கங்குலி
குறைந்தது 50 ரன்னாவது எடுக்கலைன்னா நான் அடுத்த மேட்சுல இருப்பேனாங்குறதே டவுட்டு. இதுக்கு மேல நான் என்ன பண்ண முடியும். நான் கேப்டனா இருந்திருந்தா நல்லா ஃபீல்டிங் செட் செஞ்சிருப்பேன். எப்படியாவது ஜெயிச்சிருக்கலாம். பெப்ஸி குடிக்க நல்லா இருக்கும்.
டிராவிட்
எந்த அணியுமே திறமைல குறைஞ்சதுன்னு சொல்ல முடியாது. ஒரு 240 வது அடிச்சிருந்தா ஜெயிச்சிருக்கலாம்தான். அதான் நேத்தே சொல்லி இருந்தமே வங்க தேச அணி சின்னதுதான் என்றாலும் திறமைல (எங்களைவிட) குறைஞ்சவங்க இல்லைன்னு. அதுக்கப்புறமும் ஏன் தோத்தீங்கன்னு கேட்டா என்ன பண்ணுறது? பெப்ஸி குடிச்சா உற்சாகம் கிடைக்கும்.
சேவாக்
நான் அவுட் ஆனா என்ன? மீதி 9 பேரும் நல்லா விளையாடி இருக்கலாம்ல! எப்ப பாரு என்னையவே குறை சொல்லிகிட்டே இருக்குறது கொஞ்சம் கூட நல்லா இல்லை! கங்குலி அண்ணன் கூடத்தான் 50க்கு மேல அடிச்சாரு! ஜெயிச்சிட்டமா என்ன? பெப்ஸி குடிச்சா ஒரு வித உற்சாகமும், புத்துணர்ச்சியும் கிடைக்குதுன்னு எங்க கேப்டன் சொல்றது என்னவோ வாஸ்தவம்தான்.
டெண்டுல்கர்
நாங்க முன்கூட்டியே பேட்டில சொல்லிட்டோம். வங்கதேசமும் திறமையான அணிதான். யாரையுமே குறைச்சி மதிப்பிட முடியாது. பெர்முடா அணி கூட அப்படித்தான். நீங்க வேணா பாருங்களேன். சூப்பரா விளையாடப் போறாங்க. நாம எப்பவுமே புதுசா விளையாடுறவங்களை உற்சாகப் படுத்தணும். இல்லலன்னா எப்படி கிரிக்கெட் வளரும். அதான் அவங்க டீமுக்கும் சன்ஃபீஸ்ட் மேரியும், பெப்ஸியும் எங்க கைக் காசைப் போட்டு வாங்கி கொடுத்திருக்கிறேன். எனக்கு சக்தி தருவது எப்பவுமே பூஸ்ட்தான். அதனால்தான் அடுத்த உலகக் கோப்பையிலும் நான் விளையாடுவேன்.
டோனி
நான் எப்ப எப்படி ஆடுவேன்னு யாருக்கும் தெரியாது. தெரியக் கூடாதுன்னு எங்க கோச் சொல்லி இருக்கார். ஆனா ஆட வேண்டிய நேரத்துல கரெக்டா ஆடுவேன்.
(ஸ்ரீசாந்த் : க்கும், விட்டிருந்தா நானாவது கிரவுண்ட்ல ஒரு குத்தாட்டம் போட்டிருப்பேன்)
கயிஃப்
எனக்கு அப்பவே சந்தேகம்தான். இவங்க ஃபீல்டிங்க்ல எப்படி சமாளிக்கப் போறாங்களோன்னு? அப்படியே ஆயிடுச்சு. என்னைக் கூப்பிட்டா நானும் போய் விளையாடத் தயார்.
கிரேக் சாப்பல்
புதுசா ஏதாவது முயற்சி பண்ணலாம்னா இருக்குற 11 பேரேதான் திரும்ப திரும்ப டீம்ல இருக்காங்க.
பாத்த முகங்களையே மறுபடி மறுபடி பார்க்க போரடிக்குது. நான் ஆரம்பத்திலேர்ந்தே சொல்லி இருக்கேன். கங்குலி இருந்தா டீம் உறுப்படாதுன்னு. ஆமா இன்னுமா ஜனங்க எங்களை நம்பிகிட்டு இருக்காங்க?
