33 : வீராச்சாமி - சூப்பரா ஓடுதாம்!
1:01 PM | Author: நாமக்கல் சிபி

மின்னஞ்சலில் வந்தது! அப்படியே போட்டிருக்கிறேன்.
விஜய.டி.ஆருக்கும் நமக்கும் சத்தியமாக எந்த பிரச்சினையும் இல்லை!
32 : பெரிய எழுத்தாளராவது எப்படி?
11:38 PM | Author: நாமக்கல் சிபி
அன்புள்ள தம்பி ஜொள்ளுப் பாண்டி,

இன்று மாலை தொலை பேசியில் பேசும்பொழுது "பெரிய எழுத்தாளராவது எப்படி?" என்று நீ எழுப்பிய வினாவில் "எழுத்துலகில் நீ முன்னேற்றம் காண முனைந்திருக்கிறாய் என்பதை உணர்ந்து பெருமிதமும், பேருவகையும் அடைந்தேன். இது போன்ற வினாக்களும், தேடல்களும்தாம் நம்மை முயற்சிகளின் முனைவைக் கொடுத்து சிகரத்தின் பாதையை நோக்கி உந்துநடை போடவைக்கும்.

இக்கடிதத்தின் மூலம் உமக்கு மட்டுமின்றி இதே வினாவுடன் தேடல்களுடனே திரிந்துகொண்டிருக்கும் எத்தனையோ படைப்பாளிகளுக்கும், எழுத்தாளர்களுக்கும் விடை செல்லும் விதமாக இதனை எழுதுகிறேன்.

உம்முடைய வினா உனக்கு மட்டும் விடை சொல்லவில்லை. உலகுக்கே பயனளிக்கும் விதமாக விடை கொண்டு வரப் போகிறது என்று பெருமிதம் கொள் தம்பி!

எத்தனையோ சொற்களையும், வாக்கியங்களையும், உதாரணங்களையும் காட்டி பத்தி பத்தியாய்ச் சொல்லி உன்னை சங்கடத்திற்குள்ளாக்க விரும்பவில்லை. அப்படிச் சொல்லுமளவிற்கு நீயும் சிந்தனைத் திறம் குறைந்தவன் அல்ல என்பதை நான் அறிவேன். அதனால் ஒரு சொல்லில், ஆமாம் ஒரெ சொல்லில் உமக்கு விளக்கப் போகிறேன். நீ புரிந்து கொள்வாய் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

சரி! உமது வினா என்ன?
பெரிய எழுத்தாளராவது எப்படி என்பதுதானே?

"இப்படித்தான்"

எழுத வேண்டும் நீ பெரிய எழுத்தாளனாக.

உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றவை
தள்ளினும் தள்ளாமை நீர்த்து

என்று ஐயன் வள்ளுவப் பெருந்தகையின் குறளை அறிந்திருப்பாய். எவ்வளவு பெரிய எழுத்தாளனாக விரும்புகிறாயோ அவ்வளவு பெரியதாய் உன்னுடைய எழுத்தின் அளவை(Font Size) மாற்றிக்கொள்.

வாழ்க! வளர்க!
31 : ஒரு குழந்தைக்கு வயது 4 x 8
10:20 AM | Author: நாமக்கல் சிபி




ஒரு குழந்தை இன்று 4 கழுதைகளின் வயதைத்(4x8) தொட்டிருக்கிறதாம்.
ஆனாலும் இன்னும் குழந்தைதானாம்.

வாழ்த்துச் சொல்பவர்கள் சொல்லுங்கள்!
கலாய்க்க நினைப்பவர்கள் காலாயுங்கள்!

வாழ்த்துக்கள் குழந்தை!







































030 : நோ போஸ்ட்ஸ்!
12:10 PM | Author: நாமக்கல் சிபி
ஆளாளுக்கு நோ கமெண்ட்ஸ்(பின்னூட்டங்கள்!?) னு பதிவுகள் போட்டுடிட்டிருக்காங்க!
அப்புறம் எல்லாருக்கும் போரடிக்காதா என்ன?

அதான் நோ போஸ்ட்ஸ் (பதிவுகள்) னு ஒரு பதிவு போட்டிருக்கேன்!

