98 : ஆரியா - விமர்சனம்
6:29 PM | Author: நாமக்கல் சிபி
பிரபல(!?) வலைப்(கும்மிப்) பதிவர் சிபி. அவரது தங்கை பாவனா. பாவனாவிற்கு ஒரு நாள் திடீரென கவிதைகள் எழுத வேண்டுமென்ற ஆவல் பிறக்கிறது. உடனே தன் அண்ணனை அணுக, அவர் தமிழ்மண நிர்வாகத்திடம் தன் தங்கை பாவனா கவிதை எழுத அனுமதி அளிக்கக் கோருகிறார். அவர்களோ தற்போது நிறைய பேர் கவிதை எழுதுவதால் இடம் இல்லை என்று அனுமதி மறுக்கிறார்கள். உடனே கவிதை எழுதும் காயத்ரியை அராஜகமாகக் கலாய்த்து இனி எழுதுவதே இல்லை என்று ஓடுமாறு விரட்டிவிடுகிறார் சிபி.

பின்னர் மீண்டும் தமிழ்மணத்தை அணுகி இப்போது ஒரு இடம் காலி இருப்பதைச் சுட்டிக்காட்டி அவ்விடத்தை பாவனாவிற்கு ஒதுக்குமாறு கேட்க, தமிழ்மணமும் அனுமதி அளிக்கிறது.

இதன் பிறகு பாவனா கைக்கு வந்தவாறு கவிதைகளை எழுதிக் குவிக்கிறார். அண்ணன் சிபியின் மிரட்டலுக்குப் பயந்து பிற பதிவர்கள் அனைவரும் "ஆஹா, ஓஹோ, சூப்பர் கவிதை" என்றெல்லாம் அபி அப்பா மாதிரியே புகழ்ந்து பின்னூட்டம் இட்டுச் செல்கின்றனர்.

இந்நிலையில் மிரட்டலுக்கெல்லாம் அஞ்சாத தம்பி என்னும் பதிவர் மட்டும் அந்த கவிதைகளைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த பாவனா அவரைத் தனது கவிதைகளுக்குப் பின்னூட்டமிட வைக்க முயற்சிகள் பல மேற்கொள்கிறார். பதிவர் குசும்பனும் அவரது முயற்சிகளுக்குத் துணையாக இருப்பார் என்று எண்ணி அவரை அழைத்துப் பேசுகிறார்.

குசும்பனோ தனக்கு காமெடி மட்டுமே செய்யத் தெரியும் என்று கூறிக்கொண்டாலும், தன் அழகில் மயங்கித்தான் பாவனா தன்னை அழைத்திருக்கிறார் என்று எண்ணி பாவனாவிடம் மனதைப் பறி கொடுக்கிறார்.

இந்நிலையில் தம்பியை பணிய வைக்கும் முயற்சியில் இருந்த பாவனா சிறிது சிறிதாக தம்பியின் மீது காதல் கொள்கிறார். அவரையும் தன்னைக் காதலிக்க வைக்கவும் முயற்சிகள் மேற்கொள்கிறார்.

தனது அண்ணன் சிபியிடம் சொல்லி தன் காதல் நிறைவேற உதவி கோருகிறார் பாவனா. தம்பியோ ஒரு சீரியஸ் பதிவர், நாமோ கும்மிப் பதிவர்கள். அவர் எப்படி நம் வலையில் வீழ்வார் என்று சிந்தித்த சிபி ஒரு புதிய யுக்தியைக் கண்டுபிடிக்கிறார்.

சீரியஸ் பதிவராக இருப்பதால்தானே தன் தங்கையை கண்டுகொள்வதில்லை அவரையும் கும்மிப் பதிவராக ஆக்கிவிடுவோம், பின்னர் நம் வழிக்கு வந்துவிடுவார் என்பதே அவரது திட்டம்.

