பர்சனல் லோன் வேண்டுமான்னு கேட்டு போன்ல தொல்லை செய்யுறாங்களா?

1.கட்டாயமா வேண்டும்! ஆனா பர்சனலா வெச்சிக்கணும்! யார்கிட்டையும் சொல்லப்பிடாதுன்னு சொல்லுங்க!

2.சனிக்கிழமை சாயங்காலமா ஊருக்கு வெளிப்புறமா நான் சொல்ற ஒரு ரகசியமான இடத்துக்கு கொண்டு வந்து கொடுக்கணும்னு கண்டிஷன் போடுங்க! அவங்க கொடுக்குறது பர்சனல் லோன் பாஸ்! யாருக்கும் தெரியக் கூடாதுல்ல!

3.டாகுமென்ட் எதுவும் இல்லாம லோன் தருவீங்களான்னு கேட்டு பாருங்க!
கேஷ் எப்ப கொண்டு வந்து தருவீங்க? இன்னும் ஒன அவர்ல கிடைக்குமான்னு கேட்டுப் பாருங்க! பின்னாடி உங்க பக்கம் தலை வெச்சிக் கூட படுக்க மாட்டாங்க!

4.புனைப் பெயருக்கெல்லாம் லோன் தருவீங்களான்னு கேளுங்க! பர்சனல் லோனுக்கு எல்லாம் பெர்சனல் மெயில் ஐடி மட்டும்தான் அட்ரசா தருவேன்னு சொல்லுங்க!

5.ரெண்டு ரெஃபரன்ஸ் கேப்பாங்க! அதுக்கும் நம்மோட வேற ரெண்டு புனைப் பெயரை கொடுத்துடுங்க! கூகிள் தான் இலவசமா கொடுக்குதே! ஒரு நாலஞ்சு எக்ஸ்ட்ராவா உருவாக்கி வெச்சிக்குங்க! காசா பணமா?

6.லோன் வேணுமான்னு கேக்குறவங்ககிட்டே ஆமா எஜுகேஷனல் லோன் வேணும் னு கேளுங்க! அதைத்தான் நிதானமா கட்டலாம். அவசரமே படத் தேவை இல்லை. என்ன படிக்க போறீங்கன்னு கேட்ட டுட்டோரியல் காலேஜ்ல + 2 படிக்கப் போறேன்னு சொல்லுங்க!

7.கொடுக்குறதை பயிர்க்கடனா கொடுத்தீங்கன்னா புண்ணியமாப் போகும்னு கேளுங்க! கவர்மெண்ட்ல அப்பப்போ தள்ளுபடி பண்ணிடுவாங்க! வீட்டுத் தோட்டத்துல கறிவேப்பிலை பயிர் பண்ணுறேன்னு சொல்லிக்கலாம்.

8. போன் செய்வது ஆணா இருந்தா எங்காத்துல கல்யாண வயசுல ஒரு பொண்ணு இருக்குன்னு பேச்சை மாத்தி அவரை பத்தின விவரங்கள் கேட்க ஆரம்பிங்க. பொண்ணா இருந்தா கல்யாண வயசுல ஒரு வரன் இருப்பதாக ரூட்டை மாத்துங்க. அதுக்கு முன்னாடி கல்யாணம் ஆயிடுச்சான்னு ஒரு வார்த்தை கேட்டுகிட்டு ரூட் மாத்துற பிளானுக்கு வாங்க. சில நேரம் உண்மையாவே நல்ல வரன் அமையவும் வாய்ப்பு இருக்கு என்பது சிறப்பு அட்வாண்டேஜ்.

9. இந்த மாதிரி போன் செய்யுறவங்க பர்சனல் நம்பரை வாங்கி வெச்சிக்குங்க. இந்த மாதிரி மார்க்கெட்டிங்க் கால் பண்ணுற இன்னொருத்தர்கிட்டே இந்த நம்பரையும் அவர்கிட்டே இவர்கிட்டே வாங்கின நம்பரையும் மாத்தி மாத்தி கொடுத்து கோர்த்து விட்டுடுங்க!

10.அடிக்கடி போன் பண்ணிகிட்டே இருந்தா அவரை உங்க தெருவுக்கு பக்கத்துல இருக்குற ஆல மரத்தடிகிட்டே வரச் சொல்லிட்டு ஊரு சனங்களை கூப்பிட்டு எப்போவோ வந்த வெள்ளத்துக்கு நிவாரண உதவி தர வந்திருக்காரு, எல்லோரும் ரேசன் கார்டு எடுத்துட்டு வந்துடுங்கன்னு சொல்லி கிளப்பி விட்டுடுங்க!

லாஸ்ட் பட் நாட் த லீஸ்ட்!
11. இந்த மாதிரி மார்க்கெட் ஆட்களை வீட்டுக்கு வரச் சொல்லி உண்மைத் தமிழனோட ரெண்டு பதிவை பிரிண்ட் எடுத்து புத்தகமாக்கி கைல கொடுத்து வீட்டுக்குக் கொண்டு போயி படிச்சி முடிச்சதும் கால் பண்ணுங்க, பிறகு பேசலாம்னு சொல்லிடுங்க! இந்த ஜென்மத்துல அவர்கிட்டே இருந்து உங்களுக்கு கால் வராது! அப்படியும் கால் வந்தா கடைசியா ஒரு பிரம்மாஸ்திரம் இருக்கு!

