ரொம்ப நாளா காணாம போன நமக்கு ரொம்ப வேண்டப்பட்ட பதிவர் ஒருத்தரு கிடைச்சிட்டாருங்கோ...வ். இப்ப ரீஜண்டா ஒரு எடத்துல பேட்டியெல்லாம் கொடுத்திருக்கான்னு தகவல் கிடைச்சிது. அதான் அவரை காண்டாக்ட் பண்ண முயற்சி செஞ்சோம். கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்த மாதிரி அவரே எங்களைத் தொடர்பு கொண்டு "அண்ணா நான் வந்துட்டேங்க்ண்ணா" அப்படின்னார்.
துளசி, தூதுவலை, கற்பூரவல்லி போன்றவை கலந்திருப்பதால் ஜலதோஷத்திற்கு (சகல தோஷத்திற்கும் அல்ல) நல்லது.
இதனைத் தொடர்ந்து எனது பாசத்திற்குரிய தம்பி ஜொள்ளுப் பாண்டி அவர்கள் எலுமிச்சை ஊறுகாய் செய்வது எப்படி என்று தமிழ்மண அன்பர்களுக்கு விளக்கமளிப்பார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
சண்டையிட்டுக் கொள்ள தனியிடம் இன்றி தவித்த தமிழ்மண வலையுலகப் பெருமக்களே! இதோ உங்களுக்காகவே இம்சை அரசன் 23ம் பிலிகேசி அண்ணன் கைப்புள்ளை அவர்களின் அருமையான யோசனையில் உருவான
என்ற ஒரு அருமையான இடம். பிராது கொடுப்பவர் மற்றும் மறுப்பவர்கள் இணக்கமாகப் பேசித்தீர்க்கொல்ல/ பேசித் தீர்த்துக் கொள்ள ஒரு அரிய வவய்ப்பு! பொதுமக்களை பாதிக்கா வண்ணம் சண்டையில்ல் பங்கேற்கவர்கள் சண்டையிட்டுக் கொள்ளலாம். அனுமதி இலவசம். முன்பதிவு செய்த வரிசைப் படி முன்னுரிமை வழங்கப் படும்!
நேற்றிரவு பெங்களூரில் கொலைப் பதிவர் சந்திப்பை முடித்து விட்டு 10.30 மணிக்குப் பேருந்தைப் பிடித்த நாமக்கல் சிபி காலை 7.30 மணிக்கு பத்திரமாக நலமுடன் கோவை வந்து சேர்ந்தார்.
பெங்களூர் வலைப்பதிவு அன்(நண்)பர்கள் அனைவருக்கும் நன்றி!
தமிழ்த் திரைப்பட ரசிகர்கர்களின் நல்வாழ்வுக்காக இன்று உலகெங்கிலும் உள்ள பல்வேறு கோவில்களில் விசேஷ பிரார்த்தனையும் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
விஜய.டி.ஆரின் "வீராச்சாமி" திரைப்படம் இன்று ரிலீஸ் செய்யப் படுகிறது!
மேற்கண்ட படத்திலில் தவழ்ந்து கொண்டிருக்கும் பிறந்து ஒரு வாரமே ஆன இந்த ஆண் குழந்தை இது வரை (இந்த ஒரு வாரத்தில்) வில்ஸ் ஃபில்டரை கையால் கூடத் தொடவில்லையாம் என்று நம்பத்தகாத சதுரப்பக்கங்கள்* தெரிவிக்கின்றன.
வாழ்த்துக்கள் பாலபாரதி
* எத்தினி நாளுக்குத்தான் வட்டாரம்னே சொல்லுறதாம். ஒரு சேஞ்சுக்காக இந்த சதுரப்பக்கம்
ஊசிக் குறிப்பு2 : சென்னையிலோ அதன் சுற்றுப்புறங்களிளோ இக்குழந்தை எங்காவது திருட்டு தம் அடிப்பதைப் பார்ப்பவர்கள் உடனடியாக பா.க.ச சென்னை தலைமை கிளைக்குத் தெரியப் படுத்தவும்.
போன வாரம் பூராவும் நம்ம தமிழ் மணத்துலே சாமியாரோட மேஜிக் பார்த்துப் பார்த்து சலிச்சுப் போன தலை, வேறொரு இடத்துல வித்தியாசமான மேஜிக் ஷோ ஒண்ணைப் பார்க்கக் கிளம்பினாரு. அதுக்கப்புறம் என்ன நடந்ததுங்குறதை நீங்களே பார்த்துக்குங்க!
ஆனாலும் நம்ம தலை பார்த்த ஷோ கொஞ்சம் காஸ்ட்லிதான். பின்னே 601 ரூபா ஆச்சே. சும்மா 10, 20 டிக்கெட்டெல்லாம் குடுத்து சாதாரண கண் கட்டு வித்தையெல்லாம் பார்க்குறதுக்கு தலை என்ன லேசுப் பட்ட ஆளா? எங்க தலைன்னாச் சும்மாவா!