025 : இது பை பை சொல்லும் வாரம்!
10:45 PM | Author: நாமக்கல் சிபி
முதலில் தமிழ்மணத்திலிருந்து குமரன்!
அப்புறம் நம்ம செந்தழல் ரவி!
இளா!

என்று இந்த வாரம் முழுக்க யாராவது பை பை சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். இது எப்படியோ "எப்படி" பதிவுகள் வரிசையில் வந்த "எப்படி" பதிவுகளைப் போல் பத்திக் கொண்டது இந்தப் பதிவுலகத்தை!

இந்த வரிசையில் இதோ நானும் சொல்கிறேன் ஒரு பை பை!
பின் குறிப்பு :
விபரம் அறிய விரும்புவோர் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக் கொண்டு இந்தப் பதிவை இன்னொரு முறை முழுதாகப் படிக்கவும்.











பை பை 2006
|
This entry was posted on 10:45 PM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

39 பின்னூட்டங்கள்:

On Wed Dec 13, 11:07:00 PM , கோவி.கண்ணன் [GK] said...

//இந்த வரிசையில் இதோ நானும் சொல்கிறேன் ஒரு பை பை!//

ஆக இன்னிக்கு பதிவு எழுத இதான் விசயமா ?
:)

 
On Wed Dec 13, 11:13:00 PM , Sivabalan said...

சிபி,

விளக்கு எண்ணெய் கிடைக்காமல் நெய் ஊற்றி தேடிப் பார்த்தேன்.. ஒன்றும் புரியவில்லை.. விளக்கவும் :)

 
On Wed Dec 13, 11:55:00 PM , MeenaArun said...

ungalodu sernthu naangalum solkirom byebye 2006

MeenaArun

 
On Wed Dec 13, 11:55:00 PM , குமரன் (Kumaran) said...

என்னப்பு? இன்னும் அதுக்கு நேரம் வரலையே. இன்னும் ரெண்டு வாரம் இருக்கே?! அதுக்குள்ள என்ன அவசரம்?

 
On Wed Dec 13, 11:56:00 PM , குமரன் (Kumaran) said...

குறும்பா பதிவைப் படிச்சதால எனக்கு விளக்கெண்ணை இல்லாமலேயே பதிவின் விவரம் புரிஞ்சதே! :-)

 
On Thu Dec 14, 12:07:00 AM , gulf-tamilan said...

//பை பை 2006//
ithu thanaa!!?

 
On Thu Dec 14, 12:15:00 AM , நாமக்கல் சிபி said...

//விளக்கு எண்ணெய் கிடைக்காமல் நெய் ஊற்றி தேடிப் பார்த்தேன்.. ஒன்றும் புரியவில்லை.. விளக்கவும்//

சிவபாலன்! இன்னுமொரு முறை பின்னூட்டங்களுடன் படித்துப் பார்க்கவும்!

 
On Thu Dec 14, 12:16:00 AM , நாமக்கல் சிபி said...

//ungalodu sernthu naangalum solkirom byebye 2006//

மீனாஅருண்! நன்றி!
க.க.க.போ!

 
On Thu Dec 14, 12:17:00 AM , நாமக்கல் சிபி said...

//இன்னும் ரெண்டு வாரம் இருக்கே?! அதுக்குள்ள என்ன அவசரம்?
//

இதுக்கு முன்னாடியே 2006 பத்தி தொகுத்து எழுத ஆரம்பிச்சிட்டாங்களே குமரன்! நானும் முந்திக்கலாம்னுதான்!

 
On Thu Dec 14, 12:17:00 AM , நாமக்கல் சிபி said...

//குறும்பா பதிவைப் படிச்சதால எனக்கு விளக்கெண்ணை இல்லாமலேயே பதிவின் விவரம் புரிஞ்சதே! :-) //

வலைப்பூவின் பெயரைப் பார்த்தாலே போதாதா?

 
On Thu Dec 14, 12:18:00 AM , நாமக்கல் சிபி said...

