இன்ஸ்பிரேஷன் : ஆனந்த விகடனில் அபி அப்பா

என்ற பதிவைப் படித்ததும் டிப்ளமோ படிக்கும்போது நான் பண்ணுன குசும்பு ஒண்ணு நினைவுக்கு வந்துடுச்சு!

டிப்ளமோ ஃபர்ஸ்ட் இயட் முடிச்சி வெக்கேஷன்ல இருக்கேன். அப்போ எங்க வீட்டுப் பக்கம் புதுசா ஒரு கம்ப்யூட்டர் இன்ஸ்டிடியூட் ஓப்பன் பண்ணுனாங்க! எங்களுக்குத் தெரிஞ்சவர் வேற!
பிறகென்ன நான்தான் அங்கே ஸ்டூடண்ட் நெம்பர் 1 (அதாங்க முதல் ஸ்டூடண்ட்).

500 ரூபாய் கட்டணம். டாஸ், பேசிக் & வோர்ட்ஸ்டார் தான் சிலபஸ். அப்பவெல்லாம் கம்ப்யூட்டரை கண்ணால பார்த்தது இல்லை. +2 படிக்கும்போது ஒரு கொர்ஸ் ஜாயிண் பண்ணி இருந்தேன். ஞாயிற்றுக் கிழமை மதிய நேரத்தில் மட்டும். அதுக்கு நாமக்கல்லில் இருந்து இராசிபுரம் போகணும். 10/15 கிளாஸ் மட்டும்தான். கம்ப்யூட்டர் அடிப்படை மற்றும் பேசிக் தான் சிலபஸ். அங்கே எல்லா வகுப்பும் தியரிதான். கடைசி ஒரு நாள் மட்டும் பிராக்டிக்கல். அதுவும் நாங்க எழுதுன புரோக்ராமை படிக்க படிக்க அவரே டைப் பண்னி எக்ஸிகியூட் பண்னி காட்டுவார். ஒரே ஒரு கம்ப்யூட்டர்தான் இருக்கும். (பின்னே 150 ரூபா, அதுவும் மூணு இண்ஸ்டால்மெண்டுக்கு ஆளுக்கொரு கம்ப்யூட்டரா தருவாங்க)

அப்ப பார்த்ததுதான். அதுக்குப் பிறகு இந்த இன்ஸ்டிடியூட்டில்தான் பாக்குறேன். ஆனா கொஞ்சம் புரிகிராம்ல ஆர்வமும் முன் அனுபவமும்(!?) இருந்ததால பேசிக் எல்லாம் சீக்கிரமா பிக் அப் பண்ணிட்டேன். அப்புறம் வோர்ட் ஸ்டாரெல்லாம் சொல்லிக் கொடுத்தாங்க!

தியரி கிளாஸ் காலைல முடிஞ்சி சாயங்காலம் வரை பிராக்டிகல் கிளாஸ். நான் ஒரு கம்ப்யூட்டர்ல உக்காந்து பேசிக் புரோக்ராம், வோர்ட்ஸ்டார்ல மெயில் மெர்ஜிங்க் எல்லாம் செஞ்சி பார்த்துகிட்டிருப்பேன்.

அப்படித்தான் ஒரு நாள் வோர்ட்ஸ்டார்ல கொஞ்சம் டைப் பண்ணிகிட்டிருந்தேன். எங்க வாத்தியாரு அவரோட டேபிளுக்கு முன்னால உக்காந்து ஏதோ மெகசின் படிச்சிகிட்டிருந்தாரு.
அப்பதான் அவரைக் கூப்பிட்டேன்.

"சார்"
"என்ன?"

"வோர்ட்ஸ்டார்ல புரோகிராம் எழுத முடியுமா?"

"என்ன வோர்ட்ஸ்டார்லயா?"
கொஞ்சம் யோசித்துவிட்டு
"முடியாது" என்றார்.

"நான் எழுதியிருக்கிறேனே! வந்து பாருங்க"

அதைக் கேட்டதும் அவருக்கு ஒரே திகைப்பு.
"என்ன? வோர்ட்ஸ்டார்ல புரோகிராமா, எங்கே காட்டு" என சேரைத் தள்ளிக் கொண்டு வேகமாக எழுந்தார்.

அவருக்கென்ன ஆச்சரியம் என்றால் அந்த இன்ஸ்டியூட்டில் அவரிடம் படித்த (ஒரே) ஒரு மாணவன் சிஸ்டம் லெவலில் வோர்ட்ஸ்டாரில் புரோகிராம் எழுதியிருக்கிறான் என்றுதான். அப்போ அது எவ்வளவு பெரிய விசயம்.

அவரை அழைத்துச் சென்று கணினித் திரையைக் காட்டினேன்.
அதில் ஓப்பன் செய்து வைத்திருந்த ஒரு வோர்ட் டாக்குமெண்டில் நான் எழுதியிருந்த புரோகிராமைப் பார்த்து அவருக்கு காதில் புகை வராத குறையாக, வகையாக மாட்டிய செந்திலை கவுண்டமணி விடும் லுக்கைப் போன்று ஒரு பார்வை பார்த்தார்.

நான் எழுதியிருந்த புரொகிராம் கீழே.

10 BEGIN
20 INPUT A
30 INPUT B
40 LET C = A * B
50 PRINT C
60 END

இது பேசிக்ல எழுத வேண்டிய புரோகிராம். நான் அப்படியே வோர்ட்ஸ்டார்ல எழுதினேனாக்கும்!
This entry was posted on 10:11 PM and is filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

7 பின்னூட்டங்கள்:

On Thu Feb 15, 11:12:00 PM , கதிர் said...

இப்ப ப்ளாக்கர்ல அதே புரோகிராம எழுதறிங்களாக்கும்!

 
On Fri Feb 16, 02:59:00 AM , MyFriend said...

நீங்க் யாரு.. வோர்ட்ஸ்டார்லயே பெல்லடிச்சவராச்சே!! ;-)

 
On Fri Feb 16, 11:10:00 AM , k4karthik said...

ஹி..ஹி.ஹீ... குசும்புயா உமக்கு..

 
On Sun Feb 18, 04:26:00 PM , அபி அப்பா said...

அட போங்கப்பூ!!! நம்ம நன்பி "மைஃபிரண்ட்" அவிங்க வீட்டு ஜன்னல்ல ஆணியால கிறுக்கிட்டு "நா windows ல் எழுதிடேனே மம்மீ"ன்னு குதிச்சாங்க தெறியுமா?

 
On Sun Feb 18, 04:27:00 PM , அபி அப்பா said...

அது சரி, நா ஆனந்தவிகடன்ல எழுதினது அல்லருக்கும் கிண்டலா போச்சுல்ல!! வச்சிகரண்டி!!!

 
On Mon Feb 19, 12:37:00 PM , பொன்ஸ்~~Poorna said...

இவ்வளவு தானா தள, ஏதோ டெக்னிகல் சமாச்சாரமாக்கும்னு பயந்து பக்கத்துல வராம இருந்திட்டேன் :-D

 
On Mon Feb 19, 02:25:00 PM , லொடுக்கு said...

யோவ்! லொல்லுய்யா உமக்கு.