யாருக்காகவோ
9:47 AM | Author: நாமக்கல் சிபி
எனக்காக கொட்டிக்கொண்ட
நாட்கள் சென்று

யாருக்காகவோ
கொட்டிக்கொள்ள வந்தேன்

யாருக்காகவோ
கொட்டிக்கொள்வதை
நிறுத்தினேன்..

எனக்காக
எப்போதாவது
கொட்டிக்கொண்ட
பொழுதுகள்

சாம்பார்
இல்லாத
சாப்பாடுகளாயின...

இருப்பினும்
பார்சலில்
வரும்
அன்பான
ஃபுல் மீல்ஸ்கள்

"உனக்காக நீ கொட்டிக்கொள்ளாதே"

இது
சாப்பாடு
இது சாம்பார்
இது
கூட்டு
இது பொறியல்
என்று
சொல்ல

எனக்கு
யாரும்
இருந்ததில்லை

சொல்லுபவர்
அத்தனை
பேரும்
சாப்பாட்டு இராமன்கள்!!

விழுங்கியது
ஜீரணிக்கும் - மறுநாள்
காலையில் வெளியில் வரும்
மறந்தும் போவேன்..

மீண்டும்
ஆரம்பிப்பேன்..

மீண்டும்
முடிப்பேன்...

யாருக்காகவோ....
.
.
,
.
எனக்காக நான்
ஏப்பம் விட்டதில்லை
என்பதில்
மட்டும்
வில்லுக்கும்
தெளிவு....

- எதிர்கவுஜ ஏழுமலை

மூலக் கவுஜை : இவங்களோட பார்வையில்

(அவங்க பதிவை கவுஜை என்று இராம் சொன்னதால் மட்டுமே எதிர் கவுஜை எழுத வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டேன்)
This entry was posted on 9:47 AM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

20 பின்னூட்டங்கள்:

On Fri Jun 19, 10:00:00 AM , கவிதா | Kavitha said...

:)))))))))))))

சிபி ஏன் இப்படி..

நான் அழுதுடுவேன்... :(((((((

 
On Fri Jun 19, 10:05:00 AM , ஆயில்யன் said...

சூப்பரப்பு :))))

 
On Fri Jun 19, 10:35:00 AM , pudugaithendral said...

தாங்க முடியலை சாமி...

 
On Fri Jun 19, 12:05:00 PM , கவிதா | Kavitha said...

எதிர்கவுஜ ஏழுமலை & ஏகாம்பரம் கிட்ட ஒரு மினி மீல்ஸ்.. சே..சாரி..பேட்டி..

1. நீங்க ஏழுமலையா? ஏகாம்பரமா?


- எதிர்கவுஜ ஏழுமலை

- எதிர்க்கவுஜை ஏகாம்பரம்!

2. உங்களுக்கு ஒரிஜனலா கவுஜ எழுதவே வராதா?

3. ஏன் எப்பவும் நீங்க கவிதா கவுஜ/பதிவையே காப்பி அடிக்கறீங்க..?

4. நீங்க நல்லவரா... கெட்டவரா?

5. நீங்க தான் அந்த..."போ"..ல ஆரம்பிக்க பதிவரா?

6. நீங்க தான் அவரா?

7. நீங்க தான் இவரா?

8. நீங்க அவரும் இவருமா?

9. ஒரே ஒரு கவிதை கவிதா துணை இல்லாமல் எழுத முடியுமா..?

10. நேத்திக்கு சேட் ல ஒரு விஷயத்தை பற்றி சொன்னீங்களே அதை பதிவர்கள் அத்தனை பேரும் படிக்கும் படியா வெளியில சொல்லலாமா?

 
On Fri Jun 19, 02:03:00 PM , நாமக்கல் சிபி said...

//நீங்க ஏழுமலையா? ஏகாம்பரமா?
//

ரெண்டுமேதான்!

(ஏகாம்பரம் என்ற பட்டத்தை குசும்பனுக்கு கொடுத்தாச்சு)

 
On Fri Jun 19, 02:04:00 PM , நாமக்கல் சிபி said...

//2. உங்களுக்கு ஒரிஜனலா கவுஜ எழுதவே வராதா?//

வராது! வந்தா என்ன பண்ணுவீங்க!

