சண்டை மட்டும் பப்ளிக்கா நடக்குமாம்! அப்பாலிககா இவங்களுக்குள்ளே தனிமடல்/தொலைபேசி ன்னு ரகசியமா பேச்சு வார்த்தை நடத்துவாங்கலாம்! அப்புறம் எல்லா போஸ்டையும் தூக்கிடுவாங்களாம்!
இல்லை தெரியாமத்தான் கேக்குறேன்! படிக்குறவங்க என்ன வேலை வெட்டி இல்லாம காது குடைஞ்சிகிட்டு உக்காந்து இருக்கோம்னு நினைச்சிகிட்டிருக்கீங்களா! எங்களுக்கு ஆயிரத்தெட்டு மொக்கை வேலையெல்லாம் விட்டுபுட்டு அங்கயும், இங்கயுமா லிங்கை தேடி தேடி படிச்சி பின்னூட்டம் போட்டுகிட்டு அதுக்கெல்லாம் என்ன பதில் வந்துதுன்னு படிக்க காத்துகிட்டிருப்போம்!
ஒரே நிமிஷத்துல எல்லா போஸ்டையும் தூக்கிடுவீங்க! சரி தூக்குறதுதான் தூக்குறீங்க! தமிழ்மணத்துக்கு ஒரு மெயில் அனுப்பி அங்க லிஸ்ட் பண்ணுறதையும் தூக்கச் சொல்லலாம்ல! அவங்கவங்க பிளாக்லலருந்து தூக்கிட்டா போதுமா?
அட்லீஸ்ட்! இந்த பதிவு ஒருவேளை நீக்கம் செய்யப்படவும் வாய்ப்பிருக்கிறதுன்னு ஒரு பின் குறிப்பாவது போடலாம்! மண்ணைய பிச்சிகிட்டு பின்னூட்டம் போடுறவங்களாவது எப்படியாச்சும் தூக்கத்தான போறாங்க! எதுக்கு மெனக்கெட்டு புன்னூட்டம்லாம் போட்டுகிட்டுன்னு பேசாமயாவது இருப்பாங்கல்ல!
நீக்குன பதிவுகளை திரட்டிகளும் தொடர்ந்து பட்டியல்ல காட்டிகிட்டு இருக்கு!
புதுசா வரவங்களும் அதை கிளிக் பண்ணி பார்த்தா அங்க அந்த பதிவே இல்லைன்னு எரர் மெசேஜ் வேற வரும்! இப்படியே தினமும் ரெண்டு போஸ்ட் பார்த்தா படிக்கிறவங்களுக்கு தமிழ்மணத்துல எதை கிளிக் பண்ணினா கண்டிப்பா நீக்கப்படாத போஸ்ட் இருக்கும்னு குழப்பம் வராது? இதன்மூலமா திரட்டிகள் மேல இருக்குற நம்பகத்தன்மைக்கும் ஆப்பு வெச்ச மாதிரில்ல ஆகுது?
இப்ப சீரியஸ்(!?) மெசேஜ்
போட்ட அரை மணி நேரத்துல நீக்கிடலாம்னு தோணுதே! அந்த பாழாப்போன போஸ்டை பப்ளிஷ் பண்ணுறதுக்கு முன்னாடி ஒரு அஞ்சு நிமிஷம் யோசிக்கலாம்ல! அட! அந்த பதிவுல போடுற விஷயத்தை சம்மந்தப்பட்ட ஆளுங்களுக்கு மட்டும் தனிமடல் அனுப்பி சண்டையெல்லாம் போட்டு கடைசியில சுமுகமா முடிச்சிக்கலாம்ல!
பப்ளிக்கா பல பதிவுகளை போட்டு ஏன் எல்லாரையும் எரிச்சலூட்டுறீங்க! அல்லது திரட்டிகளுக்காவது அனுப்பாம இருங்க! புண்ணியமா போகும்!
பல்வேறு ஊடகங்கள் இப்பதான் தமிழ் வலைப்பதிவுகளை தொடர்ந்து பார்த்துகிட்டு இருக்காங்க! அவங்க முன்னாடி நம்மை நாமே தரம் தாழ்த்திக்கலாமா? கொஞ்சம் யோசிச்சி சொல்லுங்க!