12. இந்த பிளாக்ல இருக்கும் கவிதைகள் சிலவற்றை பிரிண்ட் எடுத்து கைல கொடுத்து படிக்கச் சொல்லுங்க! அவர் உங்களுக்கு மட்டுமல்ல. யாருக்குமே கால் பண்ண மாட்டாரு!

பல நாட்களாக எதிர்பார்ப்பை கொடுத்து வந்த எந்திரன் ஒரு வழியாக ரிலீஸ் செய்யப்பட்டது! இந்நிலையில் விமர்சனம் என்ற பெயரில் திரைப்படத்தின் மொத்த கதையையும் பதிவு செய்துவிடக் கொடும் என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உண்மைத் தமிசன் கைது செய்யப் பட்டுள்ளார்!
இது பற்றி அவரிடம் கேட்டபோது "சண்டைல கிழியாத சட்டை எங்கிருக்கு, நல்ல கேக்குறிங்க டீடைலு" என்று சொன்னதோடு சிறையில் தன் வாழ்க்கை வரலாற்றை சுருக்கமாக(!?) இருபது வருடங்களுக்குள் எழுதப் போவதாக கூறினார்
கதவைத் திற காற்று வரட்டும் - சுவாமி(!?) நித்யானந்தா


"நாசமாப் போச்சு! கதவைத் தொறந்து வெச்சா காத்துக்குப் பதிலா காமிரா வந்து தொலைச்சிடுச்சு!" - நடிகை

"முதல்ல விளக்கைப் போடுய்யா... வெளிச்சம் வரட்டும்.." - பலான பக்தர்
காதலர் தின (பழைய)சிறப்புக் கவிதை
2:58 PM | Author: நாமக்கல் சிபி
சில நேரம்
சிறகுகள் கிடைக்கும்!
சில நேரம்
சிலுவைகள் கிடைக்கும்!
அந்த சிலுவைகள் கூட
உனக்கு
சலுகைகளாய்த் தெரியும்!

பௌர்ணமி நிலவு
உன்னைப்
பாடாய்ப் படுத்தும்!
பட்டாம் பூச்சி கூட
உன்னைப்
புரட்டித் தள்ளும்!

பசித்திருத்தலும்,
விழித்திருத்தலும்
சுகமாய்த்தானிருக்கும்!

நீ எழுதும்
ஒவ்வொரு எழுத்தும்
கவிதை என்று
உன் நண்பர்கள்
சொல்லுவர்!

இவையெல்லாம் நீ
உணர்வது உண்மையெனில்
நண்பா ஒரு நிமிடம்!
நல்லதொரு
நாடி வைத்தியர்
என் வீட்டிற்கருகில்தான்
இருக்கிறார்!
சென்று பார்ப்போம் வா!
பார்வைகள் பதிவுலே கவிதாக்கா பலபேர்கிட்டே அவங்கவங்களுக்கு பிடிச்ச ஸ்வீட் பேர் கேட்டதாகவும் எல்லாரும் அவங்களை அழவைச்சதாகவும் எழுதி இருக்காங்க!

உண்மையில என்ன நடந்ததுன்னு நீங்களே பாருங்க!

--------------
Daar All
Plz send me your favorite "sweet" item name. (example laddu, halwa, pasanthi..etc)
Kavi
----------------
பால்கோவா

நட்புடன்,

நாமக்கல் சிபி.
----------------
சிபி நன்றி
இன்னொரு பிடித்த ஸ்வீட் சொல்லுங்க.. அல்ரெடிஓருத்தங்க இதை சொல்லிட்டாங்களே...
---------------------
நானே செஞ்ச பால்கோவா!

(இதை யாரும் கண்டிப்பா சொல்லி இருக்க முடியாது)
நட்புடன்,

நாமக்கல் சிபி.
----------------------
பிச்சிப்புடுவேன் பிச்சி.. :)))))))))))
ப்ளீஸ்ப்பா. .எனக்கு வேற உங்களுக்கு பிடிச்ச ஸ்வீட் பேரு சொல்லுங்க...
-----------------------
பிச்சிப் போடுவதற்கு அதென்ன ஜிலேபியா?
யாருக்கு பிடிச்ச ஸ்வீட் சொல்லணும்? எனக்கு பிடிச்சது பால்கோவாதான்!

நட்புடன்,

நாமக்கல் சிபி.
--------------------------
ஹய்யோ..
சரி பால்கோவா தவிர வேறு என்ன ஸ்வீட் பிடிக்கும்...
சொல்லிடுங்களேன்..
--------------------------
எனக்கு காரா பூந்தி பிடிக்கும்!

நட்புடன்,

நாமக்கல் சிபி.
--------------------
பிசாசே... காராபூந்தி.. காரம். .நான் கேட்டது ஸ்வீட்டூஊஊஊஊஊஊ
oru purpose kaha ketta.. sollanum.. solungapa... enn eppadi oyira vaangareenga ??? avvvvvvvvvvvvv !!
--------------------
ம்ஹூம்!
எனக்கு பால்கோவாதான் பிடிக்கும்!
இன்னொருத்தரும் சொல்லிட்டாங்க என்பதற்காக நான் மாத்திக்க முடியுமா என்ன?
.வேணும்னா சோன் பப்படின்னு எழுதிக்குங்க! (லுலுங்காட்டிக்காகத்தான், நிஜமா எனக்கு பால்கோவா தான் பிடிக்கும்)

நட்புடன்,

நாமக்கல் சிபி.
-----------------------------------
sari... :)))))))))) thanks.. eppa avanga kitta mathikka solli kettu paarkirean..
avanga enna solla poraangalo ponga..



