வழக்கம்போல..............!
11:02 PM | Author: நாமக்கல் சிபி
வழக்கமானதொரு வார இறுதிக்கு முந்தின வெள்ளிக்கிழமையின் காலைப் பொழுதாகத்தான் இன்றும் தொடங்கியது. கால் மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து சலித்துப் போய் இரண்டு ஷேர் ஆட்டோக்கள் பிடித்து அலுவலகம் வந்து சேர்ந்தேன். ரூ 22 காலி.

அலுவலகப் பணிகளை பிரித்து கொடுத்துவிட்டு, நண்பர் ஜே.கேவுடன் இன்றைய பணிகளைப் பற்றி விவாதித்து விளக்கிக் கூறிய பின் அவரும் தமது பணியைத் தொடங்கினார்.

மதிய உணவு வேளையில்தான் எனக்கு மட்டும் கொண்டு வந்தேன் என்பது உரைத்தது. பிறகு ஜேகேவிற்கும் மதிய உணவை வரவழைத்து இருவரும் சேர்ந்து மதிய உணவை முடித்தோம்!

அவ்வப்போது ஆன் லைனில் பிளாக் நண்பர்களும் கொஞ்சம் சேட்டிக் கொண்டிருந்தேன்!

இன்றும் சென்னையில் இருந்து கும்பகோணம் நோக்கி சென்றுகொண்டிருந்த பேருந்து ஒன்று தாம்பரம் அருகே விபத்துக்குள்ளானது குறித்து எங்கள் அலுவலக செக்யூரிட்டி ஒருவர் தெரிவித்தார்!

--------------------------------------------------------------------------------
டி.எஸ்.ஏ எனப்படும் டிரைக்ட் சேல்ஸ் ஏஜெண்ட் மூலமாக பி.எஸ்.என்.எல் லைனிற்கு 17ம் தேதி விண்ணப்பித்திருந்தேன். பி.எஸ்.என்.எல் லோகோ அச்சிடப் பட்டிருந்த ஒரு தற்காலிக ரசீது மட்டுமே கொடுத்திருந்தனர். புகைப்படம் மற்றும் முகவரிச் சான்றின் நகல்(குடும்ப அட்டை) ஆகியவற்றுடன் ரூ 500 (ரொக்கம்) கொடுத்து விண்ணப்பித்திருந்தேன்!

எங்கள் அலுவலகம் இருக்கும் தெருவிற்கே மாருதி வேனில் வந்து, பேனர்களுடன் புக்கிங்க் செய்து கொண்டிருந்தனர். பி.எஸ்.என்.எல் அலுவலம் செல்ல சோம்பல் பட்டதால் வந்திருக்கும்போதே விண்ணப்பித்துவிடலாம் என்று உடனடியாக விண்ணப்பித்துவிட்டேன்!

திடீரென நேற்று மதியம் ஒரு சந்தேகம் எழுந்து தொலைத்தது! வந்தவர்கள் உண்மையிலேயே பி.எஸ்.என்.எல்லின் அங்கீகரிக்கப்பட்ட சேல்ஸ் ஏஜெண்ட்டா அல்லது ஃபிராடா என்று. பெயர்/தொ.பே எண் கூட வாங்கி வைத்துக் கொள்ளவில்லை. அல்லது விண்ணப்பத்தின் நகலையாவது வாங்கி வைத்திருக்கலாம்! இனி இதுபோல் பொறுப்பில்லாமல் இருந்துவிடக் கூடாது என்று மனதில் திட்டவட்டமாக குறித்து வைத்துக் கொண்டேன்!

இன்று மதியம் எனது தங்கமணியிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது, தொலைபேசிக் கருவியை வீட்டிற்கு கொண்டுவந்து கொடுத்துவிட்டார்கள். இணைப்பும் செய்தாயிற்று. நமது தொலைபேசி எண்ணை நாளை மாலை அறிவிப்பார்கள் என்று கூற "அப்பாடா ஏமாறவில்லை" என்று நிம்மதி அடைந்தேன்!

