32 : பெரிய எழுத்தாளராவது எப்படி?
11:38 PM | Author: நாமக்கல் சிபி
அன்புள்ள தம்பி ஜொள்ளுப் பாண்டி,

இன்று மாலை தொலை பேசியில் பேசும்பொழுது "பெரிய எழுத்தாளராவது எப்படி?" என்று நீ எழுப்பிய வினாவில் "எழுத்துலகில் நீ முன்னேற்றம் காண முனைந்திருக்கிறாய் என்பதை உணர்ந்து பெருமிதமும், பேருவகையும் அடைந்தேன். இது போன்ற வினாக்களும், தேடல்களும்தாம் நம்மை முயற்சிகளின் முனைவைக் கொடுத்து சிகரத்தின் பாதையை நோக்கி உந்துநடை போடவைக்கும்.

இக்கடிதத்தின் மூலம் உமக்கு மட்டுமின்றி இதே வினாவுடன் தேடல்களுடனே திரிந்துகொண்டிருக்கும் எத்தனையோ படைப்பாளிகளுக்கும், எழுத்தாளர்களுக்கும் விடை செல்லும் விதமாக இதனை எழுதுகிறேன்.

உம்முடைய வினா உனக்கு மட்டும் விடை சொல்லவில்லை. உலகுக்கே பயனளிக்கும் விதமாக விடை கொண்டு வரப் போகிறது என்று பெருமிதம் கொள் தம்பி!

எத்தனையோ சொற்களையும், வாக்கியங்களையும், உதாரணங்களையும் காட்டி பத்தி பத்தியாய்ச் சொல்லி உன்னை சங்கடத்திற்குள்ளாக்க விரும்பவில்லை. அப்படிச் சொல்லுமளவிற்கு நீயும் சிந்தனைத் திறம் குறைந்தவன் அல்ல என்பதை நான் அறிவேன். அதனால் ஒரு சொல்லில், ஆமாம் ஒரெ சொல்லில் உமக்கு விளக்கப் போகிறேன். நீ புரிந்து கொள்வாய் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

சரி! உமது வினா என்ன?
பெரிய எழுத்தாளராவது எப்படி என்பதுதானே?

"இப்படித்தான்"

எழுத வேண்டும் நீ பெரிய எழுத்தாளனாக.

உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றவை
தள்ளினும் தள்ளாமை நீர்த்து

என்று ஐயன் வள்ளுவப் பெருந்தகையின் குறளை அறிந்திருப்பாய். எவ்வளவு பெரிய எழுத்தாளனாக விரும்புகிறாயோ அவ்வளவு பெரியதாய் உன்னுடைய எழுத்தின் அளவை(Font Size) மாற்றிக்கொள்.

வாழ்க! வளர்க!
This entry was posted on 11:38 PM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

24 பின்னூட்டங்கள்:

On Wed Jan 24, 11:59:00 PM , ஐந்திணை said...

தினகரனில் "உடன்பிறப்பிற்கு" படித்த அனுபவம்.

 
On Thu Jan 25, 12:29:00 AM , ஜி said...

ஆஹா.... இதத்தான்யா சொல்வாய்ங்க கடிமன்னன்னு...

 
On Thu Jan 25, 12:31:00 AM , இலவசக்கொத்தனார் said...

கொஞ்ச நாள் கழித்து வந்தாலும் வழக்கம் போல கலாய்த்தலா வந்து இருக்கீங்க. உங்களுக்கு ஒரு புத்தகம் ஒண்ணு சொல்லறேன். அது கொஞ்சம் உபயோகமா இருக்கும்.

 
On Thu Jan 25, 02:50:00 AM , துளசி கோபால் said...

அது இருக்கட்டும், பெரிய எழுத்தாளரா ஆனோமா இல்லையான்னு எப்படிக் கண்டு
பிடிக்கணும்?

