ஹையா கண்டுபிடிச்சுட்டேன், சிபி, சிபி, ரொம்ப நாளா மாட்டிக்கவே இல்லை. சிபி தான் அது வேறே யாருமே இல்லை. சிபி, நீங்க எழுதுங்க! ன்னு சொல்லி ஒரு அன்புக் கட்டளை போட்டுட்டாங்க நம்ம சங்கத்தின் மகளிரணி நிரந்தரத் தலைவலி ச்சே நிரந்தரத தலைவி கீதா சாம்ப சிவம்.
அவங்களுக்காக இதோ நானும் ஒரு எட்டு போட்டுட்டேன்.
8
ம்ஹூம்! கலாய்த்தல் திணையின் 75 வது பதிவிலதான் வந்து மாட்டி இருக்காங்க! அதுவும் அவங்களா அழைப்பு வெச்சி!
மேடம்! தோ பார்த்துக்குங்க! நானும் எட்டு போட்டுட்டேன்!
வெற்றிகரமான 300* வது நாள்
பா.க.ச வின்
----------------------------------------------------------------------------
வி.யெஸ்.கே : "ரூம் போட்டு சிந்திப்பீக்களோ? சூப்பர்."
பொன்ஸ் : "டாப்"
லிவிங்க் ஸ்மைல் : "கலக்கல்"
-------------------------------------------------------------------------------------
செய்திகள் :
இப்பதிவு வெளியிடப் பட்ட மூதல் நாள் அன்று இதனைப் படிக்கச் சென்ற பிரவுசிங் செண்டர்களில் 50 ரூபாய்க்கும் அதிகமாக வசூலிகப்பட்டதாகவும், இதனை அரசு நிர்ணயித்துள்ள அனுமதிக் கட்டணத்தை அதிகமானெதென்றும் மேலும் பாலபாரதியின் கொலைவெறி(வேற யாரு நாங்கதான்) ரசிகர் மன்ற கொண்டாட்டங்களையும் கண்டித்து பதிவர் ராட்சஷன் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
----------------------------------------------------------------------------------
*பா.க.ச தொண்டன் : ஹிஹி..,எங்க தலை போஸ்ட் ஒரு நாள் ஓடினாலே 100 நாள் ஓடினா மாதிரி.
மறக்காம பாலபாரதி படத்தையும் (படிச்சிப்) பார்த்து உங்க கருத்துக்களைச் சொல்லுங்க.
இரண்டு வருஷமாய்
பீடித்திருந்த
சிவாஜி ஜூரம்
நேற்றுத்தான் விட்டது!
பத்து நிமிடம்
தாமதமாய்ப் போனதால்
மீண்டும்
பற்றிக்கொண்டது
நயன்தாரா ஜூரம்!
ம்ஹூம்!
பல்லேக்கா! பல்லேக்கா!
நாட்டாமை மன்னிப்பாராக!
சேச்சேச்சேச்சே! ரெண்டு மூணு நாளா எங்கே பார்த்தாலும் சிவாஜி, எதுல பார்த்தாலும் சிவாஜி! இந்த சிவாஜியால நம்ம மாமூல் வாழ்க்கையே கெட்டுப் போச்சுங்க!
யாராவது வேற எதுனா எழுதுவாங்கன்னு பார்த்தாலும் எல்லாரும் சிவாஜி பத்திதான்யா எழுதுறாங்கிய! அப்புறம் நாங்கல்லாம் என்னதான் பண்ணுறது?
எங்கிட்டு போனாலும் சிவாஜி பத்தியே பின்னூட்டம் போட வேண்டியிருக்கு!
ஐய்யா! இதனால காஞ்சி போயி கெடக்குற அமுக நண்பர்களே மற்றும் அவர்கள் உறவினர்களே! இதோ உங்களுக்காகத்தேன் (எனக்காகவுந்தேன்) இந்த கும்மிப் பதிவு!
வாங்க! சிவாஜிய மறந்துட்டு இங்கன கும்மியடிப்போம்!
வேற யாவது கும்மிப் பத்தி போட்டாலும் இங்கன வெத்தலை பாக்கு வெக்க மறந்துடாதீங்க மக்கா!

