சென்னை நவ 19, சென்னைப் பட்டிண வாசிகளால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வலைப்பதிவர்கள் சந்திப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சந்திப்பு முடியும் முன்னரே வெளியான மர்மம் என்ன?
கடந்த இரு வாரங்களுக்கு முன்பு சென்னைப் பட்டிணத்தின் முக்கிய நிர்வாகியான குழந்தை யெஸ்.பாலபாரதி அவர்கள் இன்று(நவம்பர் 19, 2006) சென்னையில் ஒரு வலைப்பதிவர் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அனைவருக்கும் அழைப்பு விடுத்திருந்தார் என்பது அனைவரும் அறிந்ததே!
அதன்படியே இன்று மாலையில் சந்திப்பு நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில்
சந்திப்பு முடியும் முன்னரே வலையுலகின் மாலைமலர் என்று அழைக்கப்படும் இட்லிவடையாரின் வலைப்பூவில் இன்றைய சந்திப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியிடப்பட்டது தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இப்புகைப்படம் வெளியான செய்தி அறிந்தவுடன் சென்னைப்பட்டிணத்தின் நிர்வாகிகளுள் ஒருவரை தொடர்பு கொண்டு விசாரித்தபோது "அதற்குள் புகைப்படம் வெளியாகிவிட்டதா" என்று அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் முக்கிய நிர்வாகியான குழந்தை யெஸ்.பாலபாரதி அவர்கள் தொலைபேசி மூலம் நமக்கு அளித்த பேட்டியில்
"எப்படி இப்புகைப்படங்கள் வெளியாயின என்று தெரியவில்லை.
அதுபற்றி விசாரணையை மேற்கொள்ள வரவணையான் அவர்கள் தலைமையில் ஒரு உயர்மட்ட விசாரணைக் குழுவை ஏற்படுத்தி விரைவாக விசாரிக்க ஏற்பாடு செய்யப்படும்" என்று கூறினார்.
லேட்டஸ்ட் தகவல் :
நவம்பர் 20, சென்னை
இட்லி வடையாரின் பதிவிலிருந்த புகைப்படங்கள் பாலபாரதி அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க நீக்கப்பட்டன.
|
This entry was posted on 9:46 PM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
3 பின்னூட்டங்கள்:
ஹி ஹி !
இதெல்லாம் பதிவுலகில் சகஜமப்பா !
:)
ஆபாச மிரட்டல்களும், பின்னூட்டங்களும் தவறு எனில் இது போன்ற அத்து மீறல்களும் தவறுகளே..
எளிமையா எடுத்துக்கொள்ள முடியாது கோவி.
டென்சன் ஆவாதீங்க. சந்தோசப்படுங்க ப்ளாக்கர்கள் எல்லாம் VIP ஆயிட்டு இருக்காங்கோ :))
விசாரணைக்குழுவுக்கு தலைவர் சரியான தேர்வு !! ;)))