46 : கிடைச்சிட்டாருங்கோவ்...!
1:28 AM | Author: நாமக்கல் சிபி


ரொம்ப நாளா காணாம போன நமக்கு ரொம்ப வேண்டப்பட்ட பதிவர் ஒருத்தரு கிடைச்சிட்டாருங்கோ...வ். இப்ப ரீஜண்டா ஒரு எடத்துல பேட்டியெல்லாம் கொடுத்திருக்கான்னு தகவல் கிடைச்சிது. அதான் அவரை காண்டாக்ட் பண்ண முயற்சி செஞ்சோம். கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்த மாதிரி அவரே எங்களைத் தொடர்பு கொண்டு
"அண்ணா நான் வந்துட்டேங்க்ண்ணா" அப்படின்னார்.

கிடைச்ச சந்தோஷத்தைக் கொண்டாட வேணாமா? பின்னே கலாய்த்தல் திணையின் ஆரம்ப காலங்களில் கலாய்க்கப் பட்ட மூத்த உறுப்பினர் ஆச்சே!
சும்மா ஸ்மைலி போட்டுட்டு வந்த என்னை ஏதாச்சும் சொல்லச் சொல்லி சொந்தச் செலவுல சூனியம் வெச்சிகிட்டவர். அடுத்தவங்க ஆலோசனை கேட்டு டிஸ்கியை மாத்தி மாத்தி போட்டு வெறுத்துப் போனவர்.

என்னங்க இன்னுமா யாருன்னு தெரியலை?

அவருதாங்க நல்லவரு, வல்லவரு, நாலும் தெரிஞ்சவரு.....!
நம்ம கலாய்த்தல் திணையோட மூத்த உறுப்பினரு!

ரொம்ப ஜாலியான ஆளுங்க! மேல இருக்குற படம் அவருக்காக கலாய்த்தல் திணைல ஒதுக்குன சின்னம்!

எல்லாரும் ஓடியாங்கோ!
இவரை மீண்டும் கலாய்க்கலாம்!
This entry was posted on 1:28 AM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

7 பின்னூட்டங்கள்:

On Sun Feb 11, 01:45:00 AM , Santhosh said...

ஆகா சிபி இதை தான் கூப்பிட்டு குத்து வாங்குவது அப்படின்னு சொல்லுவாங்களா? நான் என்ன கேட்டேன் ஏன் மொத்தமா எல்லாரையும் கலாய்க்கறீங்க தனித்தனியா கலாய்ங்கன்னு தானே சொன்னே. உடனே என்கிட்ட இருந்தா ஆரம்பிக்கிறதா இது எல்லாம் நல்லா இல்ல ஆமா.. ஒரு நல்ல சின்னத்தை ஒதுக்குங்கப்பா

 
On Sun Feb 11, 01:58:00 AM , நாமக்கல் சிபி said...

//இதை தான் கூப்பிட்டு குத்து வாங்குவது அப்படின்னு சொல்லுவாங்களா? //

ஆமாம்!

// உடனே என்கிட்ட இருந்தா ஆரம்பிக்கிறதா //

இனிஷியேட்டிவ் ஸ்டெப் எடுக்க வெச்சதே நீங்கதானே!

:))


//ஒரு நல்ல சின்னத்தை ஒதுக்குங்கப்பா
//

பரிசீலிக்கிறோம்~

 
On Sun Feb 11, 02:02:00 AM , Anonymous said...

ஆரம்பிச்சிட்டாங்கையா ஆரம்பிச்சிட்டாங்க
முப்பது வருஷம் முன்னாடி வில்லன் பிரிச்சு
மூணு திசையில போன அண்ணன் தம்பிக்க
ரெண்டு வரி பாட்டை வெச்சு ஆளுக்கு 2/3 வரியா
பாடி சேந்தாப்பல, பாட்டுக்கச்சேரி தொடங்கிட்டானுங்கய்யா


காலங்காத்தாலே பின்னூட்டக் கடை தெறந்தவனே
கட்டிக்குங்க முட்டிக்குங்க நல்லதுதான்
ஆனா அண்ணா தம்பி மன்னா கம்பின்னு
சும்மாலுமா தொட்டதுக்கெல்லாம் ஷாக்கடிச்சு
இணையத்துல போஸ் குடுத்து கட்டிக்குவீங்க?
இதெல்லாம் ஸாரியோ வேஷ்டியோ
ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப ஓவருங்க



:)

அனானி பாவம் ஸ்மைலி போட்டாப் போச்சு

 
On Sun Feb 11, 03:55:00 AM , Amar said...

நான் போயி குத்தியாச்சுங்கோவ்!!!

 
On Sun Feb 11, 05:17:00 AM , VSK said...

வாங்க சந்தோஷ்!

உங்க வரவு நல்வரவாகுக!

 
On Mon Feb 12, 02:08:00 AM , நாமக்கல் சிபி said...

//நான் போயி குத்தியாச்சுங்கோவ்!!! //

மிக்க நன்றி சமுத்ரா!

 
On Mon Feb 12, 02:10:00 AM , நாமக்கல் சிபி said...

//வாங்க சந்தோஷ்!

உங்க வரவு நல்வரவாகுக!//

அடுத்து கலாய்க்கப்பட இருப்பவர் சந்தோஷை வரவேற்கிறார்!

:))