மேற்கண்ட படத்திலில் தவழ்ந்து கொண்டிருக்கும் பிறந்து ஒரு வாரமே ஆன இந்த ஆண் குழந்தை இது வரை (இந்த ஒரு வாரத்தில்) வில்ஸ் ஃபில்டரை கையால் கூடத் தொடவில்லையாம் என்று நம்பத்தகாத சதுரப்பக்கங்கள்* தெரிவிக்கின்றன.
வாழ்த்துக்கள் பாலபாரதி
* எத்தினி நாளுக்குத்தான் வட்டாரம்னே சொல்லுறதாம். ஒரு சேஞ்சுக்காக இந்த சதுரப்பக்கம்
ஊசிக் குறிப்பு2 : சென்னையிலோ அதன் சுற்றுப்புறங்களிளோ இக்குழந்தை எங்காவது திருட்டு தம் அடிப்பதைப் பார்ப்பவர்கள் உடனடியாக பா.க.ச சென்னை தலைமை கிளைக்குத் தெரியப் படுத்தவும்.
போன வாரம் பூராவும் நம்ம தமிழ் மணத்துலே சாமியாரோட மேஜிக் பார்த்துப் பார்த்து சலிச்சுப் போன தலை, வேறொரு இடத்துல வித்தியாசமான மேஜிக் ஷோ ஒண்ணைப் பார்க்கக் கிளம்பினாரு. அதுக்கப்புறம் என்ன நடந்ததுங்குறதை நீங்களே பார்த்துக்குங்க!
ஆனாலும் நம்ம தலை பார்த்த ஷோ கொஞ்சம் காஸ்ட்லிதான். பின்னே 601 ரூபா ஆச்சே. சும்மா 10, 20 டிக்கெட்டெல்லாம் குடுத்து சாதாரண கண் கட்டு வித்தையெல்லாம் பார்க்குறதுக்கு தலை என்ன லேசுப் பட்ட ஆளா? எங்க தலைன்னாச் சும்மாவா!
பழையனக் கழித்துப் புதியனத் தொடங்குதல் போகியாம். வா நட்பை விட்டு காதலைத் தொடங்குவோம் முதலில் என்னிடம் வாங்கிய பழைய கடன்களை செட்டில் செய்! பின்னர் நட்பா காதலா என்று முடிவு செய்வோம்!
உன் விரல் பட்டு வெண் பொங்கலெல்லாம் பொன் பொங்கலானது! விட்டால் வெண்பொங்கல் (சமையற்) குறிப்புகள் கூட வெண்பாக்களானது என்று சொல்வாயே!
வாசலில் இருப்பது நீ போட்டக் கோலமா? வாசனையோடு இருக்கிறது!
சிவபாலன் அவர்களின் Top Most பதிவர்கள் என்ற பதிவைத் தொடர்ந்து என்னுடைய பதிவுலக அனுபவத்தின் பேரில் டாப் மோஸ்ட் பதிவர்களின் பட்டியலை வெளியிட்டால் என்ன என்று ஒரு யோசனை!
இதிலும் சில விடுபட்ட பெயர்கள் இருக்கலாம். அவர்களின் பெயர்களை எல்லாம் என்னுடைய பதிவுகளில் பின்னூட்டமிட்டவர்களின் பெயர்களில் காணலாம்.
இந்த பட்டியல் அகர வரிசைப்படி வெளியிட்டுள்ளேன். யார் முதலில், யார் இரண்டாவது என்றெல்லாம் இல்லாமல், இப்பட்டியலில் உள்ள அனைவருமே டாப் மோஸ்ட் பதிவர்கள்தான்.
இன்று மாலை தொலை பேசியில் பேசும்பொழுது "பெரிய எழுத்தாளராவது எப்படி?" என்று நீ எழுப்பிய வினாவில் "எழுத்துலகில் நீ முன்னேற்றம் காண முனைந்திருக்கிறாய் என்பதை உணர்ந்து பெருமிதமும், பேருவகையும் அடைந்தேன். இது போன்ற வினாக்களும், தேடல்களும்தாம் நம்மை முயற்சிகளின் முனைவைக் கொடுத்து சிகரத்தின் பாதையை நோக்கி உந்துநடை போடவைக்கும்.
இக்கடிதத்தின் மூலம் உமக்கு மட்டுமின்றி இதே வினாவுடன் தேடல்களுடனே திரிந்துகொண்டிருக்கும் எத்தனையோ படைப்பாளிகளுக்கும், எழுத்தாளர்களுக்கும் விடை செல்லும் விதமாக இதனை எழுதுகிறேன்.
உம்முடைய வினா உனக்கு மட்டும் விடை சொல்லவில்லை. உலகுக்கே பயனளிக்கும் விதமாக விடை கொண்டு வரப் போகிறது என்று பெருமிதம் கொள் தம்பி!
எத்தனையோ சொற்களையும், வாக்கியங்களையும், உதாரணங்களையும் காட்டி பத்தி பத்தியாய்ச் சொல்லி உன்னை சங்கடத்திற்குள்ளாக்க விரும்பவில்லை. அப்படிச் சொல்லுமளவிற்கு நீயும் சிந்தனைத் திறம் குறைந்தவன் அல்ல என்பதை நான் அறிவேன். அதனால் ஒரு சொல்லில், ஆமாம் ஒரெ சொல்லில் உமக்கு விளக்கப் போகிறேன். நீ புரிந்து கொள்வாய் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது.
சரி! உமது வினா என்ன? பெரிய எழுத்தாளராவது எப்படி என்பதுதானே?
"இப்படித்தான்"
எழுத வேண்டும் நீ பெரிய எழுத்தாளனாக.
உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றவை தள்ளினும் தள்ளாமை நீர்த்து
என்று ஐயன் வள்ளுவப் பெருந்தகையின் குறளை அறிந்திருப்பாய். எவ்வளவு பெரிய எழுத்தாளனாக விரும்புகிறாயோ அவ்வளவு பெரியதாய் உன்னுடைய எழுத்தின் அளவை(Font Size) மாற்றிக்கொள்.
கடந்த மாதம் நிறைவு பெற்ற செல்வி தொடரில் தாமரை இறந்த நேரம் சரியில்லாததால் இரண்டு பெண்டாட்டிகள் உடைய கணவன்மார்களுக்கு ஆகாதாம். அதற்குப் பரிகாரமாக திங்கள் முதல் வெள்ளி வரை வாரத்தில் ஐந்து நாட்களும் இரவு 9.30 மணியில் இருந்து 10.00 மணி வரை வாசலில் தாமரைப் பூ ஒன்றை செருகி வைக்க வேண்டுமாம்.
இது அடுத்த தொடரான அரசி நிறைவு பெறும் வரையில் தொடர்ந்து செய்ய வேண்டுமாம்.
அதே போல் முன்பு நிறைவு பெற்ற மெட்டி ஒலியில் சிதம்பரம் மாமாவின் மறணத்திற்கு இதுவரை எந்த சீரியலிலும் திவசம் வைக்காததால் அவரது ஆவி கோபமாக இருக்கிறதாம். இது கூட்டுக் குடும்பங்களுக்கு ஆகாதாம். இதனைத் தவிர்க்க கூட்டுக் குடும்பமாக இருப்பவர்கள் தனிக் குடும்பமாக பிரிந்து செல்வது நல்லது என்று பேசிக் கொள்கிறார்கள்.