
நம்ம போனவார நட்சத்திரம் பாலபாரதி தனக்கு ஒதுக்கப்பட்ட வாரம் முடிந்துவிட்டும் கூட இன்னும் ஸ்டாராகவே உக்காந்துகிட்டு எழுந்திருக்க மாட்டேன்னு அடம் பிடிக்கிறாரே! போன வாரமும் இப்படித்தான் தமிழ்மணம் ஸ்டார் என்றவுடன் தமிழ்மணம் கோடிங்க்லயே கைய வெச்சி ஒரு நாள் பூராவும் தமிழ் மணத்தை ஸ்தம்பிக்க வெச்சாரு!
மக்கா! இதை யாராச்சும் கேக்க மாட்டீங்களா?
என்னதான் குழந்தைன்னாலும் இப்படியா அடம் பிடிக்குறது? பிரம்பை எடுத்தால்தான் வேலலக்கு ஆகுமோ!
இல்லை! வயசானதால எழுந்திருக்க முடியாம உக்காந்து இருக்காறா? யாராவது போய் கை குடுத்து தூக்கி விடுங்கப்பா! பாவம்!
:)
மக்கா! இதை யாராச்சும் கேக்க மாட்டீங்களா?
என்னதான் குழந்தைன்னாலும் இப்படியா அடம் பிடிக்குறது? பிரம்பை எடுத்தால்தான் வேலலக்கு ஆகுமோ!
இல்லை! வயசானதால எழுந்திருக்க முடியாம உக்காந்து இருக்காறா? யாராவது போய் கை குடுத்து தூக்கி விடுங்கப்பா! பாவம்!
:)
பா.க.ச,
கோவை மற்றும் நாமக்கல் மாவட்ட கிளைகள்.
பின் குறிப்பு :
அடம்பிடிக்கும் குழந்தைகள் என்று கூகிளிள் தேடியபோது கிடைத்தது.
27 பின்னூட்டங்கள்:
அதானே! கேட்கிறதுக்கு யாரும் இல்லைன்னு நெனச்சிட்டாரா?!! எங்க புறாச் சக்கரவர்த்தி இருக்காராக்கும்!
"அம்மா,
சிபி அங்கிள பாத்தா எனுக்கு பயமா வருது. ஙே!!!!!"
//எங்க புறாச் சக்கரவர்த்தி இருக்காராக்கும்! //
ஓ! விசில இந்த மாதிரி கமெண்டு போட்டது நீங்கதானா படகு அக்கா?
நற நற நற!
:-x
//அம்மா,
சிபி அங்கிள பாத்தா எனுக்கு பயமா வருது. ஙே!!!!!"
//
அப்படிண்னு பால பாரதி சொல்றாரா மசிலா?
:))
//ஓ! விசில இந்த மாதிரி கமெண்டு போட்டது நீங்கதானா படகு அக்கா?//
விசிலா? அப்படீன்னா?
"அங்க உக்காந்துனு கிற கொயந்த அப்பிடித்தேன் சொல்லி அயுவுது."
அது எஸ்.பா.தானே?
:-))
//விசிலா? அப்படீன்னா? //
ஐயயோ! அப்ப அது நீங்க இல்லையா!
நானேதான் சொ.செ.சூ வெச்சிகிட்டனா?
//அது எஸ்.பா.தானே? //
ஆமாம்! ஆனா அவரு என்னைப் பார்த்து அங்கிள்னு சொல்லுவாரா?
என்ன இது? சேம் சைடு கோல் போடுறீங்க?
:)
//இல்லை! வயசானதால எழுந்திருக்க முடியாம உக்காந்து இருக்காறா? யாராவது போய் கை குடுத்து தூக்கி விடுங்கப்பா! பாவம்!//
இது தாங்க உண்மை போல! வாங்க போய் அவருக்கு ஹெல்ப் பண்ணுவோம்.
//ோன வாரமும் இப்படித்தான் தமிழ்மணம் ஸ்டார் என்றவுடன் தமிழ்மணம் கோடிங்க்லயே கைய வெச்சி ஒரு நாள் பூராவும் தமிழ் மணத்தை ஸ்தம்பிக்க வெச்சாரு!//
இவரை நம்ம கௌதம் ப்ளாக் என்ஜினியர் என்று சொன்னதிலிருந்து இவரு கோடிங்ல கை வைக்கதொடங்கியது தான் பிரச்சனைன்னு நினைக்கிறேன்! யாராவது அவர் கிட்ட இருந்து என்ஜினியர் பதவியிலிருந்து எடுத்து விடுங்கபா... இல்லைன்னா இப்படி ஏதாவது செய்துக்கிட்டே இருப்பாரு :)))
இப்படிக்கு,
ஜெயசங்கர் நா
பா.க.ச தலம கலகம்
சென்னை
ஆஹா! சென்னை தலைமைக் கிளைலேர்ந்து ஜெய்யும் வந்துட்டார்!
வாங்க! நாம் எல்லாருமா போய் தூக்கி விடுவோம்!
:))
"இடம்" பிடிக்கும் பாலபாரதி ??
//இல்லை! வயசானதால எழுந்திருக்க முடியாம உக்காந்து இருக்காறா? யாராவது போய் கை குடுத்து தூக்கி விடுங்கப்பா! பாவம்!
//
ஹி ஹி....
ஆமாம் நீங்க கெட்டு போயிட்டிங்களாமே கேள்விப்பட்டேன், கெடாம இருக்க ஐஸ்பெட்டி அனுப்ப சொல்லலாமே?
காலைக் குருவியின் அவசரக் குறுஞ்செய்தி
ஸ்டார் கேம்புல இருந்து இவரைத் தூக்க முடியாதாம். அந்த அளவுக்கு தமிழ்மணம் கோடிங்க்ல என்ன பண்ணுறோம்னே தெரியாம கோல் மால் பண்ணி இருக்காராம்.
