மும்பையிலிருந்து திரும்பி வரும் இளைஞன்/குழந்தை பாலபாரதி! 20 வருடத்தைக் குறைத்து இளமையாகக் காட்ட படாத பாடு பட்டு ஒப்பனையின் மூலம் 40 வயது இளைஞராக்கி இருக்கிறார்கள்.

இவர் சென்னை வந்தவுடன் தானும் கொலைப் பதிவர் சந்திப்புகளை திட்டமிட்டு பக்காவாக நடத்த வேண்டும். அதில் பிளாக்கர்கள், அதர் ஆப்ஷன்கள், அனானிகள் அனைவரும் பாகுபாடின்றி கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என்று முயற்சிகள் மேற்கொள்கிறார். ஆனால் ஏற்கனவே இதைத் தொழிலாகச் செய்துவரும் பிரபலமானவருடன் இவருக்கு மோதல் ஏற்படுகிறது. பின்னர் சோதனைகளைக் கடந்து எப்படி இவர் கொலைப் பதிவர் சந்திப்புகளை வெற்றிகரமாக நடத்துகிறார் என்பது கிளைமாக்ஸ்.

இது ஏ.வி.எம் தயாரிப்பு அல்ல. பா.க.ச தயாரிப்பு


நன்றி :
பாலபாரதிக்கு ஒப்பனை (கிராஃபிக்ஸ்) : கிழுமத்தூர் எக்ஸ்பிரஸ்

ஹைலைட் காட்சிகள் :





ஒரு கொலைப் பதிவர் : "மீட்டிங்க் வந்தா எத்தனை போண்டா தருவீங்க?"

பால பாரதி : "திரும்பவும் அதே கேள்வி!, எத்தனை தடவைடா இதையே கேப்பீங்க?"

வரவணையான் : "மச்சான், இங்கே போண்டா இல்லாம மீட்டிங்கெல்லாம் நடத்த முடியாது, ஊரோட ஒத்துப் போறதுதான் நல்லது. எப்படியோ மீட்டிங்க் நடக்கணும்"

--------------------------------------------------------------------------
பால பாரதி : "கடவுளே! ஏன்யா என்னை கெட்டவனா படைச்சே?"

அசரரீ : "நல்லவனா படைச்சா கெட்டுப் போயிடுவேன்னுதான். - பா.க.ச, தேவலோகம் கிளை"

பால பாரதி : "அடப் பாவிகளா, அங்கயுமாடா! :( "
------------------------------------------------------------------------------
பால பாரதி : " என் லேப் டாப்புலயும் லினக்ஸ் சுசீ இன்ஸ்டால் பண்ணிக் குடுங்க"

மா.சிவகுமார் : "முன்ன பின்ன தெரியாத ஆளுகளுக்கெல்லாம் இன்ஸ்டால் பண்னிக் குடுக்க முடியாது"

பால பாரதி : "முன்ன பின்னதான இப்போ பார்த்துக்குங்க"

பால பாரதியும், வரவணணயானும் டக் டக் என்று முன் பின்னாகத் திரும்பி

"இது முன்ன, இது பின்னே" என்று கோரஸாகச் சொல்கின்றனர்.

மா.சிவகுமார் தலையில் அடித்துக் கொள்கிறார்.
------------------------------------------------------------------------------
அருள் குமார் : "அட! சுசீ இல்லாட்டி என்னங்க பால பாரதி? என்கிட்ட ரெண்டு ஓ.எஸ் இருக்கு
ஒண்ணு உபுண்டு, இன்னொன்னு தபுண்டு, உங்க லேப்டாப்ல இன்ஸ்டால் பண்ணி நல்லா பழகிப் பாருங்க, பிடிச்சா அதையே யூஸ் பண்ணுங்க, இல்லாட்டி விண்டோஸ் 2000 போட்டுடலாம்"
-----------------------------------------------------------------------------
டோண்டு : "யேய் யேய்... இவன் பால பாரதியேதான்.. எப்படி எப்படி....? "

சிபி : " சார்.. என்ன சார் இது! பாலபாரதியைத்தான் நாம கொன்னுட்டமே! இவன் வேற ஆளு சார், பால பாரதி பிரண்டாம்"

பி.பி.ரதி : "என் பேரு பி.பி.ரதி, சும்மா பேரைக் கேட்டாலே அதிருதில்ல"
--------------------------------------------------------------------------
மா.சிவகுமார் : "பழக்கம் ஆகணுங்குறதுக்காக தெனமும் பொழுது போயி பொழுது விடிஞ்சா எங்க ஆஃபீஸ் வாசல்ல வந்து நிக்குறது கொஞ்சம் கூட நல்லா இல்லை! சொல்லிட்டேன்!"
----------------------------------------------------------------------------
பால பாரதி : "தோ பாருங்க, போண்டா இல்லாம மீட்டிங்குக்கு வர விருப்பம் இருக்குவங்க எல்லாம் இப்படி வாங்க, மீதி பேரெல்லாம் அதோ அங்கன இருக்குற ஆஃபீஸ் ரூமுல போய் வெயிட் பண்ணுங்க"

உடனே பாலபாரதி கண் சிமிட்டும் நேரத்தில் அங்கிருந்த அனைவரும் காணாமல் போய்விடுகின்றனர்.

