Vacancies
1) Captain (P-001),
2) Vice Captain (P-002),
3) Coach (P-003) and
4) Team Members (P-004)
Eligibility CriteriaWe are looking for Audience who have consistently watched all the world cup matches and who have scored over 65 runs in Room Cricket & Street Cricket
Experience in Football, Volley ball is an added advantage .
Models, Actors (Advertisements) are most preferable ..
LKG & UKG Teachers are preferable for the post of coach.
Selection Process1. Batting Test (Vs Bermuda) (Candidate must score at least 50 runs )
2. Bowling/Fielding Test (Candidate should not bowl more than 3 wides /no balls in an Over)
3. HR Interview (Candidates will be called upon for the selection process based on the Eligibility Criteria)
Send ur resumes with subject Name/Post/Max runs scored E.g. Dhoni/P-004/37 to
http://us.f371.mail.yahoo.com/ym/Compose?To=callforcric@bcci.comVenue : YMCA Grounds , nandanam
Natesan Park , T.Nagar
Date: 01-Apr-2007
Reference Books:1) " Neengalum Batsmen Aagalam" by Munaf Patel
2) "Cricket in 21 days " by 'Ellam Therincha Egambaram' Sidhu
3) "Kolaiyum Seivan Cricketer " by Inzamam
4) "Ungal Veedai Padhugappadhu Eppadi " by Dhoni
Sponsors1) windtel
2) which
3) Kabsi
4) State Bank of Athur
5) Akka Mala
6) Anniyan Bank
7) Bank of Buruda
(தேடுஜாப்ஸ் பிளாக்ல போய் தேடிக்கிட்டு இருக்காதீங்க, அங்கெல்லாம் இந்த மேட்டர் இருக்காது. என்னங்க பண்ணுறது? மின்னஞ்சலில் வந்ததை நாம மட்டும் ரசிச்சா போதுமா?)
இந்திய அணியினரையும் தங்கள் பயிற்சி முகாமில் கலந்து கொள்ள வைக்கப் போவதாக அறிந்த அண்ணா ஆதர்ஸ் பள்ளி மாணவர்கள் அதிர்ச்சியும், அதிருப்தியும் அடைந்துள்ளனர்.
இந்திய அணியின் தொடர் தோல்விகளாள் அவ்வணிக்குப் பயிற்சியளிக்கத் திட்டமிட்ட இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகிகள் இந்திய அணியில் இடம்பெற்றிருக்கும் வீரர்களை சென்னை அண்ணா ஆதர்ஸ் பள்ளி மாணவர்களுக்கான கோடைக் கால சிறப்பு கிரிக்கெட் பயிற்சி முகாமுக்கு அனுப்பலாம் என்று பரிந்துரைத்தனர்.
இதயறிந்த அப்பள்ளி மாணவர்கள், மாநில அளவில் விளையாடும் திறன் பெற்ற பல மாணவர்களைக் கொண்ட எங்களுடன், இந்திய அணியினரைப் பயிற்சிக்கு சேர்ப்பதால் "எங்கள் திறமையை சந்தேகிக்க வைக்கும் சூழ்ச்சி" என்று அதிர்ச்சியும், அதிருப்தியும் தெரிவித்துள்ளனர். மேலும் ஆரம்பத்தில் இருந்து பயிற்சி கொடுக்க நேரிடும் என்பதால் தங்களுக்குப் போரடிக்கக் கூடும் என்றும் கவலை தெரிவித்துள்ளனர்.

கப் வாங்காம வர மாட்டம்ல!

சொன்னா நம்புங்க! சத்தியமா இதுதான் ஓல்டு கப்! நல்லா உத்துப் பாருங்க! விரிசல் கூட விழுந்திருக்கும்!

நீங்க நம்ப மாட்டீங்கன்னு தெரிஞ்சுதான் உடைஞ்சு போனதும் வாங்கியாந்திருக்கோம்!
நல்லா எண்ணிப் பாருங்க! மொத்தம் 11 இருக்கா?
யாராருக்கு எந்தெந்த கப்புன்னு நீங்களே முடிவு பண்ணிக்குங்க!
கங்குலி
குறைந்தது 50 ரன்னாவது எடுக்கலைன்னா நான் அடுத்த மேட்சுல இருப்பேனாங்குறதே டவுட்டு. இதுக்கு மேல நான் என்ன பண்ண முடியும். நான் கேப்டனா இருந்திருந்தா நல்லா ஃபீல்டிங் செட் செஞ்சிருப்பேன். எப்படியாவது ஜெயிச்சிருக்கலாம். பெப்ஸி குடிக்க நல்லா இருக்கும்.
