சிவாஜிக்குக் கிடைத்த விருதும், உண்மைத் தமிழனின் வயிற்றுப் போக்கும் (ச்சே) மன்னிக்க வயிற்றெரிச்சலும்!

சிவாஜி படத்துல "இப்பொ நான் பச்சைத் தமிழேஏஏன்"னு எழுதினதுக்கு பதிலா "இப்போ நான் உண்மைத் தமிழேஏஏன்" ன்னு பாடி இருந்தா சிவாஜிக்கு கொடுத்த விருது சரிதான்னு ஒத்துக்கிட்டிருப்பீங்களா?

போலிப் பிரச்சினையை கிண்டி முடிஞ்சாச்சு! இந்த வருத கோட்டா அவ்வளவுதான்! (ஏன்னா எல்லாருக்கும் அலுத்துப் போச்சு, உங்களுக்கு அலுத்திருக்காது)
அடுத்ததா உன்னைப் போல் ஒருவனுக்கு படம் ரிலீசான நாளிலிருந்து இன்று வரையான நாட்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் அதிகமான எண்ணிக்கையில் பதிவு எழுதியாச்சு! (ஸ்ஸ்ஸப்பா தாங்கலை) டிக்கெட் வாங்கின கதையில இருந்து இடைவேளையில எழுந்து பாத்ரூம் போயிட்டு வந்து பாப்கார்ன் வாங்கி தின்னு, படம் முடிஞ்சி வீட்டுக்கு வந்து வாந்தி எடுத்தது வரைக்கும் சிலாகிச்சி(!? :( ) எழுதியாச்சு! (எல்லாம் எங்க காலக் கொடுமை! என்ன பண்ணுறது! எல்லாம் அந்த வேலன் பார்த்துகிட்டு சும்மா இருக்கானே, அவனைச் சொல்லணும், இதுல அவனுக்கும் ரெண்டு திட்டு வேற)

உமக்குன்னே டென்ஷன் ஆகி வடைசட்டில போட்ட சோளம் மாதிரி தைய தக்கன்னு குதிக்கிறதுக்கு மேட்டர் கிடைக்குது பாரும்! (கரெக்டா வெறும் வாயை மென்னவனுக்கு அவலை அள்ளி கிலோ கணக்கா கொட்டுனா மாதிரி!) தமிழக அரசு திரைப்பட விருதுகள்! நான் நினைக்கிறேன் கலைஞர் சொல்லிக் கூட அந்த மாதிரி தேர்வு செஞ்சிருக்க மாட்டாங்க! உம்மை டென்ஷன் ஆக்கிப் பார்க்கணும்னே அந்த முருகன் சொல்லி கொடுத்த செலக்ஷனா இருக்கும்! அவனுக்குக் கூட நீரு டென்ஷன் ஆகி குத்தாட்டம் போடுறதைப் பார்க்க வேடிக்கையா இருக்கும் போல!

வெட்டியா உலக விஷயங்களைப் பார்த்து டென்ஷன் ஆகி உடம்பை மேல மேல கெடுத்துக்காம உருப்படியான விஷயத்துல பொழுதை ஓட்டலாம்ல! இந்த மாதிரி கத்தி கத்தி என்ன காசு பணமா கிடைக்குது! அதுவும் இல்லை! அல்லது உம்மைப் பதிவையும், நீரு ஆகுற டென்ஷனையும் பார்த்து யாராச்சும் சீரியசாத்தான் எடுத்துக்கப் போறாங்களா?

ஏன் இந்த வேலை?
நல்லா யோசிச்சிப் பாருமைய்யா!

சின்னக் குழந்தைகளுக்கான கார்டூன் நெட்வெர்க் இருக்கு! சார்லி சாப்ளின், லார்ல் ஹார்டி ன்னு எத்தனை காமெடி படங்கள் இருக்கு! அதையெல்லாம் பார்த்து சிரிச்சா மனசும் ரிலாக்சா இருக்கும்! உடம்பும் ஆரோக்கியமா இருக்கும்!

இல்லை தெரியாமத்தான் கேக்குறேன்! கலைஞருக்கு அண்ணா விருது கொடுத்த மாதிரி உமக்கு யாராச்சும் "சமூகப் போராளி"ன்னு விருது ஒண்ணு ரெடி பண்ணி வெச்சி காத்துகிட்டிருக்காங்களா?

இக்கலாய்ப்புக்கு தொடர்பான எதிர் கலாய்ப்புகள்
டேய்..டேய்..சொன்னாக் கேளுங்கடா...!
11:51 PM | Author: நாமக்கல் சிபி
"டேய்..டேய்..சொன்னாக் கேளுங்கடா...! சிடில இப்படியெல்லாம் காப்பி பண்ணக் கூடாது!"

