அன்புத் தம்பி(வலைப் பதிவர் தம்பி அல்ல)!
முதல் முறையாக சங்கத் தளபதி என்ற முறையில் இக் கடிதத்தை எழுதுகிறேன்.
ஆனால் ஐயஹோ! துரதிஷ்டவசமாக இதுவே கடைசி கடிதமாகவும் அமைகிறது.
கொஞ்சம் சிந்தித்துப் பார்!
கைகளுக்கு விலங்கிட்டு விட்டு கைமுறுக்கு சுற்ற அழைத்தால் இயலுமா?
நகைச் சுவைதான் நோக்கமெனச் சொல்லி கும்மி கூடாதென்றால் ஆகுமா?
என்னை நம்பியிருக்கும் எண்ணற்ற அனானிகளுக்கு நான் செய்யும் கைம்மாறு என்ன?
சுதந்திரம் இல்லையென்றால் சுவர்க்கம் என்றாலும் நாம் விரும்ப மாட்டோம் என்பதை இந்த நாடறியும்!
கை விலங்குகளுக்குள் கட்டுண்டுதான் இங்கு பணியாற்ற வேண்டிய பாக்கியம் உண்டு என்றால் நமக்கு அந்த பாக்கியம் அவசியம்தானா?
நாம் சுதந்திரப் பறவைகள்! நமக்கு வானம்தான் எல்லை!
ஆழ்ந்து சிந்தித்தே இந்த முடிவெடுத்திருக்கிறேன்! ஆதரவு அளிப்பாய் என்ற நம்பிக்கையுடன்!
இனி விலங்குகள் உடைந்தன! கட்டுப் பாடுகள் களைந்தன!
சிறகு விரித்துப் பறக்க இருக்கிறேன்!
விடை கொடு தம்பி! விடை கொடு!
இதோ இன்று முதல் கும்மியடிப்போர் முன்னேற்றக் கழகம் என்ற மூன்றாவது அணியை நிறுவி இருக்கிறோம் தம்பி! உன்னை நம்பி!
எங்களது நோக்கம் சிரிப்பும், சுதந்திரமும்
This entry was posted on 9:45 PM and is filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

25 பின்னூட்டங்கள்:

On Wed Jul 04, 11:12:00 PM , குசும்பன் said...

தள என்ன தள தலை மேல கை வச்சு இருக்குற மாதிரி ஒரு படம் போட்டு எங்க இதயத்துல கை வச்சிட்டீயே தள

 
On Wed Jul 04, 11:16:00 PM , selventhiran said...

சுதந்திரம் இல்லையென்றால் சுவர்க்கம் என்றாலும் // எங்கேயோ சுட்டது போலிருக்கிறதே மன்னா?

 
On Wed Jul 04, 11:20:00 PM , நந்தா said...

என்ன கொடுமை சார் இது????

 
On Wed Jul 04, 11:21:00 PM , Anonymous said...

தவறு அழைத்து வர வில்லை. இழுத்து வந்தீர்கள்.

 
On Wed Jul 04, 11:24:00 PM , நாமக்கல் சிபி said...

செல்வேந்திரன்,

//யோவ்! கடிதம் எழுதும்போது அங்க, இங்கன்னு இருந்து சுட்டு எழுதுறதுதான்//

மகி போட்ட கமெண்டுன்னு நினைச்சி யோவ் போட்டு எழுதிட்டேன்.

மன்னிச்சிடுங்க!

 
On Wed Jul 04, 11:25:00 PM , நாமக்கல் சிபி said...

//சுதந்திரம் இல்லையென்றால் சுவர்க்கம் என்றாலும் //

கடிதம் எழுதும்போது அங்க, இங்கன்னு இருந்து சுட்டு எழுதுறதுதான்!

அதெல்லாம் கண்டுக்கிடப் படாது!

நமக்கு கருத்துதான் முக்கியம்!

 
On Wed Jul 04, 11:25:00 PM , நாமக்கல் சிபி said...

