தனிப்பட்ட மத உணர்வுகளை, "சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்" என்றதொரு அற்புதமான வாசகத்தை இழிவுபடுத்தும் விதமாக பொறுப்பின்றி பின்னூட்டமிட்டிருக்கும் தமிழ்மணத்தின் நிர்வாகிகளில் ஒருவரான இரமணிதரன் அவர்களையும், தமிழ்மணத்தையும் கண்டித்து எனது தனிப்பட்ட வலைப்பூக்கள் அனைத்தையும் தமிழ்மணத்திலிருந்து நீக்கிக்கொள்கிறேன்!





மேலதிகத் தகவல்களுக்கு : காண்க

இப்படிக்கு,

அருணையடி (எ) நாமக்கல் சிபி
இதனால் சகலமானவர்களுக்கும்............!
10:30 PM | Author: நாமக்கல் சிபி



இதனால் சகலமானவர்களுக்கும் (சகலையானவர்களுக்குமோ அல்ல சகல மாணவர்களுக்குமோ அல்ல) தெரிவிச்சிக்கிறது என்னன்னா
.
.
.
.
.
.
.
நம்ம தள, நாமக்கல் ஹிஹி சிபி அண்ணாச்சி(ஹிஹி கண்டுக்காதீங்கப்பா)யாகப்பட்டவர்
இனிமேல் இங்கிலிபீசுலயும் ஃபீல் பண்ணி பதிவு எழுதுவேன்னு முடிவு பண்னி இருக்காரு!

அதுமட்டுமில்லாம துரை இங்க்லிபீஸி போஸ்ட்ல தான் எடுத்த ஃபோட்டோக்களையெல்லாம் போட்டு எல்லாத்துக்கும் பதிவைப் படிக்கச் சொல்லி கட்டாய மெயில் அனுப்பப் போறாராம்!

அதுக்காக முதல் கட்டமா தன் இங்கிலீசு பிளாகுக்கு பூஜை போட்ட கையோட (தனக்கும் போட்டுகிட்டு) ரெண்டு பூக்களோட ஃபோட்டோக்களை போட்டிருக்காராம்.

ஒவ்வொருத்தரா தனித்தனியா சொல்ல முடியாதுங்கறதால எல்லாத்துக்கும் சொல்லிடச் சொன்னாருங்கோ........................வ்..

அவரோட புதி இங்க்லிபிசு பிளாக் அட்ரஸ் : http://shibisphotography.blogspot.com/


(பிற்பாடு தனித்தனியா மெயில் அனுப்ப எல்லாருடைய மெயில் ஐடிக்களையும் சேகரிக்க, உண்மை விளம்பி உதவியை நாடி இருக்காராம்)





எல்லாரும் மறக்காம வந்துடுங்க சாமியோவ். இல்லேன்னா அவரோட அலம்பல் தாங்க முடியாது............ஊஊஊஊஊஊஊஊஊ!
40 : பத்திரமாக நாமக்கல் சிபி!
8:26 AM | Author: நாமக்கல் சிபி

நேற்றிரவு பெங்களூரில் கொலைப் பதிவர் சந்திப்பை முடித்து விட்டு 10.30 மணிக்குப் பேருந்தைப் பிடித்த நாமக்கல் சிபி காலை 7.30 மணிக்கு பத்திரமாக நலமுடன் கோவை வந்து சேர்ந்தார்.
பெங்களூர் வலைப்பதிவு அன்(நண்)பர்கள் அனைவருக்கும் நன்றி!
விரிவான பதிவு நாளை!