 
On Fri Jun 19, 02:04:00 PM , நாமக்கல் சிபி said...

//. ஏன் எப்பவும் நீங்க கவிதா கவுஜ/பதிவையே காப்பி அடிக்கறீங்க..?
//

எங்கே காமெடி செய்ய முடியுமோ அங்கதான செய்ய முடியும்!
:))

 
On Fri Jun 19, 02:05:00 PM , நாமக்கல் சிபி said...

//
4. நீங்க நல்லவரா... கெட்டவரா?//

தெரியலையேம்மா!

(டொண்டடொண்டடொண்டட்டொய்!)

 
On Fri Jun 19, 02:06:00 PM , நாமக்கல் சிபி said...

//5. நீங்க தான் அந்த..."போ"..ல ஆரம்பிக்க பதிவரா?//

அஃப்கோர்ஸ்! நான் தான் அந்த போதனூர் பொன்னுச்சாமி!

 
On Fri Jun 19, 02:07:00 PM , நாமக்கல் சிபி said...

6. நீங்க தான் அவரா?

ஆமாம்!

7. நீங்க தான் இவரா?

ஆமாம்!

8. நீங்க அவரும் இவருமா?

ஆமாம்மா ஆமாம்!

 
On Fri Jun 19, 02:07:00 PM , நாமக்கல் சிபி said...

//9. ஒரே ஒரு கவிதை கவிதா துணை இல்லாமல் எழுத முடியுமா..?//

கவிதை துணையில்லாம எழுதிடுவேன்!

கவுஜைதான்...!

 
On Fri Jun 19, 02:08:00 PM , நாமக்கல் சிபி said...

//10. நேத்திக்கு சேட் ல ஒரு விஷயத்தை பற்றி சொன்னீங்களே அதை பதிவர்கள் அத்தனை பேரும் படிக்கும் படியா வெளியில சொல்லலாமா?//

நேத்திக்கு நான் ஆன்லைன்லயே வரலையே!

 
On Fri Jun 19, 02:14:00 PM , கவிதா | Kavitha said...

//நேத்திக்கு நான் ஆன்லைன்லயே வரலையே!/

அடப்பாவி... இப்படி பொய் சொன்னா வாயில புழுத்தள்ளும்.. சொல்லிட்டேன்..!!

 
On Fri Jun 19, 02:15:00 PM , கவிதா | Kavitha said...

ஆமா கவுஜ ன்ன என்ன?
கவிதை ன்ன என்ன?

 
On Fri Jun 19, 02:15:00 PM , கவிதா | Kavitha said...

//வராது! வந்தா என்ன பண்ணுவீங்க!//

துறத்தி துறத்தி அடிப்பேன்..

 
On Fri Jun 19, 02:16:00 PM , கவிதா | Kavitha said...

//அஃப்கோர்ஸ்! நான் தான் அந்த போதனூர் பொன்னுச்சாமி!//

ஆமா அவரு யாரு?!!!

நான் சொன்ன போ வேற பாஸ்... அதான் அந்த .......நான் கூட நேத்திக்கு சொன்னேனே... ...நல்லா யோசன செய்து பாருங்க....

 
On Fri Jun 19, 02:17:00 PM , கவிதா | Kavitha said...

//எங்கே காமெடி செய்ய முடியுமோ அங்கதான செய்ய முடியும்!
:))//

ஒரு சீரியஸ் பதிவரை காமெடியன் ன்னு சொன்ன உங்களை பாராட்டி... நயன் தாரா பயன்படுத்திய ஒரு சோப்பு டப்பாவை பார்சல் அனுப்புகிறேன்....

 
On Fri Jun 19, 02:26:00 PM , அன்புடன் அருணா said...

என்னாப்பா சாம்பார் கொட்டிருச்சா?????!!!!!*&^%$#

 
On Fri Jun 19, 11:43:00 PM , குறை ஒன்றும் இல்லை !!! said...

ஐயோ.. யாராச்சும் என்ன காப்பாத்துங்களேன்...

 
On Sun Jun 21, 09:18:00 AM , cheena (சீனா) said...

எதிர் கவுஜ புரியற மாதிரி இருக்கு