இரவு ஒன்பதரை மணியளவில் இலேசான தூரல். சில்லென்ற காற்று. கிளைமேட்டை வெகுவாக அனுபவித்த படியே நடைபாதையில் நடந்து வருகிறார் நாமக்கல் சிபி. எதிரே ஓர் உருவம் மூச்சு வாங்க ஓடி வர ஒதுங்கி வழி விட்டபடியே யாரென்று பார்க்கிறார். எங்கேயோ எப்போதோ பார்த்த முகமாக தோன்ற "அட நம்ம புதுக் கவிஞர்!" என்றவாறே பின்தொடர்கிறார்.

"ஹலோ கவிஞரே ஏன் இப்படி ஓடுறீங்க?"

திரும்பிப் பார்த்த கவிஞர் பழையனவற்றை மறந்தவராக சிறு புன்முறுவலுடன்

"அடையாளமற்ற வெறுமையொன்று, தன்னை நிரப்பச் சொல்லித் துரத்துகிறது"

சிபி :"ஓ! அதுதான் ஓடுகிறீர்களா? எவ்வளவு தூரம் இப்படி ஓடினீர்கள்?"

கவிஞர் : "ஓடிக்கொண்டே இருக்கிறேன்!"

சிபி: "ஓடுங்கள் நல்ல உடற்பயிற்சிதான்! உங்க ரேன்ஞ்சுக்கு நானும் ஒரு கவிதை சொல்கிறேன் கேளுங்களேன்! கேட்டுட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க!"

கவிஞர்: (மனதுக்குள்) "கவிதையா! இன்னிக்கு எனக்கு நேரம் சரி இல்லைதான் போல, தெரியாம வம்பை விலை கொடுத்து வாங்கிட்டேன்"
(சத்தமாக) "ஆஹா! சொல்லுங்களேன் கேட்போம்!"

சிபி: "தூரம் தெரியா எல்லையைத் தேடி நானும் ஓடிக் கொண்டிருக்கிறேன்"

கவிஞர் : "இது கவிதை மாதிரி தெரியலையே!"

சிபி: "அவசரப் படாதீங்க! இப்ப சொல்றேன் பருங்க!

"தூரம்
தெரியா
எல்லையைத்
தேடி
நானும்
ஓடிக்
கொண்டிருக்கிறேன்"

இது எப்படி இருக்கு? உங்க ரேஞ்சுக்கு வருதா?"

கவிஞர் : (மனதுக்குள் தன்னைத்தானே நொந்தவாறே)
"ஐயோ! உங்க ரேஞ்செல்லாம் என்ன? நாங்க எல்லாம் வர முடியுமா?"

சிபி : (புளகாங்கிதத்துடன் ஆனால் வெளியில் காட்டிக் கொள்ளாமல் தன்னடக்கமாக) "அதான! யாராவது மேல இருந்து கீழே வருவாங்களா?"

கவிஞர் : "அட! நீங்க வேற! யோசிச்சுப் பாருங்க தள! எல்லோரும் எதுக்காவதுதான ஓடுறோம்! பணம், புகழ், இலக்கியம், பொண்ணு... இப்படி!
என்னை எல்லாமே கலந்து துரத்துது!"

சிபி: "அடப் பாவமே! யோசிக்கவா சொன்னீங்க! இப்பப் பாருங்க!

"எதை யோசிப்பது
என்றே தெரியாமல்
நீண்ட நாட்களாக
யோசித்துக்
கொண்டிருக்கிறேன்"

கவிஞர் : :(

சிபி : "எதற்காக
இப்படி யோசிக்க வேண்டும்
என்று யோசனைக் கைவிட
யோசித்துக் கொண்டிருக்கிறேன்
இப்போது!"

கவிஞர்: (தன் மூக்குக்கு நேராக தன் ஆள் காட்டி விரலை நீட்டிக் கொண்டு)
" தேவையா! உனக்கு இது தேவையா..?"
"ஐயா.. சாமீ.. கொல்றீங்களே தள...!"

சிபி : "ஆழ்ந்த யோசனையின் அருமை
யோசனை ஏதுமின்றித் திரிகையிலும்
யோசனையின்மையின் நிம்மதி
ஆழ்ந்த யோசனையிலும்
தெரிய வரும்போது
யோசிப்பதை விடலாமா வேண்டாமா
என்பதே இப்போதைய
தலையாய யோசனையாய்!"