இமேஜ் : முத்தமிழ்செல்வன்
கருத்து: நாமக்கல் சிபி
இக்கலாய்ப்புக்கு தொடர்பான எதிர் கலாய்ப்புகள்
நம்பினால் நம்புங்கள்!
7:34 PM | Author: நாமக்கல் சிபி
வழக்கம்போல்தான்
பொழுது புலர்ந்தது!
அதிகாலைப் பொழுதின்
ஆழ்நித்திரையை
இழந்துவிட வில்லை
என்றும் போல்!

எவ்வித வேறுபாடும்
எனக்குள் தோன்றவில்லை
இன்று முழுக்க!
காலைச் சிற்றுண்டி
டீயும் இரண்டு சமோசாக்களும்!
மதிய உணவாய்
அளவுச் சாப்பாடு!
வேலை நேரத்தில்
இணைய அரட்டை!
கும்மி அடிக்க
வழக்கம்போல்
காமெடிப் பதிவுகள்!
சர்ச்சைப் பதிவுகள்
சில அங்கொன்றும்
இங்கொன்றுமாய்!
வேளைக்கொரு முறை
தேநீரூம், சிகரெட்டும்!
மாலைச் சிற்றுண்டி
போண்டா மடித்துத்
தந்த தினத்தந்தியில்
நம்புங்கள் நாராயணன்
எச்சரிக்கை என்றார்!

நேற்றைய மாலை
நினைவுக்கு வந்தது!
முப்பத்தியேழு ரூபாய்
ஐம்பது காசுகள்!
அக்கவுண்டில் எழுதுங்க
என்றேன்!
ஆகட்டும் என்றார்
டீக்கடை ஆறுமுகம்!
அவருக்கும் இருந்திருக்கிறது
நம்பிக்கை!
நாளைய பொழுதில்
எதுவும் நிகழ்ந்துவிடாதென்பதில்!
இக்கலாய்ப்புக்கு தொடர்பான எதிர் கலாய்ப்புகள்
மாமா பிக்கோத்து அவார்டு
12:28 AM | Author: நாமக்கல் சிபி
எச்சரிக்கை: இது ஒரு சீரியஸ் பதிவு

பதிவுலகுல "சார் என்னைய கிள்ளிட்டான், திட்டிட்டான் என் பேர்ல கமெண்டு போடுறான்," என்ற கம்ப்ளெயிண்டெல்லாம் போயி இனிமே "சார் இவன் அவார்டு கொடுத்துட்டான், சார் அவன் என் அவார்டை வாங்க மாட்டேங்குறான், வாங்குன அவார்டை அடுத்தவனுக்கு குடுக்க மாட்டேங்குறான்" னெல்லாம் கம்ப்ளெயிண்ட் வரப் போகுதுன்னு பலரும் பீதியடையும் அளவுக்கு இந்த அவார்டோ ஃபோபியா பரவிகிட்டிருக்குன்னு நம்பத்தகாத வட்டாரங்கள் சொன்னபடியாலும் ஏற்கனவே பாசமிகு அண்ணன் மாதவராஜ் அவர்கள் இதுபற்றி விருதும் தர்மசங்கடமும் என்ற தலைப்பில் பதிவிட்டிருந்த படியாலும், அவரது இடுகைக்கு தொடர் வினையாக(எதிர் வினை அல்ல)

இந்த மாதிரி விருதுகளை எதிர்கொளவது எப்படின்னு கொஞ்சம் யோசிச்சி எனக்கு தோன்றிய சில டிப்ஸ்களை இங்கே கொடுத்திருக்கிறேன்!

விருதுகளில் இருந்து எஸ் ஆக சில டிப்ஸ்கள்!
--------------------------------------------------------

1. உங்க பிளாக் டெம்ப்ளேட்ல எங்கெல்லாம் காலி இடம் இருக்கோ அங்கயெல்லாம் ஏதாச்சும் இமேஜ் போட்டு நிரப்பிக்கோங்க!
(இதுக்கு மேல எந்த விருதை மாட்டவும் உங்க பிளாக்ல இடம் இல்லைன்னு அர்த்தம்)

2. ஒன்றுஅல்லது ரெண்டு ர்விட்ஜெட் மட்டும் டெக்ஸ்ட் உடனுக்குடன் மாத்திக்கிற வசதியோட வெச்சிக்கணும்! எந்த விருது என்ன பேர்ல கெளம்புதோ உடனே அந்த பேரை அங்கே எழுதி வெச்சிக்கலாம்!
(ஏற்கனவே அந்த விருது உங்களுக்கு வந்துடுச்சுன்னு அர்த்தம்)

3. சைட் பார்ல ஒரு எக்ஸெல் ஷீட் போட்டு நீங்களே ஒரு பட்டியலை நிரப்பி வையுங்க! அதுல எந்தெந்த விருதுக்கான பதிவு போடணும் என்கிற ஷெட்யூலை அடுத்த மூணு வருஷத்துக்கு தேதி போட்டு நிரப்பி வெச்சிடுங்க! ரொம்ப நாள் காத்துக்கிட்டிருக்கணும் நீங்க பதிவு போடன்னு உங்களுக்கு விருது கொடுக்க வரவர் தெறிச்சி ஓடிடுவார்!

