ஓரெழுத்துக் கவிதை
12:24 AM | Author: நாமக்கல் சிபி
என்னுள் இருந்தவள்
விரும்பி வினவினாள்
ஓரெழுத்துக் கவிதையொன்று
வாசிக்க இயலுமா?
"நீ"
என்றேன்
இரண்டெழுத்தில் என்றாள்
"நீயே"
என்றேன்
மூன்றெழுத்து என்றாள்
"நீதான்"
என்றேன்
"நான்கெழுத்து"
பின்புறமிருந்து குரல் வந்தது.
"எவ அவ?"
என்று திரும்பினேன்
"பொண்டாட்டி"
என்றாள்.
அட ஐந்தெழுத்து
என்றேன்.
"ஸ்டார்ட் மீசிக்"
என்றான் என் மகன் ஆறு எழுத்தில்.
ஐந்தெழுத்திலேயே எனக்கு
"ஆயுத பூஜை"
அரங்கேறிக் கொண்டிருந்தது
88 : நாளைய நண்பனுக்கு!
11:02 PM | Author: நாமக்கல் சிபி
தமிழ் வலைப் பதிவுகளில் முதல் முறையாக

கவிதை பதிவிட்டு சில நாட்களே ஆன

பாலைத் திணைக் கவிதை ஒன்று

உங்கள் கலாய்த்தல் திணையில்

கலாய்க்கப் படுகிறது.

காணத் தவறாதீர்கள்.



கவிதைக் கலாய்த்தலைத் தொகுத்து வழங்குவோர் : குசும்பன், நாமக்கல் சிபி மற்றும் G3(!?).....!



----------------------------------------------------------------------------------------------






நீயோ அல்லது நானோ
சில கணங்களேனும்
தாமதித்தால்தான்
நிச்சயம் தவிர்க்கலாம்
எதிர்பாராமல் கூட

நிகழ்ந்துவிடக் கூடாத
நம் சந்திப்பை....



எனக்கான ஃபுல் மீல்ஸையும்

உனக்கான சாண்ட்விச்சையும்

மிச்சம் வைத்து விடக் கூடாது

அப்போது.....



(அண்ணாத்தே அதுக்கு நான் 100% கியாரண்டி என்கிறார் G3)



எஸ்கேப்பாகும் எமர்ஜென்ஸியோடு

செகண்ட் ஒன்று சூசைட் ஆகும்
சைக்கிள் கேப்புல

என்னைப் பார்த்து

டரியலாகக் கூடும் நீ!



உன் சைக்கிள்

டயரில் பட்டுத் தெறிக்கும்

சகதி

என் கால் சட்டையை

அசிங்கப் படுத்தும்போது

நான் கத்தக்கூடும்

பொறுக்க முடியாமல்

அடேய் பொறம்போக்கு!

கஸ்மாலம்!

அப்பால

இந்தப் பக்கம் வராமலா

பூடுவே!


மேக்கப்கள் கலைத்து
நீ விவகாரமாய்ப் பல்லிளிக்கலாம்!

குளோசப் சிரிப்பென்று

உனக்கு நீயே

தீர்மானித்துக் கொண்டு!



என்றோ
கைமாத்து வாங்கத்

தேவைப்படுமென

நான் கொண்டாடிவரும்
உன் நட்பு...




இன்ஸ்பயர்டு பை : கவிதாயிணி காயத்ரி மற்றும் குசும்பன்
76 : விடுதலை எப்போது?
4:13 PM | Author: நாமக்கல் சிபி

வீறிட்ட அலறலுடன்
கேட்டுக் கொள்கிறேன்
என்னை நானே!
"விடுதலை எப்போது?"
என் கேள்வி
வான் மீது மோதி
பறவைகளின் எச்சமாய்
என் மீதே விழுகிறது!

எதிர்ப்படுக்கை
ஒன்றிலிருந்து
முனகல்
வருகிறது!
"தள!
ஏனிந்த
கொலைவெறி?"

"உமக்கேது விடுதலை?"
எகத்தாள ஒலி
சுவரில் பட்டு
எதிரொலிக்கிறது!
எரிச்சலுற்று
திரும்பிப் பார்க்கிறேன்!
மின்னலும் குசும்பும்
மாறி மாறி
கண்ணில் தெரிய
விழிகளின் பாப்பாக்கள்
பப்பரப்பே என்று
சுழலத் தொடங்குகின்றன!

கெக்கெபிக்கே
சிரிப்பொலியொன்று
கவனத்தைச் சிதறடிக்க
எங்கோ தொலைவில்
தெக்கியாரைக்
கிச்சு கிச்சு மூட்டிவிட்டு
விரைந்து செல்கிறது
அதிவேக
புகை வண்டி!

எனக்கென்று
எதிரிகளை
நானே தெரிவு
செய்து
சண்டைக்கு
அழைக்கிறேன்!

வாளைச் சுழற்றியபடி
பிச்சுவாக் கத்தியுடன்
எனைச் சூழ்ந்து
நெருங்குகின்றனர்!

நானும்
சண்டையிடத்
தயாராகிறேன்!
சமாதானம் எங்கிருக்கிறது?

திமிறித் திமிறிப்
பார்த்தும்
பிடியிலிருந்து
நழுவ முடியவில்லை!

சுயநினைவைக்
கொஞ்சம் கொஞ்சமாய்
இழந்துகொண்டே
சூளுரைக்கிறேன்!
"விடு! தலை கிடைக்கும்
ஒரு நாள்"
நின்றுவிட்ட இயந்திரத்தைப்
பொல
தேய்ந்து வருகிறது குரல்!
தோள் பட்டையில்
உணர்கிறேன்
சுரீரென்ற வலி!
69 : போஸ்ட் மார்டரிஸம் - ஒரு கவிதை
9:06 AM | Author: நாமக்கல் சிபி
இலக்கிய உலகில் கவிதைகளின் பல்வேறு பரிமாணங்களை எனக்கு அறிமுகப் படுத்திய எனதருமை நண்பர் ஒருவர்தான் போஸ்ட் மார்டரிஸம் என்ற சொல்லையும் எனக்கு அறிமுகப் படுத்துனார்.



அதைப் பரீட்சித்துப்(!?) பார்க்கும் முயற்சியாக இதோ எனது படைப்பு!



போஸ்ட் மார்ட்டம்


உளியை வைத்து

உச்சியைப் பிளந்து

மூளையை அகற்றி

வைக்கோல் திணிப்போம்!


வயிற்றைக் கிழித்து

சிறுகுடல், பெருங்குடல்

வெளியே எடுப்போம்!
சிறு மயிர்தானெனினும்
தடயம் என்றுரைப்போம்!
காயங்கள்தனையும்
கவனமாய்க்
குறிப்போம்!
மயானத்தில் மட்டுமல்ல!
மார்ச்சுவரியின் வாசலிலும்
காத்திருக்கும்
பிணந்திண்ணிக் கழுகுகள்!