//பை பை 2006
ithu thanaa!!? //

வளைகுடாத் தமிழன்! நீங்களும் க.க.க.போ!

வருகைக்கு நன்றி!

 
On Thu Dec 14, 12:18:00 AM , Anonymous said...

சிவபாலன்,
விளக்கெணெயும் வேண்டாம்; நெய்யும் வேண்டாம். மவுஸ ஸ்க்ரோல் பண்ணி கொஞ்சம் கீழே போய்ப்பாருங்க தெரியும் சிபி யாருக்கு பை பை சொல்றாருன்னு.
ஜகன்
தோஹா, கத்தார்.

 
On Thu Dec 14, 12:22:00 AM , VSK said...

நான் கூட இனி ஒவ்வொரு நாள் இரவும் கணினையை மூடும் போது ஒரு 'பை பை' பதிவு போடலாம் என இருக்கிறேன்!!
:))

 
On Thu Dec 14, 12:46:00 AM , Kannabiran, Ravi Shankar (KRS) said...

பை த பை
சிபி
எப்போ
பை பை
2006
பதிவு
?

 
On Thu Dec 14, 01:45:00 AM , Anonymous said...

"பை" "பை" சொல்லும் நேரம்.? நீங்கள் ரமிலா?? ஈழத்திலிருந்து இராவணன்..

 
On Thu Dec 14, 02:03:00 AM , Anonymous said...

புதுசா Bag ஃபேக்டரி ஆரம்பிக்கிறீங்களா?

'பை', 'பை'ன்னு விளம்பரம் பண்றீங்க.

யாரு நாங்க? பேன பெருச்சாலி....

 
On Thu Dec 14, 07:43:00 AM , வெற்றி said...

/* நான் கூட இனி ஒவ்வொரு நாள் இரவும் கணினையை மூடும் போது ஒரு 'பை பை' பதிவு போடலாம் என இருக்கிறேன்!!
:)) */

SK ஐயாவின் பின்னூட்டம் படித்துச் சிரித்தேன்.

 
On Thu Dec 14, 07:52:00 AM , அரை பிளேடு said...

சிபி தல

ஒண்ணும் பிரியல..

2006க்கு பை பை சொல்றீங்கோ... கரீக்டா... :(

 
On Thu Dec 14, 07:57:00 AM , Divya said...

பதிவின் தலைப்பு பார்த்ததும் நீங்களும் ப்ளாக் உலகிற்கு 'பை பை...குட் பை'ன்னு சொல்லிட போறீங்களோன்னு......ஒரு நிமிஷம்...நான் அப்படியே....

 
On Thu Dec 14, 09:54:00 AM , இலவசக்கொத்தனார் said...

பை பை 2006க்கு முன்னாடி சொன்ன பை பை, இங்க இப்ப பைபை சொன்னவங்களைப் பாத்து நீங்க சொன்ன பைபை. சரியா?

 
On Thu Dec 14, 05:51:00 PM , பொன்ஸ்~~Poorna said...

வெளியே போறவங்களுக்கு வாசல்ல நின்னுகிட்டு பை சொல்வோமில்ல, அது போல சொல்றீங்களோன்னு நினைச்சேன் ;)

/* நான் கூட இனி ஒவ்வொரு நாள் இரவும் கணினையை மூடும் போது ஒரு 'பை பை' பதிவு போடலாம் என இருக்கிறேன்!!
:)) */
எஸ்கே, அப்படீன்னா, நீங்க அடுத்தமுறை சென்னை/சிங்கை ட்ரிப் கிளம்பினால் தான் பை பதிவு போட முடியும் ;) இல்லைன்னா, காலை அலுவலகம் கிளம்பும்போது போடலாம் ;)

 
On Thu Dec 14, 06:15:00 PM , இம்சை அரசன் said...