டிராவிட்
எந்த அணியுமே திறமைல குறைஞ்சதுன்னு சொல்ல முடியாது. ஒரு 240 வது அடிச்சிருந்தா ஜெயிச்சிருக்கலாம்தான். அதான் நேத்தே சொல்லி இருந்தமே வங்க தேச அணி சின்னதுதான் என்றாலும் திறமைல (எங்களைவிட) குறைஞ்சவங்க இல்லைன்னு. அதுக்கப்புறமும் ஏன் தோத்தீங்கன்னு கேட்டா என்ன பண்ணுறது? பெப்ஸி குடிச்சா உற்சாகம் கிடைக்கும்.
சேவாக்
நான் அவுட் ஆனா என்ன? மீதி 9 பேரும் நல்லா விளையாடி இருக்கலாம்ல! எப்ப பாரு என்னையவே குறை சொல்லிகிட்டே இருக்குறது கொஞ்சம் கூட நல்லா இல்லை! கங்குலி அண்ணன் கூடத்தான் 50க்கு மேல அடிச்சாரு! ஜெயிச்சிட்டமா என்ன? பெப்ஸி குடிச்சா ஒரு வித உற்சாகமும், புத்துணர்ச்சியும் கிடைக்குதுன்னு எங்க கேப்டன் சொல்றது என்னவோ வாஸ்தவம்தான்.
டெண்டுல்கர்
நாங்க முன்கூட்டியே பேட்டில சொல்லிட்டோம். வங்கதேசமும் திறமையான அணிதான். யாரையுமே குறைச்சி மதிப்பிட முடியாது. பெர்முடா அணி கூட அப்படித்தான். நீங்க வேணா பாருங்களேன். சூப்பரா விளையாடப் போறாங்க. நாம எப்பவுமே புதுசா விளையாடுறவங்களை உற்சாகப் படுத்தணும். இல்லலன்னா எப்படி கிரிக்கெட் வளரும். அதான் அவங்க டீமுக்கும் சன்ஃபீஸ்ட் மேரியும், பெப்ஸியும் எங்க கைக் காசைப் போட்டு வாங்கி கொடுத்திருக்கிறேன். எனக்கு சக்தி தருவது எப்பவுமே பூஸ்ட்தான். அதனால்தான் அடுத்த உலகக் கோப்பையிலும் நான் விளையாடுவேன்.
டோனி
நான் எப்ப எப்படி ஆடுவேன்னு யாருக்கும் தெரியாது. தெரியக் கூடாதுன்னு எங்க கோச் சொல்லி இருக்கார். ஆனா ஆட வேண்டிய நேரத்துல கரெக்டா ஆடுவேன்.
(ஸ்ரீசாந்த் : க்கும், விட்டிருந்தா நானாவது கிரவுண்ட்ல ஒரு குத்தாட்டம் போட்டிருப்பேன்)
கயிஃப்
எனக்கு அப்பவே சந்தேகம்தான். இவங்க ஃபீல்டிங்க்ல எப்படி சமாளிக்கப் போறாங்களோன்னு? அப்படியே ஆயிடுச்சு. என்னைக் கூப்பிட்டா நானும் போய் விளையாடத் தயார்.
கிரேக் சாப்பல்
புதுசா ஏதாவது முயற்சி பண்ணலாம்னா இருக்குற 11 பேரேதான் திரும்ப திரும்ப டீம்ல இருக்காங்க.
பாத்த முகங்களையே மறுபடி மறுபடி பார்க்க போரடிக்குது. நான் ஆரம்பத்திலேர்ந்தே சொல்லி இருக்கேன். கங்குலி இருந்தா டீம் உறுப்படாதுன்னு. ஆமா இன்னுமா ஜனங்க எங்களை நம்பிகிட்டு இருக்காங்க?
சன் டிவி
எங்கள் ஆளும் தி.மு.க அரசிற்கு அவப்பெயரையும் களங்கத்தையும் ஏற்படுத்தும் நோக்கத்தில் அம்மையார் அவர்கள் உலகக் கோப்பைப் போட்டிகளில் பங்கேற்கச் செல்லும் இந்திய அணியினர் ஒவ்வொருவருக்கும் தலா 5 கோடி ரூபாய் கொடுத்து முதல் சுற்றிலேயே வெளியேறுமாறு ஏற்பாடு செய்துள்ள சதித்திட்டம் அம்பலமாகியுள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தி.மு.க தலைவரும் தமிழகத்தின் முதல்வருமான திரு கலைஞர் கருணாநிதி அவர்கள் கூறியுள்ளார்.
ஜெயா டிவி
வங்க தேச அணியினரிடம் கூட அடித்து விளையாட முடியாமல் 191 என்ற சொற்ப ரன்களில் இந்திய அவுட் ஆகிறது என்றால் ஆளும் மைனாரிட்டி தி.மு.க அரசின் மெத்தனப் போக்கை மக்கள் எளிதில் புரிந்து கொள்வார்கள் என்று அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் செல்வி ஜெயலலிதா அவர்கள் கூறியுள்ளார்.
