காதலர் தின (பழைய)சிறப்புக் கவிதை
2:58 PM | Author: நாமக்கல் சிபி
சில நேரம்
சிறகுகள் கிடைக்கும்!
சில நேரம்
சிலுவைகள் கிடைக்கும்!
அந்த சிலுவைகள் கூட
உனக்கு
சலுகைகளாய்த் தெரியும்!

பௌர்ணமி நிலவு
உன்னைப்
பாடாய்ப் படுத்தும்!
பட்டாம் பூச்சி கூட
உன்னைப்
புரட்டித் தள்ளும்!

பசித்திருத்தலும்,
விழித்திருத்தலும்
சுகமாய்த்தானிருக்கும்!

நீ எழுதும்
ஒவ்வொரு எழுத்தும்
கவிதை என்று
உன் நண்பர்கள்
சொல்லுவர்!

இவையெல்லாம் நீ
உணர்வது உண்மையெனில்
நண்பா ஒரு நிமிடம்!
நல்லதொரு
நாடி வைத்தியர்
என் வீட்டிற்கருகில்தான்
இருக்கிறார்!
சென்று பார்ப்போம் வா!
This entry was posted on 2:58 PM and is filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

3 பின்னூட்டங்கள்:

On Sun Feb 14, 04:24:00 PM , *இயற்கை ராஜி* said...

:-))))))

 
On Sun Feb 14, 04:25:00 PM , *இயற்கை ராஜி* said...

//நீ எழுதும்
ஒவ்வொரு எழுத்தும்
கவிதை என்று
உன் நண்பர்கள்
சொல்லுவர்//


அப்படி சொல்ற அளவுக்கு நல்ல்ல்ல்ல்ல்ல நண்பர்கள் இருக்கணுமே:-)

 
On Sun Feb 14, 04:29:00 PM , நாமக்கல் சிபி said...

//அப்படி சொல்ற அளவுக்கு நல்ல்ல்ல்ல்ல்ல நண்பர்கள் இருக்கணுமே:-)//

நிறையவே இருப்பாங்க! :))