பின்குறிப்பு:
இந்த பதிவை எக்காரணம் கொண்டும் நீக்க மாட்டேன் என்ற உறுதிமொழியுடன் தமிழ்மணம் கருவிப்பட்டையிலிருக்கும் அனுப்பு பொத்தானை அழுத்துகிறேன்!
------------------------------------------------------------------------------------------------
இந்த பதிவை எக்காரணம் கொண்டும் நீக்க மாட்டேன் என்ற உறுதிமொழியுடன் தமிழ்மணம் கருவிப்பட்டையிலிருக்கும் அனுப்பு பொத்தானை அழுத்துகிறேன்!
------------------------------------------------------------------------------------------------
63 பின்னூட்டங்கள்:
//பல்வேறு ஊடகங்கள் இப்பதான் தமிழ் வலைப்பதிவுகளை தொடர்ந்து பார்த்துகிட்டு இருக்காங்க! அவங்க முன்னாடி நம்மை நாமே தரம் தாழ்த்திக்கலாமா? கொஞ்சம் யோசிச்சி சொல்லுங்க!//
அப்பா.. சண்டைக்கு நின்ன சிகாமணிகளா...
உங்களைத்தான் கேக்குறாரு.. யோசிச்சீங்களான்னு.
பதில சொல்லுங்க பார்ப்போம்..
தல.. நல்லா கேட்டீங்க தல..
சூப்பரு..
எப்பத்தான் திருந்த போறாங்களோ..
ஒண்ணு சொல்லிக்கிறேன்..
இங்க எவனும்/எவளும் தாதாவுமில்லை..
எவனும்/எவளும் நோஞ்சானுமில்லை..
தெளிஞ்சு நடந்துகுறது எல்லாருக்கும் நல்லது.
அவ்ளோதான் சொல்லிப்புட்டேன்.
ஆமா ஆமா - நான் 100 விழுக்காடு இதுக்கு உடன்படுறேன் - சிபி சொன்னது சரி சரி சரி
கலக்கல் உரிமைத்துறப்பு !
எல்லாரும் அவங்க அவங்க பதிவில் இதை போட்டு தான் பதிவே போடனும்...!
ஆம சொல்லிட்டேன் !!
சிபி!
குசும்பனின் உறுதி மொழியில் என் பதிவு மறைக்கப்பட்டுள்ளது...
உறுதி மொழி நிறைவேற்றத்திற்காகக் காத்திருக்கின்றேன்..
குசும்பன் has left a new comment on your post "அபி அப்பாவின் அராஜகம்..ஆபாசம்":
//இதெல்லாம் டூ மச்...அதன் ஆழம் ..அவலம் உங்களுக்கு விளங்கவில்லையா? நாமெல்லாம் 21 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்... "நாதாறிகள்" என்று அவர் இழித்துப் பழித்துரைத்த அந்தப் பெண்களிடம் ..
பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்//
அய்யா கேட்க சொல்லிடலாம், அதற்குமுன் இன்னும் பலர் கண்ணில் படும் முன் இந்த பதிவை எடுத்துவிடுங்களேன்! உங்களிடம் கெஞ்சிக்கேட்டுக்கிறேன்!
ஒரு ப்ளஸ் ஓட்டு
நல்லா நறுக்குனு சொன்னீங்கண்ணா..
சூப்பர்
:))
அன்பின் சிபி
//குசும்பன் has left a new comment on your post "அபி அப்பாவின் அராஜகம்..ஆபாசம்"://
இந்த இடுகை இருக்கிறதா ? எங்கு இருக்கிறது ? குசும்பனின் மறு மொழியும் இருக்கிறதா ?
////குசும்பன் has left a new comment on your post "அபி அப்பாவின் அராஜகம்..ஆபாசம்"://
இந்த இடுகை இருக்கிறதா ? எங்கு இருக்கிறது ? குசும்பனின் மறு மொழியும் இருக்கிறதா ?//
அந்த இடுகையையும் இட்டாலிவடையார் தூக்கிவிட்டார்!
