தமிழ்மணம் விருதுகள் 2008க்கு இடுகைகளைப் பரிந்துரைக்க ஆரம்பிச்சாச்சு!
இந்த நேரத்துல பதிவர்கள் எல்லோருடைய ஆலோசனைகளையும், கோரிக்கைகளையும் கவனமா பரிசீலிச்சு தமிழ்மணம் நிர்வாகம் ஆவன செய்யும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையோட
"நானே அனபோஸ்டா (போட்டியின்றி) ஜெயிச்சதா அறிவிச்சிடுங்களேன், இந்த போட்டி/ தேர்வு எல்லாம் எதுக்குங்க" ன்னு தமிழ்மணம் அறிவிப்புகள் பதிவுலே பின்னூட்டம் போட்டுட்டேன்!
ஆக தமிழ்மணம் நிர்வாகம் இதையும் பரிசீலிச்சி என்னையே வெற்றி பெற்றவராக அறிவித்து விடுவார்கள் என்று நம்புகிறேன்!
வகுப்பறை வாத்தியாரின் நல்லாசி மற்றும் ஏனைய சக பதிவர்களின் நல்லாதரவோடு
தமிழ்மணம் விருதுகள் 2008 ஐ பெறுகிற நான் தமிழ்மணம் நிர்வாகத்திற்கும் சக பதிவுலக அன்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்!
(எனது வெற்றி குறித்துக் கொண்டாட பதிவுலக அன்பர்கள் யாரும் கட் அவுட்கள், பேனர்கள், அலங்கார வளைவுகள், ஆரவார ஊர்வலங்கள் என்று ஆடம்பரமாகக் கொண்டாட வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். நம்ம கொண்டாட்டதை அமைதியான முறையில் சிம்பிளா எங்காவது டாஸ்மாக்கில் வைத்துக் கொள்ளலாம்)
குசும்பு
|
This entry was posted on 7:58 AM and is filed under
குசும்பு
. You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
17 பின்னூட்டங்கள்:
adeeeeegoyyaaleee:-)))
இவ்விருதை என் கையால் வழங்கியதில் எனக்கு பெருமை!
அடங்க மாட்டீங்களா சிபி
//அடங்க மாட்டீங்களா சிபி//
மாட்டேன்!
நான் அடக்கு முறையை ஆதரிப்பவன் அல்ல!
கட்டுடைப்பே எங்கள் மூச்சு! சுதந்திரமே எங்கள் பேச்சு!
//என் கையால் வழங்கியதில் எனக்கு பெருமை!//
சிபி அண்ணன் கன்னத்துலயா? :))
அன்பின் சிபி
தமிழ் மண விருதுகளுக்கு ஏக மனதாக - சக பதிவர்கள் அனைவரின் ஒத்துழைப்புடன் தேர்ந்தெடுக்கப் பட்டதற்கு நல்வாழ்த்துகள். விருது பெற்றவர் விதி முறைகளின் படி பத்தாண்டுகளுக்கு தமிழ் மணத்தில் கலந்து கொள்ள முடியாதாமே. அப்பா பொளச்சோம் நாங்க எல்லோரும்
//பத்தாண்டுகளுக்கு தமிழ் மணத்தில் கலந்து கொள்ள முடியாதாமே//
ஆமாம்! தமிழ்மணம் நிர்வாகத்தில் கலந்து கொள்ள முடியாது!
ஜஸ்ட் பதிவராகவே இருந்துவிட்டு போவோமே!
நிர்வாகம் எல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது!
எதுக்கு கண்ணா இவ்வளவு கஷ்டப்படுற..?
தமிழ்மணம் விருதையே நான்தான் கொடுப்பேன்னு ஒரு அழுவாச்சி காவியம் பாடு.. அது கைக்கு கிடைச்சப்புறம் யாருக்கு வேணும்னாலும் கொடுத்துக்க.. இல்லாட்டி எடுத்துக்க.. எவன் கேட்டான்..?
அடங்க மாட்டடா மவனே..
அடடே.. நானும் இதே கோரிக்கையை தனி மடலாக அனுப்பி இருக்கிறேனே..
ஆக தமிழ்மணம் நிர்வாகம் இதையும் பரிசீலிச்சி என்னையே வெற்றி பெற்றவராக அறிவித்து விடுவார்கள் என்று நம்புகிறேன்!
வகுப்பறை வாத்தியாரின் நல்லாசி மற்றும் ஏனைய சக பதிவர்களின் நல்லாதரவோடு
தமிழ்மணம் விருதுகள் 2008 ஐ பெறுகிற நான் தமிழ்மணம் நிர்வாகத்திற்கும் சக பதிவுலக அன்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்!
(எனது வெற்றி குறித்துக் கொண்டாட பதிவுலக அன்பர்கள் யாரும் கட் அவுட்கள், பேனர்கள், அலங்கார வளைவுகள், ஆரவார ஊர்வலங்கள் என்று ஆடம்பரமாகக் கொண்டாட வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். நம்ம கொண்டாட்டதை அமைதியான முறையில் சிம்பிளா எங்காவது டீ கடையில் வைத்துக் கொள்ளலாம்)
அதெல்லாம் சரி.. அதென்னா தமிழ்மணம் விருதுகள் ”208” ?
உங்களுக்குன்னு தனியா 208 விருதுகள் தராங்களாமா? :)
//எதுக்கு கண்ணா இவ்வளவு கஷ்டப்படுற..?
தமிழ்மணம் விருதையே நான்தான் கொடுப்பேன்னு ஒரு அழுவாச்சி காவியம் பாடு.. அது கைக்கு கிடைச்சப்புறம் யாருக்கு வேணும்னாலும் கொடுத்துக்க.. இல்லாட்டி எடுத்துக்க.. எவன் கேட்டான்..?
அடங்க மாட்டடா மவனே//
என்னை ஆதரித்து எனது பெயரை முன்மொழிந்த உண்மைத் தமிழனுக்கு மனமார்ந்த நன்றி!
நாமக்கல் சிபியை ஆதரிக்கும் எங்கள் தங்கம், தன்மானச் சிங்கம் உண்மைத் தமிழன் வாழ்க!
உண்மைத் தமிழன் ரசிகர் மன்றம்,
(ஒரிஜினல் கிளை)
திருமங்கலம்!
!?
//அடங்க மாட்டீங்களா சிபி//
சிபி அடங்க மாட்டார்!
என்ன பண்ணுவீங்க இப்போ?
//அதெல்லாம் சரி.. அதென்னா தமிழ்மணம் விருதுகள் ”208” ?
உங்களுக்குன்னு தனியா 208 விருதுகள் தராங்களாமா? :)
//
தலைப்புலயே 2008 ன்னு போட்டா தமிழ்மணத்தை கலாய்க்கிறோம்னு நினைச்சி புரோகிராம் ஃபில்டர் பண்ணிடும் அல்லவா?
//adeeeeegoyyaaleee:-)))//
:))
பிச்சிடுவேன் பிச்சி!
ம்
ம்ம்ம்
ம்ஹூம்.
ம்
ம்..ஓகே.
(அதுவா தனியா கவணிக்கறேன்றார்..)