48 : வெளிநாட்டுச் சதி அம்பலம்
8:43 PM | Author: நாமக்கல் சிபி
எச்சரிக்கை
முழுக்க முழுக்க கற்பனைச் செய்தி - நகைச்சுவைக்காக மட்டுமே.


இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற தீவிரவாதிகள் கைது


ஸ்ரீநகர் பிப்ரவரி 12, 2007 வடக்கு காஷ்மீர் வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற தீவிரவாதிகள் இன்று காலை எல்லைப் பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டனர். இந்தியாவிற்குள் பயங்கர கேடு விளைவிக்கும் நோக்குடன் அவர்கள் ஊடுருவி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அவர்களைச் சோதனையிட்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின.


இக்கைது நடவடிக்கை மூலம் இந்தியாயில் பயங்கரப் பேரழிவை உண்டாக்கும் நாச வேலைக்கான சதி முறியடிக்கப் பட்டது. இது தொடர்பாக நமது வெளியுறவுத் துறை அமைச்சர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ஆகியோர் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.


தீவிரவாதிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட "வீராச்சாமி" திரைப்படத்தின் பல கோடி ரூபாய்(!?) மதிப்புள்ள திருட்டு வி.சி.டி க்களை கீழேயுள்ள படத்தில் காணலாம்.



இத்திருட்டு வி.சி.டிக்களை இந்தியாவிற்குள் தீவிரவாதிகள் நாடெங்கும் இலவச விநியோகம் செய்யத் திட்டமிருந்ததாகக் கூறப்படுகிறது.

This entry was posted on 8:43 PM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

5 பின்னூட்டங்கள்:

On Mon Feb 12, 09:18:00 PM , அனுசுயா said...

மிகவும் சந்தோசமான செய்தி ஊடுறுவலை முறியடிக்காமல் இருந்திருந்தால் நம் மக்களின் நிலை என்ன வாகியிருக்கும் நினைத்தாலே பயங்கரமாக இருக்கிறது. :)))))))))))

 
On Fri Feb 16, 11:15:00 AM , நாமக்கல் சிபி said...

//மிகவும் சந்தோசமான செய்தி ஊடுறுவலை முறியடிக்காமல் இருந்திருந்தால் நம் மக்களின் நிலை என்ன வாகியிருக்கும் நினைத்தாலே பயங்கரமாக இருக்கிறது//

அதே!

மிக்க நன்றி அனுசுயா!

 
On Fri Feb 16, 11:22:00 AM , மணிகண்டன் said...

வீராச்சாமிய இப்படி வறுத்து எடுக்கறிங்களே..உங்களுக்கும் அவருக்கும் ஏதாவது ஜென்மப்பகையா :))

 
On Fri Feb 16, 11:26:00 AM , நாமக்கல் சிபி said...

//..உங்களுக்கும் அவருக்கும் ஏதாவது ஜென்மப்பகையா//

அண்ணா!

டி.ஆருக்கும் நமக்கும் எந்தப் பகையும் இல்லைங்கண்ணா!

ஏதாவது பத்த வெச்சுடப் போறீங்க!
:))

 
On Fri Feb 16, 03:01:00 PM , நாகராஜ் said...

சிபி இது ஓவர் கலாய்ப்பு...


ஏய் டந்தனக்கா!!!டனக்குடக்கா!!!

ஆமாம் கோவஒயில் எந்த மவராசன் தியேட்டரில்ல அய்யா படத்தை போட்டானுக...கீதலாயாவா, இல்லை கவிதாவா...