எல்லாரும் பார்த்துக்குங்க!
நாங்களும் பீட்டாவுக்கு மாறீட்டம்ல! மாறீட்டம்ல! மாறீட்டம்ல!

(ம்ஹூம், பீட்டாவுக்கு மாற முயற்சி செஞ்சதுல பிதற்றல்கள் மட்டும் எங்கியோ மாட்டிகிச்சு, சீக்கிரம் ரெக்கவரி பண்ணனும்)
029 : வதந்தி நெம்பர் 1
11:52 AM | Author: நாமக்கல் சிபி
கடந்த மாதம் நிறைவு பெற்ற செல்வி தொடரில் தாமரை இறந்த நேரம் சரியில்லாததால் இரண்டு பெண்டாட்டிகள் உடைய கணவன்மார்களுக்கு ஆகாதாம். அதற்குப் பரிகாரமாக திங்கள் முதல் வெள்ளி வரை வாரத்தில் ஐந்து நாட்களும் இரவு 9.30 மணியில் இருந்து 10.00 மணி வரை வாசலில் தாமரைப் பூ ஒன்றை செருகி வைக்க வேண்டுமாம்.

இது அடுத்த தொடரான அரசி நிறைவு பெறும் வரையில் தொடர்ந்து செய்ய வேண்டுமாம்.


அதே போல் முன்பு நிறைவு பெற்ற மெட்டி ஒலியில் சிதம்பரம் மாமாவின் மறணத்திற்கு இதுவரை எந்த சீரியலிலும் திவசம் வைக்காததால் அவரது ஆவி கோபமாக இருக்கிறதாம். இது கூட்டுக் குடும்பங்களுக்கு ஆகாதாம்.
இதனைத் தவிர்க்க கூட்டுக் குடும்பமாக இருப்பவர்கள் தனிக் குடும்பமாக பிரிந்து செல்வது நல்லது என்று பேசிக் கொள்கிறார்கள்.
028 : வதந்திகளும் நம்பிக்கைகளும்
1:30 AM | Author: நாமக்கல் சிபி
வருடா வருடம் பொங்களுக்கு முதல் நாள் சங்கராந்தி(காப்பு கட்டும் நாள்) வருகிறாரோ இல்லையோ வதந்தியார் வந்து விடுகிறார்.

ஒரு வருடம் சங்கராந்தியன்று வீட்டு ஆண்களுக்கு ஆகாதாம் என்று உடன்பிறந்த பெண்களுக்கு பச்சைப் புடவை வாங்கித் தருவதுதான் பரிகாரமென்றனர். அதுபோலவே இந்த வருடப் பொங்கலுக்கும் வதந்தி கிளம்பியது.

பொங்கலுக்கு முன்பே தொலைபேசியில் வந்த செய்தி. வீட்டு வாசலில் கோலமிட்டு, அதன் நடுவே தாமரை, அரளி மற்றும் காப்புக் கட்டப் பயன்படுத்தும் ஆவாரம் பூ ஆகியவற்றை வைத்து அகல் விளக்கு ஒன்றை ஏற்றி வைக்க வேண்டும் என்றனர். நானும் எனது மனைவியும் அந்த நேரத்தில் பயணத்தில் இருந்ததால் தொலைபேசி மூலமே எங்கள் ஊருக்கும் (நாமக்கல்)அந்த செய்தியை தெரிவித்தார் எனது மனைவி.

பொங்கலை நாமக்கல்லில் சிறப்பாகக் கொண்டாடி முடித்து பின்னர் கோவைக்குக் கிளம்பி வந்துவிட்டோம்.
அத்துடன் முடிந்தது என்று இருந்தால் இன்று எங்கள் ஊரிலிருந்து ஒன்று கிளம்பியது. அதாவது பச்சரிசி மற்றும் மஞ்சள் இவற்றைக் கலந்து வாழை இலையில் பரப்பி அதன் மேல் அகல் விளக்கேற்றி வாசலில் வைத்துவிட வேண்டுமாம். பின்னர் மறுநாள் அவற்றை கிணற்றில் போட வேண்டுமாம் அல்லது கால் படாத இடமாக இட்டு விட வேண்டுமாம் . அதைக் கேட்டுவிட்டு எங்கள் வீட்டு அம்மணியும் செவ்வனே நிறைவேற்றினார். நமக்குத்தான் முதலில் செய்தி வந்துள்ளது என்று பார்த்தால் எங்கள் தெரு முனனயில் ஏற்கனவே ஐந்தாறு இடங்களில் அரிசியும் விளக்குகளும் கிடந்தன.

