நண்பனொருவன் அழைத்தபோதே அவனுடைய அரதப்பழசான ஸ்கூட்டரிலேயே தொற்றிக் கொண்டு போய்த் தொலைத்திருக்கலாம்! விடாப்பிடியான பிடிவாத எண்ணங்களின் ஒட்டுமொத்த உருவமான என் மனசாட்சி வேண்டாம் என்று சொல்லி வைக்க அவனை அனுப்பி விட்டு மாநகரப் பேருந்தின் வருகை அறிய காகபுஜண்டரை கற்பனையில் நாடிச் சென்றுகொண்டிருந்தேன்!
இன்று பார்த்து ஒரு பேருந்தும் வந்த பாடில்லை! அவ்வப்போது கடந்த பேருந்துகளும் நான் செல்லும் இலக்கை அடையவல்லவை அல்ல! என்ன வாழ்க்கை இது என்று வெறுத்துப் போய் விறுவிறுவென நடையைக் கட்டலாம் என்றாலும் வயது ஒத்துழைக்க மறுக்கிறது! 6 கிமீ என்றால் சும்மாவா! ஷேர் ஆட்டோக்கள் ஒவ்வொன்றும் நிரம்பி வழிந்தவாறெ கடந்து சென்றன!
வெறுத்துப் போன எரிச்சலின் என் அறிவீனத்தை நொந்துகொண்டே என்னையே குறுகுறுவென்று உற்று நோக்கும் ஒரு ஒற்றைப் பார்வையையும் உணராமலில்லை! சட்டென திரும்புதல் அவனை/அவளை நிலைகுலையச் செய்யக் கூடுமென்பதால் மெதுவே திரும்பிப் பார்க்கத் தீர்மானித்தேன்!
இருப்பினும் வாழ்வின் ஒழுங்கீனங்கள் அனைத்தையும் கற்றுத் தேர்ந்து கரைகண்டவனாயிருந்தபடியால் பார்வையைச் சந்தித்ததும் கண்ணடிப்பது என்று முடிவு செய்தேன்! இடது புறம் மெதுவே தலையைத் திருப்பிப் பார்த்தால் நேருக்கு நேராகவே கண்களைச் சந்திக்க முடியும். ஆனாலும் முதலில் கண்களைச் சந்திப்பதைத் தவிர்த்து நிதானமாக எடை போடவேண்டும்! வலப்புறமாகத் திரும்பி பேருந்து நிழற்குடையின் பின்புறம் அடர்ந்திருந்த புதர்களை பார்வையிடுபவன் போல் பாசாங்கு செய்தேன்! சில நிமிடங்கள் அப்படியெ கழிந்தன!
இப்போது மேலும் வலது புறம் தலையைத் திருப்பினேன். என்னைப் பார் யோகம் வரும் என்றவாறு எதையோ மென்று கொண்டிருந்தது ஒரு கழுதை!
"அரசியலுக்கு நான் வந்துதான் ஆக வேண்டும் என்று என்னை யாரும் கட்டாயப்படுத்த முடியாது. அப்படி நான் அரசியலுக்கு வர முடிவெடுத்தால், என்னை யாரும் தடுக்கவும் முடியாது"
. . . . . . .
இறைவா! தலைவரிடமிருந்து எங்கள் டவுசரைக் காப்பாற்று! எதிரிகளை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்! இப்படிக்கு கீழ்ப்பாக்கம் நோக்கி பேரணியாகக் கிளம்பி இருக்கும் தீவிர ரசிகர்கள்!
இந்த வாரம் முழுக்கவே ரொம்ப போர் அடிக்குது தமிழ்மணத்துலே! ஜ்வரோம் சுந்தர் புண்ணியத்துலே அந்த ஒரு பதிவு மட்டும் சுவாரசியமா போச்சு!
சுவாரசியமான விஷயங்கள் வருதா அப்பப்போ? இல்லை நான் எட்டிப் பாக்குறப்போ மட்டும் அப்படி இருக்கான்னு தெரியலை!
