"யோவ் புரடக்ஷன் மேனேஜர், அந்த டைரக்டரை சீக்கிரம் வரச் சொல்லுய்யா, இந்த புதுசா வர பயலுகளே எப்பவும் லேட்டுதான்" புரொட்யூசர்1 கத்தினார்.
"தோ வந்துகிட்டெ இருக்கார் சார்" வெளியில் இருந்து குரல் கேட்டது.
அதற்குள் சிற்றுண்டி, காபி எல்லாம் வந்தாகி விட்டது.
டைரக்டர்1 கதை சொல்லத் தொடங்கினார்.
டைரக்டர்1 : "அதாவது சார் நம்ம ஹீரோ ஒரு படிச்ச பட்டதாரி, படிப்பை முடிச்சதும் அவருக்கு வேலை கிடைக்குது"
புரொட்யூசர்1 : "இரு இரு, முதல்ல படத்துல ஹீரோவோட பேரு என்ன?"
டைரக்டர்1 : "ஹீரோவோட பேரு கேரக்டர்1 சார்"
புரொட்யூசர்1 : "ம் சரி! மேல சொல்லுங்க"
டைரக்டர்1: "நம்ம ஹீரோவுக்கு படிப்பு முடிஞ்சதும் ஒரு தொழில்1 கம்பெனில நல்ல வேலை கிடைக்குது சார், கை நிறைய சம்பளம்"
புரொட்யூசர்1 : "சரி! வேலல கிடைச்சவுடன் ஒரு பாட்டு வெச்சிக்கலாம்"
டைரக்டர்1 : "சரி சார்! நல்லா சூப்பரா ஸ்டுடியோக்குள்ளயே ஊர்1 மாதிரி செட் போட்டு அசத்திடலாம்"
புரொட்யூசர்1 : "ம் ஆகட்டும். ஹீரோயின் எங்கே அறிமுகம் ஆகுறாங்க"
டைரக்டர்1 : " அவங்க லொக்கெஷன்1 லே ஹீரோவுக்கு அறிமுகம் ஆகுறாங்க சார், அதுக்கு நம்ம பிரபல நடிகை நடிகை1 ஐ புக் பண்ணிட்டேன். முதல்ல கால் ஷீட் பிரச்சினனன்னாங்க. நான் பேசி சரி பண்ணிட்டேன்"
புரொட்யூசர்1: "அந்த அம்மிணியா? அது ஷூட்டிங்க் ஸ்பாட்லே வந்து பிரச்சினை பண்ணுமேய்யா! அது சரி இல்லை இது சரி இல்லைன்னு"
டைரக்டர்1 : "அதெல்லாம் நான் பார்த்துக்குறேன் சார்! நான் சொன்னா கேட்டுப் பாங்க!"
அதற்குள் ஆஃபீஸ் பாய்1 உள்ளே வந்து புரொட்யூசரிடம்
"சார்! உங்களைப் பார்க்க டைரக்டர்2 வந்து இருக்கார்!"
புரொட்யூசர்1 : "சரி! தம்பி! நீங்க இப்ப கிளம்புங்க. மீதி கதைய நாளைக்குப் பாத்துக்கலாம்" என்று சொல்ல டைரக்டர்2 பவ்யமாக உள்ளெ வருகிறார்.
டைரக்டர்2 தனது கதை சொல்ல ஆரம்பிக்கிறார்.
"சார் முதல்ல நம்ம ஹீரோவோட ஊரைக் காட்டுறோம்! ஹீரோவா நம்ம நடிகர்1 ஐப் போட்டுடலாம். அவருக்குத்தான் இந்தக் கதை கச்சிதமா இருக்கும். படத்துல நம்ம ஹீரோவோட பேரு கேரக்டர்3"
...................................
(என்ன மக்களே! உங்களுக்கு ஏதாச்சும் புரியுதா? எனக்கும் ஒண்ணும் வெளைங்கலை!)
This entry was posted on 1:22 AM and is filed under
கலாய்த்தல்
,
சிறுகதை
. You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
18 பின்னூட்டங்கள்:
mee the firstuu
மீ த ஃபர்ஸ்ட்
//mee the firstuu //
//Nannu than rendavathu.. //
நான் 3 வது!
:)
என்ன எழவு1 மாதிரி இருக்கு, சரி நம்மளது பின்னூட்டம்4
நன்றி5 இளா!
இதைப் படிச்ச எனக்கு எங்க 6தல் கிடைக்கும்? 7மலையானை ஒரு 8 போய் பார்த்துடு வர வேண்டியதுதான். இல்லை நம்ம ஊர்க் கோவிலில் 9கிரகங்களை ஒரு 10 சுத்தாவது சுத்தணும்.
கொத்தனார் அவர்களுக்கு 11 நன்றி!
10
என்ன இழவு இது
நெல்லை காந்த் said...
mee the firstuu
//
உருப்பிட மாட்டே
நீதான் உருப்பிடமாட்டே
இ.கொத்தனரார் பின்னூட்டம் மூலம் இந்த பதிவின் அர்த்தத்தை புரிந்துகொண்டேன். :-))
மக்கள 1,2,3,.... ன்னு படிக்க விட்டுடிங்களே நீங்க இருங்கய்யா...!
எப்படிதான் இப்படியெல்லொம் யோசிங்கிறீங்களோ?
சனி1 இடம்3 ல் பெயர்ச்சி ஆனது இப்போ வெளங்குது.
எல்லாம் சரி...கதாநாயகன் பாலபாரதிதானே??
சீக்கிரம்.....
பாலபாய்க்கு அனுப்புங்க
அவருக்குதான்
இதெல்லாம் புரியும்
ஹி ஹி எனக்கு புரிஞ்சது அந்த கடைசி பத்திக்கு மேல் வரி
.....(இதுதான் சூப்பர்)