

ஆளாளுக்கு வெங்காயம் தக்காளின்னு படம் போட்டுகிட்டிருக்காங்க! இவங்களுக்கெல்லாம் அடிப்படையான ஒரு விஷயம் தெரியலை! அதையெல்லாம் போட்டு தாளிக்க இன்னும் ரெண்டு முக்கியமான பொருட்கள் தேவை. என்ன பண்ணுறது
தமிழ்மணம் இன்ஸ்டிடியூட் ஆஃப் கேட்டரிங் டெக்னாலஜில இருந்துகிட்டு எடுத்துச் சொல்லாம இருக்க முடியலை!
எச்சரிக்கை
முழுக்க முழுக்க கற்பனைச் செய்தி - நகைச்சுவைக்காக மட்டுமே.
இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற தீவிரவாதிகள் கைது
ஸ்ரீநகர் பிப்ரவரி 12, 2007 வடக்கு காஷ்மீர் வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற தீவிரவாதிகள் இன்று காலை எல்லைப் பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டனர். இந்தியாவிற்குள் பயங்கர கேடு விளைவிக்கும் நோக்குடன் அவர்கள் ஊடுருவி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அவர்களைச் சோதனையிட்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின.
இக்கைது நடவடிக்கை மூலம் இந்தியாயில் பயங்கரப் பேரழிவை உண்டாக்கும் நாச வேலைக்கான சதி முறியடிக்கப் பட்டது. இது தொடர்பாக நமது வெளியுறவுத் துறை அமைச்சர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ஆகியோர் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.
தீவிரவாதிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட "வீராச்சாமி" திரைப்படத்தின் பல கோடி ரூபாய்(!?) மதிப்புள்ள திருட்டு வி.சி.டி க்களை கீழேயுள்ள படத்தில் காணலாம்.

இத்திருட்டு வி.சி.டிக்களை இந்தியாவிற்குள் தீவிரவாதிகள் நாடெங்கும் இலவச விநியோகம் செய்யத் திட்டமிருந்ததாகக் கூறப்படுகிறது.

அன்பே!
உனக்காக
தாஜ்மஹால்
கட்ட முடிகிறதோ இல்லையோ!
உன் கழுத்தில்
நிச்சயமாய்
தாலி கட்ட
முடியும் என்னால்!

ரொம்ப நாளா காணாம போன நமக்கு ரொம்ப வேண்டப்பட்ட பதிவர் ஒருத்தரு கிடைச்சிட்டாருங்கோ...வ். இப்ப ரீஜண்டா ஒரு எடத்துல பேட்டியெல்லாம் கொடுத்திருக்கான்னு தகவல் கிடைச்சிது. அதான் அவரை காண்டாக்ட் பண்ண முயற்சி செஞ்சோம். கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்த மாதிரி அவரே எங்களைத் தொடர்பு கொண்டு
"அண்ணா நான் வந்துட்டேங்க்ண்ணா" அப்படின்னார்.
கிடைச்ச
சந்தோஷத்தைக் கொண்டாட வேணாமா? பின்னே கலாய்த்தல் திணையின் ஆரம்ப காலங்களில் கலாய்க்கப் பட்ட மூத்த உறுப்பினர் ஆச்சே!
சும்மா ஸ்மைலி போட்டுட்டு வந்த என்னை ஏதாச்சும் சொல்லச் சொல்லி சொந்தச் செலவுல சூனியம் வெச்சிகிட்டவர். அடுத்தவங்க ஆலோசனை கேட்டு டிஸ்கியை மாத்தி மாத்தி போட்டு வெறுத்துப் போனவர்.
என்னங்க இன்னுமா யாருன்னு தெரியலை?
அவருதாங்க நல்லவரு, வல்லவரு, நாலும் தெரிஞ்சவரு.....!
நம்ம கலாய்த்தல் திணையோட மூத்த உறுப்பினரு!
ரொம்ப ஜாலியான ஆளுங்க! மேல இருக்குற படம் அவருக்காக கலாய்த்தல் திணைல ஒதுக்குன சின்னம்!
எல்லாரும் ஓடியாங்கோ!
இவரை மீண்டும் கலாய்க்கலாம்!