This entry was posted on 8:38 AM and is filed under
கிரிக்கெட்
. You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
26 பின்னூட்டங்கள்:
இந்திய கிரிக்கெட் ரசிகன்:24 வருஷத்திற்கு முன் கபில்தேவ் ஒரு கலக்கு கலக்கி கோப்பயைக் கொண்டார்ந்தார்ன்னா - அன்னின்னு பெப்ஸியும் இல்ல - கோடிக்கணக்கான
விளம்பரப் பணமும் ஆடினவங்களுக்கு இல்லை...!
ஹூம்...இன்னிக்கு நிலைமை அப்படியா இருக்கு?
இருங்க ஒரு கட்டிங் போட்டுட்டு வந்து மிச்சத்தச் சொல்றேன்!:-)))
//SP.VR.சுப்பையா said...
இருங்க ஒரு கட்டிங் போட்டுட்டு வந்து மிச்சத்தச் சொல்றேன்!:-)))
//
என்ன? வாத்தியார் ஐயாவா இப்படிச் சொல்வது?
கடவுளே! கலி முத்திடுச்சு!
அதனால்தான் இந்தியா கூட கடைசி ஓவர் வரை எதிரணியினருக்கு கஷ்டம் கொடுக்குது போல!
//ஸ்ரீசாந்த் : க்கும், விட்டிருந்தா நானாவது கிரவுண்ட்ல ஒரு குத்தாட்டம் போட்டிருப்பேன்//
சிபியாரே இது அல்டிமேட்.
இன்னைக்கு கேவலமா தோத்தது உண்மைனாலும், இந்தியாவுக்கு இன்னும் வாய்ப்பிருக்குங்க. போன உலகக்கோப்பையிலயும் முதல் போட்டி நெதர்லாந்துக்கு எதிரா தடவி தடவி வின் பண்ணாங்க. அதுக்கடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரா இதைவிட படு கேவலமா தோத்தாங்க. அதுக்கப்புறம் சுதாரிச்சு ஃபைனல்ஸ் வரைக்கும் வந்தாங்க. இன்னைக்கு தோத்தது காஸ்ட்லியான பாடம்னாலும், It's not the end of road.
//புதுசா ஏதாவது முயற்சி பண்ணலாம்னா இருக்குற 11 பேரேதான் திரும்ப திரும்ப டீம்ல இருக்காங்க.
பாத்த முகங்களையே மறுபடி மறுபடி பார்க்க போரடிக்குது. நான் ஆரம்பத்திலேர்ந்தே சொல்லி இருக்கேன். கங்குலி இருந்தா டீம் உறுப்படாதுன்னு. ஆமா இன்னுமா ஜனங்க எங்களை நம்பிகிட்டு இருக்காங்க?//
இது கலக்கல் சிபி. கலக்கிடிங்க.
என்னத்த சொல்லர்து போங்க?? கொஞ்சம் கூட commitment இல்லாத டீம்ன்னா நம்ம டீம சொல்லலாம். $ 199 refund கேக்கலமான்னு இருக்கேன்.
சுப்பைய்யா சார் நானும் வரேங்க.!!!( சிபி,கலி நல்லா முத்திக்கட்டும்!!)
//இந்தியாவுக்கு இன்னும் வாய்ப்பிருக்குங்க.//
இப்படியே எத்தனை நாளைக்குங்க போயிகிட்டிருக்குறது. முதல் ரெண்டு மேட்ச் ஈஸியா ஜெயிச்சிட்டு மூணாவது மேட்சின் முடிவைப் பத்தி கவலைப்படாம என்னிக்காவது அடுத்த சுற்றுக்கு போயிருக்கோமா?
அப்படியே முதல் ரெண்டு மேட்ச் ஜெயிச்சாலும் அடுத்த டீம்களோட வெற்றி/தோல்வி ரன் ரேட்களை வெச்சி கணக்கு போட வெச்சி நம்மளை டென்சன் டென்சன் ஆக்கி விட்டுடுறாங்களே!
வாங்க சந்தோஷ்! ரொம்ப நாள் கழிச்சி இந்தப் பக்கம்!
(அப்பாடா! கலாய்க்க இந்திய அணி கிடைச்சிடுச்சுன்னு தைரியமா வந்துட்டீங்க போல)
//என்னத்த சொல்லர்து போங்க?? கொஞ்சம் கூட commitment இல்லாத டீம்ன்னா நம்ம டீம சொல்லலாம்.//
வாங்க ஸ்ரீராம்! உண்மைதான்.
//.!!!( சிபி,கலி நல்லா முத்திக்கட்டும்!!) //
ஆஹா! இருங்க! நானும் ஜோதில ஐக்கியம் ஆகிடுறேன்!