ஐயா! வதந்தி கிளப்பும் புண்ணியவன்களே! கிளப்புவதுதான் கிளப்புகிறீர்கள்! வீட்டுக்கு அரை ஆழாக்கு அரிசியை அருகில் இருக்கும் ஏழைகளுக்கு தானம் செய்யுங்கள் என்றுதான் கிளப்புங்களேன். பரிகாரத்திற்குப் பரிகாரமும் ஆயிற்று. அப்படியே இன்னொருவர் வீட்டில் அரை வயிற்றுக் கஞ்சிக்கு ஏற்பாடு செய்த புண்ணியமும் கிட்டும் அல்லவா!
027 : ஹாட் நியூஸ்!
8:33 PM | Author: நாமக்கல் சிபி
தமிழ்மணம் டிசம்பர் 17, 2006


சென்னையில் இன்று மாலை நடைபெறவிருந்த வலைப்பதிவர் சந்திப்பைத் தொடர்ந்து இன்று மதியம் முதல் அனைத்து செய்தி வலைத்தளங்களும் கண்காணிக்கப்பட்டன. பிரபலமானவர்களின் வருகையுடன் வலைப்பதிவர் சந்திப்பு வெற்றிகரமாக நடைபெற்றது.

ஏமாற்றிய இட்லி வடை : ஃபிளாஷ் நியூஸ் எதுவும் தராமல் வழக்கமான சினிமா மற்றும் இட்லி வடை அவார்ட்ஸ் பதிவுகள் மட்டுமே இட்டு வாசகர்களை ஏமாற்றம் அடையச் செய்தார் இட்லி வடை.

இன்னும் இரு வாரங்களுக்குப் பதிவு இடுவதில்லை என ஜொள்ளுப் பாண்டியார் முடிவு.

"எப்படி" தொடர் போல இந்த வாரத் தலைப்புக்கு தயார் நிலையில் தமிழ்மணப் பதிவர்கள் .

விரிவான செய்திகள் நிகழ்வுகள் நடந்து முடிந்த பிறகு.

சந்திப்பு பதிவுகள்:

ச.சங்கர் : வலைப்பதிவர்கள் சந்திப்பு- சுடச் சுட...

சிவஞானம்ஜி : சென்னை வலைப்பதிவர் சந்திப்பு-12-17-06

தமிழ்நதி : பதிவர் வட்ட சந்திப்பு: ஒரு பார்வை
026 : சிறந்த உள்குத்துப் பதிவு - 2006
10:24 PM | Author: நாமக்கல் சிபி
பதினைந்து நாட்களுக்கும் மேலாக நூடுல்ஸின் மேலிருந்த அனுதாபத்தினால் நூடுல்ஸே உண்ணாமல் இருந்த ஜொள்ளுப் பாண்டி, தோசை வெறுத்துப் போய் மீண்டும் நூடுல்ஸ் தயாரித்து சாப்பிட்டார். - செய்தி.

நூடுல்ஸே
நூடுல்ஸை
சுவைக்கிறதே!
025 : இது பை பை சொல்லும் வாரம்!
10:45 PM | Author: நாமக்கல் சிபி
முதலில் தமிழ்மணத்திலிருந்து குமரன்!
அப்புறம் நம்ம செந்தழல் ரவி!
இளா!

என்று இந்த வாரம் முழுக்க யாராவது பை பை சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். இது எப்படியோ "எப்படி" பதிவுகள் வரிசையில் வந்த "எப்படி" பதிவுகளைப் போல் பத்திக் கொண்டது இந்தப் பதிவுலகத்தை!

இந்த வரிசையில் இதோ நானும் சொல்கிறேன் ஒரு பை பை!
பின் குறிப்பு :
விபரம் அறிய விரும்புவோர் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக் கொண்டு இந்தப் பதிவை இன்னொரு முறை முழுதாகப் படிக்கவும்.











பை பை 2006
024 : ஒரு குறும்பா!
12:06 PM | Author: நாமக்கல் சிபி











பா