முதல் வேண்டுகோள் : இந்தப் பதிவிற்கு - குத்து குத்த விரும்புவோர் மட்டும் கருவிப்பட்டை மூலம் வாக்களிக்கவும்! மற்றவர்கள் நான் கீழே கொடுத்துள்ள சுட்டியின் மூலம் வாக்களிக்கலாம்!
பதிவர்களின் கனிவான கவனத்திற்கு,
இப்பவும் எங்கள் கமிட்டியின் உறுப்பினர்கள் அனைவரும் இதுவரை
படிக்காத பக்கங்களைப் படித்து வாக்களித்துக் கொண்டிருக்கும் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதால் பதிவர்கள் அனைவரும் தங்கள் எழுதி வைத்திருக்கும்/எழுதப் போகும் நல்ல இடுகைகளை சிறிது காலம் தள்ளி வைக்கும்படி கேட்டுக் கொல்கிறொம்!
அப்படி காத்திருக்காமல் இப்பவே பப்ளிஷ் செய்து கொள்ளும் பதிவர்களின் இடுகைகள் எங்கள் கவனத்திற்கு வராமல் போய் நாங்கள் வாக்களிக்கத் தவறினால் இந்நிர்வாகம் எவ்விதத்திலும் பெறுப்பேற்காது என்பதையும் இதன்மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்!
இவண்,
நிர்வாகி,
தமிழ்மணப் பரிந்துரை காரியக் கமிட்டி,
உண்மை நிலவரம்யோவ்! நம்மகிட்டயெல்லாம் ஒத்த ஓட்டுதான்யா இருக்கு! ஏன்யா எங்களையெல்லாம் ஒரு கேங்கு லீடரு ரேஞ்சுக்கு பில்டப்பு குடுத்து உசுப்பேத்துறீங்க! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!
-----------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------
குத்து குத்துன்னு குத்திட்டு எண்ணிக்கைல வரலையே அல்லது ஏற்கனவே ஓட்டு சேர்க்கப்பட்டுவிட்டதுன்னெல்லாம் வந்ததென்றால் நீங்கள் கள்ள ஒட்டுப் போடுகிறீர்கள் என்று அர்த்தம்!இப்பதிவில் நீங்கள் போட்டும் +/- அனைத்தும் + வாக மாற்றி சகோதரர் சக்திவேல் அவர்களின் இந்தப் பதிவிற்கே சேர்க்கப் படுகிறது! நமக்கெல்லாம் ஓட்டு, பரிந்துரையெல்லாம் அவசியமா என்ன?
மனமார்ந்த உங்களோட அன்பு போதாது?
தமிழ்மண வாசகர்கள் என்ன இளிச்ச வாயர்களா?, பின்ன என்னங்க ஆளாளுக்கு ஒரு போஸ்ட் போடுவாங்களாம்! தமிழ்மணம், தமிழிஷ் னு இருக்குற எல்லா திரட்டியிலும் லிங்க் கொடுத்துடுவாங்களாம்/அனுப்பிடுவாங்களாம்! படிக்குறவங்க மாங்கு மாங்குன்னு பின்னூட்டம் போட்டுட்டு மறுக்கா ஓட்டு வேற குத்துவாங்களாம்!
சண்டை மட்டும் பப்ளிக்கா நடக்குமாம்! அப்பாலிககா இவங்களுக்குள்ளே தனிமடல்/தொலைபேசி ன்னு ரகசியமா பேச்சு வார்த்தை நடத்துவாங்கலாம்! அப்புறம் எல்லா போஸ்டையும் தூக்கிடுவாங்களாம்!
இல்லை தெரியாமத்தான் கேக்குறேன்! படிக்குறவங்க என்ன வேலை வெட்டி இல்லாம காது குடைஞ்சிகிட்டு உக்காந்து இருக்கோம்னு நினைச்சிகிட்டிருக்கீங்களா! எங்களுக்கு ஆயிரத்தெட்டு மொக்கை வேலையெல்லாம் விட்டுபுட்டு அங்கயும், இங்கயுமா லிங்கை தேடி தேடி படிச்சி பின்னூட்டம் போட்டுகிட்டு அதுக்கெல்லாம் என்ன பதில் வந்துதுன்னு படிக்க காத்துகிட்டிருப்போம்!
ஒரே நிமிஷத்துல எல்லா போஸ்டையும் தூக்கிடுவீங்க! சரி தூக்குறதுதான் தூக்குறீங்க! தமிழ்மணத்துக்கு ஒரு மெயில் அனுப்பி அங்க லிஸ்ட் பண்ணுறதையும் தூக்கச் சொல்லலாம்ல! அவங்கவங்க பிளாக்லலருந்து தூக்கிட்டா போதுமா?
