புது முயற்சி
6:39 PM | Author: நாமக்கல் சிபி
நண்பனொருவன் அழைத்தபோதே அவனுடைய அரதப்பழசான ஸ்கூட்டரிலேயே தொற்றிக் கொண்டு போய்த் தொலைத்திருக்கலாம்! விடாப்பிடியான பிடிவாத எண்ணங்களின் ஒட்டுமொத்த உருவமான என் மனசாட்சி வேண்டாம் என்று சொல்லி வைக்க அவனை அனுப்பி விட்டு மாநகரப் பேருந்தின் வருகை அறிய காகபுஜண்டரை கற்பனையில் நாடிச் சென்றுகொண்டிருந்தேன்!

இன்று பார்த்து ஒரு பேருந்தும் வந்த பாடில்லை! அவ்வப்போது கடந்த பேருந்துகளும் நான் செல்லும் இலக்கை அடையவல்லவை அல்ல! என்ன வாழ்க்கை இது என்று வெறுத்துப் போய் விறுவிறுவென நடையைக் கட்டலாம் என்றாலும் வயது ஒத்துழைக்க மறுக்கிறது! 6 கிமீ என்றால் சும்மாவா! ஷேர் ஆட்டோக்கள் ஒவ்வொன்றும் நிரம்பி வழிந்தவாறெ கடந்து சென்றன!

வெறுத்துப் போன எரிச்சலின் என் அறிவீனத்தை நொந்துகொண்டே என்னையே குறுகுறுவென்று உற்று நோக்கும் ஒரு ஒற்றைப் பார்வையையும் உணராமலில்லை! சட்டென திரும்புதல் அவனை/அவளை நிலைகுலையச் செய்யக் கூடுமென்பதால் மெதுவே திரும்பிப் பார்க்கத் தீர்மானித்தேன்!

இருப்பினும் வாழ்வின் ஒழுங்கீனங்கள் அனைத்தையும் கற்றுத் தேர்ந்து கரைகண்டவனாயிருந்தபடியால் பார்வையைச் சந்தித்ததும் கண்ணடிப்பது என்று முடிவு செய்தேன்! இடது புறம் மெதுவே தலையைத் திருப்பிப் பார்த்தால் நேருக்கு நேராகவே கண்களைச் சந்திக்க முடியும். ஆனாலும் முதலில் கண்களைச் சந்திப்பதைத் தவிர்த்து நிதானமாக எடை போடவேண்டும்! வலப்புறமாகத் திரும்பி பேருந்து நிழற்குடையின் பின்புறம் அடர்ந்திருந்த புதர்களை பார்வையிடுபவன் போல் பாசாங்கு செய்தேன்! சில நிமிடங்கள் அப்படியெ கழிந்தன!

இப்போது மேலும் வலது புறம் தலையைத் திருப்பினேன். என்னைப் பார் யோகம் வரும் என்றவாறு எதையோ மென்று கொண்டிருந்தது ஒரு கழுதை!
This entry was posted on 6:39 PM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

9 பின்னூட்டங்கள்:

On Fri Nov 21, 07:01:00 PM , விஜய் ஆனந்த் said...

:-)))...

நாய்ன்னு நெனச்சேன்!!!

 
On Fri Nov 21, 07:02:00 PM , Ungalranga said...

ayyayo!!! ennai kapathunga...
intha namakkal shibiyala enakku Heart Attack vandhudiche.....
ayyo....
amma....
aaaaaa.....
eluthungal en kalaraiyil- "IVAN SHIBIYAL SETHAVAN" endru...

 
On Fri Nov 21, 07:03:00 PM , Thamiz Priyan said...

தள............ முடியல... ;)))))

 
On Fri Nov 21, 07:05:00 PM , சென்ஷி said...

பரவால்ல தலைவா.. நீங்க கொஞ்சம் இப்போதைக்கு முன்னேறிட்டீங்க.. ஷார்ஜாவுல கழுதைய பார்க்கவே முடியறதில்ல.. :((

ஒட்டகம் கூட பாலைவனத்துலதான் மேயுமாம்... சிட்டில ஒன்லி பாய்ஸ்.....!!!

 
On Fri Nov 21, 07:08:00 PM , ILA (a) இளா said...

ஐயோ ஐயோ..

 
On Fri Nov 21, 07:40:00 PM , Anonymous said...

:-))))))

 
On Fri Nov 21, 08:18:00 PM , Sanjai Gandhi said...

எப்டி தான் இப்டி எல்லாம் எழுத முடியுதோ? பொறாமையா இருக்கு..

 
On Fri Nov 21, 08:49:00 PM , நசரேயன் said...

கலாய்த்தல் திணை - பாகம் 100 நல்லா இருக்கு

 
On Sat Nov 22, 06:50:00 PM , நாகை சிவா said...

யோவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்