புழுங்கல் அரிசி - கால் கிலோ
உளுந்து - 175 கிராம்
துளசி இலை - ஒரு கைப்பிடி
தூதுவளை இலை - ஒரு கைப்பிடி
கற்பூரவல்லி இலை - ஒரு கைப்பிடி
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை
அரிசி மற்றும் உளுந்தை ஊற வைத்து எடுத்து இட்லிமாவு பதத்தில் அரைத்துக் கொள்ளவும்.
சுமார் ஆறு அல்லது ஏழு மணி நேரம் அதனை வைத்திருந்து புளிக்க விடவும்.
மூலிகை இலைகளை கழுவி சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
பிறகு அந்த இலைகளை மாவுடன் கலந்து, தேவையான உப்பையும் சேர்த்துக் கொண்டு, இட்லியாக ஊற்றி, வேக வைத்து எடுக்கவும்.
நன்றி : அறுசுவை.காம்
பின் குறிப்பு :
துளசி, தூதுவலை, கற்பூரவல்லி போன்றவை கலந்திருப்பதால் ஜலதோஷத்திற்கு (சகல தோஷத்திற்கும் அல்ல) நல்லது.
இதனைத் தொடர்ந்து எனது பாசத்திற்குரிய தம்பி ஜொள்ளுப் பாண்டி அவர்கள் எலுமிச்சை ஊறுகாய் செய்வது எப்படி என்று தமிழ்மண அன்பர்களுக்கு விளக்கமளிப்பார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
9 பின்னூட்டங்கள்:
தம்பி இந்த தடவை நீங்களா தம்பி! அசத்துங்கோ!!
முதல் போணியே நட்சத்திரப் போணியா!
அசத்திப்புடுறோம் அண்ணா!
கீரை இட்லி!
செய்முறை எல்லாம் மேலே சொன்னது போலவே தான்!
மூலிகைகளுக்கு பதில், முளைக்கீரையைப் பொடிப்பொடியாய் நறுக்கி, இட்லி மாவுடன் கலந்து ஊற்றவும்.
கீரையில் மண்ணும் கலந்திருக்கும் என்பதால், நன்றாக நீரில் கழுவிய பின் போடவும்.
இது போல உங்களுக்கு என்னவெல்லாம் பிடிக்குமோ அதையெல்லாம் கூட போட்டு இட்லி வார்க்கலாம்!
என்ன.... சாப்பிடப் போறது நீங்கதானே!
:))
//இது போல உங்களுக்கு என்னவெல்லாம் பிடிக்குமோ அதையெல்லாம் கூட போட்டு இட்லி வார்க்கலாம்!
என்ன.... சாப்பிடப் போறது நீங்கதானே!
//
:))
வாங்க எஸ்.கே! அருமையான கீரை இட்லி செய்வது எப்படி? என்று எங்களோடு பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி!
இப்பத்தான் பிரியிது சிபி வீட்ல அவர்தான் கிச்சன் இன்சார்ஜ் போலும்.நீங்கள்ளாம் இப்படி க்கெளம்பிட்டா நாங்க என்னா மக்கா எழுதறது
என்ன???????????
வடை.......இல்லையா?
வ(மெ)ன்மையாகக் கண்டிக்கின்றேன்:-))))
ஆவியில் வெந்த துளசி.........ஹூம்.
மூலிகை இட்டிலி பிரமாதம். இந்த இட்டிலிக்கு இளகுன கருப்பட்டியோட கூட்டணி அமைச்சா சி(ர)றப்பா இருக்கும். அதே போல பொடிப்பொடியாக நறுக்கிய அகத்தி, முருகைக் கீரைகளையும் சேர்க்கலாம். தூதுவளை மிகச் சிறப்பு. குப்பைமேனியும் சேர்க்கலாம்.
இல்லாட்டி இதெல்லாம் செய்ய தெரிஞ்ச பொண்ண கண்ணாலம் கட்டிகிடலாம்.
now i`ll read your rss