4. இது கொஞ்சம் வன்முறை மாதிரி தெரிஞ்சாலும் ஈஸியா ரீச் ஆகுது! http://evandavirudhukoduppavan.blogspot.com ஒரு பிளாக் ஆரம்பிச்சி (வேற ஐடி யூஸ் பண்னுங்க) விருது கொடுக்கும் பிரபல பதிவர்களை கன்னா பின்னான்னு திட்டி ரெண்டு பதிவு போட்டுட்டு அந்த ஐடிலயே போயி விருது பதிவு போடுறவங்களுக்கெல்லாம் பின்னூட்டம் போட்டுடுங்க!


(இதுல இந்த பேர்லயே ரெண்டு மூணு போலியும் கெளம்பக் கூடும், உஷார். எதுக்கும் எலிக்குட்டி, பெருச்சாளி எல்லாத்தையும் கையோட எடுத்துக்குங்க, இதைப் பத்தி தெரியாதவங்க டோண்டு சார்கிட்டே டியூஷன் போகலாம்! எவ்வளவு நேரம் இதற்காகச் செலவழிக்கிறாரோ அதற்கு தனியா சார்ஜ் பண்ணுவார். அந்த எழவுக்கு நான் இன்னும் அஞ்சாறு விருதுப் பதிவே எழுதிடலாம்னு உங்களுக்குத் தோன்றினால் வெல் அண்ட் ஹேப்பி)

5. உடனடியா எதிர் கோஷ்டி விருது கொடுப்பவன் என்ற பெயரில் http://virudhukoduppavan.blogspot.com னு ஒண்ணு ரெஜிஸ்டர் பண்ணி உங்களுக்கு அட்வைஸ் மழை பொழியக் கூடும், இதே யூ.ஆர்.எல்லை நீங்களே ரெஜிஸ்டர் பண்ணி வெச்சிட்டா பிம்பிளிக்கி பிளாப்பி, மாமா பிக்கோத்துன்னு அவங்களுக்கு நாம பழிப்பு காட்டலாம்!

6. விருது கொடுப்பவர் உங்களுக்கு பின்னூட்டம் மூலமாவோ அல்லது தனிமடல்லயோ தெரியப் படுத்தக் கூடும்! எத்தனை முறை அழைத்தாலும்
"என்ன விருந்தா! எங்கே? எப்போ? நாங்க ஒரு 70 பேர் வருவோம்! நான் வெஜ் + டிரிங்க்ஸ் இருந்தாகணும் ஆனா எதிர் விருந்தெல்லாம் தர மாட்டோம்"னு சொல்லி அத்தனை முறைக்கும் காது கேக்காத மாதிரியே ரிப்ளை போடுங்க! விருது கொடுப்பவர் ஜென்மத்துக்கும் விருதை நினைக்க மாட்டார்! விருந்தையும் சேர்த்துதான்!

7. இவையெல்லாத்தையும் தாண்டி உங்களுக்கு விருதுக்கான அழைப்பு ஏதாச்சும் வருதுன்னு வையிங்க! நம்மகிட்ட இருப்பதிலேயே பெரிய பிரம்மாஸ்திரம் ஒண்ணு இருக்கு! அதை கடைசியா கையில எடுங்க! "எனக்கு விருது கொடுப்பதை நான் ஏற்றுக் கொண்டு மேலும் தொடர வேண்டுமென்றால் உண்மைத் தமிழன் அண்ணாச்சியின் 10 பதிவுகளை உடனடியாக வாசித்துவிட்டு அவரது அக்கப்போர் ச்சே புனிதப் போர் என்ற குறும்படத்தையும் 5 முறை பார்த்து விட்டு உண்மைத்தமிழனிடம் அக்னாலெட்ஜ்மெண்ட் வாங்கி வரவேண்டுமென்று ஒரு விட்ஜெட் போட்டு உங்கள் பிளாக் டெம்ப்ளேட்டில் ஒட்டி வையுங்கள்!


பின் குறிப்பு: சிரித்ததால் வயிறு புண்ணாகிப் போனவர்கள் அணுக

1. VSK
2. டாக்டர் புருனோ
3. டெல்ஃபின் விக்டொரியா

இதே மாதிரி தொடர் பதிவுகளில் இருந்தும் தப்பிக்க ஏழு எளிய வழிகள்.....நாளை!
இக்கலாய்ப்புக்கு தொடர்பான எதிர் கலாய்ப்புகள்
இப்ப சமீபத்திய வரவான ஆப்பு என்கிற அப்புராணி(!?)கிட்டேர்ந்து தப்பிக்க புதுப்பதிவர்களுக்கு பின்னூட்டமே போட்டுத் தொலைச்சிடலாம்னு முடிவு பண்ணி இருக்கீங்களா! சபாஷ்! சரியான முடிவைத்தான் எடுத்து இருக்கீங்கன்னு அர்த்தம்!