//தள என்ன தள தலை மேல கை வச்சு இருக்குற மாதிரி ஒரு படம் போட்டு எங்க இதயத்துல கை வச்சிட்டீயே தள

//


அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..!

 
On Wed Jul 04, 11:30:00 PM , Unknown said...

அய்யகோ கழகப் போர்வாள் போனபோது கூட நான் கலங்கவில்லை, கவிதயும் கலாய்த்தலுமே உனக்கு வேலை என இட்ட பணியை செவ்வனே செய்த உன் கடமைக்கு கிடைத்த பரிசு இப்ப வலிந்து வெளியேற்றும் முயற்சி: என்ன் செய்ய காலம் எல்லாரின் கலாய்த்தலுக்கும் ஒரு கடைசி அத்தியாயத்தினை எழுத காத்துக் கொண்டிருக்கிரது புறப்படு போர்தொடு உன்கலாய்த்தல் அம்பால் எதிரிகள் சிரித்தே சின்னாபின்னமாகட்டும் கடமை அழைக்கிறது தம்பீ "வாலை" வீசு உன் வார்த்தை ஜாலத்தால் தமிழெங்கும் சிரிப்புப் பேரரசை நிறுவு.

 
On Wed Jul 04, 11:35:00 PM , நாமக்கல் சிபி said...

//மனோகரா said...
தவறு அழைத்து வர வில்லை. இழுத்து வந்தீர்கள்.
//

:)

யாருப்பா நீயி?

உறுப்பினர் கார்டு வாங்கிட்டியா?

 
On Wed Jul 04, 11:36:00 PM , நாமக்கல் சிபி said...

//அய்யகோ கழகப் போர்வாள் போனபோது கூட நான் கலங்கவில்லை, கவிதயும் கலாய்த்தலுமே உனக்கு வேலை என இட்ட பணியை செவ்வனே செய்த உன் கடமைக்கு கிடைத்த பரிசு இப்ப வலிந்து வெளியேற்றும் முயற்சி: என்ன் செய்ய காலம் எல்லாரின் கலாய்த்தலுக்கும் ஒரு கடைசி அத்தியாயத்தினை எழுத காத்துக் கொண்டிருக்கிரது புறப்படு போர்தொடு உன்கலாய்த்தல் அம்பால் எதிரிகள் சிரித்தே சின்னாபின்னமாகட்டும் கடமை அழைக்கிறது தம்பீ "வாலை" வீசு உன் வார்த்தை ஜாலத்தால் தமிழெங்கும் சிரிப்புப் பேரரசை நிறுவு. //

:)

மகி!

உங்க அமுக வின் ஆதரவையும் நம்பித்தான் மூன்றாவது அணி ஆரம்பிச்சிருக்கேன்!

 
On Wed Jul 04, 11:36:00 PM , நாமக்கல் சிபி said...

//என்ன கொடுமை சார் இது???? //

வாங்க நந்தா! சீக்கிரம் தெரிய வரும்!

 
On Wed Jul 04, 11:42:00 PM , ILA (a) இளா said...

//நமக்கு வானம்தான் எல்லை! //
40தான் எல்லையாம்ல

 
On Wed Jul 04, 11:50:00 PM , நாமக்கல் சிபி said...

//40தான் எல்லையாம்ல //

40 எல்லாம் மறுமொழிப் பட்டியலுக்குத்தான்!

நமக்கு அதைப் பத்தியெல்லாம் கவலையே இல்லையே இளா!

 
On Wed Jul 04, 11:52:00 PM , Unknown said...

// அமுக வின் ஆதரவையும் நம்பித்தான் மூன்றாவது அணி ஆரம்பிச்சிருக்கேன்!//

இதெல்லாம் கேட்டுப் பெருவதில்லை எடுத்துக்"கொல்ல" வேண்டியது இம் ஆகட்டும்

 
On Wed Jul 04, 11:54:00 PM , Unknown said...

ம் என்றால் கும்மிப் பதிவு ஏன் என்றால் பின்னூட்டம் இதுதான் எங்கள் லட்சம் லட்சியங்களுள் ஒன்று

 
On Wed Jul 04, 11:56:00 PM , நாமக்கல் சிபி said...