வரவணையான் : "தலை! எக்குத் தப்பா இப்படியெல்லாம் சொல்லாதீங்க. இப்ப பாருங்க! எல்லாரும் அந்த ஆஃபீஸ் ரூமுலதான் போண்டா தருவாங்கன்னு பறந்துட்டாங்க! இப்போ அவ்ளோ போண்டாவுக்கு என்ன பண்ணப் போறீங்க? இல்லாட்டி உங்களை குமுறீடப் போறாங்க"
-----------------------------------------------------------------------------
ஆர்.எஸ்.புரம், கோயமுத்தூர், கோவை மாவட்டம்

ஓசை செல்லா : "பால பாரதி, இது உங்க ஊரு மாதிரி, நீங்க எப்படி எப்படி மீட்டிங் நடத்தணும்னு ஆசைப் படுறீங்களோ, அப்படியேல்லாம் நடத்துங்க. "
(யப்பா, இப்படியா ஆப்பு வெப்பாங்க.. அடி பின்னீட்டானுவலே")
-----------------------------------------------------------------------------
வீ.த.பீப்பிள் ஜெய்: தோ பாருங்க சி.பி.ஐ ஆபீசர். நாங்க இனிமே அவரை கலாய்க்க முடியாம போயிடும்ணு சொன்னதாலதான் நான் அவரோட பிளாக் யூரலை உங்ககிட்டே தரேன். எக்காரனம் கொண்டும் நாங்க அவரைக் கலாக்குறதுக்கு ஆபத்து வந்துடக் கூடாது. அதுக்கு முதல்ல சத்தியம் பண்ணிக் குடுங்க.
---------------------------------------------------------------------------------
சி.பி.ஐ ஆபீசர்: "எப்படிய்யா பாலபாரதியோட பிளாக்கை ஓப்பன் பண்ணுறது. பாஸ்வோர்ட் தெரியனுமே"

உதவி ஆபீசர் : "அட பாஸ்வோர்ட் தெரியணும் அவ்வளவுதானே! இப்ப பாருங்க"
என்று சொல்லிவிட்டு தனது மொபைல் ஃபோனை எடுத்து பாலபாரதியின் நம்பரை டயல் செய்கிறார் .

உதவி ஆபீசர் : "ஹலோ பாரதிங்களா, வணக்கம் தலை"

பால பாரதி : "வணக்கம். வணக்கம் தலை. சொல்லுங்க யாரு பேசுறது"

உதவி ஆபீசர் : "நான் ஒரு புது பிளாக்கர் தலை. பிளாக்ல ஒரு சந்தேகம். எல்லாரும் உங்ககிட்ட கேட்டா உதவி பண்ணுவீங்கன்னு சொன்னாங்க. அதான் உங்களுக்கு அடிச்சேன்"

பால பாரதி : "சந்தேகமா, ரொம்ப சந்தோஷம். எது வேணும்னாலும் கேளுங்க, நம்மால முடிஞ்சத சொல்றேன் தல"

உதவி ஆபீசர் : "அது ஒண்ணும் இல்ல தலை, ஹெச்.டி.எம்.எல்ல கொஞ்சம் டவுட்டு, உங்க பிளாக் டெம்பிளேட் ஓப்பண் பண்ணி பார்த்து, அதுல லிங்க் எப்படி கொடுக்குறதுன்னு பார்த்து தெரிஞ்சிக்கிட்டேன்னா அவ்வளவுதான். உங்க பிளாக் பாஸ்வோர்ட் கொஞ்சம் சொல்லுங்க தலை"

பால பாரதி : "இவ்ளோதானா தலை, தாரளாமா சொல்றேன், எழுதிக்குங்க ******, இதான் தலை"

உதவி ஆபீசர் : "ரொம்ப தேங்க்ஸ் தலை, நான் அப்புறமா பேசுறேன்"

பால பாரதி : "ஓகே தலை, ஓகே தலை, எப்ப டவுட்னாலும் என்னைக் கூப்பிடுங்க பை"
This entry was posted on 10:27 AM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

95 பின்னூட்டங்கள்:

On Sun Jun 17, 11:08:00 AM , Unknown said...

Nilla iruku... Sibi...
Valka Thalai..

Ippitiku
பா.க.ச Detroit் கிளை

 
On Sun Jun 17, 11:10:00 AM , நாமக்கல் சிபி said...

இப் பதிவுக் காவியத்தைக் காண வந்து வெற்றிப் பதிவாக்கிய கொலைக் கண்களுக்கு ச்சே கலைக் கண்களுக்கு நன்றி!

- பா.க.ச
சென்னை திருமங்கலம்!

 
On Sun Jun 17, 11:11:00 AM , Anonymous said...

அடப் பாவிகளா முந்திட்டீங்களா?

 
On Sun Jun 17, 11:12:00 AM , Anonymous said...

அடப் பாவிகளா முந்திட்டீங்களா?

 
On Sun Jun 17, 11:13:00 AM , Anonymous said...

டோண்டு : "யேய் யேய்... இவன் பால பாரதியேதான்.. எப்படி எப்படி....?

எலிக்குட்டி சோதனை செஞ்சுதானே பொதைச்சீங்க?

 
On Sun Jun 17, 11:15:00 AM , Anonymous said...

//பால பாரதி : "கடவுளே! ஏன்யா என்னை கெட்டவனா படைச்சே?" //

என்ன வெளயாடுறீங்களா? செவனேன்னு இருந்த எனக்கு ஆப்பிள் வாங்கி கொடுத்தது யாரு

 
On Sun Jun 17, 11:18:00 AM , Anonymous said...