ஒரு ப்ளஸ் ஓட்டு
அருமை சிபி... சரியா சொல்லியிருக்கீங்க.. ஒவ்வொரு வார்த்தையையும் வழிமொழியுறேன்...
நூறு சதவிகதம் உண்மை. இந்த பதிவுக்கு என் ஓட்டு (இந்த பதிவ எடுக்க மாட்டீங்களே தள)
:)
:)
அனானி அண்ணாத்தே!
சூழ்நிலையின் இறுக்கத்தை குறைக்கவும், சகஜ நிலைமைக்கு திரும்பவும்தான் இந்த கலாய்த்தல் திணைல போட்டிருக்கேன்!
பொதுவாத்தான் சொல்லி இருக்கேன்!
பழசையெல்லாம் காப்பி செஞ்சி இங்கன போடாதீங்க! ப்ளீஸ்! புண்ணியமாப் போகும்!
பிரச்சினை இருக்குற இடத்துல எல்லாம் அனானிகள் வந்துடறாங்க.. பிரச்சினையே ஒருவேளை அனானிகளால்தானோ... :(
அன்புள்ள அனானிக் கண்ணுங்களா!
இப்பவும் உங்க மேல வழக்கமான நம்பிக்கை வெச்சிதான் சாப்பிடப் போறேன்! (மாடுரேசன் கூட இல்லை, இப்பவும்+ எப்பவும்)
கும்மி அடிங்க! வேணாம்னு சொல்லலை! ஆல்வேஸ் வெல்கம்! அதே நேரத்துல நான் உங்க மேல வெச்சிருக்குற நம்பிக்கையையும் காப்பாத்துங்க!
ஆதானே, பித்ஸ்!
வேலயத்துப் போயி இதெல்லாம் படிச்சு இப்ப வேஸ்ட்-அ போச்சே :-)))
இனிமே ஒவ்வொரு பதிவையும் படிக்க காசு கேட்டாத்தான் சரியாவரும்னு நினைக்கேன், நீங்க என்ன நினைக்கிறீங்க ... :-P
அதுதானே! ம்
//பிரச்சினையே ஒருவேளை அனானிகளால்தானோ//
முக்கால்வாசி பதிவர்கள்தான் அனானிகளாக வருகிறார்கள். :)(
மீ த 21 ???
:)))
:)
:))
:)))
மா மா நக்கல் சிபியார்...!
சரிதான்..!
அய்யய்யோ.... !!! வட போச்சே.....!!!
////பிரச்சினையே ஒருவேளை அனானிகளால்தானோ//
முக்கால்வாசி பதிவர்கள்தான் அனானிகளாக வருகிறார்கள். :)(//
எல்லா அனானிகளும் பிரச்சினைகளுக்குரியவர்கள் அல்ல!
நம்பிக்கையையும், அன்பையும் மதித்து கண்ணியத்தைக் கட்டிக் காத்த அனானி உறவுகளுக்கு மிக்க நன்றி!
\\
எல்லா அனானிகளும் பிரச்சினைகளுக்குரியவர்கள் அல்ல!
\\
ஆமாங்க
சொன்னா யாரு நம்பறா
//ஆமாங்க
சொன்னா யாரு நம்பறா//
நான் நம்பினேன்!
நம்புறேன்!
நம்புவேன்! எப்பவுமே!
:)
சிபி!
நீங்க இப்போ மிகப்ப்ப்ப்ப் பிரபலமாயிட்டீங்க....(நெனைச்சதை சாதிச்சிட்டீங்க...(என்ன நெனைச்சீங்கன்னு உங்களுக்குத்தான் தெரியுமே)..சபாஷ்.. )
மெதப்பு வந்திடாம இருந்தா சரிதேன்...
ஹா..ஹா...
//மெதப்பு வந்திடாம இருந்தா சரிதேன்...
ஹா..ஹா...//
நமக்கேதுங்க மெதப்பெல்லாம்!
அதெல்லாம் ஒரே ஒரு பதிவருக்குதான் இருந்தது! அவரும் இப்ப அவ்வளவா எழுதுறதில்லை!