:))
//இப்படியே எத்தனை நாளைக்குங்க போயிகிட்டிருக்குறது. முதல் ரெண்டு மேட்ச் ஈஸியா ஜெயிச்சிட்டு மூணாவது மேட்சின் முடிவைப் பத்தி கவலைப்படாம என்னிக்காவது அடுத்த சுற்றுக்கு போயிருக்கோமா?
அப்படியே முதல் ரெண்டு மேட்ச் ஜெயிச்சாலும் அடுத்த டீம்களோட வெற்றி/தோல்வி ரன் ரேட்களை வெச்சி கணக்கு போட வெச்சி நம்மளை டென்சன் டென்சன் ஆக்கி விட்டுடுறாங்களே!
//
சிபியாரே நீங்க சொல்றது 100% உண்மைதான். திறமையால தகுதி பெறதை விட கால்குலேட்டர் உதவியாலே தகுது பெறுவது நடக்கரது தான்.
என்னங்க பண்றது நம்ம பசங்களுக்கு அப்படியே பழகிடுச்சு :)
இன்னொன்னு பார்த்தீங்கன்னா எப்பல்லாம் இப்படி நாயடி பேயடி வாங்கறாங்களோ அப்பதான் பசங்களுக்கு ரோஷம் வரும். ஆக இதுவும் நன்மைக்கே :)
தோத்த அதிர்சியிலிருந்து இன்னும் மீளலை போல, சிபியாரே!
இல்லேன்னா, "கிரிக்கெட் ரசிகன்" சொல்றது மாதிரி ஒரு பின்னூட்டம் போட்ட ஆசானை என்னமோ அவரே சொன்னது போல, இப்படிப் போட்டு கலாய்ச்சிருப்பீங்களா?
:)
ஐயோ பாஆஆவஅஅம்ம்ம்!
["குஷி" மும்தாஜ் ஸ்டைலில் படிக்கவும்!]
:))
///கிரேக் சாப்பல்
புதுசா ஏதாவது முயற்சி பண்ணலாம்னா இருக்குற 11 பேரேதான் திரும்ப திரும்ப டீம்ல இருக்காங்க.
பாத்த முகங்களையே மறுபடி மறுபடி பார்க்க போரடிக்குது///
அண்ணா சூப்பர்....நல்லா சிறிச்சேன்..
ஆனா பாருங்க திரும்ப வருவாங்க..
அண்ணா கலாய்க்கறதுன்னா என்ன?...
//சுப்பைய்யா சார் நானும் வரேங்க.!!!( சிபி,கலி நல்லா முத்திக்கட்டும்!!)//
வாங்க வாங்க நானு அங்கதான் இருக்கேன்:-))(கலி முத்தி காய்ஞ்சு போச்சு)
பெனாத்தலார் சொன்னது
----------------------
கலக்கல்
கலாய்த்தல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
தீவிர இந்திய ரசிகரையும்
சேத்துக்கலாம்:
என்ன பங்களாதேஷ் கிட்ட
தோத்துட்டா, ஆட்டம்
முடிஞ்சுபோச்சா? பெர்முடாஸை
350ரன் வித்தியாசத்துல
ஜெயிச்சு, இலங்கை கூட செகண்ட்
பேட்டிங் பண்ணி 250
டார்கெட்டை 15 ஓவர்லே
அடிச்சா சூப்பர் 8 போயிடலாம்.
அப்புறமென்ன, கப்
நமக்குதான்.
போன மாதம் 25ம் தேதி வந்த இந்த பதிவை பாருங்க :)
//இல்லேன்னா, "கிரிக்கெட் ரசிகன்" சொல்றது மாதிரி ஒரு பின்னூட்டம் போட்ட ஆசானை என்னமோ அவரே சொன்னது போல, இப்படிப் போட்டு கலாய்ச்சிருப்பீங்களா?
//
கலாய்த்தல் திணைன்னா என்ன வேணும்னாலும் நடக்கும்னு வாத்தியார் ஐயா அவர்கள் நன்றாகவே அறிந்து வைத்திருப்பார் எஸ்.கே அவர்களே!
உங்களுக்கும் தெரியும்தானே!
//அப்புறமென்ன, கப் நமக்குதான்.//
இது யாருண்ணா..என் கிட்ட காபி குடிக்க கப் கேட்டாரே அந்த அண்ணனா...அண்ணா இது வேற கப்..:-))
அடப்பாவிங்ளா...(பதிவு போட்டவரையும் பின்னூட்டம் போட்டவங்களையும் சேத்துத்தான் சொல்றேன்...)