இந்த நாட்டுல அனானிங்க அனாங்களாவே ஆகிராங்க பதிவருங்க பதிவருங்களாவே ஆகிறாங்க இந்த பதிவு மட்டும் ஹிட்டாச்சுன்னா இப்படி இருக்க நம்ம வலைப்பூ இப்படி ஆயிடும்

 
On Sun Jun 17, 11:19:00 AM , Anonymous said...

எலிக்குட்டி சோதனை செய்வியோ இல்லை புலிக்குட்டி சோதனை செய்வியோ எனக்கு லினக்ஸ் மட்டும் இன்ஸ்டால் பன்னிக் கொடு

 
On Sun Jun 17, 11:20:00 AM , Anonymous said...

பதிவருங்க தான் கூட்டமா வருவாங்க அனானி நான் தனியாத்தான் வருவேன்

 
On Sun Jun 17, 11:22:00 AM , Anonymous said...

"மீட்டிங்க் வந்தா எத்தனை போண்டா //தருவீங்க//

அது அங்க வற்றவங்கள பொருத்தது

நாம யாரை எதிர்பாக்கலியோ அவரு வந்தா யாருக்குமே ஒன்னும் கிடைக்காது

 
On Sun Jun 17, 11:23:00 AM , Anonymous said...

ஒரு 10 மினிட் ரெஸ்ட் எனக்கு மட்டும் அப்பா கண்ணுகளா ஆடுங்க வாரேன்

 
On Sun Jun 17, 11:25:00 AM , குசும்பன் said...

சிபி எனக்கு ஒரு மெயில் பண்ணுங்க
kusumbuonly@gmail.com

 
On Sun Jun 17, 11:31:00 AM , துளசி கோபால் said...

:-)))))))))))))))

 
On Sun Jun 17, 11:40:00 AM , Anonymous said...

ஆச்சுப்பா

 
On Sun Jun 17, 11:42:00 AM , Anonymous said...

தள்ளி நில்லுப்பா என்ன பிராண்ட் குடிக்கறே இந்த கப்பு அடிக்குது

 
On Sun Jun 17, 11:42:00 AM , Anonymous said...

//சிபி எனக்கு ஒரு மெயில் பண்ணுங்க//


எதுக்கு இந்த தற்கொலை முடிவு?

 
On Sun Jun 17, 11:52:00 AM , Anonymous said...

இன்னைக்கு இங்கயே கடய விரிச்சிட வேண்டியதுதான் நல்ல யாவாரம் நடக்கும் போல

 
On Sun Jun 17, 12:03:00 PM , Anonymous said...

:)

 
On Sun Jun 17, 12:38:00 PM , Anonymous said...

டோண்டுவுக்கு ஆதி கேரக்டரைக் கொடுத்துட்டு எங்க உண்மை தமிழனை உட்டுட்டீங்கலேய்யா. அவுரு என்னய்யா பாவம் பண்ணாரு.அவுருக்கு ஒரு அடியாள் வேஷமாச்சியும் கொடுங்கையா

 
On Sun Jun 17, 12:45:00 PM , Anonymous said...

//டோண்டுவுக்கு ஆதி கேரக்டரைக் கொடுத்துட்டு எங்க உண்மை தமிழனை உட்டுட்டீங்கலேய்யா. அவுரு என்னய்யா பாவம் பண்ணாரு.அவுருக்கு ஒரு அடியாள் வேஷமாச்சியும் கொடுங்கையா//

ஓவரா காமெடி பண்ணினா படம் ஊத்திக்கும்யா!

 
On Sun Jun 17, 12:47:00 PM , Anonymous said...

//தள்ளி நில்லுப்பா என்ன பிராண்ட் குடிக்கறே இந்த கப்பு அடிக்குது //

நான் அடிச்சது கடா மார்க் சுருட்டு!

இதைத்தான் வெள்ளைக் காரன் சிகார்னு சொல்லிகிட்டு இயுக்குறான்!

 
On Sun Jun 17, 12:49:00 PM , Anonymous said...

"நடேசன் பார்க்கும், நாட்டுச் சாராயமும் மறந்து போகுமா"

என்ற பாடலைப் பற்றி பதிவு செய்யாத பா.க.ச உறுப்பினரை வன்மையாகக் கண்டிக்கிறேன்!

 
On Sun Jun 17, 12:49:00 PM , Anonymous said...

:D over kusumbu bro ungaluku.

 
On Sun Jun 17, 01:24:00 PM , Santhosh said...

இது எல்லாம் நல்லா இல்லா ஆமா சொல்லிட்டேன். :))

 
On Sun Jun 17, 01:43:00 PM , ILA (a) இளா said...

பதிவுக்கு-:)
பாலபாரதி- :(
மா.சிவகுமாரை இதுல இழுத்ததுக்கு :|

 
On Sun Jun 17, 01:44:00 PM , நாகை சிவா said...

கொல வெறி..........

 
On Sun Jun 17, 01:45:00 PM , நாகை சிவா said...

//இது எல்லாம் நல்லா இல்லா ஆமா சொல்லிட்டேன். :)) //

கொஞ்சம் என்ற வார்த்தை விட்டு போச்சு என்பதை சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன்.

 
On Sun Jun 17, 01:51:00 PM , இராம்/Raam said...

aaaaaaaaaaaaaaaaahhhhhhhhhhhhhhhhhhhhhhhh..................