யாராச்சும் கொளுத்திப் போட்டா கும்மி அடிக்கிறதையும், குமுறதையும் வேடிக்கை பார்த்தே பழகிப் போச்சு! ஜாலியா இருக்கும்! இப்ப என்னடான்னா வேலைகளுக்கு நடுவே வந்து எட்டிப் பார்த்தாக்கா சொல்லிக்கிற மாதிரி எதுவும் கிடைக்க மாட்டேங்குது!
சமீபத்தில் பின்னூட்ட மட்டுறுத்தல் செய்யப்படாத பெரும்பாலான பதிவுகளில் பின் வரும் பின்னூட்டம் (பதிவுக்கு எவ்விதத்திலும் தொடர்பே இல்லாமல், குறைந்த பட்சம் மொக்கைப் பின்னூட்ட வகையிலும் சேராமல்) போடப் பட்டு வருகிறது!
இதனால் பின்னூட்ட மட்டுறுத்தல் செய்யாத பதிவர்கள் உடனடியாக பின்னூட்ட மட்டுறுத்தலை செயலாக்கி விடுமாறு கேட்டுக் கொல்லப் படுகிறார்கள்!
ஐயா! ஆர்.கே.சதீஷ் குமார், அனைவரும் படிக்கும் வண்ணம் தாங்கள் சொல்ல வந்த கருத்தை ஒரே இடத்தில் இட்டிருக்கிறேன்! மற்றவர்களைப் போலவே தாங்களும் இங்கே வந்து படித்து(மட்டும்) கொள்ளலாம்!
நல்ல பதிவு..வாழ்த்துக்கள் .... ஓம் ...என்ற மலக்கட்டை கழிய வைத்தால் உடலில் உள்ள வாதைஎல்லாம் ஓடிபோச்சு தாம் ...என்ற சிறுநீரை தெளிய வைத்தால் சடத்திலுள்ள ரோகமெல்லாம் தணிந்து போச்சு கூம் ...என்ற உமிழ் நீரை முறிய வைத்தால் கூட்டிலுள்ள பகைஎல்லாம் குலைந்து போச்சு கோ ....வென்ற இவை மூன்றும் களங்கம் அற்றால் கொல்ல வந்த காலனையும் வெல்லலாமே ...! -ஈஸ்வரன் மெய் ஞான நாடி ....பாடல்
அக்டோபர் 2 ம் தேதி முதல் பொது இடங்களில் புகை பிடிப்பதைத் தடை செய்யும் சட்டத்தை அமலுக்குக் கொண்டு வந்ததன் மூலம் போலீஸாருக்கு எதிர்பார்க்காத அளவுக்கு தீபாவளி போனஸ் வழங்கிய மத்திய அமைச்சர் அன்புமணி அவர்களுக்கு போலீஸார் நன்றி தெரிவித்துள்ளனர்! ஸ்பாட் ஃபைன் மூலம் புகை பிடித்தவர், புகை பிடிப்பவர் நின்றிருந்த இடத்திற்கு சொந்தக் காரர்(பொறம்போக்கு நிலமென்றால் யாருக்கு அபராதம்),அவருக்கு வத்திப் பெட்டி கொடுத்தவர், பற்ற வைக்க வசதியாக தள்ளி நின்றவர் என அனைவருக்கும் அபராதம் விதிக்க இச்சட்டம் வகை செய்வதால் இந்த முறை வழக்குப் பதிவு செய்யாமல் எச்சரித்து அனுப்பும் வகையில் கிடைக்கும் அபராதத்தொகை மட்டுமே நாளொன்றுக்கு ஒரு போலீஸ் காரருக்கு ரூ 2500க்கு மேல் கிடைக்கும் என்று சமூக நல ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
போலீஸ்காரர்கள் பிடித்து கையிலிருக்கும் பணம் காலியாகிவிடக் கூடும் என்ற பீதியால் தம் அடிக்கும் பழக்கம் உடைய பலரும் டீக்கடைகளில் தம் அடிப்பதைத் தவிர்த்து வருகிறார்கள். இதனால் வழக்கமாக நடக்கக்கூடிய டீ வியாபாரமும் பாதிக்கப் பட்டுள்ளது. கூடிய விரைவில் பொது இடங்களில் டீக்குடிப்பதற்கும் தடை வரக்கூடும் என்ற புரளி கிளம்பியதை அடுத்து டீக்கடைக் காரர்கள் பாயிலரில் இருந்த நெருப்பை எடுத்து தங்கள் வயிற்றில் கட்டிக் கொண்டுள்ளதாக நமது சிறப்பு நிருபர் தெரிவித்தார்!