//ஆமாம் நீங்க கெட்டு போயிட்டிங்களாமே கேள்விப்பட்டேன், கெடாம இருக்க ஐஸ்பெட்டி அனுப்ப சொல்லலாமே?
//
குழலி!
என்ன சொல்றீங்க! புரியலையே!
:(
//"இடம்" பிடிக்கும் பாலபாரதி ?? //
மின்னல்!
சூப்பர் கமெண்ட்!
பாராட்டுக்கள்!
பொறாமையில ஒர்த்தருக்கு வயிரு பத்தினு எரியுதுங்கடோய்!
தண்ணி கொண்டுனு வந்து ஊத்துங்கப்போய்!!!!!!!
:-)
உண்மையில சொல்லப்போனா, உங்க ப்ரொஃபைல் கொழந்த படத்த அவரு இடத்திலயும் அவருக்காக நீங்க இட்டிருக்கிற கொழந்த படத்த உங்க ப்ரொஃபைல்ல போட்டு இருந்தா பொருத்தமா இருக்கும்னு நெனைக்கிறேன்.
நீங்க?
:-))))
//பொறாமையில ஒர்த்தருக்கு வயிரு பத்தினு எரியுதுங்கடோய்!
தண்ணி கொண்டுனு வந்து ஊத்துங்கப்போய்//
:)
அது சரி!
ஊத்துறதுதான் ஊத்தறீங்க! ஐஸ் வாட்டராவே ஊத்துங்க!
//உண்மையில சொல்லப்போனா, உங்க ப்ரொஃபைல் கொழந்த படத்த அவரு இடத்திலயும் அவருக்காக நீங்க இட்டிருக்கிற கொழந்த படத்த உங்க ப்ரொஃபைல்ல போட்டு இருந்தா பொருத்தமா இருக்கும்னு நெனைக்கிறேன்.
நீங்க?
//
சரி! அப்படியே வெச்சிக்கலாம்!
:))
இந்த நட்சத்திரங்கள் தொல்லை தாங்கமுடியலப்பா...
//அது சரி!
ஊத்துறதுதான் ஊத்தறீங்க! ஐஸ் வாட்டராவே ஊத்துங்க!//
இது நம்ம பாண்டிச்சேரி தண்ணீபா.
இத போய் வேணாம் சொல்ற மொத ஆளு நீதாம்பா!!!
:-)
எங்கள் மனதில் ஆண்டுதோறும் ஸ்டாராகவே வீற்றிருக்கும் தல அவர்களை சிறப்பிக்கும் விதமாக எங்கள் டி.கல்லுபட்டி பா.க.ச. கிளை(பதிவு எண்: 686386/07) சார்பாக எதிர்வரும் 36-ம் தேதி கூழ் காய்ச்சி ஊற்றப்போகிறோம் என்பதை பா.க.ச. உறுப்பினர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறோம். இந்த கொடை விழாவிற்கு அன்பளிப்பு தர விரும்புபவர்கள் ஆனையக்காவை தொடர்புகொள்ளலாம்.
என்னாச்சு
குழந்தை அழுவுது
குறுக்குல மிதிச்சு எழுப்பு நீ குழந்தையா இருக்கறச்சே அதத்தான் செஞ்சேன்
சாத்தான்குளத்தான்
அமீரக பாகச தலைமைக்கழகம்
சிவ்ஸ்டார்பவன் மொட்டை மாடி
கராமா துபாய் அமீரகம்
///ஜெய் சங்கர் அவர்கள் சொல்லியது வயசானதால எழுந்திருக்க முடியாம உக்காந்து இருக்காறா? யாராவது போய் கை குடுத்து தூக்கி விடுங்கப்பா! பாவம்!---
இது தாங்க உண்மை போல! வாங்க போய் அவருக்கு ஹெல்ப் பண்ணுவோம்.///
என்னய்யா? கேட்க ஆளில்லைன்னு நெனச்சீங்களா?
தில் இருந்தா வாங்கையா - மொத்தம் பா.க.ச வும் வாங்கையா!
மன்ரோ சிலையாண்டயிருந்து - மீனம் பாக்கம் விமான நிலையம்வரைக்கும் அண்ணா சாலையில
ஒரு ஓட்டப் பந்தயம் வச்சுக்குவோம்
பாலாபாயை யாரு ஜெயிக்கிறீங்கன்னு பாத்திருவோம்!
//மன்ரோ சிலையாண்டயிருந்து - மீனம் பாக்கம் விமான நிலையம்வரைக்கும் அண்ணா சாலையில
ஒரு ஓட்டப் பந்தயம் வச்சுக்குவோம்
//
யாருங்க அது? மன்ரோ? மர்லின் மன்ரோ வா?? அப்படின்னா அவரு ஓடுவாருங்க! உண்மை தான் அவரை பிடிக்கமுடியாதுல்ல!! அவரு யாருங்க! என் ஆளு, நான் அவங்க ஆளுன்னு பல டைப்புல ஆளை வைத்திருப்பவர் தானே? அந்த சிலையையும் கரெக்ட் பண்ண ட்ரை பண்ணுவாரு!!!
\
இந்த கொடை விழாவிற்கு அன்பளிப்பு தர விரும்புபவர்கள் ஆனையக்காவை தொடர்புகொள்ளலாம்.
//
ஏற்கனவே வவாச வில் பொற்காச சுருட்டுனது பத்தாத....???
:))))))))))
senshe
சூப்பர்...
வஜ்ராவுக்கு வழி உடாமே ஒரு நாள் 'புல்'லா ஆக்கிரமிச்சாரே :)))