அரை கால் சட்டை (Half-Trowser)
10:02 PM | Author: நாமக்கல் சிபி

நீ ஆண், நீ இப்படித்தான் இருக்கவேண்டும் என்று சொல்லி சொல்லி ரொம்பவும் கட்டுப்பாட்டோடு வளர்த்தார்கள். உடை இப்படித்தன் இருக்க வேண்டும். இப்படித்தான் பேசவேண்டும், பார்க்கவேண்டும், நடக்கவேண்டும், சிரிக்கவேண்டும் என்று ஒவ்வொன்றும் சொல்லிக்கொடுப்பார்கள். எதையுமே என் இஷ்டத்திற்கு செய்ததாக நினைவில்லை. வீட்டில் நான் செய்வது தவறு என்று நினைத்தால் போதும் அப்படியே விட்டு விடமாட்டார்கள், திட்டி திட்டி திட்டி, அடித்தும் கூட மாற்றுவார்கள். சத்தம் போட்டு சிரிக்கவே கூடாது.. அதுவும் அப்பா இருக்கும் போது சத்தமே வரக்கூடாது. பூமி அதிராமல் மெதுவாக நடக்கவேண்டும், ஈசிச்சேரில் படுத்து கிடக்கும் அப்ப கண் விழித்து விடுவார். அவர் தூங்கும் நேரங்களில் தான் நான் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொண்டேன்.

இதை எல்லாம் விட கொடுமை, அதிகாலை 4 மணிக்கு "தம்பீ" என்று ஒன்று அல்லது இரண்டு முறை என் தலை அருகே வந்து மெதுவாக அழைப்பார்கள், எழுந்துவிட வேண்டும். அதுவும் சத்தமே வரக்கூடாது , அப்பா எழுந்து விடக்கூடாதாம். இரண்டு முறைக்கு மேல் கூப்பிட்டும் நான் எழவில்லை என்றால், தட்டி எழுப்பி சத்தம் வராமல் இருக்க ஒரு விரலை வாயின் மேல் வைத்து காட்டி...என்னை வெளியில் அழைத்து சென்று அதிகாலையிலே அர்ச்சனை கிடைக்கும் அதுவும் ஆண் எப்படி இருக்கவேண்டும் என்ற அறிவுரை வழங்கப்படும்.. "ஆமா நீ ஏன் இப்படி ராத்திரியில நீயும் ஏன்ச்சி என்னையும் எழுப்பி உயிரை வாங்கற..என்ன தூங்க விடேன்.." என்று சொல்லுவேன்.. ஆனா வீட்டில் ஏன் என்னை எழுப்புகிறார்கள் என்பதற்கு திரும்பவும் ஒரு லக்சர் கொடுப்பார்கள்.. அவங்க லக்சரை கேட்பதற்கு பதில் 4 மணி என்ன 2 மணிக்கு கூட எழுந்து வேலை செய்யலாம் என்று தோன்றும். கடைசி பையனாக பிறக்கக்கூடாதுடா சாமி.. என்று அடிக்கடி வேண்டிக்கொள்ளுவேன்.

உடைக்கு வருகிறேன். அரைப்டவுசர் என்பது முழுங்காலுக்கு கீழ் இருக்கும் படி அளவு வைத்து தைப்பார்கள். "ஆத்தா எல்லாரும் அழகா முட்டி வரை போட்டு இருக்காங்க எனக்கு மட்டும் முக்கா டவுசர் தைத்து தரீங்க.. எனக்கு பிடிக்கலை " என்பேன்." "முட்டிக்கு கீழ் தான் டவுசர் போட வேண்டும். ஆசிரியர் கிட்ட வேணும்னா நான் வந்து பேசறேன்..அடம் பிடிக்காத இதை பழகிக்கோ..." என்பார்கள். ஆனா எனக்கு டவுசர் முட்டிக்கு மேல் போட்டுக்கொள்ள ரொம்ப ஆசையாக இருக்கும். போடுபவர்களை பார்க்க பார்க்க பொறாமையாக இருக்கும். தாத்தா மாதிரி பெரியதாகத் தான் தைத்து கொடுப்பார்கள் எப்போதும்.

கூடைப்பந்தாட்டக் குழுவில் இருக்கும் போது கந்தம்பாளையத்திற்கு ஒரு முறை அழைத்து சென்றார்கள், குட்டி டவுசர் போட்டால் தான் தடுக்காமல் விளையாட முடியும், ஆனால் என்னிடம் இல்லை, நண்பன் ஒருவனிடம் கேட்டு நீலக்கலர் குட்டி டவுசர் வாங்கி வைத்துக்கொண்டேன். குறிப்பாக இந்த குட்டி டவுசர் போடுகிறேன் என்று தெரிந்தால் விளையாடவே அனுப்ப மாட்டார்கள். மீசை அரும்பாத பையன் என்பதால் வெளியூர் அனுப்ப எல்லாம் வழியே இல்லை. வீட்டில் யாருக்கும் தெரியாது. தாத்தாவிற்கும் அப்பாவிற்கும் நான் கூடைப்பந்து ஆடுவது தெரிந்தாலும் இப்படி டவுசர் போட்டு ஆடுகிறேன் என்று தெரியவே தெரியாது. வெளியூர் என்றால் விடமாட்டார்கள். ஆத்தாவிடம் மட்டும் ப்ர்மிஷன் வாங்கிவிட்டேன்..அப்பாவிற்கும், தாத்தாவிற்கு தெரியாமல் ஆத்தா பார்த்துக்கொள்வார்கள். எப்படியும் இரவு்க்குள் திரும்பி வந்துவிடலாம்.