தள,

உங்க பதிவை பார்த்துட்டு எனக்கு ஆனந்த கண்ணிரா வருது..... :)

 
On Sun Jun 17, 01:52:00 PM , ALIF AHAMED said...

கொஞ்சம் என்ற வார்த்தை விட்டு போச்சு என்பதை சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன்.
///

கொஞ்சம் கூட என்ற வார்த்தை விட்டு போச்சு என்பதை சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன்.

:)

 
On Sun Jun 17, 01:53:00 PM , ALIF AHAMED said...

தள,

உங்க பதிவை பார்த்துட்டு எனக்கு ஆனந்த கண்ணிரா வருது..... :)
///

அடுத்த பதிவுக்கும் இப்படி ஆனந்த கண்ணீர் வருமா..தல

 
On Sun Jun 17, 02:05:00 PM , நாமக்கல் சிபி said...

//அடுத்த பதிவுக்கும் இப்படி ஆனந்த கண்ணீர் வருமா//

மின்னல்! உம்ம் தீர்க்க தரிசனமே தரிசனம்!

:)

 
On Sun Jun 17, 03:11:00 PM , ALIF AHAMED said...

தள தவழ்ந்துகிட்டு இருந்தீங்க
நயண்தாரா
அண்ணி எதாவது சொன்னாங்களா மாத்திட்டீங்க

:)

 
On Sun Jun 17, 03:13:00 PM , Unknown said...

யப்பா மத்தியானம் வரேன்னு சொல்லிட்டு போன சிபிய காணோம் யாரும் பாத்தீங்களா

 
On Sun Jun 17, 03:15:00 PM , Unknown said...

ஒருவேள வலையுலக தாதா பாலபாரதி தன்னை கிண்டல்பன்னி பதிவு போட்டதால் ஆள வச்சி அடிச்சி கையெழுத்து வாங்க சாந்த்ரோ கார்ல செல்ப் ட்ரைவிங்கா கடத்தியிருப்பாரோ

 
On Sun Jun 17, 03:16:00 PM , Anonymous said...

//தள தவழ்ந்துகிட்டு இருந்தீங்க
நயண்தாரா
அண்ணி எதாவது சொன்னாங்களா மாத்திட்டீங்க//

என்னது அண்ணியா அடிங்.....

நான் சூப்பர் ஸ்டாரு ஜோடிதான் கூட ஆடவா

 
On Sun Jun 17, 03:18:00 PM , Anonymous said...

லூசுப் பையா லூசுப் பையா லூசுப் பையா லூசுப் பொன்னு உம் மேலதான் லூசா சுத்துதே

 
On Sun Jun 17, 03:20:00 PM , Anonymous said...

இந்த க்ராபிக்ஸ் போட்டவனுக்கு நன்றி சொல்லனும்னு ஒரு நன்றி உணர்ச்சி வேண்டாம்

நல்லா இருங்கடேய்

 
On Sun Jun 17, 03:25:00 PM , ALIF AHAMED said...

பாலபாரதியை படம் போட்டவன் said...
இந்த க்ராபிக்ஸ் போட்டவனுக்கு நன்றி சொல்லனும்னு ஒரு நன்றி உணர்ச்சி வேண்டாம்

நல்லா இருங்கடேய்
///

என்னது க்ராபிக்ஸா நாங்க இது உண்மையினு சொல்லிகிட்டு இருக்க்கோம் இங்க வந்து உன் கடமை உணர்ச்சியை சொல்லி ஆப்பு வைச்சிட்டீயே...:(

 
On Sun Jun 17, 03:29:00 PM , நாமக்கல் சிபி said...

//
அனுபவித்தவன் Said........

எதுக்கு இந்த தற்கொலை முடிவு? //

:-)

 
On Sun Jun 17, 03:34:00 PM , Anonymous said...

//உன் கடமை உணர்ச்சியை சொல்லி ஆப்பு வைச்சிட்டீயே...:(//

அப்ப இதுக்கு பேருதான் ஆப்பா?

 
On Sun Jun 17, 03:52:00 PM , கண்மணி/kanmani said...

:))

 
On Sun Jun 17, 06:04:00 PM , வரவனையான் said...

//பால பாரதி : "கடவுளே! ஏன்யா என்னை கெட்டவனா படைச்சே?"





அசரரீ : "நல்லவனா படைச்சா கெட்டுப் போயிடுவேன்னுதான். - பா.க.ச, தேவலோகம் கிளை"





பால பாரதி : "அடப் பாவிகளா, அங்கயுமாடா! :( " //




கிளாசிக்


கலக்கல் தலை

:)))))))))))))))

 
On Sun Jun 17, 06:37:00 PM , ILA (a) இளா said...
This comment has been removed by the author.
 
On Sun Jun 17, 06:38:00 PM , ILA (a) இளா said...

//பாலபாரதி : சும்மா கேட்டவுடன் அதிருதில்ல! //
அவரு போன்ல கூப்பிட்டாதான் அதிருது. என் செல்போன் வைபரேட்டர் மோட்ல இருக்குது.

இப்படிக்கு பா.க.ச
நரகலோகம்- 36வட்ட வார்டு மெம்பர்.

 
On Sun Jun 17, 06:39:00 PM , ILA (a) இளா said...

உங்களை எல்லாம் நண்பர்களா வெச்சா நரகம்தானே கெடைக்கும்

கெட்டவரா பொறந்து நல்லது பண்ணாத பாலபாரதியின் ரசிகர் மன்றம்

கொழிஞ்சிகாட்டூர் விவசாயி

 
On Sun Jun 17, 07:28:00 PM , கோவி.கண்ணன் said...

