38 : இன்னியோடு ஏழு நாள் ஆச்சு!
9:37 PM | Author: நாமக்கல் சிபி
சட்டப்பூர்வ எச்சரிக்கை : இது ஒரு பா.க.ச பதிவு



மேற்கண்ட படத்திலில் தவழ்ந்து கொண்டிருக்கும் பிறந்து ஒரு வாரமே ஆன இந்த ஆண் குழந்தை இது வரை (இந்த ஒரு வாரத்தில்) வில்ஸ் ஃபில்டரை கையால் கூடத் தொடவில்லையாம் என்று நம்பத்தகாத சதுரப்பக்கங்கள்* தெரிவிக்கின்றன.

வாழ்த்துக்கள் பாலபாரதி


* எத்தினி நாளுக்குத்தான் வட்டாரம்னே சொல்லுறதாம். ஒரு சேஞ்சுக்காக இந்த சதுரப்பக்கம்

ஊசிக் குறிப்பு1 : கும்மியடிப்பவர்கள் வரவேற்கப்படுகிறார்கள்.

ஊசிக் குறிப்பு2 : சென்னையிலோ அதன் சுற்றுப்புறங்களிளோ இக்குழந்தை எங்காவது திருட்டு தம் அடிப்பதைப் பார்ப்பவர்கள் உடனடியாக பா.க.ச சென்னை தலைமை கிளைக்குத் தெரியப் படுத்தவும்.

37 : மேஜிக் ஷோ பாக்கப்போன தலை!
7:51 PM | Author: நாமக்கல் சிபி
போன வாரம் பூராவும் நம்ம தமிழ் மணத்துலே சாமியாரோட மேஜிக் பார்த்துப் பார்த்து சலிச்சுப் போன தலை, வேறொரு இடத்துல வித்தியாசமான மேஜிக் ஷோ ஒண்ணைப் பார்க்கக் கிளம்பினாரு. அதுக்கப்புறம் என்ன நடந்ததுங்குறதை நீங்களே பார்த்துக்குங்க!




ஆனாலும் நம்ம தலை பார்த்த ஷோ கொஞ்சம் காஸ்ட்லிதான். பின்னே 601 ரூபா ஆச்சே. சும்மா 10, 20 டிக்கெட்டெல்லாம் குடுத்து சாதாரண கண் கட்டு வித்தையெல்லாம் பார்க்குறதுக்கு தலை என்ன லேசுப் பட்ட ஆளா? எங்க தலைன்னாச் சும்மாவா!


பாவை உன்னைப்
பாராத ஒருநொடியும்


சண்டைகள் இல்லாமல்
சகபதிவர் தூற்றாமல்
பதிவரின் வாழ்க்கையொரு
பாலைவனம் ஆனதுபோல்
பெண்ணே நீயென்னைப்
பாராது போனதென்ன?

கயமைக்கு அனுமதியும்
பின்னூட்டங்களில் தானா?
காதலிலே கிடையாதா?
கண்மணியே சொல்லிவிடு!

கலாய்க்கும் நோக்கில்தான்
கமெண்ட் ரெண்டு அடித்தேனே!
காதலியே பிரிந்துவிட்டாள்!
கணப்பொழுதில் விலகிவிட்டாள்!
சொந்தச் செலவிலொரு
சூனியமாய் ஆகியதே!
அப்ளை செய்யாமலேயே
இங்கு அருட்பெருங்கோ
கலாய்க்கப் படுகிறார்!

பொங்கலோ பொங்கல்!

பழையனக் கழித்துப்
புதியனத் தொடங்குதல் போகியாம்.
வா நட்பை விட்டு
காதலைத் தொடங்குவோம்

முதலில் என்னிடம்
வாங்கிய பழைய
கடன்களை செட்டில் செய்!
பின்னர் நட்பா காதலா
என்று முடிவு செய்வோம்!

உன் விரல் பட்டு
வெண் பொங்கலெல்லாம்
பொன் பொங்கலானது!

விட்டால்
வெண்பொங்கல் (சமையற்) குறிப்புகள் கூட
வெண்பாக்களானது என்று சொல்வாயே!

வாசலில் இருப்பது
நீ போட்டக் கோலமா?
வாசனையோடு இருக்கிறது!