பின் குறிப்பு : இது தமிழ்மணம் அல்ல

மகிழ்ச்சியுடன் விடை கொடுங்கள்.
சென்று வருகிறேன் நண்பர்களே!
மீண்டும் நாளை சந்திப்போம்
தேவையானப் பொருட்கள்புழுங்கல் அரிசி - கால் கிலோ
உளுந்து - 175 கிராம்
துளசி இலை - ஒரு கைப்பிடி
தூதுவளை இலை - ஒரு கைப்பிடி
கற்பூரவல்லி இலை - ஒரு கைப்பிடி
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை
அரிசி மற்றும் உளுந்தை ஊற வைத்து எடுத்து இட்லிமாவு பதத்தில் அரைத்துக் கொள்ளவும்.
சுமார் ஆறு அல்லது ஏழு மணி நேரம் அதனை வைத்திருந்து புளிக்க விடவும்.
மூலிகை இலைகளை கழுவி சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
பிறகு அந்த இலைகளை மாவுடன் கலந்து, தேவையான உப்பையும் சேர்த்துக் கொண்டு, இட்லியாக ஊற்றி, வேக வைத்து எடுக்கவும்.
நன்றி : அறுசுவை.காம்
பின் குறிப்பு :
துளசி, தூதுவலை, கற்பூரவல்லி போன்றவை கலந்திருப்பதால் ஜலதோஷத்திற்கு (சகல தோஷத்திற்கும் அல்ல) நல்லது.
இதனைத் தொடர்ந்து எனது பாசத்திற்குரிய தம்பி ஜொள்ளுப் பாண்டி அவர்கள் எலுமிச்சை ஊறுகாய் செய்வது எப்படி என்று தமிழ்மண அன்பர்களுக்கு விளக்கமளிப்பார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
சண்டையிட்டுக் கொள்ள தனியிடம் இன்றி தவித்த தமிழ்மண வலையுலகப் பெருமக்களே! இதோ உங்களுக்காகவே இம்சை அரசன் 23ம் பிலிகேசி அண்ணன் கைப்புள்ளை அவர்களின் அருமையான யோசனையில் உருவான
என்ற ஒரு அருமையான இடம். பிராது கொடுப்பவர் மற்றும் மறுப்பவர்கள் இணக்கமாகப் பேசித்தீர்க்கொல்ல/ பேசித் தீர்த்துக் கொள்ள ஒரு அரிய வவய்ப்பு! பொதுமக்களை பாதிக்கா வண்ணம் சண்டையில்ல் பங்கேற்கவர்கள் சண்டையிட்டுக் கொள்ளலாம். அனுமதி இலவசம். முன்பதிவு செய்த வரிசைப் படி முன்னுரிமை வழங்கப் படும்!

நேற்றிரவு பெங்களூரில் கொலைப் பதிவர் சந்திப்பை முடித்து விட்டு 10.30 மணிக்குப் பேருந்தைப் பிடித்த நாமக்கல் சிபி காலை 7.30 மணிக்கு பத்திரமாக நலமுடன் கோவை வந்து சேர்ந்தார்.
பெங்களூர் வலைப்பதிவு அன்(நண்)பர்கள் அனைவருக்கும் நன்றி!
விரிவான பதிவு நாளை!
தமிழ்த் திரைப்பட ரசிகர்கர்களின் நல்வாழ்வுக்காக இன்று உலகெங்கிலும் உள்ள பல்வேறு கோவில்களில் விசேஷ பிரார்த்தனையும் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
விஜய.டி.ஆரின் "வீராச்சாமி" திரைப்படம் இன்று ரிலீஸ் செய்யப் படுகிறது!