//அசரரீ : "நல்லவனா படைச்சா கெட்டுப் போயிடுவேன்னுதான். - பா.க.ச, தேவலோகம் கிளை"//

சிபி.......சூப்பர்...வழக்கமான உங்கள் நக்கல்.

:)

 
On Sun Jun 17, 07:35:00 PM , நாமக்கல் சிபி said...

//சிபி.......சூப்பர்...வழக்கமான உங்கள் நக்கல்.
//

ரொம்ப நன்றி கோவியாரே!

 
On Sun Jun 17, 07:42:00 PM , Anonymous said...

//தோ பாருங்க, போண்டா இல்லாம மீட்டிங்குக்கு வர விருப்பம் இருக்குவங்க எல்லாம் இப்படி வாங்க.//.

ரெண்டு மூணு வருசமா இதச் சொல்லித் தானேய்யா வலப் பதிவே கொலப்பதிவாபோச்சி

 
On Sun Jun 17, 07:45:00 PM , Anonymous said...

//எப்படிய்யா பாலபாரதியோட பிளாக்கை ஓப்பன் பண்ணுறது. பாஸ்வோர்ட் தெரியனுமே"
//

எனக்கு தெரியுமே

 
On Sun Jun 17, 07:52:00 PM , Anonymous said...

//எனக்கு தெரியுமே //

உஷ்! அதை யார்கிட்டயும் சொல்லக் கூடாது. அது ஊரறிஞ்ச ரகசியம்!

 
On Sun Jun 17, 08:01:00 PM , Anonymous said...

பின்னூட்டம் போட ஆள்தேவை
ஒரு பின்னூட்டத்துக்கு பரிசாக நண்றி என்று சிபி சொல்வார் மேலும் உங்கள் பதிவுகளுக்கு பொக்கை பின்னூட்டம் போட்டு மொக்கை பதிவுகள் தூக்கி நிறுத்தப்படும்.

பின்னூட்ட வேலைவாய்ப்பிதழ்
அல்சூர் கிளை
அனுக வேண்டிய முகவர்
மஞ்சள் ரவி :)

 
On Sun Jun 17, 08:09:00 PM , Anonymous said...

கை வலிக்குதுப்பா அம்பது வரிக்கும் கொண்டாந்தாச்சி யாராவது இன்னும் கொஞ்ச நேரம் இழுங்க நான் தம்மடிச்சிட்டு வரேன்

 
On Sun Jun 17, 09:22:00 PM , VSK said...

இதான் ரூம் போட்டு சிந்திக்கறதோ?

இல்லை, இல்லை!

உங்களுக்கு னேச்ச்சுரலாவே வருது இது!

கூஊஊஊஊஊஉல்!!
:))

 
On Sun Jun 17, 09:43:00 PM , நாமக்கல் சிபி said...

//பின்னூட்ட வேலைவாய்ப்பிதழ்
அல்சூர் கிளை
அனுக வேண்டிய முகவர்
மஞ்சள் ரவி :)
//

:)

அடப் பாவிகளா!

 
On Sun Jun 17, 10:48:00 PM , புதுவைக்குயில் பாசறை said...

பால பாரதி : "கடவுளே! ஏன்யா என்னை கெட்டவனா படைச்சே?"

அசரரீ : "நல்லவனா படைச்சா கெட்டுப் போயிடுவேன்னுதான். - பா.க.ச, தேவலோகம் கிளை"


ரஜினி ராவ்: "கடவுளே! ஏன்யா என்னை லூசு நடிகர
படைச்சே?"

கடவுள்: நல்ல நடிகனா பொறந்து இருந்தா உன்னை
தமிழ் நாட்டுல மதிக்க மாட்டங்க.

பா.க.ச, தேவலோகம் ஓரிஜினல் கிளை"
(எமக்கு வேரு எங்கும் கிளைகள் இல்லை)

 
On Mon Jun 18, 03:13:00 AM , சிறில் அலெக்ஸ் said...

ரெம்ப நல்ல கலாய்ச்சல், சிபி.
Cool.

 
On Mon Jun 18, 10:12:00 AM , லிவிங் ஸ்மைல் said...

சூப்பரோ சூப்பர் கலாய்ப்பு!!

 
On Mon Jun 18, 10:51:00 AM , Unknown said...

//இது எல்லாம் நல்லா இல்லா ஆமா சொல்லிட்டேன். :))//

ஆமாய்யா ஏன் சொல்ல மாட்டே போட்டோம மெயில்ல அனுப்பி எனக்கு அஞ்சே மினிட்ல கிராபிக்ஸ் பன்னிக் கொடுண்ணா நல்லாவா இருக்கும் அடுத்த தடவை பாத்துக்கலாம் போப்பா

 
On Mon Jun 18, 11:07:00 AM , மனதின் ஓசை said...

சான்ஸே இல்ல.. கலக்கல்...

 
On Mon Jun 18, 12:04:00 PM , Anonymous said...

பாலபாரதி பேரப்போட்ட்டாலே நூறுக்கு உத்திரவாதம் அப்படீன்னு ஆகிப்போச்சு...:)))

 
On Mon Jun 18, 02:01:00 PM , நாமக்கல் சிபி said...

என்ன இது?
இன்னும் பா.க.ச தீவிரவாதிகளில் நிறையப் பேரை காணோம்?