பல்வேறு பதிவர்களின் துணையோடு தம்பியைக் காமெடி மற்றும் கும்மிப் பதிவுகளும், கும்மிப் பின்னூட்டங்களும் இட வைக்க அவரை எந்நேரமும் தொல்லைகள் கொடுக்கிறார். ஜி மெயில் கஸ்டம் மெசேஜ் போட்டால் கூட அதை வைத்து அவரைக் கலாய்க்கிறார்கள். இதனால் வெறுத்துப் போன தம்பி தானும் கும்மி என்னும் ஆயுதத்தை கையில் எடுக்கிறார்.

சிபி, பாவனா, குசும்பன் கும்பலிடமிருந்து தம்பி தப்பித்தாரா? அல்லது பாவனாவின் காதல் வலையில் தம்பி விழுகின்றாரா என்பதே படத்தின் கிளைமாக்ஸ்!

கதை, திரைக்கதை, இயக்கம், வசனம், பாடல்கள் : தம்பி
தயாரிப்பு : தம்பி புரடக்ஷன்ஸ்!
This entry was posted on 6:29 PM and is filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

32 பின்னூட்டங்கள்:

On Sun Oct 28, 07:04:00 PM , Unknown said...

"ஆஹா, ஓஹோ, சூப்பர் கவிதை" என்றெல்லாம் அபி அப்பா மாதிரியே புகழ்ந்து பின்னூட்டம் இட்டுச் செல்கின்றனர்

 
On Sun Oct 28, 07:04:00 PM , Unknown said...

//"ஆஹா, ஓஹோ, சூப்பர் கவிதை" என்றெல்லாம் அபி அப்பா மாதிரியே புகழ்ந்து பின்னூட்டம் இட்டுச் செல்கின்றனர்//

ஆஹா, ஓஹோ.....

 
On Sun Oct 28, 07:16:00 PM , குசும்பன் said...

நைசாக நானே பாவனாவை கரெக்ட் செய்வதாக திரைகதையை மாத்துங்க!!!!

 
On Sun Oct 28, 07:17:00 PM , Anonymous said...

சிபி! பாவனாவை குசும்பன் கூட சேர்த்துவை!!!

 
On Sun Oct 28, 07:29:00 PM , நிலா said...

எங்கள் தங்கம்,தென்னகத்து சூப்பர் ஸ்டார்,புரட்சிப்புயல் குசும்பன் மாமாவை வடிவேலு இடத்தில் வைத்ததை குட்டிபாப்பாக்கள் சங்கம் வண்மையாக கண்டிக்கிறது

 
On Sun Oct 28, 07:49:00 PM , CVR said...

:-))))))
சூப்பர் காமெடி!! :-D

 
On Sun Oct 28, 07:51:00 PM , நாமக்கல் சிபி said...

//ஆஹா, ஓஹோ.....//

நெல்லை காந்த்! இப்ப யாரும் மிரட்டலையே!

 
On Sun Oct 28, 07:51:00 PM , நாமக்கல் சிபி said...

//எங்கள் தங்கம்,தென்னகத்து சூப்பர் ஸ்டார்,புரட்சிப்புயல் குசும்பன் மாமாவை வடிவேலு இடத்தில் வைத்ததை குட்டிபாப்பாக்கள் சங்கம் வண்மையாக கண்டிக்கிறது//

ஆஹா! குசும்பனுக்கு இப்படியெல்லாம் ரசிகர் மன்றம் இருக்கா?

 
On Sun Oct 28, 07:52:00 PM , நாமக்கல் சிபி said...

இதென்ன குசும்பனுக்குப் பிறகு வந்த நாட்டாமை குசும்பனுக்குச் சப்போர்ட் பண்ணுறார்!

ஒரு வேளை குசும்பனோட ஆளோ?

 
On Sun Oct 28, 07:53:00 PM , நாமக்கல் சிபி said...

//நைசாக நானே பாவனாவை கரெக்ட் செய்வதாக திரைகதையை மாத்துங்க!!!!//

"ஆசை தோசை அப்பள வடை"ன்னு புரொட்யூசர் சொல்றாரே!

 
On Sun Oct 28, 07:56:00 PM , கதிர் said...