ரொம்பச் சுலபம். நம்மைப் பத்தி 'கிசுகிசு' வந்துச்சுன்னா நாமே பெரிய எழுத்தாளர்:-)))))
( என்னைப் பத்தி வந்திருக்கு மக்கள் சொல்லிக்கறாங்கப்பா)

 
On Thu Jan 25, 03:33:00 AM , மங்கை said...

சிபி..இப்படியா சீரியஸா கலாய்ப்பாங்க?
இதுக்கு பெரியவர வேற சப்போர்ட்டுக்கு கூப்டு இருக்கீங்க

 
On Thu Jan 25, 04:26:00 AM , Anonymous said...

ஆரம்பிச்சுட்டீங்களா சிபி?jollzஐ விட உங்க லொள்ளு too much இல்லை 3 much. :))

 
On Thu Jan 25, 10:11:00 AM , ILA (a) இளா said...

பெருசா எழுதினா பெரிய எழுத்தாளர் ஆகிரலாம்னு கண்டுபுடுச்சு சொன்ன சிபிக்கு பெரிய ஓ

 
On Thu Jan 25, 10:12:00 AM , ஜொள்ளுப்பாண்டி said...

ஆஹா சிபியண்ணே என ஞானக்கண்ணை பீர் பாட்டிலை ஓபன் பண்ணுற மாதிரி 'டக்'க்குன்னு தொறந்துட்டீயளே !!! :))))) விளக்கம் பொங்கி வழியுதே !! ?? Font ட பெருசாக்கை பெரிய பெரிய எழுத்தா எழுதினாப்போதுமா நான் பெரிய எழுத்தாளனா ?? ஆஹா ஆஹா இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே !!! விடுங்க பிரிச்சு மேஞ்சுடறேன் !! எழுத்தை சொன்னேன் ;)))))

 
On Thu Jan 25, 10:13:00 AM , அனுசுயா said...

அட அட அட என்ன ஒரு மூளை. எப்டிதான் தோனுதோ. :)))

 
On Thu Jan 25, 10:14:00 AM , ஜொள்ளுப்பாண்டி said...

'உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றவை
தள்ளினும் தள்ளாமை நீர்த்து'


இதிலே நம்ம தாத்தா வள்ளுவருகூட இப்படி செப்பி இருக்காரா?? நமக்கு மூன்றாம் பால் படிக்கவே நேரம் போதலையா அதான் கவனிகலை போல இருக்கு !!;)))))

 
On Thu Jan 25, 01:52:00 PM , கோவி.கண்ணன் said...

நல்ல தகவல் ... நானும் முயல்கிறேன்

நன்றி !
:))

 
On Thu Jan 25, 02:47:00 PM , கார்த்திக் பிரபு said...

rasiththu padiththane

 
On Fri Jan 26, 04:08:00 PM , நாமக்கல் சிபி said...

//தினகரனில் "உடன்பிறப்பிற்கு" படித்த அனுபவம்.
//

மிக்க நன்றி முகில்!

 
On Fri Jan 26, 04:09:00 PM , நாமக்கல் சிபி said...

//ஆஹா.... இதத்தான்யா சொல்வாய்ங்க கடிமன்னன்னு//

:))

மிக்க நன்றி ஜி!

 
On Fri Jan 26, 04:09:00 PM , நாமக்கல் சிபி said...

//கொஞ்ச நாள் கழித்து வந்தாலும் வழக்கம் போல கலாய்த்தலா வந்து இருக்கீங்க. உங்களுக்கு ஒரு புத்தகம் ஒண்ணு சொல்லறேன். அது கொஞ்சம் உபயோகமா இருக்கும்.
//

மிக்க நன்றி கொத்ஸ்!

சொல்லுங்க! என்ன புத்தகம்னு?

 
On Fri Jan 26, 04:10:00 PM , நாமக்கல் சிபி said...

//அது இருக்கட்டும், பெரிய எழுத்தாளரா ஆனோமா இல்லையான்னு எப்படிக் கண்டு
பிடிக்கணும்?