சரி! பின்னூட்டம் போடலாம்னு முடிவு பண்ணியாச்சு! பதிவையெல்லாம் படிக்கணும்னா என்ன? நாமதான் மூத்த பதிவர்களாச்சே! புதுப்பதிவர்கள் எழுதுற இடுகையெல்லாம் படிச்சா நம்ம் கௌரதை என்னாவுறது! (ஒரு குசும்புக்காகத்தான்) அபபடியே புதுப்பதிவை எழுதிட்டாலும் அது நாம ஆரம்ப காலத்துல போட்ட மொக்கைகளுக்கு ஈடாகத்தான் இருக்கும்! நானே என்னோட முதல் இடுகைக்கு பின்னூட்டம் போட்டா எப்படி இருக்கும்னு நினைச்சி பார்த்தா எனக்கே சிரிப்பு வருது! நானே என் பதிவுக்கு பின்னூட்டம் போட்டுக்கலை! பின்ன அடுத்தவங்க வந்து போடுவாங்கன்னு எதிர்பார்த்தா சரியா? ஒரு வருஷம் கழிச்சிதான் அந்த இடுகைக்கெல்லாம் பின்னூட்டம் வந்தது! அதுலயும் நாலே நாலுதான்! அதுல உருப்படியானது 3! இன்னொன்னு என்னன்னு புரியலைன்னாலும் அந்த பின்னூட்டத்தையும் போட்ட புண்ணியவானும் வருத்தப் படக் கூடாதுன்னு அப்படியே வெச்சிருக்கேன்!

ஆஹா! எதையோ சொல்ல வந்து சுய் விளம்பர இடுகையா முடிஞ்சிடும் போல இருக்கே! எங்கே விட்டேன்! புதுப்பதிவர்களின் இடுகைக்கெல்லாம் பின்னூட்டம் போடணும்னு முடிவு பண்ணியாச்சு! ஆனா நேரமும் இல்லை! அதனால எதாச்சும் பின்னூட்ட டெம்ப்ளேட்ஸ் இருந்தா காப்பி பண்ணி போட வசதியா இருக்கும்ல என்று ஏங்குபவர்களாக்கால என் பதிவுலக அனுபவத்தை இந்த டெம்ப்ளேட் பின்னூட்டங்களை வழங்குறேன்! (இலவசம்தான்! ராயல்டி அனுப்பியே ஆகணும்னு அடம்பிடிச்சா தனிமடல் இடுங்க! அக்கவுண்ட் நம்பர் தரேன்)

1. மீ த ஃபர்ஸ்ட்டு! ( இது பழைய பதிவர்களுக்கும் போடலாம்)

2. உங்கள் வலைத்தளத்திற்கு இதுதான் முதல் வரவு! இப்போதைக்கு அட்டெண்டன்ஸ் மட்டும் போட்டுக்கிறேன்!

3. அடடே! வருக! வருக!

4. வாங்க வாங்க!

5. வலைப்பதிவுலகம் உங்களை அன்புடன் வரவேற்கிறது!

6. ஐ! புதுப்பதிவரா நீங்க! வாவ்! எல்லாப் பதிவும் அருமை!
(நான் இன்னும் எழுதவே ஆரம்பிக்கலைடா வெண்ணெய் பதில் வராத மாதிரி இடுகைகளின் எண்ணிக்கையையும் கவனத்தில் கொள்ளவும்)

7. நல்ல பல பதிவுகளை இடுமாறு கேட்டுக் கொள்கிறேன்!
(நீயெல்லாம் எழுத வரலைன்னு எவன் அழுதான் என்றெல்லாம் அனர்த்தமாக புரிந்து கொள்ள மாட்டார்கள், ஏன்னா அவங்கதான் புதுப்பதிவர் ஆயிற்றே)

8.தொடர்ந்து எழுதுங்கள்! ஆவலாக காத்திருக்கிறேன்!
(எல்லாம் என் தலையெழுத்து..ன்னு அர்த்தம் இதுக்கு)

9. இந்தாங்க பிடிங்க என் முதல் பின்னூட்டத்தையும் ஒரு + குத்தும்!
(அவருக்கு பரிந்துரைன்னா என்னன்னே தெரிஞ்சிருக்காது! நாமதான் அறிமுகப்படுத்தணும்! இல்லாட்டி சக்திவேல் அண்ணாச்சியின் பதினாறு நாட்கள் உங்கள் இடுகைகள் அழிந்துவிடும் சாபத்திற்காளாவீர்கள்)

10. இந்த ____________(குறிப்பிட்ட பதிவர் பெயர்) பதிவர்தான் உங்களை அறிமுகப்படுத்தினார்! மிக நேர்த்தியாக இருக்கிறது - டெம்ப்ப்ளேட்டைச் சொல்லவில்லைகிகிகி!

இன்னும் நிறைய எழுத முடியும்! இருப்பினும் மீதி டெம்ப்ளேட் பின்னூட்டங்களைத் தொடர்ந்து எழுத நம்ம தம்பி குசும்பனை வரவேற்கிறேன்!