கவிஞர் "ங்கே" என்று பரிதாபமாக விழிக்கிறார்.

சிபி : "நீங்களும் கண்டினியூ பண்ணுங்க! பண்ணலாம வேண்டாமான்னு யோசிக்காதீங்க! யோசிக்காம டக்குன்னு சொல்லுங்க! தொடர்ந்து யோசிக்கலாமா வேண்டாமான்னு!"

கவிஞர் : "ஆஹா! ஆரம்பிச்சிட்டான்யா!' "ஐயா! எனக்கு நேரமாச்சு ஆளை விடும்"

சிபி: "ஆஹா! இன்னிக்கு கலாய்த்தலுக்கு யோசிக்காமலேயே ஒரு பதிவு கிடைச்சிருச்சு"

கவிஞர் "யாரைக் கலாய்க்கப் போறீங்க?"

சிபி: "உங்களைத்தான்"

கவிஞர் : "நீங்க மட்டுமா?"

சிபி: "ஏன் இன்னும் யாரையாவது கூப்பிடணுமா?" என்றவாறே தன் சட்டைப்பையில் இருந்து செல் ஃபோனை எடுத்து

"ஹல்லோ படகு அக்காவா?.." என்று ஆரம்பிக்க

கவிஞர் : "என்னது படகு அக்கா வேறயா?"
என்று அலறியபடி முன்பை விட வேகமாய் ஓடுகிறார்.

சிபி : "ஹலோ ஓடாதீங்க நில்லுங்க!"

கவிஞர் : "இப்ப என்னை எதுவும் துரத்தலை! நான் சும்மாவே ஓடுறேன்.."
|
This entry was posted on 9:56 PM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

31 பின்னூட்டங்கள்:

On Wed Oct 25, 10:40:00 PM , VSK said...

//"ஆஹா! ஆரம்பிச்சிட்டான்யா!' //

:)))

 
On Wed Oct 25, 10:48:00 PM , நாமக்கல் சிபி said...

வாங்க எஸ்.கே! முதல் ஆளா வந்து சிரிச்சிருக்கீங்க! நன்றி!

:)))

 
On Wed Oct 25, 10:49:00 PM , G.Ragavan said...

ஹா ஹா ஹா

நீண்டது என்பது
குறுகும் பொழுது
வெண்மையின் நிறம்
கருமையாகும் தூரப் புள்ளியில்
அதிநவீன மின்சார ரயிலின்
மேல் மாடியில்
நான்கு வீடுகள் வாடகைக்கு!

இந்தக் கவிதையை நானும் கவிஞருக்குச் சொல்லிக் காட்ட விரும்புகிறேன்.

 
On Wed Oct 25, 11:06:00 PM , கைப்புள்ள said...

யாருங்க அது... உங்களால் ப்ளேடாடப் பட்ட அந்த பாவப்பட்ட கவிஞரு? :)

 
On Wed Oct 25, 11:14:00 PM , நாமக்கல் சிபி said...

//உங்களால் ப்ளேடாடப் பட்ட அந்த பாவப்பட்ட கவிஞரு?//

வாங்க கைப்புள்ளை!

அதை யாருக்கும் சொல்ல மாட்டேன்னு நம்ம மணிகண்டன்கிட்டே வாக்கு கொடுத்திருக்கேனே!

 
On Wed Oct 25, 11:16:00 PM , நாமக்கல் சிபி said...

இந்த கவிஞர்கள் தொல்ல தாங்க முடியலப்பா... (கவுண்டர் ஸ்டைலில் படிக்கவும்)

ஆமாம் இங்க நீங்க எந்த கவிஞரை கலாய்க்கறீங்க ;)

 
On Wed Oct 25, 11:17:00 PM , நாமக்கல் சிபி said...

இந்த கவிஞர்கள் தொல்ல தாங்க முடியலப்பா... (கவுண்டர் ஸ்டைலில் படிக்கவும்)

ஆமாம் இங்க நீங்க எந்த கவிஞரை கலாய்க்கறீங்க ;)

 
On Wed Oct 25, 11:19:00 PM , நாமக்கல் சிபி said...

//ஆமாம் இங்க நீங்க எந்த கவிஞரை கலாய்க்கறீங்க //

வாங்க வெட்டிப்பயலாரே!

