மூலிகை இட்லி (வடை அல்ல)
6:19 PM | Author: நாமக்கல் சிபி
தேவையானப் பொருட்கள்

புழுங்கல் அரிசி - கால் கிலோ

உளுந்து - 175 கிராம்

துளசி இலை - ஒரு கைப்பிடி

தூதுவளை இலை - ஒரு கைப்பிடி

கற்பூரவல்லி இலை - ஒரு கைப்பிடி

உப்பு - தேவைக்கேற்ப


செய்முறை

  • அரிசி மற்றும் உளுந்தை ஊற வைத்து எடுத்து இட்லிமாவு பதத்தில் அரைத்துக் கொள்ளவும்.

  • சுமார் ஆறு அல்லது ஏழு மணி நேரம் அதனை வைத்திருந்து புளிக்க விடவும்.

  • மூலிகை இலைகளை கழுவி சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

  • பிறகு அந்த இலைகளை மாவுடன் கலந்து, தேவையான உப்பையும் சேர்த்துக் கொண்டு, இட்லியாக ஊற்றி, வேக வைத்து எடுக்கவும்.

நன்றி : அறுசுவை.காம்

பின் குறிப்பு :

துளசி, தூதுவலை, கற்பூரவல்லி போன்றவை கலந்திருப்பதால் ஜலதோஷத்திற்கு (சகல தோஷத்திற்கும் அல்ல) நல்லது.



இதனைத் தொடர்ந்து எனது பாசத்திற்குரிய தம்பி ஜொள்ளுப் பாண்டி அவர்கள் எலுமிச்சை ஊறுகாய் செய்வது எப்படி என்று தமிழ்மண அன்பர்களுக்கு விளக்கமளிப்பார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.