---------------------------------------------------------------------------------------------
வழக்கம் போல - தொடரும்
This entry was posted on 11:02 PM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

11 பின்னூட்டங்கள்:

On Fri Sep 19, 11:33:00 PM , Thamiz Priyan said...

கடைசி வரை வழக்கம் போல் ஏமாந்து விடுவீர்களோ என நினைத்தேன்... நல்ல வேளை அண்ணி புண்ணியத்தில் தப்பி விட்டீர்கள்!..;)

 
On Fri Sep 19, 11:56:00 PM , ALIF AHAMED said...

இது கலாய்த்தலில் வராதே..

பிதெற்றலில் வரவேண்டியதோ.. :)

 
On Fri Sep 19, 11:58:00 PM , ALIF AHAMED said...

இரண்டு ஷேர் ஆடுக்கள் பிடித்து அலுவலகம் வந்து சேர்ந்தேன். ரூ 22 காலி.
//

ஆடு பிடிச்சதால 22 ரூபாய் காலியா..:)

 
On Sat Sep 20, 12:21:00 AM , இலவசக்கொத்தனார் said...

//இது கலாய்த்தலில் வராதே..

பிதெற்றலில் வரவேண்டியதோ.. :)//

அதானே!! :)

 
On Sat Sep 20, 01:12:00 AM , பொன்ஸ்~~Poorna said...

விடுபட்டவை?!

 
On Sat Sep 20, 03:59:00 AM , நாமக்கல் சிபி said...

//கடைசி வரை வழக்கம் போல் ஏமாந்து விடுவீர்களோ என நினைத்தேன்..//

ஏன்யா அப்படி? என்னைப் பார்த்தாலே அப்படித் தோணுதா?

 
On Sat Sep 20, 04:00:00 AM , நாமக்கல் சிபி said...

//இது கலாய்த்தலில் வராதே..

பிதெற்றலில் வரவேண்டியதோ.. :)
//

அதை பாலபாரதிதான் சொல்லணும்!
:)

 
On Sat Sep 20, 04:00:00 AM , நாமக்கல் சிபி said...

//ஆடு பிடிச்சதால 22 ரூபாய் காலியா..:)
//

ஆட்டை விட்டுட்டேன்! ஆட்டோ பிடிச்சேன்!

பிழைதிருத்தியமைக்கு நன்றி மின்னல்!

 
On Sat Sep 20, 04:01:00 AM , நாமக்கல் சிபி said...

//அதானே//

கொத்ஸ்!

த.பி க்கு பதில் சொல்லி இருக்கேன் பாருங்க!

 
On Sat Sep 20, 04:02:00 AM , நாமக்கல் சிபி said...

//விடுபட்டவை?!//

படகு அக்கா! ரொம்ப நாளாச்சு பிளாக் பக்கம் பார்த்து!

விடுபட்டவைல மட்டும்தான் இப்படி ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத விஷயங்களை ஒண்ணா எழுதணுமா? நாங்களெல்லாம் எழுதக் கூடாதா என்ன?

 
On Sat Sep 20, 09:38:00 AM , வெண்பூ said...

நல்ல நாட்குறிப்பு சிபி.. ஆனா ரொம்ப கொஞ்சமா இருக்கே.. சொல்லிக்கிற மாதிரி இவ்ளோதான் நடந்ததா என்ன???

*****

இப்போதெல்லாம் பி.எஸ்.என்.எல் வலைதளத்தில் பதிந்தாலும் அவர்கள் இப்படிப்பட்ட ஃப்ரான்சைஸ் வழியாகத்தான் ஆர்டர் கன்ஃபர்ம் செய்கிறார்கள். எனக்கும் இதுதான் நடந்தது. பிரச்சினை என்னவென்றால் அப்ளிகேஷன் வாங்கி கொடுப்பது வரைதான் இந்த ஏஜன்டின் வேலை. அது ஏதேனும் தாமதமானால் அது குறித்து எந்த விவரமும் இவர்கள் மூலமாக அறிய முடியாது :(