(ஐ! இதையே ஒரு தொடராவும் மாத்தியாச்சு)
இக்கலாய்ப்புக்கு தொடர்பான எதிர் கலாய்ப்புகள்
முதல் வேண்டுகோள் : இந்தப் பதிவிற்கு - குத்து குத்த விரும்புவோர் மட்டும் கருவிப்பட்டை மூலம் வாக்களிக்கவும்! மற்றவர்கள் நான் கீழே கொடுத்துள்ள சுட்டியின் மூலம் வாக்களிக்கலாம்!

பதிவர்களின் கனிவான கவனத்திற்கு,

இப்பவும் எங்கள் கமிட்டியின் உறுப்பினர்கள் அனைவரும் இதுவரை படிக்காத பக்கங்களைப் படித்து வாக்களித்துக் கொண்டிருக்கும் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதால் பதிவர்கள் அனைவரும் தங்கள் எழுதி வைத்திருக்கும்/எழுதப் போகும் நல்ல இடுகைகளை சிறிது காலம் தள்ளி வைக்கும்படி கேட்டுக் கொல்கிறொம்!

அப்படி காத்திருக்காமல் இப்பவே பப்ளிஷ் செய்து கொள்ளும் பதிவர்களின் இடுகைகள் எங்கள் கவனத்திற்கு வராமல் போய் நாங்கள் வாக்களிக்கத் தவறினால் இந்நிர்வாகம் எவ்விதத்திலும் பெறுப்பேற்காது என்பதையும் இதன்மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்!

இவண்,
நிர்வாகி,
தமிழ்மணப் பரிந்துரை காரியக் கமிட்டி,

உண்மை நிலவரம்
யோவ்! நம்மகிட்டயெல்லாம் ஒத்த ஓட்டுதான்யா இருக்கு! ஏன்யா எங்களையெல்லாம் ஒரு கேங்கு லீடரு ரேஞ்சுக்கு பில்டப்பு குடுத்து உசுப்பேத்துறீங்க! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

-----------------------------------------------------------------------------------
பிடிச்சிருந்தா : பாஸிடிவ் குத்து : பிடிக்கலைன்னா: கும்மாங்குத்து
------------------------------------------------------------------------------------
குத்து குத்துன்னு குத்திட்டு எண்ணிக்கைல வரலையே அல்லது ஏற்கனவே ஓட்டு சேர்க்கப்பட்டுவிட்டதுன்னெல்லாம் வந்ததென்றால் நீங்கள் கள்ள ஒட்டுப் போடுகிறீர்கள் என்று அர்த்தம்!

இப்பதிவில் நீங்கள் போட்டும் +/- அனைத்தும் + வாக மாற்றி சகோதரர் சக்திவேல் அவர்களின் இந்தப் பதிவிற்கே சேர்க்கப் படுகிறது!

நமக்கெல்லாம் ஓட்டு, பரிந்துரையெல்லாம் அவசியமா என்ன?
மனமார்ந்த உங்களோட அன்பு போதாது?
இக்கலாய்ப்புக்கு தொடர்பான எதிர் கலாய்ப்புகள்
தமிழ்மண வாசகர்கள் என்ன இளிச்ச வாயர்களா?, பின்ன என்னங்க ஆளாளுக்கு ஒரு போஸ்ட் போடுவாங்களாம்! தமிழ்மணம், தமிழிஷ் னு இருக்குற எல்லா திரட்டியிலும் லிங்க் கொடுத்துடுவாங்களாம்/அனுப்பிடுவாங்களாம்! படிக்குறவங்க மாங்கு மாங்குன்னு பின்னூட்டம் போட்டுட்டு மறுக்கா ஓட்டு வேற குத்துவாங்களாம்!

சண்டை மட்டும் பப்ளிக்கா நடக்குமாம்! அப்பாலிககா இவங்களுக்குள்ளே தனிமடல்/தொலைபேசி ன்னு ரகசியமா பேச்சு வார்த்தை நடத்துவாங்கலாம்! அப்புறம் எல்லா போஸ்டையும் தூக்கிடுவாங்களாம்!

இல்லை தெரியாமத்தான் கேக்குறேன்! படிக்குறவங்க என்ன வேலை வெட்டி இல்லாம காது குடைஞ்சிகிட்டு உக்காந்து இருக்கோம்னு நினைச்சிகிட்டிருக்கீங்களா! எங்களுக்கு ஆயிரத்தெட்டு மொக்கை வேலையெல்லாம் விட்டுபுட்டு அங்கயும், இங்கயுமா லிங்கை தேடி தேடி படிச்சி பின்னூட்டம் போட்டுகிட்டு அதுக்கெல்லாம் என்ன பதில் வந்துதுன்னு படிக்க காத்துகிட்டிருப்போம்!