சின்னப் பசங்க கெலிச்சா சகிச்சுக்க முடியாத கேசுங்களா நீங்க...ஆஹா....ஊருல சின்னப் பசங்க கிரிக்கெட் வெளாடும் போது பந்து வூட்டுக்குள்ளாரையோ மொட்ட மாடிலையோ வந்து விழுந்தா எடுத்து வச்சுக்கிட்டு தரமாட்டேன்னு அடம் பிடிக்கிற கேசுங்களா...அதான் வயசாளிங்களுக்கு எதிரா சின்னப் பசங்க கெலிச்சதை பொருத்துக்காம இப்படி பொகை விடுரீங்க..இந்திய கிரிக்கெட் டீமுக்கு இருக்குற மெச்சூரிட்டி (வயசுல ?!!!), விட்டுக் குடுக்குற மனப்பான்மை எதுவுமே இல்லாம இப்படி இருக்கீங்களே..சரி ..சரி போயி ஒரு பாட்டில் பெப்சி குடிச்சுட்டு ஹூ ஹா இண்டியா (இந்தியா இல்லை) அப்படீன்னு சவுண்டு குடுங்க..இல்லை பெர்முடா மாட்சும் புட்டுக்கப் போகுது...
பெனாத்தலாரே, அது கூட நம்ம செய்ய வேண்டிய வேலை ரொம்ப இருக்கு. பேசாம இப்படி எதாவது சொல்லுங்க - பெர்முடா பங்களாதேசத்தை ஜெயிச்சி, ஸ்ரீலங்கா பங்களாதேஷ் கிட்ட தோத்துப் போயி, அப்படின்னு எதாவது.... நம்ம எதாவது செய்யணமுன்னு வரக்கூடாது. ஆனா அடுத்த சுற்றுக்கு மட்டும் போகணும்.
//கிரேக் சாப்பல்
ஆமா இன்னுமா ஜனங்க எங்களை நம்பிகிட்டு இருக்காங்க?//
:)))))))))))))))))
சிபி இதுமாதிரி எல்லம் நடகும்ன்னு தெரிஞ்சுதான் நான் பேட்டு பேடு எல்லாம் வசுகிடு ஏர்போர்ட்ல காத்துகிடு இருக்கேன். வேற வழியே இல்லை சிக்கிரம் அப்டாமன் கார்டை தேடி எடுதுகிட்டு வாங்க நாமளே களம் இறங்கிட வேண்டியதுதான் என்ன ??;))))))))
:)
சிபிஸ்..இது ஓவர்...பாவம் அவங்க.. ;)
\\என்னங்க பண்றது நம்ம பசங்களுக்கு அப்படியே பழகிடுச்சு :)
இன்னொன்னு பார்த்தீங்கன்னா எப்பல்லாம் இப்படி நாயடி பேயடி வாங்கறாங்களோ அப்பதான் பசங்களுக்கு ரோஷம் வரும். ஆக இதுவும் நன்மைக்கே :) //
ரொம்ப சரிங்க.
///என்ன? வாத்தியார் ஐயாவா இப்படிச் சொல்வது?
கடவுளே! கலி முத்திடுச்சு!
அதனால்தான் இந்தியா கூட கடைசி ஓவர் வரை எதிரணியினருக்கு கஷ்டம் கொடுக்குது போல!///
சிபி அண்ணாச்சி, பின்னூட்டத்தை நல்லாப் படீங்க!
அது வாத்தியார் சொன்னதில்லை!
உங்களைப் போன்ற இந்தியக் கிரிக்கெட் ரசிகன் சொன்னது
கலி ஒன்றும் முற்றவில்லை!
நான் இருக்கும்வரைக்கும் அதை முற்ற விட மாட்டேன்!:-))))
சுப்பையா சாரையும் ராதாவையும் கட்டிங்கில் இருக்கும் நான் வரவேற்கிறேன்.
கிரிக்கெட் ஸ்டேடியத்தில் ப்ளாஸ்கில் கட்டிங்கோட போய் வழக்கம் :)
என்னைக்கு இந்தப் பயகள்ளாம் விளம்பரத்துல நடிக்கிறத விட்டுட்டு....ஒழுங்கா வெளையாடுறாங்களோ....என்னைக்கு இந்திய மக்கள் கிரிக்கெட் மாயையில இருந்து வெளிய வந்து மத்த வெளையாட்டுகளையும் ரசிச்சு ஆதரிக்கிறாங்களோ....அன்னைக்குத்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு மண்டைல அறிவு வந்து ஒழுங்கா வெளையாடுவாங்க.