பதினைந்து நாட்களுக்கும் மேலாக நூடுல்ஸின் மேலிருந்த அனுதாபத்தினால் நூடுல்ஸே உண்ணாமல் இருந்த ஜொள்ளுப் பாண்டி, தோசை வெறுத்துப் போய் மீண்டும் நூடுல்ஸ் தயாரித்து சாப்பிட்டார். - செய்தி.
நூடுல்ஸே
நூடுல்ஸை
சுவைக்கிறதே!
|
முதலில் தமிழ்மணத்திலிருந்து குமரன்!
அப்புறம் நம்ம செந்தழல் ரவி!
இளா!
என்று இந்த வாரம் முழுக்க யாராவது பை பை சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். இது எப்படியோ "எப்படி" பதிவுகள் வரிசையில் வந்த "எப்படி" பதிவுகளைப் போல் பத்திக் கொண்டது இந்தப் பதிவுலகத்தை!
இந்த வரிசையில் இதோ நானும் சொல்கிறேன் ஒரு பை பை!
பின் குறிப்பு :
விபரம் அறிய விரும்புவோர் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக் கொண்டு இந்தப் பதிவை இன்னொரு முறை முழுதாகப் படிக்கவும்.
பை பை 2006
|
|
|


முறுக்கு மாவினை ஒரு பங்கு வெள்ளை உளுத்தம்பருப்புக்கு, நான்கு பங்கு பச்சரிசி என்ற கணக்கில் எடுத்துக் கொண்டு, கீழே கொடுக்கப்பட்டுள்ள முறையில் தயாரித்து வைத்துக் கொள்ளவும். தேவையான போது, தேவையான அளவு எடுத்துப் பயன்படுத்தலாம். இந்த மாவையே சீடை செய்யவும் பயன்படுத்தலாம்.
தேவையானப் பொருட்கள்
முறுக்கு மாவு - 2 கப்
பெருங்காயத் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - 3/4 தேக்கரண்டி
டால்டா - கால் கப்
எள்ளு - 3/4 தேக்கரண்டி
தண்ணீர் - ஒரு கப்


முறுக்கு மாவு தயாரிக்க: ஒரு கிலோ பச்சரிசிக்கு கால் கிலோ வெள்ளை உளுத்தம்பருப்பு என்ற கணக்கில் எடுத்துக் கொள்ளவும். உளுத்தம் பருப்பை வாணலியில் பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். பச்சரிசியை கழுவி காயவைத்துக் கொள்ளவும். பச்சரிசியுடன் உளுத்தம் பருப்பு சேர்த்து மிஷினில் கொடுத்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.


முறுக்கு மாவுடன் பெருங்காயத் தூள், உப்பு, எள்ளு சேர்த்து கலந்து கொண்டு, பின்னர் உருக்கிய டால்டாவை ஊற்றி கட்டியில்லாமல் பிசையவும்.
பிறகு ஒரு கப் தண்ணீரை சிறிது சிறிதாக கையில் ஊற்றி, மாவில் தெளித்து பிசையவும். வெறும் தண்ணீரைவிட இளஞ்சூடான வெந்நீர் ஊற்றி பிசையவும்.

மாவின் பதம் மிகவும் தளர்வாக
இல்லாமலும், கெட்டியாக இல்லாமலும்
பார்த்துக் கொள்ளவும். மிருதுவாக
பிசையவும். மாவு பதமாக
இருந்தால்தான் பிழிவதற்கு
எளிதாக இருக்கும். முறுக்கின்
சுவையும் நன்றாக இருக்கும்.

பிசைந்த மாவை முறுக்கு அச்சில் கொள்ளும் அளவுக்கு வைத்து தட்டில் அல்லது பேப்பரில் பிழிந்து வைத்துக் கொள்ளவும்.
பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிழிந்து வைத்த முறுக்கை 4 அல்லது 5 போட்டு வேகவிடவும். முறுக்கினைப் போட்டவுடன் எண்ணெய் பொங்கினாற்போல் வரும்.
முறுக்கு பொன்னிறமாக சிவந்து, எண்ணெய் பொங்குவதும் அடங்கியவுடன் முறுக்கை ஒரு கம்பி அல்லது சாரணி கொண்டு எடுத்து விடவும்.
ஒரு பேப்பரில் போட்டு எண்ணெய் வடியவிடவும். தாங்கள் விரும்புகின்ற துளையுடைய அச்சை பயன்படுத்தி முறுக்கு பிழிந்து கொள்ளலாம்.
ஒரு வேண்டுகோள் : இவ்வாரத்தினை தமிழ் மண நிர்வாகிகள் சிற்றுண்டி வாரம் என்று அறிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
|

நம்பினார் கெடுவதில்லை என்று நாமக்கல்லாரை நம்பிய
ஜொள்ளுப் பாண்டிக்கும் இப்பதிவிற்கும் யாதொரு தொடர்பும் இல்லை.
|