பா.ஜ.க
இந்திய அணி தேர்வு ஊழல்களை விசாரிக்க மத்திய அரசு சி.பி.ஐக்கு உத்தரவிட வேண்டும். இவ்வழக்கை வேண்டுமென்றே தாமதிக்க காங்கிரஸார் முயற்சி செய்கின்றனர். அதற்குள் உலகக் கோப்பை போட்டிகள் முடிவடைந்து விடும்.
கம்யூனிஸ்ட்
நாட்டு மக்களின் மொத்த வரிப்பணத்தையும் கேவலம் ஒரு 11 பேரை மட்டும் ஆடம்பரச் செலவு செய்து இந்திய அரசு அனுப்பி வைப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம். இதைக் குறைந்த பட்ச பொதுத் திட்டத்தில் சேர்த்து விவாதிக்கும் வரை ஆளும் கட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிப்போம்.
என்னங்க இது! இந்த பிளாக்கர் உயிரை எடுக்குது இப்படி! திடீர்னு தலைப்பை மட்டும் வெச்சிகிட்டு மேட்டரை விழுங்கிடுது.
திடீர்னு ஒழுங்கா வருவது போல வந்தாலும் பதிவு தமிழ் மணத்துல தெரியமாட்டேங்குது.
இல்லை தமிழ்மணத்துலேர்ந்து நம்ம பிதற்றல்களைத் தூக்கிட்டாங்களா? ன்னு அதுவும் தெரியலை! (!?)
இந்தப் பதிவாவது ஒழுங்கா தெரியுதான்னு பார்ப்போம்!
இல்லாட்டி வோர்ட்ப்ரஸ்தான் இப்போதைக்கு எனக்கு தெரிஞ்ச ஒரே வழி!
|
ஃபிளாஷ் நியூஸ்
இன்று மதியம் நானே சமைத்த சாதம் மற்றும் ரசம் (நன்கு கவனிக்க ரசம், விஷம் அல்ல)ஆகியவற்றை மதியம் மற்றும் இரவு என இரண்டு வேளைகள் உண்டும் எனக்கு ஒன்றும் ஆகவில்லை!
ஹி.ஹி. பொழுது போகலை! பகல்ல ஆணி பிடுங்குற வேலையும் இன்னிக்கு கம்மிதான். அதான் நானே சமைச்சிப் பார்த்தேன்.

நம்ம போனவார நட்சத்திரம்
பாலபாரதி தனக்கு ஒதுக்கப்பட்ட வாரம் முடிந்துவிட்டும் கூட இன்னும் ஸ்டாராகவே உக்காந்துகிட்டு எழுந்திருக்க மாட்டேன்னு அடம் பிடிக்கிறாரே! போன வாரமும் இப்படித்தான் தமிழ்மணம் ஸ்டார் என்றவுடன் தமிழ்மணம் கோடிங்க்லயே கைய வெச்சி ஒரு நாள் பூராவும் தமிழ் மணத்தை ஸ்தம்பிக்க வெச்சாரு!
மக்கா! இதை யாராச்சும் கேக்க மாட்டீங்களா?
என்னதான் குழந்தைன்னாலும் இப்படியா அடம் பிடிக்குறது? பிரம்பை எடுத்தால்தான் வேலலக்கு ஆகுமோ!
இல்லை! வயசானதால எழுந்திருக்க முடியாம உக்காந்து இருக்காறா? யாராவது போய் கை குடுத்து தூக்கி விடுங்கப்பா! பாவம்!
:)
பா.க.ச,
கோவை மற்றும் நாமக்கல் மாவட்ட கிளைகள்.
பின் குறிப்பு :
அடம்பிடிக்கும் குழந்தைகள் என்று கூகிளிள் தேடியபோது கிடைத்தது.
எங்க வீட்டுக்கு வெள்ளையடிக்கும்போது ஆன செலவுக் கணக்கு!
தணிக்கைக்கு உட்பட்டது!
சுண்ணாம்பு - 6 படி - ரூ 60
சுண்ணாம்பு சூளைக்கு
போக வர ஆட்டோ செலவு - ரூ 150
பழைய வெளக்கமாறு (2 எண்ணம்) - ரூ 5
வெள்ளையடிக்க ஆள் கூலி
(நபர் ஒன்றுக்கு நாளுக்கு 50 ரூ வீதம்
இரண்டு நாட்கள், இரண்டு நபர்கள்) - ரூ 200
காப்பித்தண்ணி செலவு - ரூ 24
ஆக மொத்தம் ரூ 439