//பதிவின் தலைப்பு பார்த்ததும் நீங்களும் ப்ளாக் உலகிற்கு 'பை பை...குட் பை'ன்னு சொல்லிட போறீங்களோன்னு......ஒரு நிமிஷம்...நான் அப்படியே....
//
அப்படியே மகிழ்ச்சியில் துள்ளி குதித்துவிட்டீர்களா திவ்யா அவர்களே? என்னையும் லகுடபாண்டியையும் போல?!

 
On Thu Dec 14, 06:24:00 PM , கோவி.கண்ணன் [GK] said...

//வெற்றி said...
/* நான் கூட இனி ஒவ்வொரு நாள் இரவும் கணினையை மூடும் போது ஒரு 'பை பை' பதிவு போடலாம் என இருக்கிறேன்!!
:)) */

SK ஐயாவின் பின்னூட்டம் படித்துச் சிரித்தேன்.
//

எஸ்கே ஐயாவின் லூட்டிக்கு அளவே இல்லாமல் போய்விட்டது ! டீச்சரிடம் சொல்ல வேண்டும்

 
On Thu Dec 14, 07:11:00 PM , நாமக்கல் சிபி said...

//அப்படியே மகிழ்ச்சியில் துள்ளி குதித்துவிட்டீர்களா திவ்யா அவர்களே? என்னையும் லகுடபாண்டியையும் போல?!
//

நான் கெளம்புனா கவலைப்பட ஆள் இருக்கோ இல்லையோ! சந்தோஷப்பட ரெண்டு பேரு இருக்காங்கப்போய்!

:))

 
On Thu Dec 14, 07:11:00 PM , நாமக்கல் சிபி said...

//ஆக இன்னிக்கு பதிவு எழுத இதான் விசயமா ?
:)
//

கோவியாரே! ஹி.ஹி!

 
On Thu Dec 14, 07:12:00 PM , நாமக்கல் சிபி said...

//விளக்கெணெயும் வேண்டாம்; நெய்யும் வேண்டாம். மவுஸ ஸ்க்ரோல் பண்ணி கொஞ்சம் கீழே போய்ப்பாருங்க தெரியும் சிபி யாருக்கு பை பை சொல்றாருன்னு.
ஜகன்
தோஹா, கத்தார்.
//

தெளிவாப் படிச்சிருக்கீங்க போல ஜகன். முதல் வருகைக்கு மிக்க நன்றி!

 
On Thu Dec 14, 07:13:00 PM , Anonymous said...

//சந்தோஷப்பட ரெண்டு பேரு இருக்காங்கப்போய்!//
சிபியாரே.. திவ்யாவுடன் மூவரானோம் என்று எம் அரசர் சொல்லச் சொன்னார்....

(நீர் கணக்கிலும் வீக்கா? எங்கள் அரசர் போலத் தானா? ;) )

 
On Thu Dec 14, 07:13:00 PM , நாமக்கல் சிபி said...

//நான் கூட இனி ஒவ்வொரு நாள் இரவும் கணினையை மூடும் போது ஒரு 'பை பை' பதிவு போடலாம் என இருக்கிறேன்!!
//

எஸ்.கே!
நான் லஞ்ச் பிரேக்குக்குப் போகும்போது கூட பை பை போஸ்ட் போடுவேன் என்று சிலபேர் சொல்கிறார்களே!

 
On Thu Dec 14, 07:14:00 PM , பொன்ஸ்~~Poorna said...

//தெளிவாப் படிச்சிருக்கீங்க போல ஜகன். //
மறுபடியும் ஜகனா?!

 
On Thu Dec 14, 07:15:00 PM , நாமக்கல் சிபி said...

//பை த பை
சிபி
எப்போ
பை பை
2006
பதிவு
?

//

கே.ஆர்.எஸ்! இதுதான் பை பை 2006 பதிவு! நாமெல்லாம் கொஞ்சம் அட்வான்ஸா போடுவோம்ல!

ஆக்சுவலா நவம்பர் கடைசியிலயே போட வேண்டியது!

 
On Thu Dec 14, 07:16:00 PM , நாமக்கல் சிபி said...