//ம் என்றால் கும்மிப் பதிவு ஏன் என்றால் பின்னூட்டம் இதுதான் எங்கள் லட்சம் லட்சியங்களுள் ஒன்று//

ஆமாம்! இதுதான் எங்கள் கொளுகையும் கூட!

 
On Thu Jul 05, 12:08:00 AM , நாமக்கல் சிபி said...

//தள என்ன தள தலை மேல கை வச்சு இருக்குற மாதிரி ஒரு படம் போட்டு எங்க இதயத்துல கை வச்சிட்டீயே தள
//

குசும்பன்,

அதான் வெளிய வந்தாச்சுல்ல!

இன்னும் என்ன தள? கிள எல்லாம்!

 
On Thu Jul 05, 01:30:00 AM , நாகை சிவா said...

சிபி...

அது என்ன சுவர்க்கம்.....

நான் கேள்விப்பட்டதே இல்லையே

 
On Thu Jul 05, 08:59:00 AM , ILA (a) இளா said...

சிபிக்கு ஒரு மிரட்டல்

 
On Thu Jul 05, 10:42:00 AM , உண்மைத்தமிழன் said...

ஏற்கெனவே அ.மு.க., வ.வா.ச. -ன்னு ரெண்டு இருக்கு.

இவுகளை சமாளிக்கிறதுக்கே கை தனியா கழன்ற மாதிரியிருக்கு. இப்ப இதுல கும்மியா?

ஆமா... அப்போ இவ்ளோ நாளா நீங்க எழுதினதெல்லாம் என்னங்க ராசா.. பதிவுகளா? கும்மிகளா..? டவுட்டோ டவுட்டு..

 
On Thu Jul 05, 11:06:00 AM , குசும்பன் said...

ஆமா... அப்போ இவ்ளோ நாளா நீங்க எழுதினதெல்லாம் என்னங்க ராசா.. பதிவுகளா? கும்மிகளா..? டவுட்டோ டவுட்டு..

அய்யகோ...இப்படி ஒரு கேள்விய கேட்டு எங்க தளய சாச்சுப்புட்டீங்களே!!!

 
On Thu Jul 05, 12:53:00 PM , Unknown said...

தளபதியின் ஒவ்வொரு வார்த்தையையும் நான் வழி மொழிகிறேன்...

மூன்றாவது அணியின் ஒரு மூலையில் எனக்கும் இடம் ஒதுக்குமாறு அன்போடுக் கேட்டுக்கொள்கிறேன்...

 
On Thu Jul 05, 01:10:00 PM , இராம்/Raam said...

//தளபதியின் ஒவ்வொரு வார்த்தையையும் நான் வழி மொழிகிறேன்...

மூன்றாவது அணியின் ஒரு மூலையில் எனக்கும் இடம் ஒதுக்குமாறு அன்போடுக் கேட்டுக்கொள்கிறேன்...//

இதை நானும் வழிமொழிகிறேன்..... :))

ஆபிஸிலே கும்மியடிக்க முடியாதபடி ஃபியூஸ் பிடுங்கிடானுக.... :((((

 
On Thu Jul 05, 04:36:00 PM , ஜே கே | J K said...

////தளபதியின் ஒவ்வொரு வார்த்தையையும் நான் வழி மொழிகிறேன்...

மூன்றாவது அணியின் ஒரு மூலையில் எனக்கும் இடம் ஒதுக்குமாறு அன்போடுக் கேட்டுக்கொள்கிறேன்...//
இதை நானும் வழிமொழிகிறேன்..... :))//

இதை நானும் வழிமொழிகிறேன்..... :))

//ஆபிஸிலே கும்மியடிக்க முடியாதபடி ஃபியூஸ் பிடுங்கிடானுக.... :(((( //

ஐயகோ என்ன கொடுமை இது?

 
On Thu Jul 05, 08:22:00 PM , கப்பி | Kappi said...

தள...இன்னும் பொட்டி வந்து சேரல :))