அன்புடையீர்,

இப்பவும் நிகழ்கிற மே மாதம் (வைகாசித் திங்கள்) 21ம் தேதி புதன் கிழமை மாலை 8 மணியளவில் ஒரு அதிசயம் நிகழ்ந்தது. தனது அலுவலகப் பணிகளில் மூழ்கி இருந்த சிபியாருக்கு இலக்குவண் என்னும் பதிவரிடமிருந்து அரட்டை அழைப்பு வந்தது.

மேலும் அவரை கூகிள் டாக்கிற்கு வரச் சொல்லியும் அழைத்திருக்கிறார். இதனால் பயந்துபோன சிபியிடம் இலகுவண் "பயப்பட வேண்டாம், கவிதையெல்லாம் படிக்கச் சொல்லி துன்புறுத்த மாட்டேன், என்னைக் கலாய்த்து ஒரு பதிவு மட்டும் போடு, நானும் பாலைத் திணை ரேஞ்சில்தான் கவிதை எழுதுகிறேன், என்னை யாருமே கலாய்ப்பதில்லை " என்று மட்டும் சொன்னாராம்.

இதனைத் தொடர்ந்து அவரைக் கலாய்த்து பதிவெழுதிய சிபியாருக்கு தனது மாதங்களில் அவள் மார்கழி தொடரை உடனடியாக முடிக்கும் அளவிற்கு கதை எழுத நேரம் கிடைத்தது.

இதனைக் கேள்விப்பட்ட மோகனதாசு என்ற புகைப் படப் பதிவர் தன் பங்குக்கு இலக்குவணைக் கலாய்த்து பதிவெழுதி பதினைந்து பேருக்கு லிங்கை அனுப்பினாராம். உடனே அவரது பதிவொன்றிற்கு 5000 பின்னூட்டங்கள் கிடைத்தனவாம்.

இதனை ஏளனம் செய்து அலட்சியம் செய்த பதிவர்களில் சிலர் பலபேரின் விமர்சனங்களுக்கு ஆளாகி தமிழ்மணத்திலிருந்தே நீக்கப் பட்டார்களாம்.

ஆகவே சக பதிவர்களாகிய நீங்களும் இதனை அலட்சியம் செய்யாது தங்களை வெவ்வேறு பெயர்களில் இலக்குவணிடம் அறிமுகம் செய்து கொண்டு அவரைக் கலாய்த்து அதிர்ஷ்டப் பார்வைக்கு ஆளாகுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்!

மீண்டும் சொல்கிறேன்! அலட்சியம் செய்யாதீர்கள். குறைந்த ப்ட்சம் இரண்டு பதிவுகளில் அவரைக் கலாய்த்து லிங்கினை 25 பேருக்காவது அனுப்பவும்.
This entry was posted on 12:29 AM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

8 பின்னூட்டங்கள்:

On Fri May 23, 12:50:00 AM , Anonymous said...

என்னையும் யாருமே கலாய்ப்பதில்லை

 
On Fri May 23, 01:05:00 AM , தமிழன்-கறுப்பி... said...

இதுக்கு என்ன அர்த்தம்...

 
On Fri May 23, 01:11:00 AM , தமிழன்-கறுப்பி... said...

இப்படி எல்லாம் கவலை வருகிறது இலக்குவனுக்கு..

 
On Fri May 23, 11:40:00 AM , மங்களூர் சிவா said...

/
இலக்குவணனைக் கலாய்க்கலாம் வாங்க!"
/

வந்துட்டோம்!!

 
On Fri May 23, 12:26:00 PM , இராவணன் said...

ஏன்யா உமக்கிந்த பிழைப்பு..

நியாயமா? இதெல்லாம் அடுக்குமாஆஆஆஆஆஆஆ
ஆஆஆவ்

 
On Sun May 25, 07:17:00 AM , நிஜமா நல்லவன் said...

//"423 : இலக்குவணனைக் கலாய்க்கலாம் வாங்க!"//


பதிவு எண் தவறா இருக்கே! 420 தானே வரணும். எதுக்கும் கொஞ்சம் செக் பண்ணுங்க:))

 
On Sun May 25, 07:23:00 AM , நிஜமா நல்லவன் said...

சிபி அண்ணா நீங்க எல்லாம் கொல்லிமலை போய்த்தான் பேயடிச்ச மாதிரி திரும்பி வந்தீங்க. நான் தெரியாத்தனமா ஒருத்தர் ப்ளாக் பக்கம் போய் ஒரே ஒரே கவிதை அதும் பாதி தான் படிச்சேன் நிஜமா பேயடிச்ச எபக்ட்ல இருக்கேன். யாரு ப்ளாக்ன்னு சொல்லியா தெரியனும்:))

 
On Sun May 25, 07:27:00 AM , நிஜமா நல்லவன் said...

சிபி அண்ணா நீங்க சாட்ல அனுப்பின மெசேஜ்ஜ அப்படியே நீங்க சொன்ன மாதிரி பின்னூட்டமா போட்டுட்டேன். போடமாட்டேன்ன்னு சொன்னா காதுல பூவச்ச குழந்தையாட்டம் அடம் பிடிக்குறீங்க. என்ன கொடுமைங்க இது?