:(

கடமை மறந்தார்களா?
ஐயஹோ! பாலபாரதி! என்ன ஆச்சு பா.க.சாவுக்கு?

 
On Mon Jun 18, 03:44:00 PM , கவிதா | Kavitha said...

இளமையாகக் காட்ட படாத பாடு பட்டு ஒப்பனையின் மூலம் 40 வயது இளைஞராக்கி இருக்கிறார்கள்.//

இதை நான் வன்மைய கண்டிக்கிறேன்... 50 வயது இளைஞர் என்று இருந்து இருக்க வேண்டும்..

போட்டோஸ் சூப்பர்!!

 
On Mon Jun 18, 05:11:00 PM , பொன்ஸ்~~Poorna said...

எதை விடுறது, எதைச் சொல்லுறதுன்னு தெரியலை.. டாஆஆஆஆப் :-)

பாட்டெல்லாம் விட்டுட்டீங்களே சிபி..

மும்பையிலிருந்து வரும் பாலபாரதி,
'ஏ, பல்லேலக்கா பல்லேலக்கா
ஒட்டுமொத்த சங்கத்துக்கும்
அண்ணன் வந்தார் சென்னையிலே சந்திப்பா.. ' என்று பாடிக் கொண்டே வருகிறார்..

அடுத்து 'ஸ்டைல், ஸ்டைல்
நறநற என படிப்பதுவும் ஸ்டைல்
லொடலொட என பேசுவதும் ஸ்டைல்
வெடிவெடி என வெடிப்பதும் ஸ்டைல்
விறுவிறுவிறு மொட்டைபாஸ் ஸ்டைல்'

வைட் பாட்டுக்கு க்ராபிக்ஸ் எல்லாம் தேவையில்லை.. எல்லாம் ஏற்கனவே வெள்ளைதான்..

வேற என்னங்க பாட்டிருக்கு?

'சஹாரா சூசி பாடுதோ, (தமிழ்மணம்)
வராமல் வோர்ட்பிரஸ் ஆனதோ..'

(பாட்டுக்குப் பி.கு.: தலை லாப்டாப் சஹாரா.. )
ஏதும் விட்டுப் போச்சா? ;)

 
On Tue Jun 19, 07:18:00 AM , dondu(#11168674346665545885) said...

டோண்டு ராகவன்: இப்ப நடேச முதலியார் பார்க்கையே எடுத்துக் கொள்வோம்...
முரளி மனோஹர்: அடேய் அடங்குடா டோண்டு, அது நடேசன் பார்க்காகி எவ்வளோ நாளாச்சு?
டோண்டு ராகவன்: சமீபத்திலே 19780லே எம்ஜிஆர் என்ன பண்ணாற்னாக்க,..அடேய் முரளி மனோஹர் ஏண்டா ஓடறே?

அன்ப்புடன்,
டோண்டு ராகவன்

 
On Tue Jun 19, 07:20:00 AM , dondu(#11168674346665545885) said...

சமீபத்திலே 19780லே --> சமீபத்திலே 1978லே ன்னு போடலாம்னு பாத்தேன். இருக்கட்டும் 19780 நன்றாகவே இருக்கு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

 
On Tue Jun 19, 07:22:00 AM , ப்ரியன் said...

சூப்பரப்பூ

 
On Tue Jun 19, 07:32:00 AM , ப்ரியன் said...

பொன்ஸ் உங்கள் பாடல்கள் சூப்பரோ சூப்பர்...அது எப்படிங்க பாலா வை கலாய்க்குறதுன்ன எல்லோருக்கும் கற்பனை அருவி மாதிரி கொட்டுது??

 
On Tue Jun 19, 07:39:00 AM , கப்பி | Kappi said...

இது தான் அக்மார்க் பாகச பதிவு :)))

நம்மகிட்ட தலயோட சூப்பர் போட்டோ ஒன்னு இருக்கு...அதை தல பர்மிசனோட ரிலீஸ் செஞ்சுடுவோம் :))

 
On Tue Jun 19, 08:08:00 AM , நாமக்கல் சிபி said...

//டோண்டு ராகவன்: சமீபத்திலே 19780லே எம்ஜிஆர் என்ன பண்ணாற்னாக்க,..அடேய் முரளி மனோஹர் ஏண்டா ஓடறே?

//

:))

 
On Tue Jun 19, 08:09:00 AM , நாமக்கல் சிபி said...

//பொன்ஸ் உங்கள் பாடல்கள் சூப்பரோ சூப்பர்...அது எப்படிங்க பாலா வை கலாய்க்குறதுன்ன எல்லோருக்கும் கற்பனை அருவி மாதிரி கொட்டுது??
//

அதான் எங்க பாலா!

அவன் கண்ணுக்குள்ளே காந்தம் இருக்கு உண்மைதானடா!

ஏ! அமுகன்னா அமுகதான்! குமுகன்னா குமுகதான்!

 
On Tue Jun 19, 08:11:00 AM , நாமக்கல் சிபி said...

//நம்மகிட்ட தலயோட சூப்பர் போட்டோ ஒன்னு இருக்கு...அதை தல பர்மிசனோட ரிலீஸ் செஞ்சுடுவோம் :)) //

கப்பி! அது இன்னும் சீக்ரெட்டா வெச்சிருக்குற படம்!

கிளைமாக்ஸ்ல 20 நிமிஷம் மட்டும் அந்த கெட்-அப்புல வராறாம் பாலபாரதி!

