029 : வதந்தி நெம்பர் 1
11:52 AM | Author: நாமக்கல் சிபி
கடந்த மாதம் நிறைவு பெற்ற செல்வி தொடரில் தாமரை இறந்த நேரம் சரியில்லாததால் இரண்டு பெண்டாட்டிகள் உடைய கணவன்மார்களுக்கு ஆகாதாம். அதற்குப் பரிகாரமாக திங்கள் முதல் வெள்ளி வரை வாரத்தில் ஐந்து நாட்களும் இரவு 9.30 மணியில் இருந்து 10.00 மணி வரை வாசலில் தாமரைப் பூ ஒன்றை செருகி வைக்க வேண்டுமாம்.

இது அடுத்த தொடரான அரசி நிறைவு பெறும் வரையில் தொடர்ந்து செய்ய வேண்டுமாம்.


அதே போல் முன்பு நிறைவு பெற்ற மெட்டி ஒலியில் சிதம்பரம் மாமாவின் மறணத்திற்கு இதுவரை எந்த சீரியலிலும் திவசம் வைக்காததால் அவரது ஆவி கோபமாக இருக்கிறதாம். இது கூட்டுக் குடும்பங்களுக்கு ஆகாதாம்.
இதனைத் தவிர்க்க கூட்டுக் குடும்பமாக இருப்பவர்கள் தனிக் குடும்பமாக பிரிந்து செல்வது நல்லது என்று பேசிக் கொள்கிறார்கள்.
|
This entry was posted on 11:52 AM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

6 பின்னூட்டங்கள்:

On Fri Jan 19, 12:07:00 PM , Anonymous said...

அய்யய்யோ...

தம்பி, தங்கச்சி, ஆம்பள, தலச்சம் புள்ள போயி இப்போ சின்ன வீடு, தனிக்குடித்தனம் வரைக்கும் வந்துடுச்சா..

ஆமா, தாமரை எந்த வீட்டு வாசல்ல வைக்க...அத்த சொல்லு முதல்ல...

 
On Fri Jan 19, 12:09:00 PM , நாமக்கல் சிபி said...

//ஆமா, தாமரை எந்த வீட்டு வாசல்ல வைக்க...அத்த சொல்லு முதல்ல...
//

அது சரி! இப்படி ஒரு வெடியைக் கொளுத்திப் போட முடியும்ணு தோணலையே எனக்கு!

 
On Fri Jan 19, 12:22:00 PM , அனுசுயா said...

ஆகவைருசா வருசம் எது வரதோ இல்லயோ இந்த பரிகாரம் மட்டும் கரெக்டா வந்திருது.

 
On Fri Jan 19, 12:27:00 PM , கோவி.கண்ணன் [GK] said...

நாமக்கல்லாரே,

ஆவி அண்ணாச்சியில் வர வேண்டிய மேட்டர் இங்கே வந்திருக்கு !
:))

 
On Fri Jan 19, 12:28:00 PM , dondu(#11168674346665545885) said...

"கடந்த மாதம் நிறைவு பெற்ற செல்வி தொடரில் தாமரை இறந்த நேரம் சரியில்லாததால் இரண்டு பெண்டாட்டிகள் உடைய கணவன்மார்களுக்கு ஆகாதாம்."

ஆகவே தாமரை வைக்காதீர்கள். சாகட்டும் ஜீஜேக்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

 
On Fri Jan 19, 12:28:00 PM , ரவி said...

இந்த கொடுமையான பதிவில் இருந்து என்ன தெரியுது ? நீங்களும் வீட்ல இந்த கொடுமையை சகிக்கமுடியாத சூழ்நிலையில், பார்த்தே ஆகவேண்டிய இம்போஸிஷன் தண்டனையில் இருக்கிறீர் என்று தெரிகிறது...

இது எங்கே போய் முடியுமோ !!! அய்யகோ !!!!