38 : இன்னியோடு ஏழு நாள் ஆச்சு!
9:37 PM | Author: நாமக்கல் சிபி
சட்டப்பூர்வ எச்சரிக்கை : இது ஒரு பா.க.ச பதிவு



மேற்கண்ட படத்திலில் தவழ்ந்து கொண்டிருக்கும் பிறந்து ஒரு வாரமே ஆன இந்த ஆண் குழந்தை இது வரை (இந்த ஒரு வாரத்தில்) வில்ஸ் ஃபில்டரை கையால் கூடத் தொடவில்லையாம் என்று நம்பத்தகாத சதுரப்பக்கங்கள்* தெரிவிக்கின்றன.

வாழ்த்துக்கள் பாலபாரதி


* எத்தினி நாளுக்குத்தான் வட்டாரம்னே சொல்லுறதாம். ஒரு சேஞ்சுக்காக இந்த சதுரப்பக்கம்

ஊசிக் குறிப்பு1 : கும்மியடிப்பவர்கள் வரவேற்கப்படுகிறார்கள்.

ஊசிக் குறிப்பு2 : சென்னையிலோ அதன் சுற்றுப்புறங்களிளோ இக்குழந்தை எங்காவது திருட்டு தம் அடிப்பதைப் பார்ப்பவர்கள் உடனடியாக பா.க.ச சென்னை தலைமை கிளைக்குத் தெரியப் படுத்தவும்.

This entry was posted on 9:37 PM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

17 பின்னூட்டங்கள்:

On Wed Jan 31, 10:06:00 PM , SP.VR. SUBBIAH said...

ராமேஸ்வரம் மண்ணிற்குரிய மனவலிமை தெரியாமல் பதிவு போட்டுள்ளீர் சிபியாரே!
பா.க.ச் விற்கு என் அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்

 
On Wed Jan 31, 10:08:00 PM , நாமக்கல் சிபி said...

//பா.க.ச் விற்கு என் அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்
//

ஓஹோ! அதனால்தான் தங்களை அனைவரும் பா.க.ச அனுதாபி என்று சொல்கிறார்களோ?

 
On Wed Jan 31, 10:09:00 PM , We The People said...

தல தம் அடிக்காம ரொம்ப கஷ்டப்படறதா பல பா.க.ச உறுப்பினர்கள் தகவல் அனுப்பிக்கிட்டு இருக்காங்க.. பார்ப்போம் வேதாளம் எப்போ முருங்க மரம் எறப்போகுதுன்னு........ அன்னைக்கு வச்சிருக்கோம்முல்ல தலைக்கு ஆப்பு..

 
On Wed Jan 31, 10:18:00 PM , We The People said...

தலையோட புது போட்டோவை என் பா.க.ச பதிவுல இருந்து எடுத்துப்போடு பா! அந்த அவதாரம், தலயோட இன்றைய தம் அடிக்கா நிலைக்கு நல்ல இருக்கும்பா

 
On Wed Jan 31, 10:19:00 PM , SP.VR. SUBBIAH said...

//அன்னைக்கு வச்சிருக்கோம்முல்ல தலைக்கு ஆப்பு..//

ஆயிரம் கைகள் சேர்ந்து நின்றாலும்
ஆதவனுக்கு வைக்க முடியமா ஆப்பு?

 
On Thu Feb 01, 10:21:00 AM , Anonymous said...

குழந்தைய பார்த்தா பாவமா இருக்கு...பாவம் விட்டுடுங்க... ;)

 
On Thu Feb 01, 11:30:00 AM , உங்கள் நண்பன்(சரா) said...

தூயா said...
//குழந்தைய பார்த்தா பாவமா இருக்கு...பாவம் விட்டுடுங்க... ;) //

தூயா குழந்தையா அது ..? குட்டிச்சாத்தான்:))
( யாருங்க அது கை தட்டுரது ..ஓ பாகச உறுப்பினர்களா?)

அந்தக் குழந்தையோட சமீபத்திய பதிவுகளைப் படிச்சீங்கன்னா"பாவம்"னு சொல்ல மாட்டீங்க "ஆ"பாவம்னு தான் சொல்லுவீங்க!

ஹி...ஹி..இருந்தாலும் பாபா வோட சில பதிவுகளைப் படிக்கிறதுலயும் ஒரு கிக்கு(?) தான்,
பாகசா வின் உறுப்பினர் என்ற முறையில் நானும் வாயில்* விளக்கொண்னையை ஊற்றிக் கொண்டு கவனமாக தேடுகிறேன்.

அன்புடன்...
சரவணன்.