வாங்கி வைத்திருந்த டவுசர்
கந்தம்பாளையத்தில் நாங்கள் தங்க அனுமதித்த பள்ளியில் சென்று மாற்றினேன். எனக்கு ரொம்பவும் பிடித்துபோனது. "எவ்வளவு அழகாக இருக்கு ஏன் போட விடுவதில்லை..ஒரே ஆதங்கம் எனக்கு" விளையாட்டில் இருந்த கவனத்தை விட அந்த நீல நிற டவுசர் மீது அதிக கவனம் இருந்தது. நண்பர்கள் அனைவரிடமும் போய்"ஏய் டவுசர் நல்லா இருக்கா" என்று கேட்டு அசடு வழிந்தது இப்பவும் நினைத்தால் சிரிப்பாக இருக்கிறது.

அவர்கள் வீட்டில் எல்லாம் எங்கள் வீட்டை போல் கட்டுப்பாடு இல்லை. அதனால் நான் இப்படி கேட்பதை அல்ப விஷயமாக பார்த்தார்கள். எனக்குமே அது தெரிந்திருந்தாலும் ஆர்வக் கோளாரு என்ன செய்வது :) சின்ன பிள்ளைதானே.. :)

ஆனால் இந்த கொடுமை எல்லாம் இப்பவும் தொடருகிறது. நான் என்ன உடை போட வேண்டும், எப்படி இருக்க வேண்டும் என்பதை என் மனைவி கூட பரவாயில்லை என்று சொல்லுவேன் என் மாப்பி ரங்கா முடிவு செய்கிறான். என் இஷ்டம் போல இருக்க நேரம் ஆகாது ஆனால் எனக்கு எந்த உடை நன்றாக இருக்கிறது என்று நான் உணர்வதை விட, என்னை சுற்றி இருப்பவர்கள் பார்த்து எபப்டி இருக்கிறேன் எது எனக்கு அழகாக இருக்கிறது என்று சொல்லும் போது அப்படி விட்டுவிடத்தான் நினைக்கிறேன். அடம் அதிகம் பிடிப்பதில்லை என்றாலும் "என்னை வேஸ்டி கட்ட விடுவதில்லை, போட விடுவதில்லை, மீசை வைக்கவோ, தாடி வைக்கவோ விடுவதில்லை, இந்த வீட்டில் எனக்கு சுதந்திரம் இல்லை.. " என்று சொல்லி சொல்லிக்காட்டி கொண்டே இருக்கிறேன்.
--------

மேற்கண்ட பதிவுக்கும் இந்த சுட்டிக்கும் தொடர்பு இல்லை.

http://kavithavinpaarvaiyil.blogspot.com/2009/03/half-skirt.html
தனிமனிதத் தாக்குதல் என்று அறியப்படும் பதிவுக்ளை நிரல்கள் மூலம் வடிகட்டித் தடைசெய்யும் தமிழ்மண நிர்வாகமே!

திட்டமிட்டு, ஒவ்வொரு தமிழ்மண வாசகர்களையும் கொன்றொழிப்பது என்ற தீய நோக்கத்துடன், வாசிப்பவர்களை, கேட்பவர்களை, அறிபவர்களையெல்லாம் தற்கொலை செய்து கொள்ளத் தூண்டும் வகையில் கொஞ்சம் கூட ஈவு இரக்கமின்றி, குறைந்தபட்ச மனிதாபிமானமும் இன்றி கொலை பாதக வெறியுடன் மீண்டும் மீண்டும் என் பதிவைப் பார், என் பாடலைக் கேள் என்று இடப்பட்டு வரும் இதுபோன்ற இடுகைகளை தமிழ்மண நிர்வாகம் தட்டிக் கேட்கவும், தடுத்து நிறுத்தவும் கொஞ்சமும் அக்கறையின்றி வாசகர்கள் எக்கேடு கெட்டுப்போனால் எங்களுக்கென்னவென்று சும்மா கைகட்டி வேடிக்கை பார்க்கும் மர்மம் என்ன? தமிழ்மணம் மனிதாபிமானத்தை இழந்துவிட்டது என்று பொருளா? அலல்து அரசின் மக்கட்தொகைக் குறைப்புத் திட்டத்தில் தமிழ்மணமும் பங்கேற்கிறதா?

என்னைப் போல எண்ணற்ற அப்பாவி வாசகர்கள் மீது சிறிதளவேனும் இரக்கம் கொண்டு தமிழ்மண நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு எங்களைக் காப்பாற்ற, எங்கள் இன்னுயிரைக் காப்பாற்ற, எங்கள் செவிகளைக் காப்பாற்ற தாயுள்ளத்தோடு நடவடிக்கை எடுக்கும் நம்புகிறேன்!

இப்படிக்கு,
அளவிலா குசும்புடன்,
நாமக்கல் சிபி
சரியே என்று வாதிடுபவர் : பாலமன் ஆப்பைய்யா
தவறு என்று வாதிடுபவர்: திண்டுக்கல் லியோனி

நடுவர் : "பேன்" சந்தோஷ்!

மகா ஜனங்களே கும்ம வாங்க!

சந்தோஷ் ஆவலோட காத்துகிட்டு இருக்காரு!

