இந்திய அணியினரையும் தங்கள் பயிற்சி முகாமில் கலந்து கொள்ள வைக்கப் போவதாக அறிந்த அண்ணா ஆதர்ஸ் பள்ளி மாணவர்கள் அதிர்ச்சியும், அதிருப்தியும் அடைந்துள்ளனர்.
இந்திய அணியின் தொடர் தோல்விகளாள் அவ்வணிக்குப் பயிற்சியளிக்கத் திட்டமிட்ட இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகிகள் இந்திய அணியில் இடம்பெற்றிருக்கும் வீரர்களை சென்னை அண்ணா ஆதர்ஸ் பள்ளி மாணவர்களுக்கான கோடைக் கால சிறப்பு கிரிக்கெட் பயிற்சி முகாமுக்கு அனுப்பலாம் என்று பரிந்துரைத்தனர்.
இதயறிந்த அப்பள்ளி மாணவர்கள், மாநில அளவில் விளையாடும் திறன் பெற்ற பல மாணவர்களைக் கொண்ட எங்களுடன், இந்திய அணியினரைப் பயிற்சிக்கு சேர்ப்பதால் "எங்கள் திறமையை சந்தேகிக்க வைக்கும் சூழ்ச்சி" என்று அதிர்ச்சியும், அதிருப்தியும் தெரிவித்துள்ளனர். மேலும் ஆரம்பத்தில் இருந்து பயிற்சி கொடுக்க நேரிடும் என்பதால் தங்களுக்குப் போரடிக்கக் கூடும் என்றும் கவலை தெரிவித்துள்ளனர்.
This entry was posted on 5:39 PM and is filed under
கிரிக்கெ
,
குசும்பு
. You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
2 பின்னூட்டங்கள்:
இது போய்க் குசும்பா? இது தான் நிஜம். நடக்கிறது தானே எழுதறீங்க! அதனாலே நோ ஸ்மைலி.
maaNavarkaL (10-m vakuppu) nalanukkaaka thiyaakam cheytha nam aNiyai avarkaL chariyaaka purinththu koLLa veeNdum.