இருக்காதா பின்னே!
பசுஞ் சாணத்தால்
தரையை மொழுகியிருக்கிறேனே!

மாட்டுக் கொம்புக்கெல்லாம்
வண்ணம் தீட்ட வேண்டும்.
கொஞ்சம் கன்னத்தைக் காட்டு!

ஐவிரலும் பதியுமாறு
வண்ணம் தோய்த்து
ஒரு கோலமிடத் தீர்மானித்துள்ளேன்!
எங்கே! உன் கன்னைத்தைக் காட்டு!

ஊரெல்லாம் நடக்கிறது
மஞ்சு விரட்டு.
எனக்குள் நடக்கிறது
மயில் விரட்டு!

என்னதான் இருந்தாலும்
கோழி பிடிக்கும் பழக்கம்
இயல்பாய் இருக்கிறது
உன்னுள்!



34 : டாப் மோஸ்ட் பதிவர்கள்!
12:42 AM | Author: நாமக்கல் சிபி
சிவபாலன் அவர்களின் Top Most பதிவர்கள் என்ற பதிவைத் தொடர்ந்து என்னுடைய பதிவுலக அனுபவத்தின் பேரில் டாப் மோஸ்ட் பதிவர்களின் பட்டியலை வெளியிட்டால் என்ன என்று ஒரு யோசனை!

ஆனால் பட்டியல் மிக நீளமாக, நிறைய பக்கங்களுக்குச் சென்றதால் அதைத் தனியே "நாமக்கல் சிபியின் பார்வையில் டாப் மோஸ்ட் பதிவர்கள்" என்று பதிவு செய்து வைத்துள்ளேன்.

இதிலும் சில விடுபட்ட பெயர்கள் இருக்கலாம். அவர்களின் பெயர்களை எல்லாம் என்னுடைய பதிவுகளில் பின்னூட்டமிட்டவர்களின் பெயர்களில் காணலாம்.

இந்த பட்டியல் அகர வரிசைப்படி வெளியிட்டுள்ளேன். யார் முதலில், யார் இரண்டாவது என்றெல்லாம் இல்லாமல், இப்பட்டியலில் உள்ள அனைவருமே டாப் மோஸ்ட் பதிவர்கள்தான்.

Ref : 2006 பதிவுகள் - லிஸ்டிங் பதிவுகள் பற்றி ஒரு பதிவு : - முகமூடி
33 : வீராச்சாமி - சூப்பரா ஓடுதாம்!
1:01 PM | Author: நாமக்கல் சிபி

மின்னஞ்சலில் வந்தது! அப்படியே போட்டிருக்கிறேன்.
விஜய.டி.ஆருக்கும் நமக்கும் சத்தியமாக எந்த பிரச்சினையும் இல்லை!
32 : பெரிய எழுத்தாளராவது எப்படி?
11:38 PM | Author: நாமக்கல் சிபி
அன்புள்ள தம்பி ஜொள்ளுப் பாண்டி,

இன்று மாலை தொலை பேசியில் பேசும்பொழுது "பெரிய எழுத்தாளராவது எப்படி?" என்று நீ எழுப்பிய வினாவில் "எழுத்துலகில் நீ முன்னேற்றம் காண முனைந்திருக்கிறாய் என்பதை உணர்ந்து பெருமிதமும், பேருவகையும் அடைந்தேன். இது போன்ற வினாக்களும், தேடல்களும்தாம் நம்மை முயற்சிகளின் முனைவைக் கொடுத்து சிகரத்தின் பாதையை நோக்கி உந்துநடை போடவைக்கும்.

இக்கடிதத்தின் மூலம் உமக்கு மட்டுமின்றி இதே வினாவுடன் தேடல்களுடனே திரிந்துகொண்டிருக்கும் எத்தனையோ படைப்பாளிகளுக்கும், எழுத்தாளர்களுக்கும் விடை செல்லும் விதமாக இதனை எழுதுகிறேன்.

உம்முடைய வினா உனக்கு மட்டும் விடை சொல்லவில்லை. உலகுக்கே பயனளிக்கும் விதமாக விடை கொண்டு வரப் போகிறது என்று பெருமிதம் கொள் தம்பி!