(யாருப்பா அங்கே! நடுவர் "பேன்" சந்தொஷ்க்காக அந்த ஃபேனை போட்டு விடுங்கப்பா)
அழுவாச்சி காவியமும் ரவா தோசையும்
9:10 PM | Author: நாமக்கல் சிபி




தட்டில் எடுத்த
வைத்த ரவா தோசையின்
முறுகல் கூட
இளகிவிடுகிறது
இந்தக் காவியத்தைப்
படித்தவர்களின்
கண்ணீர் கண்டு!

தொட்டுக் கொள்ள
வைத்த தேங்காய்ச்சட்டினியோ
சட்டி நிறைந்து
வெளியே
எட்டிப் பார்க்கிறது!
கவிதைக்கு செறிவு சேர்க்க
திருகலான வார்த்தைகளைத்
தேடும் நீ
உப்புப் போட மறந்துவிட்டாயே
கவிதாயிணி அக்கா
என்று கதறுகிறது!

எது எப்படியோ
ராவா அடையுடன்
ஊறுகாயும்
அருமையான சேர்க்கைதான்
என்று
ஆஃப் பாயில் போடுமுன்
அளவளாவும்
அண்ணன்மார்கள்!

அடக் கடவுளே!
திரும்பவுமா
என்று
அங்கலாய்க்கும்
வாடிக்கையான
தமிழ்மண
வலைப் பதிவர்கள்!
அன்புடையீர்,

இப்பவும் நிகழ்கிற மே மாதம் (வைகாசித் திங்கள்) 21ம் தேதி புதன் கிழமை மாலை 8 மணியளவில் ஒரு அதிசயம் நிகழ்ந்தது. தனது அலுவலகப் பணிகளில் மூழ்கி இருந்த சிபியாருக்கு இலக்குவண் என்னும் பதிவரிடமிருந்து அரட்டை அழைப்பு வந்தது.

மேலும் அவரை கூகிள் டாக்கிற்கு வரச் சொல்லியும் அழைத்திருக்கிறார். இதனால் பயந்துபோன சிபியிடம் இலகுவண் "பயப்பட வேண்டாம், கவிதையெல்லாம் படிக்கச் சொல்லி துன்புறுத்த மாட்டேன், என்னைக் கலாய்த்து ஒரு பதிவு மட்டும் போடு, நானும் பாலைத் திணை ரேஞ்சில்தான் கவிதை எழுதுகிறேன், என்னை யாருமே கலாய்ப்பதில்லை " என்று மட்டும் சொன்னாராம்.

இதனைத் தொடர்ந்து அவரைக் கலாய்த்து பதிவெழுதிய சிபியாருக்கு தனது மாதங்களில் அவள் மார்கழி தொடரை உடனடியாக முடிக்கும் அளவிற்கு கதை எழுத நேரம் கிடைத்தது.

இதனைக் கேள்விப்பட்ட மோகனதாசு என்ற புகைப் படப் பதிவர் தன் பங்குக்கு இலக்குவணைக் கலாய்த்து பதிவெழுதி பதினைந்து பேருக்கு லிங்கை அனுப்பினாராம். உடனே அவரது பதிவொன்றிற்கு 5000 பின்னூட்டங்கள் கிடைத்தனவாம்.

இதனை ஏளனம் செய்து அலட்சியம் செய்த பதிவர்களில் சிலர் பலபேரின் விமர்சனங்களுக்கு ஆளாகி தமிழ்மணத்திலிருந்தே நீக்கப் பட்டார்களாம்.

ஆகவே சக பதிவர்களாகிய நீங்களும் இதனை அலட்சியம் செய்யாது தங்களை வெவ்வேறு பெயர்களில் இலக்குவணிடம் அறிமுகம் செய்து கொண்டு அவரைக் கலாய்த்து அதிர்ஷ்டப் பார்வைக்கு ஆளாகுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்!

மீண்டும் சொல்கிறேன்! அலட்சியம் செய்யாதீர்கள். குறைந்த ப்ட்சம் இரண்டு பதிவுகளில் அவரைக் கலாய்த்து லிங்கினை 25 பேருக்காவது அனுப்பவும்.
98 : ஆரியா - விமர்சனம்
6:29 PM | Author: நாமக்கல் சிபி
பிரபல(!?) வலைப்(கும்மிப்) பதிவர் சிபி. அவரது தங்கை பாவனா. பாவனாவிற்கு ஒரு நாள் திடீரென கவிதைகள் எழுத வேண்டுமென்ற ஆவல் பிறக்கிறது. உடனே தன் அண்ணனை அணுக, அவர் தமிழ்மண நிர்வாகத்திடம் தன் தங்கை பாவனா கவிதை எழுத அனுமதி அளிக்கக் கோருகிறார். அவர்களோ தற்போது நிறைய பேர் கவிதை எழுதுவதால் இடம் இல்லை என்று அனுமதி மறுக்கிறார்கள். உடனே கவிதை எழுதும் காயத்ரியை அராஜகமாகக் கலாய்த்து இனி எழுதுவதே இல்லை என்று ஓடுமாறு விரட்டிவிடுகிறார் சிபி.

பின்னர் மீண்டும் தமிழ்மணத்தை அணுகி இப்போது ஒரு இடம் காலி இருப்பதைச் சுட்டிக்காட்டி அவ்விடத்தை பாவனாவிற்கு ஒதுக்குமாறு கேட்க, தமிழ்மணமும் அனுமதி அளிக்கிறது.

இதன் பிறகு பாவனா கைக்கு வந்தவாறு கவிதைகளை எழுதிக் குவிக்கிறார். அண்ணன் சிபியின் மிரட்டலுக்குப் பயந்து பிற பதிவர்கள் அனைவரும் "ஆஹா, ஓஹோ, சூப்பர் கவிதை" என்றெல்லாம் அபி அப்பா மாதிரியே புகழ்ந்து பின்னூட்டம் இட்டுச் செல்கின்றனர்.

