70 : புகையிலை ஒழிப்பு தினம்
5:10 PM | Author: நாமக்கல் சிபி

இன்று உலக புகையிலை

ஒழிப்பு தினமாம்.

ஹிஹி!


வருடத்திற்கு

ஒரு நாள்தானா?


நாங்களெல்லாம் தினமும்

எங்களால் முடிந்த

புகையிலையை

விலை கொடுத்து

வாங்கி

தீயில்

பொசுக்கி

ஒழித்துக்

கொண்டுதானிருக்கிறோம்.
69 : போஸ்ட் மார்டரிஸம் - ஒரு கவிதை
9:06 AM | Author: நாமக்கல் சிபி
இலக்கிய உலகில் கவிதைகளின் பல்வேறு பரிமாணங்களை எனக்கு அறிமுகப் படுத்திய எனதருமை நண்பர் ஒருவர்தான் போஸ்ட் மார்டரிஸம் என்ற சொல்லையும் எனக்கு அறிமுகப் படுத்துனார்.



அதைப் பரீட்சித்துப்(!?) பார்க்கும் முயற்சியாக இதோ எனது படைப்பு!



போஸ்ட் மார்ட்டம்


உளியை வைத்து

உச்சியைப் பிளந்து

மூளையை அகற்றி

வைக்கோல் திணிப்போம்!


வயிற்றைக் கிழித்து

சிறுகுடல், பெருங்குடல்

வெளியே எடுப்போம்!
சிறு மயிர்தானெனினும்
தடயம் என்றுரைப்போம்!
காயங்கள்தனையும்
கவனமாய்க்
குறிப்போம்!
மயானத்தில் மட்டுமல்ல!
மார்ச்சுவரியின் வாசலிலும்
காத்திருக்கும்
பிணந்திண்ணிக் கழுகுகள்!


ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா என்ன இது? யாருமே கும்மி பதிவு போட மாட்டேங்குறாங்க!

எங்கயாவது போட்டா போயி கும்மி அடிக்கலாம்னு பார்த்தா ஒண்ணியும் காணலை!

ஏங்க! வலைப் பதிவர்களே! மனசாட்சிக்கு விரோதமில்லாம சொல்லுங்க! இப்படி எல்லாருமே மொக்கை/கும்மிப் பதிவு போடாம இருந்தா நாங்களெல்லாம் என்னதான் பண்ணுறது?

அ.மு.க வுக்கு போரடிக்காதா என்ன? என்னடா சைடு எலைக்கு சாம்பார் கேக்குறானேன்னு பார்க்காதீங்க! நான் எனக்கும் சேர்த்துதான் சொல்றேன்!

அப்படி யாரும் கும்மி பதிவு போடவில்லை என்றால், அ.மு.கவினர் இந்தப் பதிவையே கும்மிப் பதிவாக கருது, எனது அன்பான அழைப்பை ஏற்று வருகை புரிந்து இந்த(கும்மிப்) பதிவை சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்!

அப்படியெ தமிழ்மணத்திற்கு ஒரு அன்பான வேண்டுகோள். வகைப்படுத்தும் பட்டியலில் "நகைச்சுவை/நையாண்டி", "அனுபவம்/நிகழ்வுகள்" போன்ற வகைகளைப் போல் "கும்மி/மொக்கை" என்ற வகையையும் சேர்க்குமாறு கேட்டுக் கொல்கிறேன்.