எத்தினி தபா கேட்டாலும் ஒரே பதில்தான்!

"அதை யாருக்கும் சொல்ல மாட்டேன்னு நம்ம மணிகண்டன்கிட்டே வாக்கு கொடுத்திருக்கேனே! "

 
On Wed Oct 25, 11:46:00 PM , இலவசக்கொத்தனார் said...

உமக்கு நான் செஞ்சதை கொஞ்சம் கூட சுயலாபம் கருதாம அடுத்த கவிஞர்களுக்கு பகிர்ந்து அளிக்கும் உம் மனப்பான்மை மெச்சப்படுகிறது.

 
On Wed Oct 25, 11:52:00 PM , ALIF AHAMED said...

:::)))))))))


tamil typing problem so.......

 
On Thu Oct 26, 09:00:00 AM , கோவி.கண்ணன் [GK] said...

தலையை பிச்சிக்க வச்சிட்டிங்களே சிபி !
ஆனால் எதுக்காக பிச்சிக்கிறோம் என்று தெரிந்துதான் ...
:)

 
On Thu Oct 26, 09:40:00 AM , கைப்புள்ள said...

//கவிஞர் "ங்கே" என்று பரிதாபமாக விழிக்கிறார்//

உங்களால் ப்ளேடாடப்பட்ட அந்த பரிதாபத்துக்குரிய கவிஞர் யாருங்க?
:)

 
On Thu Oct 26, 10:15:00 AM , அனுசுயா said...

///ஆழ்ந்த யோசனையின் அருமை
யோசனை ஏதுமின்றித் திரிகையிலும்
யோசனையின்மையின் நிம்மதி
ஆழ்ந்த யோசனையிலும்
தெரிய வரும்போது
யோசிப்பதை விடலாமா வேண்டாமா
என்பதே இப்போதைய
தலையாய யோசனையாய்!///

nallathan irukku kavithai mathiri

 
On Thu Oct 26, 01:25:00 PM , Vaa.Manikandan said...

தல!

உங்ககிட்ட ஜிமெயில் சாட்டிங் ல கூட கவனமா இருக்கணும்னு தெரியாமப் போயிடுச்சே!

நம்ம பீலிங்ஸ் எல்லாம் உங்ககிட்ட புலம்பினா அதை நீங்க பதிவாக்கிடுவீங்களா?

மக்களே,
இதை எல்லாம் தட்டிக் கேட்க யாருமே இல்லையா? :(

 
On Thu Oct 26, 05:17:00 PM , மிதக்கும்வெளி said...

மணிகண்டன்தானே அந்த கவிஞர்?

 
On Thu Oct 26, 05:46:00 PM , பொன்ஸ்~~Poorna said...

ஐயோ.. ஜிமெயிலில் கான்பரன்ஸ் இல்லையே.. இருந்திருந்தா.... நானும்... ;)

 
On Fri Oct 27, 02:47:00 PM , சரவணன் said...

ஆகா எல்லாரும் முடிவோடதான் இருக்காங்க ;))))))

நல்ல நகைச்சுவையாக இருந்தது

நன்றி...

 
On Fri Oct 27, 02:57:00 PM , Geetha Sambasivam said...

நல்லாத் தான் இருந்தீங்க, பாவம், இப்போ வெயில் கூட இல்லையே? ஒருவேளை கோவையிலே வெயில் ஜாஸ்தியோ? :-)

 
On Fri Oct 27, 03:27:00 PM , ஜொள்ளுப்பாண்டி said...

தள ஏதோ இளக்கியம் போலக்கீது?? ரோசணை பண்றதியே ரோசணை பண்ர ஜகஜ்ஜாலக்கவிஞருங்க நீங்க !! ஆமா அப்புறம் ஓடுனவரு இன்னமும் நின்னபாடில்லையாமே??? :)))

 
On Fri Oct 27, 05:21:00 PM , thiagu1973 said...

இதுல இருந்துஎன்னா தெரியுதுன்னா
அரகுறையா யாரும்எழுதாதீங்க "நம்ம" சிபி அண்ணன் மாதிரி ஒரு டச்சிங்கா (?) எழுங்க அப்படிங்கிற பாயிண்டு
சோக்கா போட்டப்பா ஒரு பதிவு
சும்மா சொல்ல கூடாது உமக்கு கவிதை ஞானமும் கலாய்த்தல் ஞானமும் சேர்ந்தே இருக்கு !