 
On Thu Feb 01, 12:38:00 PM , Anonymous said...

//இது வரை (இந்த ஒரு வாரத்தில்) வில்ஸ் ஃபில்டரை கையால் கூடத் தொடவில்லையாம் என்று நம்பத்தகாத சதுரப்பக்கங்கள்//
யார் சொன்னது? இது அப்பட்டமான பொய்..

வில்ஸ் சிகரட்டைக் கையால் அப்பப்போ தொட்டுப் பார்த்துகிட்டு தான் இருக்காரு.. அந்தத் தலைவலி பெரிய தலைவலி..

ம்ம்ம்.. எனக்குத் தான் பாக்கெட்டில் இடப் பற்றாக்குறை ! :(((((((((

 
On Thu Feb 01, 12:44:00 PM , - யெஸ்.பாலபாரதி said...

இப்படி நியாபகப்படுத்திகிட்டே இருந்தா.. எப்படி மறக்கிறதாம்?
:-(

 
On Thu Feb 01, 03:13:00 PM , ரவி said...

நான் ஆரம்பிக்கலாம் என்று இருந்தேன்...பரவாயில்லை....5 ஆவது நாளுக்கு நான், ஏழாம் நாளுக்கு நீங்க...பத்தாம் நாளுக்கு பொன்ஸை போட சொல்லிடலாம் பதிவு..

 
On Thu Feb 01, 03:13:00 PM , ரவி said...

விட்டுட்டா அவ்ளோதான்...எல்லா பயலுகளும் மறந்திருப்பானுங்க...அப்படீன்னு பயபுள்ளை மறுபடி உறிய ஆரம்பிச்சுரும்...
:))))))))))))))

 
On Thu Feb 01, 03:14:00 PM , ரவி said...

காலையில் ஒரு பிரச்சினையை சந்திக்க வேண்டிவரும்...

அதுக்கு காலையில் எழுந்தவுடனே புல்லா குடிச்சுட்டா ( ஒரு சொம்பு தண்ணி) - வெறும் வயத்துல, கொஞ்சம் ப்ரீயா போகும்..

 
On Thu Feb 01, 03:16:00 PM , நாமக்கல் சிபி said...

//5 ஆவது நாளுக்கு நான், ஏழாம் நாளுக்கு நீங்க...பத்தாம் நாளுக்கு பொன்ஸை போட சொல்லிடலாம் பதிவு..//

நானே பாலா பாய்க்கு பத்தாம் நாள்னு பொடாலாம்னு நினைச்சேன். ச்சே என்ன பண்ணுறது 7 நாள்தான் ஆச்சு!

:((

 
On Thu Feb 01, 03:17:00 PM , நாமக்கல் சிபி said...

//தல தம் அடிக்காம ரொம்ப கஷ்டப்படறதா பல பா.க.ச உறுப்பினர்கள் தகவல் அனுப்பிக்கிட்டு இருக்காங்க//

அதைத்தான் நம்பத்தகாத சதுரப்பக்கங்கள்னு சொல்லி இருக்கேனே ஜெய்!

 
On Thu Feb 01, 03:18:00 PM , நாமக்கல் சிபி said...

//ஆயிரம் கைகள் சேர்ந்து நின்றாலும்
ஆதவனுக்கு வைக்க முடியமா ஆப்பு?
//

ஆதவனுக்கு வைக்க முடியாதுதான். எங்க பீட்டர் மாதவனுக்கு (ஆஹா! புதுப் பேர் சூட்டியாச்சு பாலாவுக்கு)
வெக்க முடியும் நிறைய ன்னு சொல்றீங்களா ஐயா?

 
On Thu Feb 01, 03:20:00 PM , நாமக்கல் சிபி said...

//குழந்தைய பார்த்தா பாவமா இருக்கு...பாவம் விட்டுடுங்க... //

அடக் கடவுளே!

இது தானா வந்த ரெக்கமண்டேஷனா? இல்லை உங்ககிட்ட வந்து "குழந்தைய பார்க்க வாவமா இருக்கு"ன்னு போடச் சொன்னாரா?

குழந்தைங்கறதை அழுத்தம் திருத்தமா போடச் சொல்லியிருப்பாரே?

:))

 
On Thu Feb 01, 03:21:00 PM , நாமக்கல் சிபி said...

//இப்படி நியாபகப்படுத்திகிட்டே இருந்தா.. எப்படி மறக்கிறதாம்?
//

பாலா பாய்! கவலைப் படாதீங்க!

நீங்க தம் கட்டி முயற்சி செஞ்சி மறந்துடுவீங்கன்னு எங்களுக்கு தெரியும்!