எத்தனையோ சொற்களையும், வாக்கியங்களையும், உதாரணங்களையும் காட்டி பத்தி பத்தியாய்ச் சொல்லி உன்னை சங்கடத்திற்குள்ளாக்க விரும்பவில்லை. அப்படிச் சொல்லுமளவிற்கு நீயும் சிந்தனைத் திறம் குறைந்தவன் அல்ல என்பதை நான் அறிவேன். அதனால் ஒரு சொல்லில், ஆமாம் ஒரெ சொல்லில் உமக்கு விளக்கப் போகிறேன். நீ புரிந்து கொள்வாய் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

சரி! உமது வினா என்ன?
பெரிய எழுத்தாளராவது எப்படி என்பதுதானே?

"இப்படித்தான்"

எழுத வேண்டும் நீ பெரிய எழுத்தாளனாக.

உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றவை
தள்ளினும் தள்ளாமை நீர்த்து

என்று ஐயன் வள்ளுவப் பெருந்தகையின் குறளை அறிந்திருப்பாய். எவ்வளவு பெரிய எழுத்தாளனாக விரும்புகிறாயோ அவ்வளவு பெரியதாய் உன்னுடைய எழுத்தின் அளவை(Font Size) மாற்றிக்கொள்.

வாழ்க! வளர்க!
31 : ஒரு குழந்தைக்கு வயது 4 x 8
10:20 AM | Author: நாமக்கல் சிபி




ஒரு குழந்தை இன்று 4 கழுதைகளின் வயதைத்(4x8) தொட்டிருக்கிறதாம்.
ஆனாலும் இன்னும் குழந்தைதானாம்.

வாழ்த்துச் சொல்பவர்கள் சொல்லுங்கள்!
கலாய்க்க நினைப்பவர்கள் காலாயுங்கள்!

வாழ்த்துக்கள் குழந்தை!







































030 : நோ போஸ்ட்ஸ்!
12:10 PM | Author: நாமக்கல் சிபி
ஆளாளுக்கு நோ கமெண்ட்ஸ்(பின்னூட்டங்கள்!?) னு பதிவுகள் போட்டுடிட்டிருக்காங்க!
அப்புறம் எல்லாருக்கும் போரடிக்காதா என்ன?

அதான் நோ போஸ்ட்ஸ் (பதிவுகள்) னு ஒரு பதிவு போட்டிருக்கேன்!

எல்லாரும் பார்த்துக்குங்க!
நாங்களும் பீட்டாவுக்கு மாறீட்டம்ல! மாறீட்டம்ல! மாறீட்டம்ல!

(ம்ஹூம், பீட்டாவுக்கு மாற முயற்சி செஞ்சதுல பிதற்றல்கள் மட்டும் எங்கியோ மாட்டிகிச்சு, சீக்கிரம் ரெக்கவரி பண்ணனும்)
029 : வதந்தி நெம்பர் 1
11:52 AM | Author: நாமக்கல் சிபி
கடந்த மாதம் நிறைவு பெற்ற செல்வி தொடரில் தாமரை இறந்த நேரம் சரியில்லாததால் இரண்டு பெண்டாட்டிகள் உடைய கணவன்மார்களுக்கு ஆகாதாம். அதற்குப் பரிகாரமாக திங்கள் முதல் வெள்ளி வரை வாரத்தில் ஐந்து நாட்களும் இரவு 9.30 மணியில் இருந்து 10.00 மணி வரை வாசலில் தாமரைப் பூ ஒன்றை செருகி வைக்க வேண்டுமாம்.

இது அடுத்த தொடரான அரசி நிறைவு பெறும் வரையில் தொடர்ந்து செய்ய வேண்டுமாம்.


அதே போல் முன்பு நிறைவு பெற்ற மெட்டி ஒலியில் சிதம்பரம் மாமாவின் மறணத்திற்கு இதுவரை எந்த சீரியலிலும் திவசம் வைக்காததால் அவரது ஆவி கோபமாக இருக்கிறதாம். இது கூட்டுக் குடும்பங்களுக்கு ஆகாதாம்.
இதனைத் தவிர்க்க கூட்டுக் குடும்பமாக இருப்பவர்கள் தனிக் குடும்பமாக பிரிந்து செல்வது நல்லது என்று பேசிக் கொள்கிறார்கள்.