இந்நிலையில் மிரட்டலுக்கெல்லாம் அஞ்சாத தம்பி என்னும் பதிவர் மட்டும் அந்த கவிதைகளைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த பாவனா அவரைத் தனது கவிதைகளுக்குப் பின்னூட்டமிட வைக்க முயற்சிகள் பல மேற்கொள்கிறார். பதிவர் குசும்பனும் அவரது முயற்சிகளுக்குத் துணையாக இருப்பார் என்று எண்ணி அவரை அழைத்துப் பேசுகிறார்.

குசும்பனோ தனக்கு காமெடி மட்டுமே செய்யத் தெரியும் என்று கூறிக்கொண்டாலும், தன் அழகில் மயங்கித்தான் பாவனா தன்னை அழைத்திருக்கிறார் என்று எண்ணி பாவனாவிடம் மனதைப் பறி கொடுக்கிறார்.

இந்நிலையில் தம்பியை பணிய வைக்கும் முயற்சியில் இருந்த பாவனா சிறிது சிறிதாக தம்பியின் மீது காதல் கொள்கிறார். அவரையும் தன்னைக் காதலிக்க வைக்கவும் முயற்சிகள் மேற்கொள்கிறார்.

தனது அண்ணன் சிபியிடம் சொல்லி தன் காதல் நிறைவேற உதவி கோருகிறார் பாவனா. தம்பியோ ஒரு சீரியஸ் பதிவர், நாமோ கும்மிப் பதிவர்கள். அவர் எப்படி நம் வலையில் வீழ்வார் என்று சிந்தித்த சிபி ஒரு புதிய யுக்தியைக் கண்டுபிடிக்கிறார்.

சீரியஸ் பதிவராக இருப்பதால்தானே தன் தங்கையை கண்டுகொள்வதில்லை அவரையும் கும்மிப் பதிவராக ஆக்கிவிடுவோம், பின்னர் நம் வழிக்கு வந்துவிடுவார் என்பதே அவரது திட்டம்.

பல்வேறு பதிவர்களின் துணையோடு தம்பியைக் காமெடி மற்றும் கும்மிப் பதிவுகளும், கும்மிப் பின்னூட்டங்களும் இட வைக்க அவரை எந்நேரமும் தொல்லைகள் கொடுக்கிறார். ஜி மெயில் கஸ்டம் மெசேஜ் போட்டால் கூட அதை வைத்து அவரைக் கலாய்க்கிறார்கள். இதனால் வெறுத்துப் போன தம்பி தானும் கும்மி என்னும் ஆயுதத்தை கையில் எடுக்கிறார்.

சிபி, பாவனா, குசும்பன் கும்பலிடமிருந்து தம்பி தப்பித்தாரா? அல்லது பாவனாவின் காதல் வலையில் தம்பி விழுகின்றாரா என்பதே படத்தின் கிளைமாக்ஸ்!

கதை, திரைக்கதை, இயக்கம், வசனம், பாடல்கள் : தம்பி
தயாரிப்பு : தம்பி புரடக்ஷன்ஸ்!
92 : வெள்ள அபாய எச்சரிக்கை
10:58 PM | Author: நாமக்கல் சிபி
இன்றிலிருந்து ஒரு வார காலத்திற்கு தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் வெள்ள அபாயம் ஏற்பட இருப்பதால் அனைத்து தமிழர்களும் உயரமான பகுதிகளுக்குச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.
ஆறுதலான செய்தி
டிவி சீரியல்களைப் பார்க்கும் பழக்கம் உடையோருக்கு இதனால் பெரும் பாதிப்பு இருக்காது என்று அறியப்படுகிறது.
இது பற்றி தகவல் அறிந்த மத்திய அரசு பிரதமர் வெள்ள நிவாரண நிதியில் இருந்து கணிசமான தொகை ஒதுக்கி நபர் ஒன்றுக்கு தினமும் ஒரு டசன் கைக்குட்டை வழங்க முடிவு செய்திருக்கிறதாம்.
விரிவான தகவல்களுக்கு நாளை காலை 10.00 மணிக்கு (இந்திய நேரம்)
தமிழ்மணம் வாசிக்கவும்
89 : அப்பாவி - ஆகஸ்டு 2007 - விருது
10:22 PM | Author: நாமக்கல் சிபி
தெக்ஸ்: what happened to the blogger??

me: server down
5-6 engineers work pannigittu irukkanga
nethu chennaila idi vizhunthudichu

தெக்ஸ் : adhu eppadi ungalukku theriyum 5-6 engineers work pantrathu :D

me: I'm one of the team

தெக்ஸ் : really

me: yes

தெக்ஸ் : chumma kalaikkadheenga oi

me: ada! nijam thundai pottu thandava

தெக்ஸ்: appa naan ungala disturb pannak koodathu
seekarama work panni, online konduvangappu

me: exactly sure
adhukkuthana mandaiya udaichigittu irukkom
oru post podunga reg this

தெக்ஸ் : endha bothukkula ennna bamboo irukkinney theriyala :-P
எந்த புத்துக்குள்ள என்ன பாம்பு இருக்கின்னே தெரியலை

me: !?

தெக்ஸ் :-))

me: !?