அட்லீஸ்ட்! இந்த பதிவு ஒருவேளை நீக்கம் செய்யப்படவும் வாய்ப்பிருக்கிறதுன்னு ஒரு பின் குறிப்பாவது போடலாம்! மண்ணைய பிச்சிகிட்டு பின்னூட்டம் போடுறவங்களாவது எப்படியாச்சும் தூக்கத்தான போறாங்க! எதுக்கு மெனக்கெட்டு புன்னூட்டம்லாம் போட்டுகிட்டுன்னு பேசாமயாவது இருப்பாங்கல்ல!
நீக்குன பதிவுகளை திரட்டிகளும் தொடர்ந்து பட்டியல்ல காட்டிகிட்டு இருக்கு!
புதுசா வரவங்களும் அதை கிளிக் பண்ணி பார்த்தா அங்க அந்த பதிவே இல்லைன்னு எரர் மெசேஜ் வேற வரும்! இப்படியே தினமும் ரெண்டு போஸ்ட் பார்த்தா படிக்கிறவங்களுக்கு தமிழ்மணத்துல எதை கிளிக் பண்ணினா கண்டிப்பா நீக்கப்படாத போஸ்ட் இருக்கும்னு குழப்பம் வராது? இதன்மூலமா திரட்டிகள் மேல இருக்குற நம்பகத்தன்மைக்கும் ஆப்பு வெச்ச மாதிரில்ல ஆகுது?
இப்ப சீரியஸ்(!?) மெசேஜ்
போட்ட அரை மணி நேரத்துல நீக்கிடலாம்னு தோணுதே! அந்த பாழாப்போன போஸ்டை பப்ளிஷ் பண்ணுறதுக்கு முன்னாடி ஒரு அஞ்சு நிமிஷம் யோசிக்கலாம்ல! அட! அந்த பதிவுல போடுற விஷயத்தை சம்மந்தப்பட்ட ஆளுங்களுக்கு மட்டும் தனிமடல் அனுப்பி சண்டையெல்லாம் போட்டு கடைசியில சுமுகமா முடிச்சிக்கலாம்ல!
பப்ளிக்கா பல பதிவுகளை போட்டு ஏன் எல்லாரையும் எரிச்சலூட்டுறீங்க! அல்லது திரட்டிகளுக்காவது அனுப்பாம இருங்க! புண்ணியமா போகும்!
பல்வேறு ஊடகங்கள் இப்பதான் தமிழ் வலைப்பதிவுகளை தொடர்ந்து பார்த்துகிட்டு இருக்காங்க! அவங்க முன்னாடி நம்மை நாமே தரம் தாழ்த்திக்கலாமா? கொஞ்சம் யோசிச்சி சொல்லுங்க!
பின்குறிப்பு:இந்த பதிவை எக்காரணம் கொண்டும் நீக்க மாட்டேன் என்ற உறுதிமொழியுடன் தமிழ்மணம் கருவிப்பட்டையிலிருக்கும் அனுப்பு பொத்தானை அழுத்துகிறேன்!------------------------------------------------------------------------------------------------

மும்பையிலிருந்து திரும்பி வரும் இளைஞன்/குழந்தை பாலபாரதி! 20 வருடத்தைக் குறைத்து இளமையாகக் காட்ட படாத பாடு பட்டு ஒப்பனையின் மூலம் 40 வயது இளைஞராக்கி இருக்கிறார்கள்.
இவர் சென்னை வந்தவுடன் தானும் கொலைப் பதிவர் சந்திப்புகளை திட்டமிட்டு பக்காவாக நடத்த வேண்டும். அதில் பிளாக்கர்கள், அதர் ஆப்ஷன்கள், அனானிகள் அனைவரும் பாகுபாடின்றி கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என்று முயற்சிகள் மேற்கொள்கிறார். ஆனால் ஏற்கனவே இதைத் தொழிலாகச் செய்துவரும் பிரபலமானவருடன் இவருக்கு மோதல் ஏற்படுகிறது. பின்னர் சோதனைகளைக் கடந்து எப்படி இவர் கொலைப் பதிவர் சந்திப்புகளை வெற்றிகரமாக நடத்துகிறார் என்பது கிளைமாக்ஸ்.