வழக்கமானதொரு வார இறுதிக்கு முந்தின வெள்ளிக்கிழமையின் காலைப் பொழுதாகத்தான் இன்றும் தொடங்கியது. கால் மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து சலித்துப் போய் இரண்டு ஷேர் ஆட்டோக்கள் பிடித்து அலுவலகம் வந்து சேர்ந்தேன். ரூ 22 காலி.
அலுவலகப் பணிகளை பிரித்து கொடுத்துவிட்டு, நண்பர் ஜே.கேவுடன் இன்றைய பணிகளைப் பற்றி விவாதித்து விளக்கிக் கூறிய பின் அவரும் தமது பணியைத் தொடங்கினார்.
மதிய உணவு வேளையில்தான் எனக்கு மட்டும் கொண்டு வந்தேன் என்பது உரைத்தது. பிறகு ஜேகேவிற்கும் மதிய உணவை வரவழைத்து இருவரும் சேர்ந்து மதிய உணவை முடித்தோம்!
அவ்வப்போது ஆன் லைனில் பிளாக் நண்பர்களும் கொஞ்சம் சேட்டிக் கொண்டிருந்தேன்!
இன்றும் சென்னையில் இருந்து கும்பகோணம் நோக்கி சென்றுகொண்டிருந்த பேருந்து ஒன்று தாம்பரம் அருகே விபத்துக்குள்ளானது குறித்து எங்கள் அலுவலக செக்யூரிட்டி ஒருவர் தெரிவித்தார்!
-------------------------------------------------------------------------------- டி.எஸ்.ஏ எனப்படும் டிரைக்ட் சேல்ஸ் ஏஜெண்ட் மூலமாக பி.எஸ்.என்.எல் லைனிற்கு 17ம் தேதி விண்ணப்பித்திருந்தேன். பி.எஸ்.என்.எல் லோகோ அச்சிடப் பட்டிருந்த ஒரு தற்காலிக ரசீது மட்டுமே கொடுத்திருந்தனர். புகைப்படம் மற்றும் முகவரிச் சான்றின் நகல்(குடும்ப அட்டை) ஆகியவற்றுடன் ரூ 500 (ரொக்கம்) கொடுத்து விண்ணப்பித்திருந்தேன்!
எங்கள் அலுவலகம் இருக்கும் தெருவிற்கே மாருதி வேனில் வந்து, பேனர்களுடன் புக்கிங்க் செய்து கொண்டிருந்தனர். பி.எஸ்.என்.எல் அலுவலம் செல்ல சோம்பல் பட்டதால் வந்திருக்கும்போதே விண்ணப்பித்துவிடலாம் என்று உடனடியாக விண்ணப்பித்துவிட்டேன்!
திடீரென நேற்று மதியம் ஒரு சந்தேகம் எழுந்து தொலைத்தது! வந்தவர்கள் உண்மையிலேயே பி.எஸ்.என்.எல்லின் அங்கீகரிக்கப்பட்ட சேல்ஸ் ஏஜெண்ட்டா அல்லது ஃபிராடா என்று. பெயர்/தொ.பே எண் கூட வாங்கி வைத்துக் கொள்ளவில்லை. அல்லது விண்ணப்பத்தின் நகலையாவது வாங்கி வைத்திருக்கலாம்! இனி இதுபோல் பொறுப்பில்லாமல் இருந்துவிடக் கூடாது என்று மனதில் திட்டவட்டமாக குறித்து வைத்துக் கொண்டேன்!
இன்று மதியம் எனது தங்கமணியிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது, தொலைபேசிக் கருவியை வீட்டிற்கு கொண்டுவந்து கொடுத்துவிட்டார்கள். இணைப்பும் செய்தாயிற்று. நமது தொலைபேசி எண்ணை நாளை மாலை அறிவிப்பார்கள் என்று கூற "அப்பாடா ஏமாறவில்லை" என்று நிம்மதி அடைந்தேன்!
--------------------------------------------------------------------------------------------- வழக்கம் போல - தொடரும்