நீங்க மிதக்கும் வெளி யைப் பத்திதானே பேசுறீங்க?
:)
கலாய்த்தல் என்று இருந்தாலும் நீங்கள் கேட்டிருப்பது நியாயமான கேள்வியே!
//ஒண்ணு சொல்லிக்கிறேன்..
இங்க எவனும்/எவளும் தாதாவுமில்லை..
எவனும்/எவளும் நோஞ்சானுமில்லை..
தெளிஞ்சு நடந்துகுறது எல்லாருக்கும் நல்லது.
அவ்ளோதான் சொல்லிப்புட்டேன்.//
மிகச்சரியான வார்த்தைகள் ரங்கன்.. ஆமோதிக்கின்றேன். ஒதுங்கிப்போறதுங்கறதுக்கு அர்த்தம் பயந்து போறதில்லைன்னு புரிஞ்சுக்கிட்டாங்கன்னா போதும் ;)
பதிவிற்கு நன்றி மாநக்கல்லாரே!
அருமையான பதிவு!
ஓட்டுப் போடச் சொன்ன மாதிரி போட்டாச்சு தள.. நன்றி!
சிபி!
//ஓட்டுப் போடச் சொன்ன மாதிரி போட்டாச்சு தள.. நன்றி!//
அட.. இதுவும் கேட்டுத் தான் வாங்கிரீங்களா...நம்ம பொழைப்பு
ஹா..ஹா
நன்று நன்று... :)
:)
அண்ணாச்சி, நான் சீரியஸா சொல்ல நினைச்சு பின்னர் வேண்டாம்ன்னு விட்ட மேட்டரை (எதுக்கு நமக்கு[ம்] வேலையத்த வேலைன்னு) நீங்க சூப்பரா லைட்டர்வெய்ன்ல சொல்லிட்டிங்க. சூப்பர். அண்ணாச்சிக்கு நாலு ஓட்டு பார்சேஏஏஏஏஏஏஏஏஏல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்
//
இந்த பதிவை எக்காரணம் கொண்டும் நீக்க மாட்டேன் என்ற உறுதிமொழியுடன் தமிழ்மணம் கருவிப்பட்டையிலிருக்கும் அனுப்பு பொத்தானை அழுத்துகிறேன்!
//
அண்ணாச்சி, இதுக்கு அபரிதமான ஓட்டுக விழுந்திருக்கு, ஏத்துகிடுறேன். ஆனா, அதுகளுக்கும் அபரிதமா விழுந்திச்சே? ஆக, வாசகன் திருந்தும் வரையிலும் பதிவன் அப்படிப் பதிவது நிற்காது இராசா!
ஊடகங்கள் பதிவுகளைக் கவனிக்குதாம், நம்ம தரத்தை அவங்க நிர்ணயம் செய்யுறதா? ச்சுக்ம்மா இருங்க தலை, அவங்க மட்டும் வெகு ஒழுக்கமோ?!
நல்லா நறுக்குன்னு சொன்னீங்க..
இடுகைன்னா இப்படி ஒரு இடுகையா இருக்கணும்(புள்ளன்னு பெத்தா இப்படி ஒரு புள்ளய பெக்கணும் அண்ணாமலை வினுசக்கரவர்த்தி ஸ்டைலில் வாசித்துக்கொள்ளவும் :)
நல்லா சொன்னீங்க ‘தல’
அதுலை அந்த பின்குறிப்பு ஜூப்பரு ...
:)
வலையுலக வாழ்க்கைல இன்னிக்குத்தாம்பா உருப்படியா ஒரு போஸ்ட் போட்டிருக்க..!
உன் கனைப்புக்கு எனது முழு ஆதரவு..!
உண்மைத்தமிழன் சொன்னது:
/வலையுலக வாழ்க்கைல இன்னிக்குத்தாம்பா உருப்படியா ஒரு போஸ்ட் போட்டிருக்க..!