இது ஏ.வி.எம் தயாரிப்பு அல்ல. பா.க.ச தயாரிப்பு

ஹைலைட் காட்சிகள் :
ஒரு கொலைப் பதிவர் : "மீட்டிங்க் வந்தா எத்தனை போண்டா தருவீங்க?"
பால பாரதி : "திரும்பவும் அதே கேள்வி!, எத்தனை தடவைடா இதையே கேப்பீங்க?"
வரவணையான் : "மச்சான், இங்கே போண்டா இல்லாம மீட்டிங்கெல்லாம் நடத்த முடியாது, ஊரோட ஒத்துப் போறதுதான் நல்லது. எப்படியோ மீட்டிங்க் நடக்கணும்"
--------------------------------------------------------------------------
பால பாரதி : "கடவுளே! ஏன்யா என்னை கெட்டவனா படைச்சே?"
அசரரீ : "நல்லவனா படைச்சா கெட்டுப் போயிடுவேன்னுதான். -
பா.க.ச,
தேவலோகம் கிளை"
பால பாரதி : "அடப் பாவிகளா, அங்கயுமாடா! :( "
------------------------------------------------------------------------------
பால பாரதி : " என் லேப் டாப்புலயும் லினக்ஸ் சுசீ இன்ஸ்டால் பண்ணிக் குடுங்க"
மா.சிவகுமார் : "முன்ன பின்ன தெரியாத ஆளுகளுக்கெல்லாம் இன்ஸ்டால் பண்னிக் குடுக்க முடியாது"
பால பாரதி : "முன்ன பின்னதான இப்போ பார்த்துக்குங்க"
பால பாரதியும், வரவணணயானும் டக் டக் என்று முன் பின்னாகத் திரும்பி
"இது முன்ன, இது பின்னே" என்று கோரஸாகச் சொல்கின்றனர்.
மா.சிவகுமார் தலையில் அடித்துக் கொள்கிறார்.
------------------------------------------------------------------------------
அருள் குமார் : "அட! சுசீ இல்லாட்டி என்னங்க பால பாரதி? என்கிட்ட ரெண்டு ஓ.எஸ் இருக்கு
ஒண்ணு உபுண்டு, இன்னொன்னு தபுண்டு, உங்க லேப்டாப்ல இன்ஸ்டால் பண்ணி நல்லா பழகிப் பாருங்க, பிடிச்சா அதையே யூஸ் பண்ணுங்க, இல்லாட்டி விண்டோஸ் 2000 போட்டுடலாம்"
-----------------------------------------------------------------------------
டோண்டு : "யேய் யேய்... இவன் பால பாரதியேதான்.. எப்படி எப்படி....? "
சிபி : " சார்.. என்ன சார் இது! பாலபாரதியைத்தான் நாம கொன்னுட்டமே! இவன் வேற ஆளு சார், பால பாரதி பிரண்டாம்"
பி.பி.ரதி : "என் பேரு பி.பி.ரதி, சும்மா பேரைக் கேட்டாலே அதிருதில்ல"
--------------------------------------------------------------------------
மா.சிவகுமார் : "பழக்கம் ஆகணுங்குறதுக்காக தெனமும் பொழுது போயி பொழுது விடிஞ்சா எங்க ஆஃபீஸ் வாசல்ல வந்து நிக்குறது கொஞ்சம் கூட நல்லா இல்லை! சொல்லிட்டேன்!"
----------------------------------------------------------------------------
பால பாரதி : "தோ பாருங்க, போண்டா இல்லாம மீட்டிங்குக்கு வர விருப்பம் இருக்குவங்க எல்லாம் இப்படி வாங்க, மீதி பேரெல்லாம் அதோ அங்கன இருக்குற ஆஃபீஸ் ரூமுல போய் வெயிட் பண்ணுங்க"
உடனே பாலபாரதி கண் சிமிட்டும் நேரத்தில் அங்கிருந்த அனைவரும் காணாமல் போய்விடுகின்றனர்.
