சன் டிவி
எங்கள் ஆளும் தி.மு.க அரசிற்கு அவப்பெயரையும் களங்கத்தையும் ஏற்படுத்தும் நோக்கத்தில் அம்மையார் அவர்கள் உலகக் கோப்பைப் போட்டிகளில் பங்கேற்கச் செல்லும் இந்திய அணியினர் ஒவ்வொருவருக்கும் தலா 5 கோடி ரூபாய் கொடுத்து முதல் சுற்றிலேயே வெளியேறுமாறு ஏற்பாடு செய்துள்ள சதித்திட்டம் அம்பலமாகியுள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தி.மு.க தலைவரும் தமிழகத்தின் முதல்வருமான திரு கலைஞர் கருணாநிதி அவர்கள் கூறியுள்ளார்.
ஜெயா டிவி
வங்க தேச அணியினரிடம் கூட அடித்து விளையாட முடியாமல் 191 என்ற சொற்ப ரன்களில் இந்திய அவுட் ஆகிறது என்றால் ஆளும் மைனாரிட்டி தி.மு.க அரசின் மெத்தனப் போக்கை மக்கள் எளிதில் புரிந்து கொள்வார்கள் என்று அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் செல்வி ஜெயலலிதா அவர்கள் கூறியுள்ளார்.
பா.ஜ.க
இந்திய அணி தேர்வு ஊழல்களை விசாரிக்க மத்திய அரசு சி.பி.ஐக்கு உத்தரவிட வேண்டும். இவ்வழக்கை வேண்டுமென்றே தாமதிக்க காங்கிரஸார் முயற்சி செய்கின்றனர். அதற்குள் உலகக் கோப்பை போட்டிகள் முடிவடைந்து விடும்.
கம்யூனிஸ்ட்
நாட்டு மக்களின் மொத்த வரிப்பணத்தையும் கேவலம் ஒரு 11 பேரை மட்டும் ஆடம்பரச் செலவு செய்து இந்திய அரசு அனுப்பி வைப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம். இதைக் குறைந்த பட்ச பொதுத் திட்டத்தில் சேர்த்து விவாதிக்கும் வரை ஆளும் கட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிப்போம்.
This entry was posted on 12:12 AM and is filed under
அறிக்கைகள்
,
காமெடி
,
கிரிக்கெட்
. You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
4 பின்னூட்டங்கள்:
அங்க குந்த வெச்சி குத்திகிட்டு இருக்கானுங்க இந்த நேரத்துலயும் உங்களுக்கு கிளுகிளுப்பு கேக்குதா!
வாருமய்யா சற்றுமுன் பக்கத்துக்கு.
Match mudiyarathu munnadiye ivalo lolla?
Kandipa namaku aapu than-u confirm panniteenga...
இந்திய அணி முதல் ரவுண்ட்லயே வெளிய வரது ரொம்ப நல்லது. இல்லைனா நம்ம மக்கள் கடைசிவரைக்கும் வேலை வெட்டிய விட்டுட்டு டீவி பொட்டி முன்னாடி உக்காந்திருப்பாங்க. நம்ம ஆட்டக்காரங்களும் இதோ அதோனு கடைசில தோத்து ஒடி வருவாங்க. இதுக்கு முன்னாடியே வெளிய வரது பொருளாதார மிச்சம் நாட்டுக்கு.