உன் கனைப்புக்கு எனது முழு ஆதரவு..!/
அட, இப்படியெல்லாம் கூட ஆதரவு தர முடியுமா என்ன? நான் இந்த மாதிரி, வெளியிலிருந்து, ஒதுங்கியிருந்து ஆதரவு தர்ற வேலையெல்லாம் அரசியல்வாதிகள் மட்டுமே செய்ய முடியும்னுள்ள நெனச்சிருந்தேன்:-)
கலாய்த்தது ஒருபுறம் போகட்டும், அவர்களும் மனிதர்கள், உணர்ச்சி வசப்பட்டு ஏதோ ஒரு நிலைக்குப் போனார்கள்; உணர்ந்து மாற்றிக் கொண்டார்கள்!
தமிழ்ப்பதிவர்களிடையே சமாதானமும் அமைதியும் நிலவுவதாக!
// வெண்பூ said...
அருமை சிபி... சரியா சொல்லியிருக்கீங்க.. ஒவ்வொரு வார்த்தையையும் வழிமொழியுறேன்...//
அண்ணாரை வழிமொழிகிறேன்
///பல்வேறு ஊடகங்கள் இப்பதான் தமிழ் வலைப்பதிவுகளை தொடர்ந்து பார்த்துகிட்டு இருக்காங்க! அவங்க முன்னாடி நம்மை நாமே தரம் தாழ்த்திக்கலாமா? கொஞ்சம் யோசிச்சி சொல்லுங்க!// Unmai than..avanga enna mudivukku varuvaanga...intha tamilanga enga ponalum sandaithan pottukuvaanga...email..eshopping mathiri efight :(
நல்ல பதிவு!
அருமை!
ஹீரோ டயலாக் சூப்பர்!
இந்த செத்து செத்து விளையாடுற வெளாட்டு எப்போதான் முடியும்னு தெரியிலயே தல....
நல்லா சொல்லியிருக்கீங்க....சம்மந்தப்பட்டவங்களுக்கு மண்டையில ஏறுனா சரி.
சரி பயக்க தோஷம்...
மீ த பிப்புட்டி.
// கார்த்திக் said...
// வெண்பூ said...
அருமை சிபி... சரியா சொல்லியிருக்கீங்க.. ஒவ்வொரு வார்த்தையையும் வழிமொழியுறேன்...//
அண்ணாரை வழிமொழிகிறேன் //
அவ்னு...... அவ்னு......
மீ டூ ..........
பிக் பிரதர் வே
லாங்குவேஜ் கிறேன் .........
/
போட்ட அரை மணி நேரத்துல நீக்கிடலாம்னு தோணுதே! அந்த பாழாப்போன போஸ்டை பப்ளிஷ் பண்ணுறதுக்கு முன்னாடி ஒரு அஞ்சு நிமிஷம் யோசிக்கலாம்ல!
/
சூப்பர்!
/
பின்குறிப்பு:
இந்த பதிவை எக்காரணம் கொண்டும் நீக்க மாட்டேன் என்ற உறுதிமொழியுடன் தமிழ்மணம் கருவிப்பட்டையிலிருக்கும் அனுப்பு பொத்தானை அழுத்துகிறேன்!
/
கலக்கல்!
இதை நான் வழிமொழிகிறேன்!
//
இந்த பதிவை எக்காரணம் கொண்டும் நீக்க மாட்டேன் என்ற உறுதிமொழியுடன் தமிழ்மணம் கருவிப்பட்டையிலிருக்கும் அனுப்பு பொத்தானை அழுத்துகிறேன்!
//
Super!!!!
கலக்கல்
ஓட்டு போட்டாச்சு தல
ஓட்டு போட்டாச்சு தல
ஓட்டு போட்டாச்சு தல
உடன்பிறப்பு,
ஓட்டுப் போட்டதை மூணு தடவை சொல்லணுமா?
என்ன நினைப்பாங்க மக்கள் நம்மைப் பத்தி!
:)
தல,
இன்னமும் பச்ச புள்ளையாவே இருக்கீங்க நீங்க.. இதெல்லாம் செஞ்சா தான் எலக்கியவியாதி ஆவ முடியும்..
சிபி எங்க போனாலும் உங்க தலை தெரியுதே .....எப்படி கல்யானபரிசு தங்கவேலு...?
я так считаю: шикарно. а82ч