வரவணையான் : "தலை! எக்குத் தப்பா இப்படியெல்லாம் சொல்லாதீங்க. இப்ப பாருங்க! எல்லாரும் அந்த ஆஃபீஸ் ரூமுலதான் போண்டா தருவாங்கன்னு பறந்துட்டாங்க! இப்போ அவ்ளோ போண்டாவுக்கு என்ன பண்ணப் போறீங்க? இல்லாட்டி உங்களை குமுறீடப் போறாங்க"
-----------------------------------------------------------------------------
ஆர்.எஸ்.புரம், கோயமுத்தூர், கோவை மாவட்டம்
ஓசை செல்லா : "பால பாரதி, இது உங்க ஊரு மாதிரி, நீங்க எப்படி எப்படி மீட்டிங் நடத்தணும்னு ஆசைப் படுறீங்களோ, அப்படியேல்லாம் நடத்துங்க. "
(யப்பா, இப்படியா ஆப்பு வெப்பாங்க.. அடி பின்னீட்டானுவலே")
-----------------------------------------------------------------------------
வீ.த.பீப்பிள் ஜெய்: தோ பாருங்க சி.பி.ஐ ஆபீசர். நாங்க இனிமே அவரை கலாய்க்க முடியாம போயிடும்ணு சொன்னதாலதான் நான் அவரோட பிளாக் யூரலை உங்ககிட்டே தரேன். எக்காரனம் கொண்டும் நாங்க அவரைக் கலாக்குறதுக்கு ஆபத்து வந்துடக் கூடாது. அதுக்கு முதல்ல சத்தியம் பண்ணிக் குடுங்க.
---------------------------------------------------------------------------------
சி.பி.ஐ ஆபீசர்: "எப்படிய்யா பாலபாரதியோட பிளாக்கை ஓப்பன் பண்ணுறது. பாஸ்வோர்ட் தெரியனுமே"
உதவி ஆபீசர் : "அட பாஸ்வோர்ட் தெரியணும் அவ்வளவுதானே! இப்ப பாருங்க"
என்று சொல்லிவிட்டு தனது மொபைல் ஃபோனை எடுத்து பாலபாரதியின் நம்பரை டயல் செய்கிறார் .
உதவி ஆபீசர் : "ஹலோ பாரதிங்களா, வணக்கம் தலை"
பால பாரதி : "வணக்கம். வணக்கம் தலை. சொல்லுங்க யாரு பேசுறது"
உதவி ஆபீசர் : "நான் ஒரு புது பிளாக்கர் தலை. பிளாக்ல ஒரு சந்தேகம். எல்லாரும் உங்ககிட்ட கேட்டா உதவி பண்ணுவீங்கன்னு சொன்னாங்க. அதான் உங்களுக்கு அடிச்சேன்"
பால பாரதி : "சந்தேகமா, ரொம்ப சந்தோஷம். எது வேணும்னாலும் கேளுங்க, நம்மால முடிஞ்சத சொல்றேன் தல"
உதவி ஆபீசர் : "அது ஒண்ணும் இல்ல தலை, ஹெச்.டி.எம்.எல்ல கொஞ்சம் டவுட்டு, உங்க பிளாக் டெம்பிளேட் ஓப்பண் பண்ணி பார்த்து, அதுல லிங்க் எப்படி கொடுக்குறதுன்னு பார்த்து தெரிஞ்சிக்கிட்டேன்னா அவ்வளவுதான். உங்க பிளாக் பாஸ்வோர்ட் கொஞ்சம் சொல்லுங்க தலை"
பால பாரதி : "இவ்ளோதானா தலை, தாரளாமா சொல்றேன், எழுதிக்குங்க ******, இதான் தலை"
உதவி ஆபீசர் : "ரொம்ப தேங்க்ஸ் தலை, நான் அப்புறமா பேசுறேன்"
பால பாரதி : "ஓகே தலை, ஓகே தலை, எப்ப டவுட்னாலும் என்னைக் கூப்பிடுங்க பை"
இந்த வருஷம் ஆரம்பிச்சதிலேர்ந்தே ஒரே போட்டி மயமா இருக்கு! தினம் தினம் தமிழ்மணத்தைத் திறந்தா போட்டி என்ற வார்த்தை முகப்புப் பக்கத்துல ஒரு இடத்துலயாவது இல்லாம இருக்கிறதே இல்லை! அந்த அளவுக்குப் போட்டிகள்!
பிளாக்குட் போட்டி, உரையாடல் போட்டி, இப்ப ரீசண்டா வந்திருக்குற
உயிரோடை போட்டி, etc.etc..
போட்டிக்கு எழுதுற கதைகளைப் படிச்சி முடிக்கவே நமக்கு தாவு தீருது! இதுல நாம வேற எந்தப் போட்டில கலந்துக்குறது, எதை விடுறது தவிச்சிப் போயி கிடக்குற என்னை மாதிரி சுறுசுறுப்பான(!?) பதிவர்களுக்காக (மட்டுமே) இந்த சிறப்புப் போட்டி!
உங்க மூளையைக் கசக்க வேண்டாம், ரூம் போட்டு யோசிக்க வேண்டாம்.