தெக்ஸ்: சர்வரே டவுனாம் அதில நான் எப்படி பதிவு போடறது சொல்றது
ஹா ஹா ஹா

me: server up ana biragu
innum konjsa nera wait please

me: தலைவா இப்ப செக் பன்னுங்க
தலைவா இப்ப செக் பன்னுங்க

தெக்ஸ்: ஒகே ஒகே
எஸ் எஸ்

me: நன்றி தலைவா
நன்றி தலைவா

தெக்ஸ்: நன்றி

me: இப்ப ஏதும் பிராப்ளம் இல்லையே
இனி நாங்க நிம்மதியா சாப்பிடப் போவோம்

தெக்ஸ் : சரிங்க போய் சாப்பிடுங்க

me: நன்றி

தெக்ஸ் என்பது தெக்கத்திக் காட்டான் என்று அறியப்படும் இயற்கையை நேசிப்பவர். இவர் அப்பாவி என்பதைச் சொல்லித் தெரிய்த் தேவை இல்லல. இருந்தாலும் அநியாயத்துக்கு அப்பாவியா இருக்காரே என்பதைப் பாராட்டித்தான் இந்த அப்பாவி - ஆகஸ்ட் 2007 விருது.

:)
87 : இப்படியே போனால்!
1:22 AM | Author: நாமக்கல் சிபி
"யோவ் புரடக்ஷன் மேனேஜர், அந்த டைரக்டரை சீக்கிரம் வரச் சொல்லுய்யா, இந்த புதுசா வர பயலுகளே எப்பவும் லேட்டுதான்" புரொட்யூசர்1 கத்தினார்.

"தோ வந்துகிட்டெ இருக்கார் சார்" வெளியில் இருந்து குரல் கேட்டது.

அதற்குள் சிற்றுண்டி, காபி எல்லாம் வந்தாகி விட்டது.

டைரக்டர்1 கதை சொல்லத் தொடங்கினார்.

டைரக்டர்1 : "அதாவது சார் நம்ம ஹீரோ ஒரு படிச்ச பட்டதாரி, படிப்பை முடிச்சதும் அவருக்கு வேலை கிடைக்குது"

புரொட்யூசர்1 : "இரு இரு, முதல்ல படத்துல ஹீரோவோட பேரு என்ன?"

டைரக்டர்1 : "ஹீரோவோட பேரு கேரக்டர்1 சார்"

புரொட்யூசர்1 : "ம் சரி! மேல சொல்லுங்க"

டைரக்டர்1: "நம்ம ஹீரோவுக்கு படிப்பு முடிஞ்சதும் ஒரு தொழில்1 கம்பெனில நல்ல வேலை கிடைக்குது சார், கை நிறைய சம்பளம்"

புரொட்யூசர்1 : "சரி! வேலல கிடைச்சவுடன் ஒரு பாட்டு வெச்சிக்கலாம்"

டைரக்டர்1 : "சரி சார்! நல்லா சூப்பரா ஸ்டுடியோக்குள்ளயே ஊர்1 மாதிரி செட் போட்டு அசத்திடலாம்"


புரொட்யூசர்1 : "ம் ஆகட்டும். ஹீரோயின் எங்கே அறிமுகம் ஆகுறாங்க"

டைரக்டர்1 : " அவங்க லொக்கெஷன்1 லே ஹீரோவுக்கு அறிமுகம் ஆகுறாங்க சார், அதுக்கு நம்ம பிரபல நடிகை நடிகை1 ஐ புக் பண்ணிட்டேன். முதல்ல கால் ஷீட் பிரச்சினனன்னாங்க. நான் பேசி சரி பண்ணிட்டேன்"

புரொட்யூசர்1: "அந்த அம்மிணியா? அது ஷூட்டிங்க் ஸ்பாட்லே வந்து பிரச்சினை பண்ணுமேய்யா! அது சரி இல்லை இது சரி இல்லைன்னு"

டைரக்டர்1 : "அதெல்லாம் நான் பார்த்துக்குறேன் சார்! நான் சொன்னா கேட்டுப் பாங்க!"

அதற்குள் ஆஃபீஸ் பாய்1 உள்ளே வந்து புரொட்யூசரிடம்

"சார்! உங்களைப் பார்க்க டைரக்டர்2 வந்து இருக்கார்!"

புரொட்யூசர்1 : "சரி! தம்பி! நீங்க இப்ப கிளம்புங்க. மீதி கதைய நாளைக்குப் பாத்துக்கலாம்" என்று சொல்ல டைரக்டர்2 பவ்யமாக உள்ளெ வருகிறார்.

டைரக்டர்2 தனது கதை சொல்ல ஆரம்பிக்கிறார்.

"சார் முதல்ல நம்ம ஹீரோவோட ஊரைக் காட்டுறோம்! ஹீரோவா நம்ம நடிகர்1 ஐப் போட்டுடலாம். அவருக்குத்தான் இந்தக் கதை கச்சிதமா இருக்கும். படத்துல நம்ம ஹீரோவோட பேரு கேரக்டர்3"

...................................