இதுக்கு நான் என்ன கைம்மாறு செய்ய போறேன்னு தெரிலயே!

 
On Sun Oct 28, 07:57:00 PM , கதிர் said...

வடிவேலுக்கே அவமானம்....

 
On Sun Oct 28, 07:59:00 PM , கதிர் said...

நொடிக்கவிஞ்சன் கேள்விப்பட்டிருக்கேன்.
நொடித்திரைக்கதாசிரியர்னு இப்பதான் கேள்விப்படறேன்..


நீங்க ஒரு கதை ரெடி பண்ணுங்க கால்ஷீட்டே கொடுக்காம நடிச்சி குடுக்கறேன்.

 
On Sun Oct 28, 07:59:00 PM , கதிர் said...

//நைசாக நானே பாவனாவை கரெக்ட் செய்வதாக திரைகதையை மாத்துங்க!!!!//

எலேய் காமெடியன் காமெடியனா மட்டும்தான் இருக்கனும். ஹீரோயின அடையணும்னுலாம் ஆசைப்படக்கூடாது.

 
On Sun Oct 28, 08:03:00 PM , நாகை சிவா said...

ஏற்கனவே விவாஜில நீங்க நயனை தள்ளிட்டு போகுற மாதிரி கதை மாத்திட்டாங்க...

அதே போல தப்பு ஏதும் இங்க முக்கியமா குசும்பனுக்கு நடக்காம பாத்துக்கோங்க...

 
On Sun Oct 28, 08:36:00 PM , கோவி.கண்ணன் said...

அட கும்மிகளா ! நீங்களெல்லாம் திருந்தவே மாட்டிங்களா ?
:)

பாவனாவின் காதல் நிறைவேறியதா ? முடிவை சொல்லுங்கப்பா !

 
On Sun Oct 28, 08:48:00 PM , ACE !! said...

Super thiraikathai.. :))) vaazthukkal

 
On Sun Oct 28, 08:56:00 PM , CVR said...

BTW!!!
பாவ்னாவுக்கு ஒரு கவுஜை பதிவு தனியா இருக்கா???
யாரும் என் கிட்ட சொல்லவே இல்லை!!!!!
நமக்கு கவுஜை படிக்க புடிக்குமே ,அதான் கேட்டேன்! வேற எந்த காரணமும் இல்ல! :-P

 
On Sun Oct 28, 09:31:00 PM , மங்களூர் சிவா said...

//
குசும்பன் said...
நைசாக நானே பாவனாவை கரெக்ட் செய்வதாக திரைகதையை மாத்துங்க!!!!
//

:-)))

 
On Sun Oct 28, 09:32:00 PM , மங்களூர் சிவா said...

//
"ஆஹா, ஓஹோ, சூப்பர் கவிதை" என்றெல்லாம் அபி அப்பா மாதிரியே புகழ்ந்து பின்னூட்டம் இட்டுச் செல்கின்றனர்
//
ஆஹா, ஓஹோ, சூப்பர் கவிதை, சூப்பர் விமர்சனம்

 
On Sun Oct 28, 09:33:00 PM , மங்களூர் சிவா said...

//
தம்பி said...

எலேய் காமெடியன் காமெடியனா மட்டும்தான் இருக்கனும். ஹீரோயின அடையணும்னுலாம் ஆசைப்படக்கூடாது.

//
என்னா ஒரு வில்லத்தனம்

 
On Mon Oct 29, 10:04:00 AM , காயத்ரி சித்தார்த் said...

//உடனே கவிதை எழுதும் காயத்ரியை அராஜகமாகக் கலாய்த்து இனி எழுதுவதே இல்லை என்று ஓடுமாறு விரட்டிவிடுகிறார் சிபி.
//

இது போன்ற பொய்யான வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாமென கேட்டுக்கொள்ளப்படுகிறது! :)

 
On Mon Oct 29, 10:04:00 AM , காயத்ரி சித்தார்த் said...

//நாட்டாமை said...
சிபி! பாவனாவை குசும்பன் கூட சேர்த்துவை//

ஹேய்! இந்த நாட்டாமை யாருன்னு எனக்கு தெரியுமே!!!