 
On Tue Jun 19, 10:25:00 AM , - யெஸ்.பாலபாரதி said...

அடப்பாவிகளா... ரெண்டு நாள் இணையத்துப்பக்கம் வரலைன்னா.. போட்டோ போட்டு( ஏலேய்.. மகி, உனக்கு இருக்குடே! நற..நற..) பதிவையும் போட்டு இருக்கீங்களே சிபி..! அதுக்கு 71பின்னூட்டம் வேற... அடங்கவே மாட்டீங்களா..?

 
On Tue Jun 19, 10:27:00 AM , - யெஸ்.பாலபாரதி said...

இதுல.. ஏகப்பட்ட ஆளுங்க வேற.. புது முகமா தெரியுதே! :(

கொஞ்ச நாளா எல்லோரும் அமைதியா இருந்ததுமே.. சரி, சங்கத்தை கலைச்சுட்டாய்ங்களாக்கும்ன்னு நெனைச்சு ஏமாந்துட்டேனப்பூ! :(((((((

 
On Tue Jun 19, 10:28:00 AM , - யெஸ்.பாலபாரதி said...

கப்பி, சொன்னா கேளு... அஞ்சலி மாதிரி பாப்பாக்கள் உலா வர்ற வலை உலகத்தில குண்டு வைக்கிறது நல்லா இல்ல.. அப்புட்டுத்தான் சொல்லுவேன்.

 
On Tue Jun 19, 10:43:00 AM , நாமக்கல் சிபி said...

//அடப்பாவிகளா... ரெண்டு நாள் இணையத்துப்பக்கம் வரலைன்னா.. போட்டோ போட்டு( ஏலேய்.. மகி, உனக்கு இருக்குடே! நற..நற..) பதிவையும் போட்டு இருக்கீங்களே சிபி..! அதுக்கு 71பின்னூட்டம் வேற... அடங்கவே மாட்டீங்களா..?
//


//இதுல.. ஏகப்பட்ட ஆளுங்க வேற.. புது முகமா தெரியுதே! :(

கொஞ்ச நாளா எல்லோரும் அமைதியா இருந்ததுமே.. சரி, சங்கத்தை கலைச்சுட்டாய்ங்களாக்கும்ன்னு நெனைச்சு ஏமாந்துட்டேனப்பூ! :(((((((
//


//கப்பி, சொன்னா கேளு... அஞ்சலி மாதிரி பாப்பாக்கள் உலா வர்ற வலை உலகத்தில குண்டு வைக்கிறது நல்லா இல்ல.. அப்புட்டுத்தான் சொல்லுவேன்
//

ஆஹா! புதுசா மூணு பஞ்ச் டயலாக் படத்துல சேர்க்கலாம் போல இருக்கே!

 
On Tue Jun 19, 10:44:00 AM , நாமக்கல் சிபி said...

//.. புது முகமா தெரியுதே!//

ஆமா தலை! எல்லாம் புதுசா சேர்ந்த உறுப்பினர்கள்!

(இது நீங்களாச் சேத்த கூட்டம் இல்லே!
தானாச் சேர்ந்த கூட்டம்)

 
On Tue Jun 19, 10:45:00 AM , நாமக்கல் சிபி said...

இன்னும் சுப்பைய்யா வாத்தியார், சென்ஷி, வீதபீப்பிள் ஜேய் எல்லாரும் எங்க போனாங்கன்னே தெரியலை!

 
On Tue Jun 19, 06:45:00 PM , நாமக்கல் சிபி said...

ஹைய்யா! வீ த பீப்பிள் வந்தாச்சு! அவருகிட்ட எப்படியாவது சொல்லணுமே!

 
On Tue Jun 19, 08:02:00 PM , We The People said...

எங்க தல தலைமுடியோட காட்டிய சிபி ஆசோசியேட் டிரெக்டரை வன்மையா கண்டிக்கிறேன்.

//20 வருடத்தைக் குறைத்து இளமையாகக் காட்ட படாத பாடு பட்டு ஒப்பனையின் மூலம் 40 வயது இளைஞராக்கி இருக்கிறார்கள்.//

என்ன தலைக்கு 60 வயசு தானா?? என்னால நம்பவே முடியலையே!!!

ஏம்ப எனக்கு தலயை போட்டுக்கொடுக்கற கேரக்டர் கொடுத்திட்டீங்க, வேற கேரக்டர் கிடைக்களையா??

ட்ரைலர் நல்லா இருக்கு! படம் எப்ப எங்க ரிலீஸ் பண்ணலாம்?? எல்லா தியேட்டர்லயும் விசாரிக்க ஆரம்பிச்சுடாங்க!!!

//ஹைய்யா! வீ த பீப்பிள் வந்தாச்சு! அவருகிட்ட எப்படியாவது சொல்லணுமே!//

அட நான் வந்தது உங்களுக்கு எப்படி தெரியும்!

சூப்பர், வாழ்த்துக்கள்!

தலயை கலாத்ததில் சந்தோஷமாயிட்டோம்!

நா.ஜெயசங்கர்,

பா.க.ச தலிம கலகம்

 
On Tue Jul 10, 05:26:00 PM , முத்துகுமரன் said...

கண்ணுங்களா

சிவாஜியோட குரு
நம்ம

பா
பா
ஜி

 
On Tue Jul 10, 06:47:00 PM , வெட்டிப்பயல் said...

தள,
கலக்கல் பதிவு...