ரொம்பச் சுலபம். நம்மைப் பத்தி 'கிசுகிசு' வந்துச்சுன்னா நாமே பெரிய எழுத்தாளர்:-)))))
( என்னைப் பத்தி வந்திருக்கு மக்கள் சொல்லிக்கறாங்கப்பா)
//

துளசியக்கா!
உங்க யோசனையும் நல்லாத்தான் இருக்குது!

:))

 
On Fri Jan 26, 04:11:00 PM , நாமக்கல் சிபி said...

//சிபி..இப்படியா சீரியஸா கலாய்ப்பாங்க?
இதுக்கு பெரியவர வேற சப்போர்ட்டுக்கு கூப்டு இருக்கீங்க
//

மங்கை! வருகைக்கு மிக்க நன்றி!

கலாய்க்குறதுன்னு முடிவு பண்ணிட்டா சீரியஸாவும் கலாய்க்கணும்! அதான் கலாய்த்தல் திணைக்கு அழகு!

 
On Fri Jan 26, 04:12:00 PM , நாமக்கல் சிபி said...

//ஆரம்பிச்சுட்டீங்களா சிபி?jollzஐ விட உங்க லொள்ளு too much இல்லை 3 much. :))
//



வாங்க துர்க்கா!

3 மச்சா?
மிக்க நன்றி!

 
On Fri Jan 26, 04:12:00 PM , நாமக்கல் சிபி said...

//பெருசா எழுதினா பெரிய எழுத்தாளர் ஆகிரலாம்னு கண்டுபுடுச்சு சொன்ன சிபிக்கு பெரிய ஓ //

ரொம்ப நன்றி இளா!

 
On Fri Jan 26, 04:13:00 PM , நாமக்கல் சிபி said...

//ஆஹா சிபியண்ணே என ஞானக்கண்ணை பீர் பாட்டிலை ஓபன் பண்ணுற மாதிரி 'டக்'க்குன்னு தொறந்துட்டீயளே !!! :))))) விளக்கம் பொங்கி வழியுதே !! ?? Font ட பெருசாக்கை பெரிய பெரிய எழுத்தா எழுதினாப்போதுமா நான் பெரிய எழுத்தாளனா ?? ஆஹா ஆஹா இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே !!! விடுங்க பிரிச்சு மேஞ்சுடறேன் !! எழுத்தை சொன்னேன் ;)))))
//

பாண்டித் தம்பி! நீ புரிந்து கொண்டதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி!

//பீர் பாட்டிலை //

இதெல்லாம் நமக்கு இப்போ அலர்ஜி ஆயிடுச்சு! அதுலயும் 5000 ஆ! சொல்லவே வேணாம்! ச்சே! உவ்வே!

 
On Fri Jan 26, 04:14:00 PM , நாமக்கல் சிபி said...

//அட அட அட என்ன ஒரு மூளை. எப்டிதான் தோனுதோ//

வெரி சிம்பிள் அனு!
உக்காந்து யோசிக்கணும்! அவ்வளவுதான்!

:))

 
On Fri Jan 26, 04:14:00 PM , நாமக்கல் சிபி said...

//நமக்கு மூன்றாம் பால் படிக்கவே நேரம் போதலையா அதான் கவனிகலை போல இருக்கு !!;)))))
//

அதுசரி!

:))

 
On Fri Jan 26, 04:15:00 PM , நாமக்கல் சிபி said...

//நல்ல தகவல் ... நானும் முயல்கிறேன்
//

வாங்க கோவி! விரைவில் பெரிய எழுத்தாளராக வாழ்த்துக்கள்!

 
On Fri Jan 26, 04:16:00 PM , நாமக்கல் சிபி said...

//rasiththu padiththane //

வாங்க கார்த்திக்! ரசித்து படித்தமைக்கு மிக்க நன்றி!