ஒரே நிமிஷத்துல எல்லா போஸ்டையும் தூக்கிடுவீங்க! சரி தூக்குறதுதான் தூக்குறீங்க! தமிழ்மணத்துக்கு ஒரு மெயில் அனுப்பி அங்க லிஸ்ட் பண்ணுறதையும் தூக்கச் சொல்லலாம்ல! அவங்கவங்க பிளாக்லலருந்து தூக்கிட்டா போதுமா?


அட்லீஸ்ட்! இந்த பதிவு ஒருவேளை நீக்கம் செய்யப்படவும் வாய்ப்பிருக்கிறதுன்னு ஒரு பின் குறிப்பாவது போடலாம்! மண்ணைய பிச்சிகிட்டு பின்னூட்டம் போடுறவங்களாவது எப்படியாச்சும் தூக்கத்தான போறாங்க! எதுக்கு மெனக்கெட்டு புன்னூட்டம்லாம் போட்டுகிட்டுன்னு பேசாமயாவது இருப்பாங்கல்ல!

நீக்குன பதிவுகளை திரட்டிகளும் தொடர்ந்து பட்டியல்ல காட்டிகிட்டு இருக்கு!
புதுசா வரவங்களும் அதை கிளிக் பண்ணி பார்த்தா அங்க அந்த பதிவே இல்லைன்னு எரர் மெசேஜ் வேற வரும்! இப்படியே தினமும் ரெண்டு போஸ்ட் பார்த்தா படிக்கிறவங்களுக்கு தமிழ்மணத்துல எதை கிளிக் பண்ணினா கண்டிப்பா நீக்கப்படாத போஸ்ட் இருக்கும்னு குழப்பம் வராது? இதன்மூலமா திரட்டிகள் மேல இருக்குற நம்பகத்தன்மைக்கும் ஆப்பு வெச்ச மாதிரில்ல ஆகுது?


இப்ப சீரியஸ்(!?) மெசேஜ்

போட்ட அரை மணி நேரத்துல நீக்கிடலாம்னு தோணுதே! அந்த பாழாப்போன போஸ்டை பப்ளிஷ் பண்ணுறதுக்கு முன்னாடி ஒரு அஞ்சு நிமிஷம் யோசிக்கலாம்ல! அட! அந்த பதிவுல போடுற விஷயத்தை சம்மந்தப்பட்ட ஆளுங்களுக்கு மட்டும் தனிமடல் அனுப்பி சண்டையெல்லாம் போட்டு கடைசியில சுமுகமா முடிச்சிக்கலாம்ல!

பப்ளிக்கா பல பதிவுகளை போட்டு ஏன் எல்லாரையும் எரிச்சலூட்டுறீங்க! அல்லது திரட்டிகளுக்காவது அனுப்பாம இருங்க! புண்ணியமா போகும்!

பல்வேறு ஊடகங்கள் இப்பதான் தமிழ் வலைப்பதிவுகளை தொடர்ந்து பார்த்துகிட்டு இருக்காங்க! அவங்க முன்னாடி நம்மை நாமே தரம் தாழ்த்திக்கலாமா? கொஞ்சம் யோசிச்சி சொல்லுங்க!

பின்குறிப்பு:

இந்த பதிவை எக்காரணம் கொண்டும் நீக்க மாட்டேன் என்ற உறுதிமொழியுடன் தமிழ்மணம் கருவிப்பட்டையிலிருக்கும் அனுப்பு பொத்தானை அழுத்துகிறேன்!

------------------------------------------------------------------------------------------------

பிடிச்சிருந்தா : பாஸிடிவ் குத்து
பிடிக்கலைன்னா: கும்மாங்குத்து
இக்கலாய்ப்புக்கு தொடர்பான எதிர் கலாய்ப்புகள்
லக்கிலுக் (எ) யுவகிருஷ்ணா "உங்களில் யார் அடுத்த நயன்தாரா?" ன்னு போஸ்ட் போட்டார்!

நம்ம வகுப்பறை வாத்தியார் "உங்களில் யார் அடுத்த யுவ கிருஷ்ணா?" ன்னு ஒரு பதிவைப் போட்டுட்டார்!

உடனே நான் "உங்களில் யார் அடுத்த வகுப்பறை வாத்தியார்?"னு ஒரு போஸ்டைப் போட்டு கண்டினியூ பண்ணுவேன்னு தானே நினைக்கிறீங்க!

பிச்சிப்பிடுவேன் பிச்சி! இப்படியே போனா இதையே ஒரு தொடராக்கிடுவீங்க போல கீதே! இதுக்கு மேல யாராச்சும் இதை கண்டினியூ பண்ணினீங்ககாட்டி வெக்குக்குங்க! அப்புறம் மெர்சலாயிடுவீங்க! ஒரே பேஜாரா பூடும்! ஷுகுரா சொல்லிட்டேன்! அக்காங்க்!
இக்கலாய்ப்புக்கு தொடர்பான எதிர் கலாய்ப்புகள்
லொள்ளு சபா : காக்கா காக்கா
1:57 PM | Author: நாமக்கல் சிபி
நான் பார்த்துட்டு கண்ணுல தண்ணி வர சிரிச்சிகிட்டிருக்கேன்! நீங்களும் பாருங்க! முழுப் படமும் கிடைக்கலை!