 
On Tue Jul 10, 07:48:00 PM , Anonymous said...

அடப்பாவிங்களா!

ஒரு அப்பாவி மனுசனை இப்படி பாடாய்ப்படுத்திட்டிருக்கீங்களே!

பாவம் விட்டுருங்க!

 
On Tue Jul 10, 08:20:00 PM , மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

கலக்கல்!!!

எதைச் சொல்லுறது எதை விடுறதுன்னு தெர்யல சிபி. ஆனாலும் நினைச்சு நினைச்சு சிரிக்கப்போறது அந்த தேவலோக கமெண்ட்.

பொன்ஸ் போட்டிருக்கிற பாட்டையும் பின் குறிப்பா சேர்த்துவிட்டிருங்களேன்.

பாகச ஆளுங்க நிறையப் பேரக் காணமே? ஏன்???

-மதி
பா.க.ச. கனடா கிளை

 
On Sat Jul 21, 12:21:00 AM , முரளிகண்ணன் said...

சித்தூர் தாண்டினா காட்பாடி
எங்க
சிபி கடிச்சா டெட்பாடி

 
On Sun Jul 22, 01:13:00 PM , நாமக்கல் சிபி said...

//கலக்கல்!!!

எதைச் சொல்லுறது எதை விடுறதுன்னு தெர்யல சிபி. ஆனாலும் நினைச்சு நினைச்சு சிரிக்கப்போறது அந்த தேவலோக கமெண்ட்.

//

மிக்க நன்றி மதி அவர்களே!

விரைவில் உங்களை வெச்சி கூட ஒரு புரோகிராம் இருக்கு!

 
On Sun Jul 22, 01:13:00 PM , நாமக்கல் சிபி said...

//சித்தூர் தாண்டினா காட்பாடி
எங்க
சிபி கடிச்சா டெட்பாடி //

எனக்கே பஞ்சா?

தாங்க்ஸ் முரளி!

 
On Wed Nov 07, 10:25:00 PM , manjoorraja said...

அப்படியே அந்த சிபிஐ ஆபிசர் என் பாஸ்வோர்ட் களவாணியையும் கண்டுப்பிடிச்சி கொடுத்தா நல்லா இருக்கும்.

குவைத் கிளை

 
On Sat Jun 27, 01:32:00 PM , சென்ஷி said...

:)

வெளுத்து வாங்கியிருக்கீங்க.. சிவாஜி வந்த சமயத்துல நான் லாங் லீவ்ல இருந்தேன்ல..

 
On Sat Jun 27, 01:33:00 PM , சென்ஷி said...

//பால பாரதி : "கடவுளே! ஏன்யா என்னை கெட்டவனா படைச்சே?"

அசரரீ : "நல்லவனா படைச்சா கெட்டுப் போயிடுவேன்னுதான். - பா.க.ச, தேவலோகம் கிளை"//

ச்சான்சே இல்லை. செம்மயா சிரிச்சுட்டேன் :)

 
On Sat Jun 27, 01:34:00 PM , சென்ஷி said...

//பால பாரதி : "இவ்ளோதானா தலை, தாரளாமா சொல்றேன், எழுதிக்குங்க ******, இதான் தலை"

உதவி ஆபீசர் : "ரொம்ப தேங்க்ஸ் தலை, நான் அப்புறமா பேசுறேன்"

பால பாரதி : "ஓகே தலை, ஓகே தலை, எப்ப டவுட்னாலும் என்னைக் கூப்பிடுங்க பை"//

அவ்வ்வ்வ்வ்வ்...

அப்ப தல பேஜ் காணாமப்போனது இப்படித்தானா!?

 
On Sat Jun 27, 01:52:00 PM , துளசி கோபால் said...

ஹைய்யோ ஹைய்யோ:-)))))))

 
On Sat Jun 27, 02:47:00 PM , Thamiz Priyan said...

கலக்கல் தள! அப்ப நல்ல பார்மில் இருந்து இருக்கீங்க.. ;-))

 
On Sat Jun 27, 03:06:00 PM , Rajeswari said...

சூப்பரப்ப்பூ.

//நாமக்கல் சிபி said...
இப் பதிவுக் காவியத்தைக் காண வந்து வெற்றிப் பதிவாக்கிய கொலைக் கண்களுக்கு ச்சே கலைக் கண்களுக்கு நன்றி!

- பா.க.ச//

ஆங்..சரிங் சரிங்..இதுக்கெல்லாம் எதுக்கு நன்றி சொல்லிகிட்டு..அதான் வாழ்த்த சொல்லி மணியார்டர் அனுப்பிச்சீங்களே..வந்துடுச்சு..
வர்ட்டா

 
On Sun Jun 28, 04:19:00 PM , துபாய் ராஜா said...

//பால பாரதி : "ஓகே தலை, ஓகே தலை, எப்ப டவுட்னாலும் என்னைக் கூப்பிடுங்க பை//

இப்படி வெள்ளந்தியான ஒரு பச்சமண்ணை போட்டு பாடாய்படுத்துறீங்களே.

ஏழேழு லோகத்துல இருந்து எத்தனை பேர் வந்து பின்னூட்டம் போட்டு தாக்குனாலும் எங்க தல தாங்குவாருய்யா.


( ஏதோ நம்ம பங்குக்கு )

 
On Tue Nov 02, 04:47:00 PM , சிட்டுக்குருவி said...

இந்த பதிவுலகத்துல இப்படியொரு கைப்புள்ளையா!!