(என்ன மக்களே! உங்களுக்கு ஏதாச்சும் புரியுதா? எனக்கும் ஒண்ணும் வெளைங்கலை!)
86 : டெர்மினேட்டர் - விரைவில்
1:02 AM | Author: நாமக்கல் சிபி
டெர்மினேட்டர்
(தமிழ்)

விரைவில் பதிவுலகெங்கும்



இவன் சண்டைகளை முடிப்பவன் அல்ல.
சண்டை போடுவர்களையே முடிப்பவன்.
Produced By
Kalaythal Thinai

நமீதாக்காவின் கையெழுத்துடன் பார்க்க:
http://www.tamilpayani.com/ecards/pickup.php?id=070730133939OF0i86gNAvbl



நமீதாக்காவின் கையெழுத்துடன் பார்க்க:


மேலும் சனிக்கிழமை இரவு தனது பிறந்த நாள் விழாவிற்கு தன்னைத் தொலை பேசியில் அழைத்தோ அல்லது நேரில் சந்தித்தீ "நமீதா வாழ்க! பிறந்த நாள் வாழ்த்துக்கள் கப்பி" என்று கூறி வாழ்த்துவோருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப் போவதாகக் கூறியிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நமீதா வாழ்க!
பிறந்த நாள் வாழ்த்துக்கள் கப்பி
(எலேய்! எனக்கும் ஒரு எடம் போட்டு வையுங்கப்பா!)
முதல் முறை தொலை பேசியில் அழைத்தபோதே சிபி என்று உண்மையான பெயருடன் அறிமுகம் செய்து கொண்டதையும், இரண்டு முறை நேரில் சந்தித்தபோதும் இடம், பொருள், ஏவல் கருதி அமைதியாக இருந்ததையும் வைத்து நான் மிகவும் அமைதியானவன் என்று தப்புக் கணக்கு போட்டுவிட்ட டெல்ஃபின் மேடம் அவர்களுக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம்.

பாவம்! தெரியாம சொல்லிட்டாங்கன்னு நினைக்கிறேன்!

சரி! அவங்க பதிவுகளை அவ்வளவா படிச்சதும் இல்லை! ஆனாலும் கலாய்க்கணுமே!
அவங்க எப்பவுமே கனமான விஷயங்களைத்தான் எழுதிட்டிருக்காங்க! அப்போ அதை வெச்சி ஒரு சின்ன கவுஜை!

(லைட்டாவே கலாய்ப்போம், ஆரம்பம்தான)

கனமான விஷயங்களே
என் கருத்தில் தோன்றுவதால்
எழுதி வைத்த
காகிதங்கள்
எத்தனை கிலோ
தேறுமென்று
எதிர்பார்த்தபடி
எதிர்த் தெரு
கயலான் கடைக் காரன்!













திறந்து போட்டுக் காட்டுற படத்தை ஆசிஃப் அண்ணாச்சி போட்டா ஒத்துக்குவீங்க. நாங்க போட்டா ஒத்துக்க மாட்டீங்களா என்ன?

75 : கீதா சாம்பசிவம் அவர்களுக்காக!
8:35 AM | Author: நாமக்கல் சிபி
ஹையா கண்டுபிடிச்சுட்டேன், சிபி, சிபி, ரொம்ப நாளா மாட்டிக்கவே இல்லை. சிபி தான் அது வேறே யாருமே இல்லை. சிபி, நீங்க எழுதுங்க! ன்னு சொல்லி ஒரு அன்புக் கட்டளை போட்டுட்டாங்க நம்ம சங்கத்தின் மகளிரணி நிரந்தரத் தலைவலி ச்சே நிரந்தரத தலைவி கீதா சாம்ப சிவம்.

அவங்களுக்காக இதோ நானும் ஒரு எட்டு போட்டுட்டேன்.




8





ம்ஹூம்! கலாய்த்தல் திணையின் 75 வது பதிவிலதான் வந்து மாட்டி இருக்காங்க! அதுவும் அவங்களா அழைப்பு வெச்சி!

மேடம்! தோ பார்த்துக்குங்க! நானும் எட்டு போட்டுட்டேன்!
46 : கிடைச்சிட்டாருங்கோவ்...!
1:28 AM | Author: நாமக்கல் சிபி


ரொம்ப நாளா காணாம போன நமக்கு ரொம்ப வேண்டப்பட்ட பதிவர் ஒருத்தரு கிடைச்சிட்டாருங்கோ...வ். இப்ப ரீஜண்டா ஒரு எடத்துல பேட்டியெல்லாம் கொடுத்திருக்கான்னு தகவல் கிடைச்சிது. அதான் அவரை காண்டாக்ட் பண்ண முயற்சி செஞ்சோம். கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்த மாதிரி அவரே எங்களைத் தொடர்பு கொண்டு
"அண்ணா நான் வந்துட்டேங்க்ண்ணா" அப்படின்னார்.

கிடைச்ச சந்தோஷத்தைக் கொண்டாட வேணாமா? பின்னே கலாய்த்தல் திணையின் ஆரம்ப காலங்களில் கலாய்க்கப் பட்ட மூத்த உறுப்பினர் ஆச்சே!
சும்மா ஸ்மைலி போட்டுட்டு வந்த என்னை ஏதாச்சும் சொல்லச் சொல்லி சொந்தச் செலவுல சூனியம் வெச்சிகிட்டவர். அடுத்தவங்க ஆலோசனை கேட்டு டிஸ்கியை மாத்தி மாத்தி போட்டு வெறுத்துப் போனவர்.

என்னங்க இன்னுமா யாருன்னு தெரியலை?

அவருதாங்க நல்லவரு, வல்லவரு, நாலும் தெரிஞ்சவரு.....!
நம்ம கலாய்த்தல் திணையோட மூத்த உறுப்பினரு!

ரொம்ப ஜாலியான ஆளுங்க! மேல இருக்குற படம் அவருக்காக கலாய்த்தல் திணைல ஒதுக்குன சின்னம்!

எல்லாரும் ஓடியாங்கோ!
இவரை மீண்டும் கலாய்க்கலாம்!