நம்ம
ஹரிஹரன் அவர்களோட உலகத்துல ஆமை புகுந்த வீடு ஏன் விளங்காதுன்னு சான்றோர்கள் சொன்ன விளக்கத்தை அதாவது கல்லாமை, அறியாமை, முயலாமை, இல்லாமைம் இயலாமை, பொறாமை போன்ற ஆமைகளைச் சுட்டிக் காட்டி கூறியிருந்தனர்.
இந்த காலத்து பசங்களுக்கும் பிடிபடற மாதிரி ஒரு ஈசியான லாஜிக்கலான விளக்கம் எனக்கும் தோன்றியது. அதைத்தான் இங்கே சொல்கிறேன்.
(காமெடி, கீமெடியெல்லாம் இல்லை).
அதாவது நம்ம வீடுகளில் பாம்பு, பூரான், தேள் போன்றவற்றை பார்த்தால் நாம் என்ன செய்வோம். உடனடியாக அடித்துக்
கொள்வோம்/கொல்வோம். அல்லது குறைந்தபட்சம் வீட்டை விட்டு வெளியேற்றவாவது செய்வோம். அதுவும் படு வேகமாக. அவை உள்ளே நுழையும்போது பார்த்தாலே கூட உடனடியாக கம்பு எங்கே இருக்கிறது என்று தேடிச் செல்வோம்.
அப்படியிருக்க வெகு மெதுவாக நகரும் இந்த ஆமையானது வீட்டிற்குள் வரும் வரை விரட்டாமல் வீட்டினுள் அனுமதிக்கின்றனர் என்றால் அவ்வீட்டிலோர் எப்பேர்ப்பட்ட சோம்பேறிகளாயிருப்பர். சோம்பேறிகள் நிறைந்த வீடு எப்படி இருக்கும். உழைப்பு இருக்காது. உழைப்பு இல்லாத வீட்டில் என்ன செல்வம் இருக்கும்? ஒன்றும் இருக்காது. அதாவது சோம்பேறிகள் நிறைத வீடோ, சமுதாயமோ ஒன்றுக்கும் உதவாமல் விளங்காமல்தான் போகும்.
|
சென்னை நவ 19, சென்னைப் பட்டிண வாசிகளால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வலைப்பதிவர்கள் சந்திப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சந்திப்பு முடியும் முன்னரே வெளியான மர்மம் என்ன?
கடந்த இரு வாரங்களுக்கு முன்பு சென்னைப் பட்டிணத்தின் முக்கிய நிர்வாகியான
குழந்தை யெஸ்.பாலபாரதி அவர்கள் இன்று(நவம்பர் 19, 2006) சென்னையில் ஒரு வலைப்பதிவர் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அனைவருக்கும்
அழைப்பு விடுத்திருந்தார் என்பது அனைவரும் அறிந்ததே!
அதன்படியே இன்று மாலையில் சந்திப்பு நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில்
சந்திப்பு முடியும் முன்னரே வலையுலகின் மாலைமலர் என்று அழைக்கப்படும்
இட்லிவடையாரின் வலைப்பூவில் இன்றைய
சந்திப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியிடப்பட்டது தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இப்புகைப்படம் வெளியான செய்தி அறிந்தவுடன் சென்னைப்பட்டிணத்தின் நிர்வாகிகளுள் ஒருவரை தொடர்பு கொண்டு விசாரித்தபோது "அதற்குள் புகைப்படம் வெளியாகிவிட்டதா" என்று அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் முக்கிய நிர்வாகியான குழந்தை யெஸ்.பாலபாரதி அவர்கள் தொலைபேசி மூலம் நமக்கு அளித்த பேட்டியில்
"எப்படி இப்புகைப்படங்கள் வெளியாயின என்று தெரியவில்லை.
அதுபற்றி விசாரணையை மேற்கொள்ள வரவணையான் அவர்கள் தலைமையில் ஒரு உயர்மட்ட விசாரணைக் குழுவை ஏற்படுத்தி விரைவாக விசாரிக்க ஏற்பாடு செய்யப்படும்" என்று கூறினார்.
லேட்டஸ்ட் தகவல் :நவம்பர் 20, சென்னை இட்லி வடையாரின் பதிவிலிருந்த புகைப்படங்கள் பாலபாரதி அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க நீக்கப்பட்டன.
|

நவம்பர் 14,
குழந்தைகள்(!?????) தினத்தையொட்டி நம்ம வலைப்பதியும் குழந்தை
யெஸ்.பாலபாரதிக்கு தமிழ் வலைப்பதிவர்கள் சார்பாக என் வாழ்த்துக்களை தெரியப்படுத்திக் கொ
ல்கிறேன்.
மேலும் அவருக்கு பரிசளிக்க(!?) எவரேனும் விரும்பினால் தாராளமாக இங்கு வந்து குமுறிச் செல்லலாம்.
இவண்,
கோவை மாவட்டச் செயலாளர்,
பா.க.ச
இது வரை கிடைத்துள்ள பரிசுப் பொருட்கள்

|