இந்த போட்டியின் ஸ்பெஷாலிட்டியே ரொம்ப சிம்பிளா எண்ட்ரி கொடுக்க வேண்டியதுதான்!
நடுவர்களுக்கும் அத்தனை கஷ்டமான வேலை இல்லை! படிச்சி விமர்சனமெல்லாம் எழுதி, திருத்தி மார்க் போட்ட வேண்டியதில்லை!
(பாவம்! நீங்களும் எத்தனை கதைதான் படிச்சி தாவு தீருவீங்க...)
இந்த போட்டியைப் பத்தி:
ஒண்னுமில்லைங்க! இந்தப் போட்டியில கலந்துக்காம இருக்கணும்! அதான் போட்டியே!
.
.
.
.
.
.
.
என்னாது பரிசு என்னவா? கொமட்டுலயே குத்திப்புடுவேன் குத்தி..!
-------------------------------------------------------------------------------------
(ஐயா திரட்டிகளே, போட்டி நடத்தும் நிர்வாகிகளே...! ஐபிஎல், ஐசிசி, டெஸ்ட் மேட்ச், ஒன் டே, 20/20 எல்லாம் ஒரே நேரத்துல வெச்சா எப்படி பிளேயர்ஸ் களைச்சி போயிடுவாங்களோ அதே மாதிரி
எக்கச் சக்க போட்டிகள்(குறிப்பா சிறுகதைகளுக்கு மட்டுமே நிறைய), அதுவுமிலலாம ஏகப்பட்ட தொடர்கள்(டெஸ்ட் மேட்ச்)?
பதிவர்களைப் பார்த்தா பாவமா இல்லையா உங்களுக்கு?
பார்வைகள் பதிவுலே கவிதாக்கா பலபேர்கிட்டே அவங்கவங்களுக்கு பிடிச்ச ஸ்வீட் பேர் கேட்டதாகவும் எல்லாரும் அவங்களை அழவைச்சதாகவும் எழுதி இருக்காங்க!உண்மையில என்ன நடந்ததுன்னு நீங்களே பாருங்க!
--------------
Daar All
Plz send me your favorite "sweet" item name. (example laddu, halwa, pasanthi..etc)
Kavi
----------------
பால்கோவாநட்புடன்,
நாமக்கல் சிபி.
----------------
சிபி நன்றி
இன்னொரு பிடித்த ஸ்வீட் சொல்லுங்க.. அல்ரெடிஓருத்தங்க இதை சொல்லிட்டாங்களே...
---------------------
நானே செஞ்ச
பால்கோவா!
(இதை யாரும் கண்டிப்பா சொல்லி இருக்க முடியாது)
நட்புடன்,
நாமக்கல் சிபி.
----------------------
பிச்சிப்புடுவேன் பிச்சி.. :)))))))))))
ப்ளீஸ்ப்பா. .எனக்கு வேற உங்களுக்கு பிடிச்ச ஸ்வீட் பேரு சொல்லுங்க...
-----------------------
பிச்சிப் போடுவதற்கு அதென்ன ஜிலேபியா?
யாருக்கு பிடிச்ச ஸ்வீட் சொல்லணும்? எனக்கு பிடிச்சது பால்கோவாதான்!
நட்புடன்,
நாமக்கல் சிபி.
--------------------------
ஹய்யோ..
சரி பால்கோவா தவிர வேறு என்ன ஸ்வீட் பிடிக்கும்...
சொல்லிடுங்களேன்..
--------------------------
எனக்கு காரா பூந்தி பிடிக்கும்!
நட்புடன்,
நாமக்கல் சிபி.
--------------------
பிசாசே... காராபூந்தி.. காரம். .நான் கேட்டது ஸ்வீட்டூஊஊஊஊஊஊ
oru purpose kaha ketta.. sollanum.. solungapa... enn eppadi oyira vaangareenga ??? avvvvvvvvvvvvv !!
--------------------
ம்ஹூம்!
எனக்கு பால்கோவாதான் பிடிக்கும்!
இன்னொருத்தரும் சொல்லிட்டாங்க என்பதற்காக நான் மாத்திக்க முடியுமா என்ன?
.வேணும்னா சோன் பப்படின்னு எழுதிக்குங்க! (லுலுங்காட்டிக்காகத்தான், நிஜமா எனக்கு பால்கோவா தான் பிடிக்கும்)
நட்புடன்,
நாமக்கல் சிபி.
-----------------------------------
sari... :)))))))))) thanks.. eppa avanga kitta mathikka solli kettu paarkirean..
avanga enna solla poraangalo ponga..