பாவை உன்னைப்
பாராத ஒருநொடியும்


சண்டைகள் இல்லாமல்
சகபதிவர் தூற்றாமல்
பதிவரின் வாழ்க்கையொரு
பாலைவனம் ஆனதுபோல்
பெண்ணே நீயென்னைப்
பாராது போனதென்ன?

கயமைக்கு அனுமதியும்
பின்னூட்டங்களில் தானா?
காதலிலே கிடையாதா?
கண்மணியே சொல்லிவிடு!

கலாய்க்கும் நோக்கில்தான்
கமெண்ட் ரெண்டு அடித்தேனே!
காதலியே பிரிந்துவிட்டாள்!
கணப்பொழுதில் விலகிவிட்டாள்!
சொந்தச் செலவிலொரு
சூனியமாய் ஆகியதே!
This entry was posted on 4:14 PM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

13 பின்னூட்டங்கள்:

On Wed Jan 31, 04:40:00 PM , Unknown said...

சிபி செமக் கலாய்த்தல் சாமி :)))

 
On Wed Jan 31, 04:55:00 PM , மஞ்சூர் ராசா said...

வனமையாக கண்டிக்கிறேன். அது எப்படி தமிழ்மணத்தை பெண்ணாக உருவகப்படுத்தலாம்.

 
On Wed Jan 31, 05:02:00 PM , Anonymous said...

//வனமையாக கண்டிக்கிறேன். அது எப்படி தமிழ்மணத்தை பெண்ணாக உருவகப்படுத்தலாம்.
//

ஐ! ஜாலி! கும்மி அடிக்க மேட்டர் கிடைச்சிருச்சே!

 
On Wed Jan 31, 05:03:00 PM , நாமக்கல் சிபி said...

//சிபி செமக் கலாய்த்தல் சாமி //

நன்றி தேவ்!

 
On Wed Jan 31, 05:04:00 PM , நாமக்கல் சிபி said...

//வனமையாக கண்டிக்கிறேன். அது எப்படி தமிழ்மணத்தை பெண்ணாக உருவகப்படுத்தலாம்.
//

மஞ்சூராரே!

தமிழ்மணம் இல்லாது பதிர்வர்கள் தவிப்பதை காதலியைப் பிரிந்த காதலனின் துன்பத்தோடு ஒப்பிட்டு சொல்லி இருக்கிறேன்!

 
On Wed Jan 31, 05:05:00 PM , நாமக்கல் சிபி said...

//தமிழ்மணம் இல்லாது பதிர்வர்கள் தவிப்பதை காதலியைப் பிரிந்த காதலனின் துன்பத்தோடு ஒப்பிட்டு சொல்லி இருக்கிறேன்!
//

இதையேதானே நானும் வேற மாதிரி சொல்லி இருக்கிறேன் என்கிறீர்களா?

ஆமா! அதையேதான் நானும் சொல்கிறேன் என்கிறேன்! நீங்கள்தான் ஏற்றுக்கொள்ள மறுக்கிறீர்கள்!

 
On Wed Jan 31, 05:41:00 PM , கோவி.கண்ணன் said...

தலைப்பில் பொருள் பிழை !!!

நுகராது என்று சொன்னால் பசியோடு இருக்கும் பதிவரானேன் என்று இருக்க வேண்டும்.

தத்தளித்த என்பதை எடுத்துக் கொண்டால், தமிழ்மணம் (செய்தி) 'ஓடமில்லா' தத்தளித்த பதிவரானேன் என்று சொல்லவேண்டும். அங்கே 'நுகராது' இருக்க முடியாது

:))))))))))

புரியவில்லை என்றால் சொல்லுங்கள் அடுத்த பின்னூட்டத்தில் பார்ப்போம் !
:))

 
On Wed Jan 31, 05:54:00 PM , நாமக்கல் சிபி said...

புரியவில்லை கோவியாரே!

:))

 
On Wed Jan 31, 06:02:00 PM , Unknown said...

ஏங்க,

காதலனைப் பிரிந்த காதலியோட துன்பத்தோடு ஒப்பிடக்கூடாதா? ;-)

 
On Wed Jan 31, 07:17:00 PM , மணியன் said...

:)))

 
On Thu Feb 01, 12:26:00 AM , கண்மணி/kanmani said...

சிபியாரே நீங்கள் நுகராது என்றது சரிதான் என்பது என் எண்ணம்.நுகர்தல் என்றால் 'முகர்ந்து பார்த்தல்'அதவது வாசனையை நுகர்தல்.தமிழ்மணம் என்பதான் '[மணம்]வாசனை நுகர்தல் சரியே.கோவியார் சொன்னது போல் சாப்பிடுதல் சரியல்ல.

 
On Thu Feb 01, 10:19:00 AM , Anonymous said...

ம்ம்ம்ம் இதெல்லாம் ஓவர்... ;)

 
On Thu Feb 01, 04:19:00 PM , வல்லிசிம்ஹன் said...

தமிழ்மணம் படிக்காமல் தவித்தது உண்மைதானே.
நன்றி சிபி.:-)