65 : வகுப்புக்(குள்) கலவரம்
11:17 PM | Author: நாமக்கல் சிபி

வாத்தியார் மீதுள்ள அளவற்ற அன்பாலும், பாடங்களின் மீதுள்ள அதீத ஆர்வத்தின் காரணமாகவும் முன் வரிசை இருக்கைகளில் இடம்பிடிக்க மாணவர்களுக்கிடையே எழுந்த சண்டை வகுப்புக் கலவரமாக மாறியது. அதை உடனடியாக கண்டு கலவரத்தை அடக்க எவ்வித நடவடிக்கையும் நடவடிக்கை எடுக்காமல் தொடர்ந்து பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியரை பள்ளி நிர்வாகம் வலை வீசித் தேடி வருகிறது.


This entry was posted on 11:17 PM and is filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

8 பின்னூட்டங்கள்:

On Tue Apr 10, 11:51:00 PM , Subbiah Veerappan said...

அதுசரி, எத்தனை பேர் தப்பித்தார்கள்?
கோவியாருக்கும், சிபியாருக்கும் , சென்ஷியாருக்கும் ஒன்றும் ஆகவில்லையே?

சீக்கிரம் சொல்லுங்கள். அது தெரிந்தால்தான் ஆசிரியர் வகுப்புக்குத் திரும்புவாராம்!

 
On Tue Apr 10, 11:56:00 PM , நாமக்கல் சிபி said...

//கோவியாருக்கும், சிபியாருக்கும் , சென்ஷியாருக்கும் ஒன்றும் ஆகவில்லையே?
//

அந்த மூவர் உருண்டதில்தான் ஏனைய அனைத்து மாணவர்களுக்கும் பலத்த அடியாம்!

:))

 
On Wed Apr 11, 12:06:00 AM , Subbiah Veerappan said...

அந்த மூவருமே வகுப்பறையில் எப்பொழுதுமே படிப்பதில், கிழிப்பதில்,
அடிப்பதில், இடம் பிடிப்பதில் என்று போட்டி போடும் மாணவர்கள்தான்.

பலமுறைகள் இது நடந்துள்ள்து.
நிர்வாகத்திற்கு அவர்கள் மூவரும் மிகவும் வேண்டியவர்கள். ஆகவே நிர்வாகமும் நட்வடிக்க எடுக்கச் சான்சே இல்லை!

அப்பாடா, பெரிய களேபரத்தில் இருந்து
வாத்தியார் தப்பித்தார்!

வாத்தியார் ஒரு நேரத்தில் ஒன்றைத்தான் செய்ய முடியும். திரும்பி நின்று கரும்பலகையில் எழுதிக் கொண்டிருக்கும்போது இப்படி நடந்தால் அவர்தான் என்ன செய்வார்?

 
On Wed Apr 11, 01:15:00 AM , Arun's Thoughts said...

வாத்தியார் பாவம்

 
On Wed Apr 11, 06:00:00 AM , கோவி.கண்ணன் said...

மாணவர்கள் பாடத்தில் உள்ள (anger management 101) ப்ராக்டிகல் தான் செய்துகிட்டு இருக்காங்க... இதைப் போய் அடி தடின்னு சொல்லிக்கிட்டு... அடங்கா(த) மாணவர் சிபி இதை சாக்காக வச்சு கட் அடிக்கலாம்னு முயற்சி பண்ணுகிறார். வாத்தியார் எச்சரிக்கையாக இருக்கனும்.

 
On Wed Apr 11, 10:43:00 AM , சென்ஷி said...

எல்லாம் அந்த லாஸ்ட் பெஞ்ச் லாவண்யாவால வந்த வினைன்னு வாத்தியாருக்கு தெரியாதுல்ல சிபி...
சொல்லிடாதே.. :))

மாப்ள பெஞ்ச்

சென்ஷி

 
On Wed Apr 11, 03:58:00 PM , MyFriend said...

இன்னைக்கு இங்கேதான் கலவரம்.. வாங்க வாங்க.. :-D

 
On Wed Apr 11, 06:51:00 PM , G.Ragavan said...

கலவரமாம் கலவரம்
அதுதாம் இப்ப நெலவரம்
ரொம்பவே பேசிப்புட்டா
அருவாளோடயே தல வரும்
என்னடா காரணம்னா
சொல்றான் "கலா வரும்"