பார்ட் 1
-------



பார்ட் 2
-------



"செட்டுகிட்டே நகை நட்டுனு ஏதாச்சும் வெச்சி பணம் கேட்டா கொடுப்பான். சும்மா கொடுப்பானா"

"அரே! கடலூர்க்கு போன் போட்டுட்டு பாண்டியான்னு கேக்குறே!"
இக்கலாய்ப்புக்கு தொடர்பான எதிர் கலாய்ப்புகள்


மும்பையிலிருந்து திரும்பி வரும் இளைஞன்/குழந்தை பாலபாரதி! 20 வருடத்தைக் குறைத்து இளமையாகக் காட்ட படாத பாடு பட்டு ஒப்பனையின் மூலம் 40 வயது இளைஞராக்கி இருக்கிறார்கள்.

இவர் சென்னை வந்தவுடன் தானும் கொலைப் பதிவர் சந்திப்புகளை திட்டமிட்டு பக்காவாக நடத்த வேண்டும். அதில் பிளாக்கர்கள், அதர் ஆப்ஷன்கள், அனானிகள் அனைவரும் பாகுபாடின்றி கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என்று முயற்சிகள் மேற்கொள்கிறார். ஆனால் ஏற்கனவே இதைத் தொழிலாகச் செய்துவரும் பிரபலமானவருடன் இவருக்கு மோதல் ஏற்படுகிறது. பின்னர் சோதனைகளைக் கடந்து எப்படி இவர் கொலைப் பதிவர் சந்திப்புகளை வெற்றிகரமாக நடத்துகிறார் என்பது கிளைமாக்ஸ்.

இது ஏ.வி.எம் தயாரிப்பு அல்ல. பா.க.ச தயாரிப்பு


நன்றி :
பாலபாரதிக்கு ஒப்பனை (கிராஃபிக்ஸ்) : கிழுமத்தூர் எக்ஸ்பிரஸ்

ஹைலைட் காட்சிகள் :





ஒரு கொலைப் பதிவர் : "மீட்டிங்க் வந்தா எத்தனை போண்டா தருவீங்க?"

பால பாரதி : "திரும்பவும் அதே கேள்வி!, எத்தனை தடவைடா இதையே கேப்பீங்க?"

வரவணையான் : "மச்சான், இங்கே போண்டா இல்லாம மீட்டிங்கெல்லாம் நடத்த முடியாது, ஊரோட ஒத்துப் போறதுதான் நல்லது. எப்படியோ மீட்டிங்க் நடக்கணும்"

--------------------------------------------------------------------------
பால பாரதி : "கடவுளே! ஏன்யா என்னை கெட்டவனா படைச்சே?"

அசரரீ : "நல்லவனா படைச்சா கெட்டுப் போயிடுவேன்னுதான். - பா.க.ச, தேவலோகம் கிளை"

பால பாரதி : "அடப் பாவிகளா, அங்கயுமாடா! :( "
------------------------------------------------------------------------------
பால பாரதி : " என் லேப் டாப்புலயும் லினக்ஸ் சுசீ இன்ஸ்டால் பண்ணிக் குடுங்க"

மா.சிவகுமார் : "முன்ன பின்ன தெரியாத ஆளுகளுக்கெல்லாம் இன்ஸ்டால் பண்னிக் குடுக்க முடியாது"

பால பாரதி : "முன்ன பின்னதான இப்போ பார்த்துக்குங்க"

பால பாரதியும், வரவணணயானும் டக் டக் என்று முன் பின்னாகத் திரும்பி

"இது முன்ன, இது பின்னே" என்று கோரஸாகச் சொல்கின்றனர்.

மா.சிவகுமார் தலையில் அடித்துக் கொள்கிறார்.
------------------------------------------------------------------------------
அருள் குமார் : "அட! சுசீ இல்லாட்டி என்னங்க பால பாரதி? என்கிட்ட ரெண்டு ஓ.எஸ் இருக்கு
ஒண்ணு உபுண்டு, இன்னொன்னு தபுண்டு, உங்க லேப்டாப்ல இன்ஸ்டால் பண்ணி நல்லா பழகிப் பாருங்க, பிடிச்சா அதையே யூஸ் பண்ணுங்க, இல்லாட்டி விண்டோஸ் 2000 போட்டுடலாம்"
-----------------------------------------------------------------------------
டோண்டு : "யேய் யேய்... இவன் பால பாரதியேதான்.. எப்படி எப்படி....? "

சிபி : " சார்.. என்ன சார் இது! பாலபாரதியைத்தான் நாம கொன்னுட்டமே! இவன் வேற ஆளு சார், பால பாரதி பிரண்டாம்"