இன்று உலக புகையிலை
ஒழிப்பு தினமாம்.
ஹிஹி!
வருடத்திற்கு
ஒரு நாள்தானா?
நாங்களெல்லாம் தினமும்
எங்களால் முடிந்த
புகையிலையை
விலை கொடுத்து
வாங்கி
தீயில்
பொசுக்கி
ஒழித்துக்
கொண்டுதானிருக்கிறோம்.
இலக்கிய உலகில் கவிதைகளின் பல்வேறு பரிமாணங்களை எனக்கு அறிமுகப் படுத்திய
எனதருமை நண்பர் ஒருவர்தான் போஸ்ட் மார்டரிஸம் என்ற சொல்லையும் எனக்கு அறிமுகப் படுத்துனார்.
அதைப் பரீட்சித்துப்(!?) பார்க்கும் முயற்சியாக இதோ எனது படைப்பு!
போஸ்ட் மார்ட்டம்
உளியை வைத்து
உச்சியைப் பிளந்து
மூளையை அகற்றி
வைக்கோல் திணிப்போம்!
வயிற்றைக் கிழித்து
சிறுகுடல், பெருங்குடல்
வெளியே எடுப்போம்!
சிறு மயிர்தானெனினும்
தடயம் என்றுரைப்போம்!
காயங்கள்தனையும்
கவனமாய்க்
குறிப்போம்!
மயானத்தில் மட்டுமல்ல!
மார்ச்சுவரியின் வாசலிலும்
காத்திருக்கும்
பிணந்திண்ணிக் கழுகுகள்!
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா என்ன இது? யாருமே கும்மி பதிவு போட மாட்டேங்குறாங்க!
எங்கயாவது போட்டா போயி கும்மி அடிக்கலாம்னு பார்த்தா ஒண்ணியும் காணலை!
ஏங்க! வலைப் பதிவர்களே! மனசாட்சிக்கு விரோதமில்லாம சொல்லுங்க! இப்படி எல்லாருமே மொக்கை/கும்மிப் பதிவு போடாம இருந்தா நாங்களெல்லாம் என்னதான் பண்ணுறது?
அ.மு.க வுக்கு போரடிக்காதா என்ன? என்னடா சைடு எலைக்கு சாம்பார் கேக்குறானேன்னு பார்க்காதீங்க! நான் எனக்கும் சேர்த்துதான் சொல்றேன்!
அப்படி யாரும் கும்மி பதிவு போடவில்லை என்றால், அ.மு.கவினர் இந்தப் பதிவையே கும்மிப் பதிவாக கருது, எனது அன்பான அழைப்பை ஏற்று வருகை புரிந்து இந்த(கும்மிப்) பதிவை சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்!
அப்படியெ தமிழ்மணத்திற்கு ஒரு அன்பான வேண்டுகோள். வகைப்படுத்தும் பட்டியலில் "நகைச்சுவை/நையாண்டி", "அனுபவம்/நிகழ்வுகள்" போன்ற வகைகளைப் போல் "கும்மி/மொக்கை" என்ற வகையையும் சேர்க்குமாறு கேட்டுக் கொல்கிறேன்.
கம்புபுன்செய் தானியங்களுள், பயன்பாட்டின் அடிப்படையில் கேழ்வரகிற்கு இணையான தானியம் கம்பு. 'கம்பம் புல், கம்பரிசி, புல், புல்லு' என்றும் இதைக் குறிப்பிடுவர். தவசம் என்னும் சொல் பொதுவாகத் தானியத்தைக் குறிக்கும். ஆயினும், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களின் கரிசல் பகுதியில் தவசம் என்பது கம்புத் தானியத்தையே குறிக்கிறது. அரிசி என்னும் சொல் இன்று நெல் அரிசியை மட்டும் குறிப்பதுபோல் தவசம் என்னும் சொல்லும் கம்புத் தானியத்தை மட்டும் குறிப்பதாக மாறியுள்ளதோ எனக் கருத இடம் உள்ளது. கல்வெட்டுகளில் தவசம், தவசப் பொதி என்று குறிப்பிடப்படுவது பொதுவாகத் தானியத்தையா அல்லது கம்புத் தானியத்தையா என்பதும் ஆய்விற்குரியது.