-தியாகு (நேன்னு முழிச்சுட்டாதான்எழுதுரேன்;)

 
On Fri Oct 27, 10:25:00 PM , இராம்/Raam said...

//கவிஞர் என்றாலும் கலாய்க்காமல் விடுவோமா?//

அதிலே என்ன பாரபட்சம்... எல்லாரும் சமம்தான்..!!!

 
On Thu Nov 02, 02:42:00 AM , Syam said...

ஓட ஓட ஆப்பு வைப்பது எப்படினு சூப்பரா விளக்கி இருக்கீங்க... :-)

 
On Thu Nov 02, 12:46:00 PM , மதுமிதா said...

///அதை யாருக்கும் சொல்ல மாட்டேன்னு நம்ம மணிகண்டன்கிட்டே வாக்கு கொடுத்திருக்கேனே!///


யப்பா நல்லாயிருங்க:-)

 
On Wed May 23, 08:21:00 AM , நாமக்கல் சிபி said...

//ஹா ஹா ஹா

நீண்டது என்பது
குறுகும் பொழுது
வெண்மையின் நிறம்
கருமையாகும் தூரப் புள்ளியில்
அதிநவீன மின்சார ரயிலின்
மேல் மாடியில்
நான்கு வீடுகள் வாடகைக்கு!

இந்தக் கவிதையை நானும் கவிஞருக்குச் சொல்லிக் காட்ட விரும்புகிறேன்.
//

வாங்க ஜீரா,
உடனே ஃபேக்ஸ் பண்ணிடுறேன்!
:)

 
On Wed May 23, 08:22:00 AM , நாமக்கல் சிபி said...

//அனுசுயா said...
nallathan irukku kavithai mathiri
//

கவிதை மாதிரியா! அடக் கடவுளே அப்போ இது கவிதை இல்லையா?

:(

 
On Wed May 23, 09:33:00 AM , Ayyanar Viswanath said...

/மக்களே,
இதை எல்லாம் தட்டிக் கேட்க யாருமே இல்லையா? :( /

நான் இருக்கேன் மணி!! இன்னும் அதிகமா புரியாத கவிதைகள் எழுதி இவிங்கள கொல்லுவோம் :)

 
On Wed May 23, 09:41:00 AM , சோமி said...

அருமையான பதிவு.

உங்கள் கவிதை ! களும் தத்துவார்த்த ! விளக்கங்களும் கவிதை பற்றியவ ஒரு கருத்தாடல் விவாதங்களுக்கான முனைவு என்றே எண்ணத் தோன்றுகிறது.

எல்லாரும் காதலிக்கலாம் என்பதுபோல் எல்லாரும் கவிதை எழுதலாம் என்பதால் காதாலுக்கும் கவிதைக்க்கும் இடையில் ஒரு ஆத்மார்த்தமான உறவு இருப்பதாக தெரிகிறது.

 
On Wed May 23, 10:26:00 AM , அபி அப்பா said...

நான் கேஸ் போடுவேன்!

 
On Wed May 23, 12:28:00 PM , நாமக்கல் சிபி said...

ஐயா! மூக்கு இல்லாதவா!

:)))))))))

கமெண்ட் காமெடியாத்தான் இருக்கு!

நீங்க நல்ல அனானியா இல்லை கெட்ட அனானியா?

அமுக பேரைக் கெடுக்காதீங்க சாமி!

இப்ப சமீப(!?) காலமா உங்களை மாதிரி ஆளுகளாலதான் திரும்பவும் மாடரேசன் போட வேண்டியதா ஆச்சு! இதனால அமுக வை ஆதரிக்கும் எங்களுக்கும், அமுக வினருக்கும் கஷ்டம்தான்!

 
On Sun Mar 21, 06:03:00 PM , Unknown said...

//அடையாளமற்ற வெறுமையொன்று, தன்னை நிரப்பச் சொல்லித் துரத்துகிறது//

ஒரு பக்கெட் தண்ணி ஊத்துனா சரியாகிடும்

 
On Mon Mar 22, 10:32:00 AM , நாமக்கல் சிபி said...

//ஒரு பக்கெட் தண்ணி ஊத்துனா சரியாகிடும்//

:))