பி.பி.ரதி : "என் பேரு பி.பி.ரதி, சும்மா பேரைக் கேட்டாலே அதிருதில்ல"
--------------------------------------------------------------------------
மா.சிவகுமார் : "பழக்கம் ஆகணுங்குறதுக்காக தெனமும் பொழுது போயி பொழுது விடிஞ்சா எங்க ஆஃபீஸ் வாசல்ல வந்து நிக்குறது கொஞ்சம் கூட நல்லா இல்லை! சொல்லிட்டேன்!"
----------------------------------------------------------------------------
பால பாரதி : "தோ பாருங்க, போண்டா இல்லாம மீட்டிங்குக்கு வர விருப்பம் இருக்குவங்க எல்லாம் இப்படி வாங்க, மீதி பேரெல்லாம் அதோ அங்கன இருக்குற ஆஃபீஸ் ரூமுல போய் வெயிட் பண்ணுங்க"

உடனே பாலபாரதி கண் சிமிட்டும் நேரத்தில் அங்கிருந்த அனைவரும் காணாமல் போய்விடுகின்றனர்.

வரவணையான் : "தலை! எக்குத் தப்பா இப்படியெல்லாம் சொல்லாதீங்க. இப்ப பாருங்க! எல்லாரும் அந்த ஆஃபீஸ் ரூமுலதான் போண்டா தருவாங்கன்னு பறந்துட்டாங்க! இப்போ அவ்ளோ போண்டாவுக்கு என்ன பண்ணப் போறீங்க? இல்லாட்டி உங்களை குமுறீடப் போறாங்க"
-----------------------------------------------------------------------------
ஆர்.எஸ்.புரம், கோயமுத்தூர், கோவை மாவட்டம்

ஓசை செல்லா : "பால பாரதி, இது உங்க ஊரு மாதிரி, நீங்க எப்படி எப்படி மீட்டிங் நடத்தணும்னு ஆசைப் படுறீங்களோ, அப்படியேல்லாம் நடத்துங்க. "
(யப்பா, இப்படியா ஆப்பு வெப்பாங்க.. அடி பின்னீட்டானுவலே")
-----------------------------------------------------------------------------
வீ.த.பீப்பிள் ஜெய்: தோ பாருங்க சி.பி.ஐ ஆபீசர். நாங்க இனிமே அவரை கலாய்க்க முடியாம போயிடும்ணு சொன்னதாலதான் நான் அவரோட பிளாக் யூரலை உங்ககிட்டே தரேன். எக்காரனம் கொண்டும் நாங்க அவரைக் கலாக்குறதுக்கு ஆபத்து வந்துடக் கூடாது. அதுக்கு முதல்ல சத்தியம் பண்ணிக் குடுங்க.
---------------------------------------------------------------------------------
சி.பி.ஐ ஆபீசர்: "எப்படிய்யா பாலபாரதியோட பிளாக்கை ஓப்பன் பண்ணுறது. பாஸ்வோர்ட் தெரியனுமே"

உதவி ஆபீசர் : "அட பாஸ்வோர்ட் தெரியணும் அவ்வளவுதானே! இப்ப பாருங்க"
என்று சொல்லிவிட்டு தனது மொபைல் ஃபோனை எடுத்து பாலபாரதியின் நம்பரை டயல் செய்கிறார் .

உதவி ஆபீசர் : "ஹலோ பாரதிங்களா, வணக்கம் தலை"

பால பாரதி : "வணக்கம். வணக்கம் தலை. சொல்லுங்க யாரு பேசுறது"

உதவி ஆபீசர் : "நான் ஒரு புது பிளாக்கர் தலை. பிளாக்ல ஒரு சந்தேகம். எல்லாரும் உங்ககிட்ட கேட்டா உதவி பண்ணுவீங்கன்னு சொன்னாங்க. அதான் உங்களுக்கு அடிச்சேன்"

பால பாரதி : "சந்தேகமா, ரொம்ப சந்தோஷம். எது வேணும்னாலும் கேளுங்க, நம்மால முடிஞ்சத சொல்றேன் தல"

உதவி ஆபீசர் : "அது ஒண்ணும் இல்ல தலை, ஹெச்.டி.எம்.எல்ல கொஞ்சம் டவுட்டு, உங்க பிளாக் டெம்பிளேட் ஓப்பண் பண்ணி பார்த்து, அதுல லிங்க் எப்படி கொடுக்குறதுன்னு பார்த்து தெரிஞ்சிக்கிட்டேன்னா அவ்வளவுதான். உங்க பிளாக் பாஸ்வோர்ட் கொஞ்சம் சொல்லுங்க தலை"

பால பாரதி : "இவ்ளோதானா தலை, தாரளாமா சொல்றேன், எழுதிக்குங்க ******, இதான் தலை"

உதவி ஆபீசர் : "ரொம்ப தேங்க்ஸ் தலை, நான் அப்புறமா பேசுறேன்"

பால பாரதி : "ஓகே தலை, ஓகே தலை, எப்ப டவுட்னாலும் என்னைக் கூப்பிடுங்க பை"
இக்கலாய்ப்புக்கு தொடர்பான எதிர் கலாய்ப்புகள்