 
On Mon Oct 29, 10:05:00 AM , காயத்ரி சித்தார்த் said...

//குசும்பனோ தனக்கு காமெடி மட்டுமே செய்யத் தெரியும் என்று கூறிக்கொண்டாலும், தன் அழகில் மயங்கித்தான் பாவனா தன்னை அழைத்திருக்கிறார் என்று எண்ணி பாவனாவிடம் மனதைப் பறி கொடுக்கிறார்//


ஹாஹ்ஹ்ஹாஹ்ஹாஹ்ஹா!!

 
On Mon Oct 29, 10:07:00 AM , காயத்ரி சித்தார்த் said...

//பாவனா சிறிது சிறிதாக தம்பியின் மீது காதல் கொள்கிறார். //

இதத்தான் கலி முத்திப் போச்சுன்னு சொல்றாங்களா!

தலைப்புச் செய்தி:

சிபியின் மீது நடிகை பாவனா மான நஷ்ட வழக்கு!

 
On Mon Oct 29, 10:09:00 AM , காயத்ரி சித்தார்த் said...

//தம்பியோ ஒரு சீரியஸ் பதிவர், //

அப்படியாஆஆஆஆஆ?!!!

 
On Mon Oct 29, 10:24:00 AM , Unknown said...

சங்கம் பிலிம்ஸ்க்கு அடுத்தப் படமும் ரெடியா... ஆர்யா பேருக்கு ரைமிங்கா ஒரு பெயர் இருக்கு.. தம்பி பெயர் ஆரம்ப ஆங்கில எழுத்தின் சத்தம் கொண்ட இன்னொரு ஆங்கில எழுத்தில் அந்தப் பெயரும் ஆரம்பிக்கும்.

 
On Mon Oct 29, 10:21:00 PM , ஜொள்ளுப்பாண்டி said...

ஹஹஹஹஹஹ :)))))) சிபி உங்களை வில்லனா நெனச்சுபார்க்காவே திகிலா இருக்குதே :))))

 
On Mon Oct 29, 10:23:00 PM , ஜொள்ளுப்பாண்டி said...

//குசும்பன் said...
நைசாக நானே பாவனாவை கரெக்ட் செய்வதாக திரைகதையை மாத்துங்க!!!!//

ஆஹா அப்படியெல்லாம் மாத்தலாமா? அப்போ எனக்கும் ஒரு சான்ஸ் கொடுங்க சிபி :))))))))))))

 
On Tue Oct 30, 11:33:00 AM , மங்களூர் சிவா said...

//
ஜொள்ளுப்பாண்டி said...
//குசும்பன் said...
நைசாக நானே பாவனாவை கரெக்ட் செய்வதாக திரைகதையை மாத்துங்க!!!!//

ஆஹா அப்படியெல்லாம் மாத்தலாமா? அப்போ எனக்கும் ஒரு சான்ஸ் கொடுங்க சிபி :))))))))))))

//
நான் வேணா பாவனாவை கடத்திகிட்டுபோய் ரெண்டுநாள்........
......
......
........
......
......
......

குசும்பன்கிட்ட இருந்தும் ஜொள்ளுபாண்டிகிட்ட இருந்தும் காப்பாத்தறேன்னு கதைய மாத்திடுங்க.

(கதிரு நோ டென்சன் பிளீஸ்)

 
On Wed Oct 31, 12:49:00 AM , ALIF AHAMED said...

நைசாக நானே பாவனாவை கரெக்ட் செய்வதாக திரைகதையை மாத்துங்க!!!!
//

ரீப்பீட்டேய்ய்ய்ய்

:)

 
On Wed Oct 31, 10:54:00 AM , Sanjai Gandhi said...

சிபி மாமா..சிபி மாமா..
பாவனா டார்லிங் உங்க தங்கச்சியா? சொல்லவே இல்ல.. ஹிஹி...

இனி அடிக்கடி வந்து கும்மியடிக்கிறேன்.
:P