்று தெரியவில்லை.
அதுபற்றி விசாரணையை மேற்கொள்ள வரவணையான் அவர்கள் தலைமையில் ஒரு உயர்மட்ட விசாரணைக் குழுவை ஏற்படுத்தி விரைவாக விசாரிக்க ஏற்பாடு செய்யப்படும்" என்று கூறினார்.
லேட்டஸ்ட் தகவல் :
நவம்பர் 20, சென்னை
இட்லி வடையாரின் பதிவிலிருந்த புகைப்படங்கள் பாலபாரதி அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க நீக்கப்பட்டன.

நவம்பர் 14, குழந்தைகள்(!?????) தினத்தையொட்டி நம்ம வலைப்பதியும் குழந்தை யெஸ்.பாலபாரதிக்கு தமிழ் வலைப்பதிவர்கள் சார்பாக என் வாழ்த்துக்களை தெரியப்படுத்திக் கொல்கிறேன்.
மேலும் அவருக்கு பரிசளிக்க(!?) எவரேனும் விரும்பினால் தாராளமாக இங்கு வந்து குமுறிச் செல்லலாம்.
இவண்,
கோவை மாவட்டச் செயலாளர்,
பா.க.ச
இது வரை கிடைத்துள்ள பரிசுப் பொருட்கள்

விண்ணப்பிக்க விரும்புவோர் தங்கள் பெயர், இருப்பிடம், வலைப்பூ முகவரி ஆகியவற்றை பின்னூட்டங்கள் மூலம் தெரியப் படுத்தலாம். விண்ணப்பங்களின் வருகை அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்படும். ஏற்கனவே கலாய்க்கப் பட்டதில் முன் அனுபவம் உடையவர்கள் அதிக தகுதி உடையோராய்க் கருதப் படுவர். வயது வித்தியாசமின்றி ஒற்றைச் சாரள முறையில் அனைவரும் கலாய்க்கப்படுவர். கலாய்க்கப்பட இருக்கும் வாரம் ஒரு வாரம் முன்னதாக தனி பின்னூட்டம் மூலம் அவரவர் பதிவுகளில் தெரிவிக்கப்படும்.
ரத்தக் கொதிப்பு, முன் கோபம், பின் கோபம் இருப்பவர்கள் விண்ணப்பிப்பதை தவிர்க்கவும். அடுத்தவர்களுக்காக விண்ணப்பம் இடுதலையும் தவிர்க்கவும்.