//"பை" "பை" சொல்லும் நேரம்.? நீங்கள் ரமிலா?? ஈழத்திலிருந்து இராவணன்..
//

இராவணன் அவர்களே! என்ன கேட்கிறீர் என்று புரியவில்லை!

ரமிலா என்றால்...!? தமிழா என்று கேட்கிறீர்களா?

 
On Thu Dec 14, 07:17:00 PM , நாமக்கல் சிபி said...

//புதுசா Bag ஃபேக்டரி ஆரம்பிக்கிறீங்களா?

'பை', 'பை'ன்னு விளம்பரம் பண்றீங்க.
//

வாங்க ஜீ! உங்க வாய்(பின்னூட்ட) முகூர்த்தம் புதுசா ஃபேக்டரி ஆரம்பிச்சா நிச்சயமா உங்களுக்கும் அழைப்பிதழ் அனுப்புவேன்! திறப்பு விழாவிற்கு!

 
On Thu Dec 14, 07:18:00 PM , நாமக்கல் சிபி said...

//SK ஐயாவின் பின்னூட்டம் படித்துச் சிரித்தேன்.
//

வெற்றி!
எஸ்.கே அவர்கள் ரொம்ப குசும்பான மனிதர்!

:-)

நன்றி!

 
On Thu Dec 14, 07:18:00 PM , நாமக்கல் சிபி said...

//சிபி தல

ஒண்ணும் பிரியல..

2006க்கு பை பை சொல்றீங்கோ... கரீக்டா... :(
//

கரீக்டே! கவலைப்படாதீங்கோ அரை பிளேடு!

 
On Thu Dec 14, 07:19:00 PM , நாமக்கல் சிபி said...

//பதிவின் தலைப்பு பார்த்ததும் நீங்களும் ப்ளாக் உலகிற்கு 'பை பை...குட் பை'ன்னு சொல்லிட போறீங்களோன்னு......ஒரு நிமிஷம்...நான் அப்படியே.... //

மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்து விட்டீர்களாக்கும்!

:-))

அதுதான் முழுக்கப் படிக்கச் சொல்லி பின் குறிப்பு போட்டிருக்கிறேனே!

 
On Thu Dec 14, 07:20:00 PM , நாமக்கல் சிபி said...

//பை பை 2006க்கு முன்னாடி சொன்ன பை பை, இங்க இப்ப பைபை சொன்னவங்களைப் பாத்து நீங்க சொன்ன பைபை. சரியா?
//

கொத்ஸ்! நீங்க சொன்னா எல்லாம் சரியே!

 
On Thu Dec 14, 07:21:00 PM , நாமக்கல் சிபி said...

//வெளியே போறவங்களுக்கு வாசல்ல நின்னுகிட்டு பை சொல்வோமில்ல, அது போல சொல்றீங்களோன்னு நினைச்சேன்//

அது சரி! பத்த வெக்க நிறைய பேரு இருக்காங்க போல!

:-))))

 
On Thu Dec 14, 07:23:00 PM , நாமக்கல் சிபி said...

//மறுபடியும் ஜகனா?! //

பொன்ஸ்! இது வேறு ஜகன் போல் இருக்கிறது!

 
On Thu Dec 14, 07:25:00 PM , நாமக்கல் சிபி said...

//சிபியாரே.. திவ்யாவுடன் மூவரானோம் என்று எம் அரசர் சொல்லச் சொன்னார்....
//

கணக்கைச் சரியாகச் சுட்டிக் காட்டிய இம்சை அரசனாருக்கு என் நன்றிகளைத் தெரியப்படுத்துங்கள் லகுட பாண்டியாரே!

//(நீர் கணக்கிலும் வீக்கா? எங்கள் அரசர் போலத் தானா? ;)//

ஹி.ஹி. ஆமாம்.
:)

(இதை உங்கள் அரசர் பார்த்து விடப் போகிறார். அப்புறம் தட்டானுக்கு சட்டை போட்டு உம்மை மாட்டி விட்டு விடுவார்)