நீண்ட கதிர்களைக் கொண்ட கம்புப் பயிரிலிருந்து தானியத்தைப் பிரித்தெடுத்த பின்னும் அதை அப்படியே பயன்படுத்துவதில்லை. அதை உரலில் இட்டு இடித்துப் பயன்படுத்துவர். இதை இடிக்கும்போது தனியான மணம் தோன்றும். இடித்த கம்பரிசியைச் சோறாக்கி அதை உருண்டைகளாகப் பிடித்து நீராகாரம், மோர், தண்ணீர் இவற்றுள் ஒன்றில் போட்டுவிடுவர். அது மிதக்கும். தேவைப்படும்போது ஓர் உருண்டையை எடுத்து மோரிலோ நீரிலோ கரைத்து உப்பிட்டுக் குடித்துவிடுவர். கம்பங்கஞ்சிக்குப் பச்சை மிளகாய், வெங்காயம், பொரித்த கருவாடு ஆகியனவற்றுள் ஒன்று தொடுகறியாக அமையும்
கம்மங்கூழ், தாகத்தையும் பசியையும் ஒரு சேர அடக்கும் தன்மையது.
கம்புச் சோறு சாப்பிடும்போது பருப்புக் குழம்பு, கருவாட்டுக் குழம்பு ஆகியன பொருத்தமான துணை. சிலர் கருப்புக் கட்டியைத் துணைக்கு அழைத்துக்கொள்வதும் உண்டு. அரிசிச் சோற்றுக்குத் தயிர் அல்லது மோர்விட்டுப் பிசைந்து உண்பதுபோல், கம்மஞ்சோற்றுக்கும் தயிர் அல்லது மோர்விட்டுப் பிசைந்து உண்பதுண்டு. இன்று புழக்கத்தில் உள்ள ஒட்டுக் கம்பை இடித்து வேகவைக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் நாட்டுக் கம்பைப்போல் இதற்குக் கொம்மை கிடையாது. மணிகளாகவே கிடைத்துவிடும். இதனால் குற்றும் வேலை மிச்சம். ஆயினும் நாட்டுக் கம்பிற்குரிய தனித்த மணம் ஒட்டுக் கம்புச் சோற்றிலும் கஞ்சியிலும் கிடையாது.
இதற்கும்
மணி அண்ணன் அவர்களின் பிரியாணி : குறுந்தகவல் என்ற பதிவிற்கும் யாதொரு தொடர்பும் இல்லை என்று நான் சத்தியம் செய்தாலும் நம்புவதற்கு ஆள் இல்லை.
நன்றி :
காலச் சுவடு
மக்கா,
சங்கத்துல கொஞ்ச(!?) நாளா போஸ்ட் எதுவும் போடாம இருக்கிறேன் என்பது வாஸ்தவம்தான். அதுக்காக இப்படி மெயில் அனுப்புறதெல்லாம் ரொம்ப ஓவர் சொல்லிட்டேன்! ஆமா!
அன்புள்ள நாமக்கல் சிபி,
தங்களை வருகிற ஆகஸ்ட் 2007 மாதத்திற்கான வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் "அட்லாஸ் வாலிபராக" அழைக்க விழைகிறோம்.
தயை கூர்ந்து தங்கள் வசதியை உடன் தெரியப் படுத்தவும்.
அன்புடன்,
ஒரு சங்கத்து சிங்கம்

வாத்தியார் மீதுள்ள அளவற்ற அன்பாலும், பாடங்களின் மீதுள்ள அதீத ஆர்வத்தின் காரணமாகவும் முன் வரிசை இருக்கைகளில் இடம்பிடிக்க மாணவர்களுக்கிடையே எழுந்த சண்டை வகுப்புக் கலவரமாக மாறியது. அதை உடனடியாக கண்டு கலவரத்தை அடக்க எவ்வித நடவடிக்கையும் நடவடிக்கை எடுக்காமல் தொடர்ந்து பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியரை பள்ளி நிர்வாகம் வலை வீசித் தேடி வருகிறது.